"நினைவு அஞ்சலி""நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன்பே இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள்” – சா.ஞா 4:7-15. "


எம் மகனே ஆன்றோ!மகனே! எம் மகனே! நீர் வந்த இடம் சென்றீரோ!

உம் பிரிவால் மனம் சோர்ந்தோம் விம்மி விம்மி அழுகின்றோம்.

அழாமல் என் செய்வோம் நாங்களும் மனிதர் தானே!

இளவயதில் தெய்வமானீர்! உமை நாங்கள் வணங்குகின்றோம்!எங்கு சென்றாலும் “போய் வருவேன்” எனச் சொல்லிப் போவீரே!

இம்முறை நீர் அதை எமக்குச் சொல்லாமல் போனீரோ?

போன இடம் திரும்ப அல்ல என்பதை நீர் அறிந்ததாலோ!

நாங்களும் அங்கே ஒருநாள் வருவோம் என தெரிந்ததாலோ!மகனே! எம் செல்ல மகனே!! ஏன் இந்த முடிவுமக்கு!

எப்படி உம் முடிவு என்று அறிய நாங்கள் தவிக்கின்றோம்

தந்தை, அம்மா உறவுகள்க்கு தடயமே தராமலே

தந்தையிடம் சென்றீரோ! தெய்வமான திருமகனே!இவ்வுலகில் பலர் வருவர்! பலர் போவர்! நாங்களெல்லாம்

அன்னியரும் வழிப்பயணம் செய்பவரும் என்றறிந்தோ

எம் மகனே! அவசர கோலத்தில் அப்பாவிடம் திரும்பிவிட்டீர்!

பற்றோடு வாழுகின்றோம் பரிதவித்துப் பதறுகின்றோம்!உம் அன்பும் உம் பிரிவும் நீர் சென்ற இடம் நோக்கி,

எங்களையும் அழைக்கிறதே! உணர்கின்றோம் எம் மகனே!

அங்குவர இத்தரையில் “மீட்பு” ஒன்றேவழி என்று

தெளிவடைந்து மீட்படைய வழிதேடி பார்க்கின்றோம்எம் மகனே! எம் மகனே! நீர் எமக்கு இப்புவியில்

தந்தை தந்த கொடைதானே! தந்தவரோ திருப்பிக்கேட்டார்

கொடுக்கின்றோம் மனமுவந்து! மகிழ்ச்சியோடு! நன்றியோடு!

கொடுத்தவரைப் பற்றிக்கொண்டோம்! எம் மகனே! பொன் மகனே!!
இப்படிக்கு


அப்பா – John Vijenthiran

அம்மா - Vanaja Mary Brijeth

அண்ணா - Roshanthan

அக்கா அத்தான் - Roshany Feuran

மருமகள் - Nisha Ashly


 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com