கிறிஸ்தவர்களின் - கி.மு, கி.பி - ஒரு கண்ணோட்டம்

"BC - AD"

Rev.Fr.R.John Joseph


A. ஆவிக்குரிய மனிதனின் சரித்திரம்:


ஆவிக்குரிய மனிதனின் சரித்திரம் எங்கே ஆரம்பிக்கிறது?

 • ஆவிக்குரிய மனிதனின் சரித்திரம், ஏதேன் தோட்டத்தில், கடவுள் உருவாக்கிய ஆதி மனிதனிடமிருந்து ஆரம்பிக்கிறது.


ஆவிக்குரிய மனிதனின், சரித்திரத்தை விளக்குக :-


1. கடவுளின் ஜீவ மூச்சை பெற்ற மனிதன் :

 • ஏதேன் தோட்டத்தில், கடவுள் உருவாக்கிய முதல் மனிதன், கடவுளின் ஆவியான, “ஜீவ மூச்சை” (றூவா) பெற்றான்.
 • “றூவா” என்றால், “கடவுளின் ஆவி” என்று பொருள் - தொ.நூ 1:2.
 • “கடவுள் மண்ணால், மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில், உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்” - தொ.நூ 2:7.

2.சோதனையில் வீழ்ந்த மனிதன் :

 • அந்த முதல் மனிதன், பிசாசின் பாவ சோதனையில் விழுந்தான்.
 • சோதித்தவன் - பிசாசு.
 • சோதனை - உலக கவர்ச்சி, வாய்க்கு ருசி, கண்ணுக்கு களிப்பு, அறிவுக்கு இன்பம், இவற்றை காட்டி, பிசாசு மனிதனை சோதித்தான் - தொ.நூ 3:6.
 • மனிதன், சோதனையில் வீழ்ந்ததால், தவறு செய்தான்.
 • தவறு என்பது, கடவுள், “செய்” என்று சொல்வதை, செய்யாமல் இருப்பதும், கடவுள் “செய்யாதே” என்று சொல்வதை செய்வதும், ஆகும்.

3. கடவுளின் ஆவியை இழந்த மனிதன் :

 • இதனால், கடவுளின் ஆவியானவர், மனிதனிடமிருந்து எடுக்கப்பட்டார்.
 • என் ஆவி, தவறிழைக்கும் மனிதனில், என்றென்றும், தங்கப்போவதில்லை” என்று, கடவுள் கூறினார் - தொ.நூ 6:3.
 • இவ்வாறு, மனிதனிடமிருந்து, கடவுளின் ஆவி எடுக்கப்பட்டது.
 • இப்போது, “கடவுள் உண்டாக்கிய மனிதன்”, முழு மனிதனாக இல்லை. ஏனெனில், கடவுள் உண்டாக்கிய மனிதனிடமிருந்து, கடவுளின் ஆவி எடுக்கப்பட்டது.
 • எனவே, கடவுளின் ஆவியைக் கொண்டிராத மனிதன், கடவுளுக்கு முன், முழு மனிதன் அல்ல.
 • கடவுளுக்கு கீழ்ப்படிபவர்களுக்கும், அவரை விசுவசிப்பவர்களுக்கும் மட்டுமே, கடவுளின் ஆவி கிடைக்கும் - தி.ப 5:32; கலா 3:14.
 • ஆனால், அவர்கள் தவறிழைக்கும் போது, அந்த ஆவி, அவர்களிடமிருந்து திருப்பி எடுக்கப்படும் - தொ.நூ 6:3.

4. கடவுளே பரிகாரி :

 • இந்த மேற்சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு, இனி “பரிகாரம்” உண்டா?
 • உண்டு. “நம் கடவுள், பரிகாரியாகிய கடவுள்” - வி.ப 15:26; 1யோவா 2:2.
 • அப்படியானால், ஆதிப் பெற்றோர் செய்த தவறுக்கு பரிகாரம், கடவுளிடமிருந்து உண்டு.

5. கடவுளின் முதல் வாக்குறுதி :

 • அதற்கு அடிப்படையாக, தொ.நூ 3:15 - ல், கடவுள், முதன் முதலில், “மீட்பின் வாக்குறுதியைத்” தந்தார்.
 • “உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும்” - தொ.நூ 3:15.
 • இந்த வாக்குறுதி, கடவுள் முன், பாவம் செய்து, கடவுளின் ஆவியை இழந்து, வெறும் “மாமிசமான” மனிதனுக்கு சொல்லப்பட்ட வாக்குறுதி.

6. மீட்பின் திட்டம் :

 • இழந்து போன ஆவியை, மீண்டும் மனிதனுக்கு கொடுப்பதே, கடவுளது “மீட்பின் திட்டம்”.
 • எனவே, “ஆவியை மீண்டும் பொழிவேன்” என்று, பல இறைவாக்கினர் வழியாக, கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.
 • “மீண்டும் உன்னதத்திலிருந்து, ஆவி பொழியப்படும்” - எசா 32:15.
 • “தலைவராகிய ஆண்டவர், இந்த எலும்புகளுக்கு, இவ்வாறு கூறுகின்றார், நான் உங்களுக்குள் உயிர் மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்” - எசே 37:5.
 • “என் ஆவியை, உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்”. - எசே 37:14.
 • “இஸ்ராயேல் வீட்டார்மீது, என் ஆவியைப் பொழிவேன்” - எசே 39:29.
 • “அதற்கு பின்பு, இறுதிநாளில், நான் மாந்தர் யாவர் மேலும், என் ஆவியைப் பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும், புதல்வியரும், இறைவாக்கு உரைப்பர். உங்கள் முதியோர், கனவுகளையும், உங்கள் இளைஞர்கள், காட்சிகளையும் காண்பார்கள். அந்நாளில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும், என் ஆவியைப் பொழிந்தருள்வேன் என்றார்”. - யோவே 2:28-29.


7. பாவத்தின் இறுதிநாள் :

இறுதிநாள் என்பது என்ன?

ஒரு மனிதனுடைய, பாவத்தின் கடைசி நாளே, “இறுதிநாள்” ஆகும்.

இந்த இறுதிநாளை அடைய, மனிதன் என்ன செய்ய வேண்டும்?

 • மனிதன், தன் பாவத்திற்காக, மனஸ்தாபப்பட வேண்டும். இதையே, யோவேல் 2:12 - ல், “இப்பொழுதாவது, உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு, என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றார்.


இவ்வாறு, பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம், மனம் திரும்பி, வரும்போது, கடவுள் தம் ஆவியைப் பொழிவதாக, வாக்குறுதி கொடுக்கின்றார். -யோவே 2:12; 28-30.

8. உலக பாவத்தின் இறுதிநாள் :

 • “உலகம் முழுவதையும், மீட்க வேண்டும் என்பதே, கடவுளின் திட்டம்” - 1திமொ 2:4.
 • எனவே கடவுள், தன் ஒரே குமாரனாகிய இயேசுவை, இப்பூவிற்கு அனுப்பி, மக்களின் பாவத்திற்கு, கழுவாயாக்கினார்.
 • “பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்”- 1திமொ 1:15.
 • எனவே, இயேசு சிலுவையில் பாடுபட்டு, மரித்த அந்நாளே, இவ்வுலகத்திற்கு, பாவத்தின் இறுதிநாள் ஆகும் - மத் 20:28 ; யோவா 1:29.

9. உலக பாவத்தின் இறுதிநாளில், பரிசுத்த ஆவி பொழியப்பட்டார் :

 • இயேசு, உலகின் பாவங்களைப் போக்க, பாடுபட்டு, மரித்து, உயிர்த்து, பரலோகத்துக்கு சென்ற பின், பெந்தக்கோஸ்து என்னும் நாளில், கோயிலில் காத்திருந்த, 120 சீடர்கள் மேல், ஆவியானவர் பொழியப்பட்டார் - தி.தூ 2:1-4.
 • அன்றிலிருந்து, ஆவியானவர், பாவத்திற்காக வருந்தி காத்திருக்கும், மாந்தர் யாவர் மேலும், பொழியப்படுகின்றார் - தி.தூ 2:38.

 B. ஆவிக்குரிய சபையின் சரித்திரம்:

1. கி.மு, கி.பி :

 • கி.மு, கி.பி என்பதன், முழுப் பொருள் என்ன?

 • கிறிஸ்துவுக்கு முன்.
 • கிறிஸ்துவுக்கு பின்.

2. கிறிஸ்து என்றால் மெசியா :

 • கிறிஸ்து என்றால், பொருள் என்ன?
 • “கிறிஸ்து என்றால்”, “மெசியா” என்பது பொருள்.
 • சமாரியப்பெண், இயேசுவிடம் பேசும்போது, “கிறிஸ்து எனப்படும், மெசியா வருவார், என எனக்கு தெரியும். அவர் வரும்போது, அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். - யோவா 4:25.
 • எனவே, கிறிஸ்துவும், மெசியாவும் ஒருவரே.

3.மெசியா என்றால், அபிஷேகம் பெற்றவர் :

 • “மெசியா” என்றால், “அபிஷேகம் பெற்றவர்”, என்பது பொருள் - யோவா 1:41.

4.இப்போது கி.மு, கி.பி, என்றால் பொருள் என்ன?

• கிறிஸ்துவுக்கு முன் - மெசியாவுக்கு முன்

• கிறிஸ்துவுக்கு பின் - மெசியாவுக்கு பின்.

• அபிஷேகம் பெற்றவருக்கு முன் - அபிஷேகம் பெற்றவருக்கு பின்.

• ஆவியின் பொழிதலுக்கு முன் - ஆவியின் பொழிதலுக்கு பின்.

5. இயேசுவும் மெசியாவும் :

 • இயேசு மெசியாவா?
 • ஆம். இயேசுவை கடவுள், மெசியாவாக்கினார்.
 • “நீங்கள், சிலுவையில் அறைந்த இயேசுவை, கடவுள், ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்” - தி.தூ 2:36.

6.ஆவிக்குரிய இயேசு :

 • மெசியாவாகிய இயேசுவுக்கு அதாவது இயேசு கிறிஸ்துவுக்கு என்ன பொருள்?
 • மெசியாவாகிய இயேசுவுக்கு, “ஆவிக்குரிய இயேசு” என்பது பொருள்.

7. இயேசுவே மெசியா :

 • இயேசு எப்போது மெசியாவானார்?
 • இயேசு, யோர்தான் நதிக்கரையில், திருமுழுக்கு யோவானால், திருமுழுக்கு பெற்றபோது, “பரிசுத்த ஆவி, புறா வடிவில், விண்ணிலிருந்து இறங்கி வருவதை”, யோவானும், மற்றவர்களும் கண்டனர் - மத் 3:6.
 • அப்போது, நாசரேத்தூர் இயேசு, மெசியா என்னும் கிறிஸ்துவானார்.
 • ஏனெனில், மெசியாவைப்பற்றி, யோவானுக்கு கடவுள் சொன்னது, “தூய ஆவி யார்மீது இறங்கி வருவதைக் காண்பாயோ, அவரே மெசியா” - யோவா 1:33. இவ்வாறு, இயேசு “மெசியாவானார்”.
 • ஆனால் யூதர்கள், இயேசுவை அபிஷேகம் பெற்ற மெசியாவாக, ஏற்க விரும்பவில்லை. எனவே, அவரை சிலுவையில் அறைந்து கொன்றனர் - மாற் 14:61-64.


இயேசு உருவாக்கிய சபையில் - கி.மு, கி.பி

 • இயேசு உருவாக்கிய சபை, கி.மு ஆகவும், கி.பி ஆகவும், இருந்தது.
 • அதாவது, ஆவியின் பொழிதலுக்கு முந்திய சபை, ஆவியின் பொழிதலுக்கு பிந்திய சபை.

 1. கி.மு சபை:

இயேசு உருவாக்கிய கி.மு சபையின் தன்மைகள் யாவை?

1. இயேசுவே அந்த சபையை உருவாக்கினார் - மத் 4 :18-22 ; 9 :9-13 ; லூக் 6 :12-16.

2. அந்த சபையில், போதனைகள் இருந்தன - மத் 4:23 ; மத் 5,6,7 அதி.

3. அங்கே புதுமைகள் நடந்தன - மத் 4 :24.

4. அந்த திருச்சபையில், திருச்சபையின் தலைவர் இருந்தார் - மத் 16 :18.

5. அவர்களுக்கு, அப்போஸ்தலர் இருந்தனர் - லூக் 9 :1-6.

6. அந்த திருச்சபையில், இயேசுவின் வழிநடத்தல் இருந்தது - மத் 10:16-40.

7. அங்கு திருப்பணிகள் சிறப்பாக நடந்தன - லூக் 10 :1-20.

8. அந்த திருச்சபையில், திருச்சங்கங்கள் நடந்தன - மாற் 6 :30,31; லூக் 10:17-20.

9. அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது - மத் 8:18 ; 14:13,14 ; லூக் 5:1.


கி.மு சபையின் சில சிறப்பு அம்சங்கள்

பேதுரு - தலைவர்:

 • கி.மு திருச்சபையின் தலைவராகிய பேதுரு, மனித கருத்துக்களுக்கு சொந்தக்காரர் - மத் 16 :23.
 • கி.மு - வின் பேதுரு, பாடுகளை ஏற்க மனமில்லாதவர் - மத் 16 :22.
 • கி.மு பேதுருவுக்குள், பேயின் தன்மைகள் இருந்தன - மத் 16 :23.
 • கி.மு பேதுரு, இயேசுவின் கோபத்துக்கு உள்ளானவர் - மத் 16 :23.
 • கி.மு பேதுருவிடம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்க, இயேசுவுக்கு எதிர் சாட்சியாகி, அவரை மறுதலிக்கும், தீமை இருந்தது - மத் 26 :69-75.

அப்போஸ்தலர் :

 • கி.மு சபையை ஆண்ட அப்போஸ்தலர்களிடம், நீ பெரியவனா?, நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மை இருந்தது - மத் 18:1-5 ; லூக் 22:24-27.
 • கி.மு அப்போஸ்தலர், இயேசுவின் துன்பத்தில், அவரை விட்டு ஓடிப்போனார்கள் - மத் 26 :56 ; மாற் 14:50.
 • கி.மு அப்போஸ்தலரிடம், பண ஆசையும், பணத்துக்காக சபையை அழிக்கவும், இயேசுவையே கொலை செய்யும் துணிவும் நிறைந்திருந்தது - மத் 26 :14-16.

விசுவாசிகளின் கூட்டம்:

 • கி.மு திருச்சபை விசுவாசிகள், உலக ஆதாயத்தை மட்டுமே, நோக்கமாக கொண்டிருந்தனர் - மத் 14:13-21.
 • அவர்கள், அழிந்து போகும், அப்பத்துக்காகவே, இயேசுவுக்கு பின் சென்றனர் - யோவா 6 :26,27.
 • கி.மு விசுவாசிகள், கண்டால் மட்டும் விசுவசிக்கிறவர்கள் - யோவா 20:29.

சீடர்கள்:

 • கி.மு சீடர்கள், ஆழமான சத்தியங்களை, இயேசு பேசியபோது, இது அதிகப்பிரசங்கம் என்று கூறி, இயேசுவை விட்டு, ஓடிப் போயினர் - யோவா 6 :59-60.

பக்தர்கள்:

 • பக்தி வைராக்கியம் உள்ள சிலரும், இயேசுவோடு இருந்தனர்.
 • கி.மு திருச்சபையில், இயேசுவின் தாய் - மாற் 3:32; யோவா 19:25, இருந்தார்.
 • கி.மு திருச்சபையில், பக்தியுள்ள வேறு பெண்கள் - லூக் 8:1-3 ; லூக் 23:27-31, சிலர் இருந்தனர்.
 • கி.மு திருச்சபையில், சிலுவையின் அடிவரை, இயேசுவுக்கு பின் சென்றவர்கள் - யோவா 19:25-27, இருந்தார்கள்.
 • கி.மு திருச்சபையில், இயேசுவை, சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தவர் - யோவா 20:38-42, இருந்தார்.

ஞானஸ்நானம் :

 • கி.மு திருச்சபையில், இயேசுவின் சீடர்கள் எங்கும் சென்று, ஞானஸ்நானம் கொடுத்தனர் - யோவா 4:2-3.

 2. கி.பி சபை :

இயேசு உருவாக்கிய கி.பி சபையின் தன்மைகள் என்னென்ன?

 • இயேசுவே அதை உருவாக்கினார்:
 • ஆவியானவரை, கி.பி சபைக்கு வாக்களித்தார் - யோவா 16:7-13.
 • ஆவியானவருக்காக, காத்திருக்க கி.பி சபைக்கு, கட்டளையிட்டார் - லூக் 24:49.
 • கி.பி சபையில், காத்திருந்த ஆதி சீடர் மீது, ஆவியைப் பொழிந்தார் - தி.ப 2:33 ; 2:1,2.
 • கி.பி சபையில், அப்போஸ்தலர் ஆவியானவரால், நிரம்பி போதித்தனர் - தி.ப 2:14-41; 4:31 ; 4:8.
 • கி.பி சபையில், அப்போஸ்தலர், ஆவியினால் நிரம்பி, புதுமைகள் செய்தனர் - தி.ப 3:1-10; 5:15-16.
 • கி.பி சபையில், திருச்சபையின் தலைவர், பேதுருவாக இருந்தார் - தி.ப 2:14.
 • கி.பி சபையில், அப்போஸ்தலர் இருந்தனர் - தி.ப 6 :2.
 • கி.பி சபையில், ஆவியானவரின் வழிநடத்தல் இருந்தது - தி.ப 13 :2 ; 4 :23-31.
 • கி.பி சபையில், இயேசு, அப்போஸ்தலர்களை உறுதிப்படுத்தி, திடப்படுத்தினார் - தி.ப 18 :9,10.
 • கி.பி சபையில், திருப்பணிகள், சிறப்பாக நடந்தன - தி.ப 11:24; 2:42-47; 4:32-37.
 • கி.பி சபையில், திருச்சங்கங்கள் நடந்தன - தி.ப 15:1-35.
 • கி.பி சபையில், மக்கள் கூட்டம் இருந்தது - தி.ப 11:21.
 • கி.பி சபையில், சீடர்கள் இருந்தார்கள் - தி.ப 14:20.
 • கி.பி சபையில், ஞானஸ்நானம் (திருமுழுக்கு) நடந்தது - தி.ப 2:41; 10:44-48.

கி.பி திருச்சபையின் சில சிறப்பு அம்சங்கள்:

பேதுரு:

 • கி.பி சபையில், திருச்சபையின் தலைவராகிய பேதுரு, ஆவியின் பொழிதலைப் பெற்றவர் - தி.ப 2:4; 4:8; 10:47.

 • கி.பி சபையில், பேதுரு, இயேசுவுக்காக, எந்த பாடுகளையும் ஏற்க தயாரானவர் - தி.ப 5:17,18 ; 12:6.

 • கி.பி சபையில், பாடுகளைப் பேதுரு, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் - தி.ப 5:40,41.

 • கி.பி சபையில், பேதுரு ஆவியானவரால் நிரம்பப்பெற்று, இயேசுவுக்கு சான்றுபகர, போதித்தார் - தி.ப 4:8.

 • கி.பி சபையில், பேதுரு அனேக மக்களை, இயேசுவுக்கு சீடராக்கினார் - தி.ப 4:4; 2:41.

அப்போஸ்தலர்:

 • கி.பி சபையில், அப்போஸ்தலரான பவுல், பர்னபா, சீலா, பிலிப்பு, ஸ்தேவான், போன்றவர்கள், ஆவியால் நிரம்பி, திருப்பணி ஆற்றினர் - தி.ப 6 :5-6 ; 16 :25-34.
 • கி.பி சபையில், அப்போஸ்தலர், பாடுகளையும், மரணத்தையும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர் - பிலி 1:19-21.
 • அவர்கள், அரசின் நெருக்கடி, யூதர்களின் எதிர்ப்பு, சதிகள், தந்திரம், அனைத்துக்கும், ஈடுகொடுத்து, இரவும் பகலும் உழைத்தனர் - 2கொரி 11:23-31.

 • மேலும், அவர்கள் உலகின் கடை எல்லைவரைக்கும் சென்று, அனேக மக்களை சீடராக்கினர் - தி.ப 8:26-31.

ஆவிக்குரிய விசுவாசிகளின் கூட்டம்:

 • கி.பி சபையில், விசுவாசிகள், இறைவார்த்தையை அல்லும் பகலும், தியானித்தனர் - தி.ப 17 :11.

 • கி.பி சபையில், விசுவாசிகள் ஆவியானவர் அருளியபடி, அன்பு சமூகம் உருவாக்கினர் - தி.ப 2:42-47.

 • கி.பி சபையில், விசுவாசிகள் இறை சித்தத்தை நிறைவேற்ற, இரத்த சாட்சியாகவும் துணிந்தார்கள் - தி.ப 7 :54-60.

 • மேலும், அவர்கள் சென்ற இடமெல்லாம், வேத சத்தியங்களை மக்களுக்கு சொல்லி, மக்களை மனம் திருப்பி, இரட்சிப்பை தந்து, அபிஷேகித்தார்கள் - தி.ப 2:37, 38 ; 8:4-6.

 • கி.பி. சபையில், இயேசு எப்போதும் விசுவாசிகளோடு உடனிருந்தார் - மத் 28:20 ; மாற் 16 :26.

கி.பி சபையில் திருமுழுக்கு :

 • கி.பி சபையில், 1. நற்செய்தி அறிவித்து, 2. மக்களை சீடராக்கி, 3. பின்பு தந்தை, மகன், தூய ஆவிக்குள் மூழ்கி, “மீட்பும், அருட்பொழிவும்” பெற்று, “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கால்”, சபையில் சேர்க்கப்பட்டனர் - மத் 28:19,20 ; தி.ப 2:47.

 • கி.பி சபையில், போதனை, மீட்பு, அருட்பொழிவு, பெற்ற பின்பே, “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நடைபெற்றது - தி.ப 10:44-48.


அதாவது, கி.பி சபையில், முதலில் போதனையும், அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, “மனஸ்தாபம்”, “மனம்திரும்புதல்”, “பாவ மன்னிப்பு”, “அருட்பொழிவு” ஆகிய அனைத்தும், கிடைத்த பின்பே, “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நடைபெற்றது - தி.ப 2:14,37,41,38 ; எபே 1:7.


அப்படியென்றால், இயேசு கி.மு, கி.பி, என இரண்டு சபைகளை உருவாக்கினாரா?

 • இல்லை. இயேசு ஒரே சபையைத்தான் உருவாக்கினார்.

 • அந்த சபையின் தொடக்கம், கி.மு ஆகவும், முடிவு கி.பி ஆகவும் இருந்தது.

 • இயேசுவினுடைய நோக்கம், கி.பி சபையை உருவாக்குவதே.

 • கி.மு சபையில், இயேசு கி.பி சபைக்கான ஆயத்தப் பணிகளைச் செய்தார்.

 • இன்னும் சொன்னால், கி.மு சபை, இயேசுவின் ஆரம்ப சபை. கி.பி சபை, இயேசு இறுதியாக உருவாக்கிய சபை எனலாம்.

 • தான் வாழ்ந்த காலத்தில், இயேசு, கி.மு சபையை தொடங்கி, அதற்கு தலைமை, அப்போஸ்தலர், சீடர், விசுவாசிகள், நிர்வாகம், என அனைத்துக்கும், பயிற்சியும், வழிகாட்டுதலும், தந்தார் - லூக் 9:46-48; 10:1-12.

 • ஆவியானவரைப் பெற்ற பின்பே, அந்த சபை முழுமை அடையும் என்றும், அந்த கி.பி சபையை உருவாக்க, (பெற்றெடுக்க), வாக்களித்த ஆவிக்காக, காத்திருக்க வெண்டும் என்றும், சீடர்களுக்கு கட்டளையிட்டார் - யோவா 16 :8-14; 15:26-27.

 • இயேசு உயிர்த்து, 40 நாட்கள், சீடர்களோடு வாழ்ந்த காலத்தில், அந்த கி.பி சபை, அதாவது, ஆவிக்குரிய சபையை பற்றிய பாடங்களை, சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் - லூக் 24 : 49,53 ; தி.தூ 1,2,அதி ; யோவா 20,21 அதி ; லூக் 24 அதி ; மாற் 16 அதி ; மத் 28 அதி.

 • எனவே, இயேசு உருவாக்கிய ஒரே சபை, கி.பி சபையே என்று, உறுதியாக கூறலாம்.

 • கி.மு சபை, இயேசுவின் காலத்தில், அவர் தொடங்கிய, நிறைவு அடையாத, குறைகள் நிரம்பிய, தெளிவான குறிக்கோள் இல்லாத, சபையாகும்.

 • கி.மு சபையின் பணியும், பரிசுத்தமும், கொள்கைத்தெளிவும், நோக்கமும், முடிவும், கி.பி. சபையில், நிறைவடைகிறது.


கி.மு திருச்சபைக்கும், கி.பி திருச்சபைக்கும், உள்ள உறவு என்ன?

பரிணாம வளர்ச்சி:

 • இதை சில உதாரணங்களுடன் காண்போம்.

 • உதாரணமாக, விதையையும், கோழி முட்டையையும், எடுத்துக் கொள்வோம்.

 • செடியின் கி.மு என்பது, விதை.

 • விதை, செடியான பின்பு, அது கி.பி ஆகிறது.

 • எனவே, கி.மு, கி.பி, என்பது, ஒரு பரிணாம வளர்ச்சியே. கி.மு வளர்ந்து, கி.பி ஆகிறது. விதை வளர்ந்து செடியாகிறது.

 • இது, முட்டை - கோழிக்குஞ்சு ஆவது போல.

 • இங்கே ! முட்டை என்பதை, கி.மு - வுக்கும், கோழிக்குஞ்சு என்பதை, கி.பி - க்கும் ஒப்பிடலாம்.

 • இது, ஒரு வளர்ச்சி அல்ல; மாறாக, பரிணாம வளர்ச்சி.

 • பரிணாம வளர்ச்சி என்பது, ஒரு நிலையின் தொடர் வளர்ச்சி அல்ல; மாறாக, ஒரு நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கு வளர்வது.

 • முட்டை வளர முடியாது. விதையும் வளர முடியாது.

 • ஆனால், முட்டை, கோழிக்குஞ்சின் நிலைக்கு மாறினால், உண்டாவது, பரிணாம வளர்ச்சி. அதுபோலவே, விதை, செடி ஆவதும்.

  கி.மு சபையும், ஆவியானவரின் தாக்கமும் :

 • பரிணாம வளர்ச்சியில், ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலை உருவாக, ஒரு “உருமாற்றும் - நிகழ்ச்சி” நடைபெறும்.

 • முதல் மனிதன் - ஆவிக்குரிய மனிதனாக - ஜீவ மூச்சு ஊதப்பட்டது.

 • முட்டை - கோழிக்குஞ்சாக - உஷ்ணத்தில், அடைகாக்கப்படுகிறது.

 • விதை - செடியாக - மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.

 • கி.மு சபை - கி.பி சபையாக - பெந்தக்கோஸ்து நாளின் பொழிதல் நடைபெற வேண்டும்.

 • கி.மு, கி.பி ஆவதில், இருந்த “உருமாற்றும் நிகழ்ச்சி” –“பெந்தக்கோஸ்து பொழிதல்”.

கி.பி சபையில், கி.மு சபை இருக்குமா?

 • இருக்கும். ஆதிசபையிலும், அது இருந்தது.
 • திருச்சபையின் மீட்புப் பணிகள், பல கட்டங்களாக, நடைபெறுகின்றன.

 • முதலாவது, இயேசு அறிமுகம். 1. போதனைகள் வழி - தி.ப 2:41,47; 4:4; 6:7; 8:6; 10:44; 4:20,21; 13:48; 14:1; 15:3,4,11-12, 34;18:4,8; உரோ 16:25. 2. புதுமைகள் வழி - தி.ப 9 :35,42; 8:6 ;5:14,15 ;19 :18.
 • இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, மனம்திரும்புதல், பாவமன்னிப்புக்கான போதனை - தி.ப 2:37,38.

 • மனம்திரும்பி, பாவமன்னிப்பு பெற்றவர்களுக்கு, அருட்பொழிவுக்கான ஆயத்தம் - தி.ப 8:14-16; 18:24-19:1-4.

 • அருட்பொழிவு அளித்தல் - தி.ப 8:18 ; 19:6.

 • அருட்பொழிவு பெற்றவர்கள், ஆவிக்குரிய சமூகமாக வாழ்ந்தனர் - வழிநடத்தப்பட்டனர் - தி.ப 2:41-47.

உதாரணம்:

1. பிலிப்புவின் பணியும் - பேதுரு ஆவியைப் பொழிதலும் :

 • சமாரியாவில், பிலிப்பு திருப்பணியாற்றினார்.

 • பலர் விசுவாசம் கொண்டனர் - தி.ப 8:14-16.
 • இயேசுவை ஏற்றுக்கொண்டனர் - தி.ப 8:14-16.

 • பிலிப்பு, ஸ்தாபித்த சபை, கி.மு சபையாக இருந்தது.
 • ஏனெனில், அவர்களுக்கு ஆவியானவர் இன்னும் அருளப்படவில்லை - தி.ப 8 :16.
 • எனவே, பேதுருவை அனுப்பி, விசுவாசிகளைத் அருட்பொழிவு செய்தனர் - தி.ப 8 :14-17.
 • அருட்பொழிவு பெற்ற, சமாரியத் திருச்சபை, கி.பி திருச்சபை ஆனது.
 • எனவே, சமாரியத் திருச்சபை, ஒரு காலகட்டத்தில், கி.மு திருச்சபையாக இருந்தது. ஆனால், ஆவியின் பொழிதலுக்குப் பிறகு, அது ஆவிக்குரிய (கி.பி) திருச்சபையாக மாறியது.

2. அப்பல்லோவின் பணியும் - பவுல் ஆவியைப் பொழிதலும்

 • அப்பல்லோ, எபேசுவில், திருப்பணி ஆற்றினார் - தி.ப 18:24-26.

 • பலர் விசுவாசம் கொண்டனர் - தி.ப 19:1-5
 • இயேசுவை ஏற்றுக்கொண்டனர் - தி.ப 19:1-5.

 • இந்த எபேசு திருச்சபை, கி.மு சபையாக இருந்தது.

 • காரணம், அவர்கள் பரிசுத்த ஆவி என்ற ஒருவர், இருக்கிறார் என்றுகூட அறியவில்லை. - தி.ப 19:2.

 • எனவே பவுல், அந்த திருச்சபையை, அருட்பொழிவு செய்து, ஆவிக்குரிய சபையாக மாற்றினார் - தி.ப 19 :6.

 • இப்படி, எபேசுவில், கி.மு திருச்சபை, ஆவியின் பொழிதலால், கி.பி திருச்சபையாக, அதாவது ஆவிக்குரிய சபையாக மாறியது.


கி.மு, கி.பி - பாரம்பரியம் - வழிமரபினர்


ஏதேன் தோட்டத்தில் தொடங்கி, இன்று வரை:

  இருவித வழிமரபினர் :

 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாள் - ஜீவ மூச்சை பெற்று வாழ்ந்தனர்.

 • மாமிசத்தின் ஆதாம் ஏவாள் - ஜீவ மூச்சை இழந்து வாழ்ந்தனர்.

 • எனவே, ஆவிக்குரிய ஆதாம் ஏவாள், மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாள், என்று இரு வழிமரபினரைக் காண்கிறோம்.

இருவித பாரம்பரியங்கள் :

 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாள், கடவுளுடைய கட்டளையை கடைபிடித்து, அதன்படி வாழ்ந்தனர்.
 • இது ஆவிக்குரிய பாரம்பரியம் ஆயிற்று.
 • அவ்வாறே, மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாள், கடவுளுடைய கட்டளையை மீறி வாழ்ந்தனர்.
 • இது, மாமிசத்துக்குரிய பாரம்பரியம் ஆயிற்று.
 • இவ்வாறு, இருவித “வழிமரபினரும்”, “பாரம்பரியமும்” தோன்றியது.

அன்றும், இன்றும் :

 • அவ்வாறே, இன்றும் மாமிசத்துக்குரிய வழிமரபினர் தோன்றி, கடவுளின் கட்டளையை மீறி, மாமிசத்துக்குரிய பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.

 • இன்றும், ஆவிக்குரிய வழிமரபினர் தோன்றி, கடவுளின் கட்டளையை கடைபிடித்து, ஆவிக்குரிய பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.

1. ஆவிக்குரிய சட்டம் - மாமிசத்தின் சட்டம் - உரோ 7:23; 8:2

 • ஒவ்வொரு மனிதனிலும், இந்த இரண்டு வித சட்டங்கள், செயல்படுகின்றன - உரோ 7:22-23.
 • ஆவிக்குரிய வழிமரபினர், ஆவிக்குரிய பாரம்பரிய சட்டத்தை, கடைபிடிப்பர் - உரோ 8 :9.
 • மாமிசத்துக்குரிய வழிமரபினர், மாமிசத்துக்குரிய பாரம்பரிய சட்டத்தை, கடைபிடிப்பர் - உரோ 8:13.

2. விசுவாசிகளும் - அவிசுவாசிகளும் - 2கொரி 6:14-16 :-

 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், ஆவிக்குரிய “விசுவாசிகள்” என்று, இன்று அறியப்படுகின்றனர்.

 • அவ்வாறே, மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், மாமிசத்துக்குரியவர்கள். அதாவது, “அவிசுவாசிகள்” என்று அறியப்படுகின்றனர்.

3. விண்ணை சார்ந்தவர் - மண்ணை சார்ந்தவர் - 1கொரி 15:45-49 :-

 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர் - “விண்ணை சார்ந்தவர்” என்று அறியப்படுகின்றனர்.

 • அவ்வாறே, மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், “மண்ணை சார்ந்தவர்” என்று அறியப்படுகின்றனர்.

4. நீதிமான்கள் - அக்கிரமிகள் - எசே 18:9,23; 1பேது 4:18 :-

 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர் “நீதிமான்கள்” என்று அறியப்படுகின்றனர்.

 • அவ்வாறே, மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், “அக்கிரமிகள்” என்று அறியப்படுகின்றனர்.

5. பரிசுத்தவான்கள் - பாவிகள் - எபே 1:4, 1திமொ 1:15 :-

 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், “பரிசுத்தவான்கள்” என்று அறியப்படுகின்றனர்.

 • அவ்வாறே, மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர் “பாவிகள்” என்று அறியப்படுகின்றனர்.

  பாரம்பரியமும் - கட்டளையும் :

 • கட்டளையை கடைபிடிப்பவர்களின் பாரம்பரியம் - ஆசீர்வாதத்தின் பாரம்பரியம் - இ.ச 28:1-14.
 • கட்டளையை மீறுபவர்களின் பாரம்பரியம் - சாபத்தின் பாரம்பரியம் - இ.ச 28:15-68.
 • ஆவிக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், கட்டளைகளை கடைபிடிக்கும், ஆசீர்வாதத்தின் பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர் - இ.ச 11:18-24.
 • மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாளின் வழிமரபினர், கட்டளைகளை மீறும், சாபத்தின் பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர் - இ.ச 11:28.

  இரு வழிமரபினர் - பாரம்பரிய வரலாறு :
ஆவிக்குரிய ஆதாம் ஏவாள்மாமிசத்துக்குரிய ஆதாம் ஏவாள்
 • ஆபேல் - தொ.நூ 4:4, எபி 11:4.
 • காயீன் - தொ.நூ 4:8-12.
 • நோவா - தொ.நூ 6 :9.

 • பாபேல் கோபுரம் கட்டியோர் - தொ.நூ 11:1-9.
 • ஆபிரகாம் - தொ.நூ 12:1-8.
 • சொதோம் கொமோறா - தொ.நூ 19:1-11, 23-28.

 • ஈசாக்கு - கலா 4:28,29

 • இஸ்மாயேல் - தொ.நூ 21:10, கலா 4:30.

 • யாக்கோபு -தொ.நூ 25:27; உரோ 9:12

 • ஏசாயு - தொ.நூ 25:26; உரோ 9:12;

 • இஸ்ராயேல் மக்கள் - வி.ப 1:7

 • பிற இனத்தார் - வி.ப 1:8-14

 • மோசே - வி.ப 3:1-12

 • பாரவோன் - வி.ப 5:1-18.

 • ஆண்டவரை வழிபட்டவர் - வி.ப 32:26.

 • கன்றுகுட்டியை வழிபட்டவர் - வி.ப 32:1-28,

 • கீழ்ப்படிந்தவர் - வி.ப 12:50; 19:8.

 • கலகக்காரர்கள் - எண் 12:1-10; 20:1-10.

 • யோசுவா-காலேபு - எண் 14:6-9

 • கோறாகு கூட்டம் - எண் 16 :1-35.

 • ஆண்டவருக்கு ஊழியம் செய்தவர்;- யோசு 24:14,15

 • சிலைகளுக்கு ஊழியம் செய்தவர் - யோசு 24:19.

 • நல்ல குருக்கள் - எசே 44:15-19

 • கெட்ட குருக்கள் - எசே 44:10-14.

 • நல்ல ஆயர்கள் - எசே 34:11-17

 • கெட்ட ஆயர்கள் - எசே 34:1-10.

 • நல்ல அரசர்கள் - 1அர 2:10-11, 15:14

 • கெட்ட அரசர்கள் - 1அர 15:3 ; 15: 26.

 • நல்ல இறைவாக்கினர் - 1அர 18:30-39

 • கெட்ட இறைவாக்கினர் - 1அர 18:19-29.

 • மனஸ்தாபப்பட்டு எஞ்சிய விசுவாசிகள் - 2குறி 36 :23.

 • பாவம் செய்து நாடுகடத்தப்பட்டவர் - 2 குறி 36 :13-20.

 • இயேசுவை மெசயாவாக ஏற்றுக் கொள்பவர் - தி.ப 18:4-10.

 • இயேசுவை மெசயாவாக ஏற்று கொள்ளாதவர் - யோவா10 :14-26.

 • பரலோக நன்மைகளுக்காக, இயேசுவை பின்பற்றியவர் - யோவா 6 :67-69.

 • உலக ஆதாயத்துக்காக, இயேசுவை பின்பற்றியவர் - யோவா 6 :51-66.

 • கடினமான போதனையிலும், இயேசுவோடு இருந்தவர்கள் - யோவா 6 :59-66.

 • போதனை கடினமானதும், இயேசுவை விட்டு போனவர்கள் - யோவா 6 :60,67.

 • இயேசுவோடு உடனிருந்தவர் யோவா 19:25,26

 • இயேசுவை காட்டிக்கொடுத்தவர் - மாற் 14:43-46.

 • இயேசுவின் சிலுவைப்பாதையில் ஆறுதலாய் இருந்தவர்- லூக் 23 :27,28

 • இயேசுவின் சிலுவைப்பாதையில் எள்ளி நகையாடியவர் - மத் 27:39-41.

 • இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கியவர் - லூக் 23:51-53

 • இயேசுவை சிலுவையில் அறைந்தவர் - லூக் 23:32,33.

 • . இயேசுவின் உயிர்ப்பை விசுவசித்தவர் - மத் 28:5-10.

 • இயேசுவின் உயிர்ப்பை ஏற்காதவர் - மத் 28:4.

 • உயிர்த்த இயேசுவுக்கு உடன் இருந்தவர் - தி.ப 1:1-5

 • உயிர்த்த இயேசுவுக்கு எதிராக ஓடி சென்றவர் - மத் 28:12-15.

 • வாக்களித்த ஆவிக்காக, காத்திருந்தவர் - தி.ப 1:12-14, லூக் 24:53.

 • வாக்களித்த ஆவியைப் பற்றியே அக்கரை கொள்ளாதவர் - தி.ப2:13,14.

 • பெந்தக்கோஸ்து பொழிதலை பெற்ற விசுவாசிகள் - தி.ப 2:1-12

 • பெந்தக்கோஸ்து பொழிதலை பெறாமல் கேலிசெய்த அவிசுவாசிகள் - தி.ப 2:13.
 
 இன்றைய நிலை:

1. இன்று, கி.மு விசுவாசிகள், இருக்கின்றார்களா?

 • ஆம் இருக்கின்றனர்.

 • புதுமைகள் மூலமாகவும், போதனைகள் மூலமாகவும், ஆண்டவரை அறிகிறார்கள். ஆனால், அதற்கும் மேல் போக, விரும்புவதில்லை.

 • சில விசுவாசிகள், ஆண்டவரை அறிகிறார்கள். ஆனால், மனம்திரும்பி, பாவமன்னிப்பு பெற்று, அருட்பொழிவை அடைந்து, ஆவிக்குரிய குடும்பமாக, வளர்வதில்லை.

2. இதன் வேறு காரணம் என்ன?

 • இதன் வேறு காரணம், குடும்ப பாரம்பரியமாகவும் இருக்கும்.

 • குடும்பத்தில், பெற்றோர், ஆண்டவரை அறிந்ததோடு நிறுத்திக் கொண்டவர்கள்.

 • எனவே, பிள்ளைகளும், அதையே பின்பற்றி வருகின்றனர்.

 • அதர்க்கும் மேல், பல படிகளில், வளர வேண்டும் என்று கூட, அறியாத விசுவாசிகளாக, அவர்கள் இருக்கின்றார்கள்.

3. இன்று, கி.மு சபைகள் இருக்கின்றனவா?

 • ஆம். இருக்கின்றன.

 • இயேசு “கிறிஸ்து - அறிமுகத்தோடு”, தங்கள் பணிகளை, இந்த சபைகள், முடித்துக்கொள்கின்றன.

 • அந்த சபைகளில், போதனைகள் உண்டு, புதுமைகளும் உண்டு, அவற்றை சுற்றியே வாழ்கின்ற விசுவாசிகளும் உண்டு.

 • ஆனால், அந்த விசுவாசிகளை, மனம்திரும்புதல், பாவமன்னிப்பு, அருட்பொழிவு, ஆவிக்குரிய குடும்பம், என்னும் கி.பி நிலைக்கு, இந்த சபைகள் வளர்ப்பதில்லை.

 • தாங்கள் இருக்கும் கி.மு நிலையை நியாயப்படுத்த, (To Justify), புது விளக்கங்களையும், சட்டங்களையும், மாற்றங்களையும் உருவாக்கி, இந்த சபைகள் ஆத்ம திருப்தி அடைகின்றன.

4. இந்த சபைகளை எப்படி அழைக்கலாம்?

 • ஸ்தாபன சபைகள், உலக சபைகள், அரசியல் சபைகள் என்றும், “கி.மு சபைகள்” என்றும், அழைக்கலாம்.

5. இந்த நிலை மாறுகிறதா?

 • ஆம். நிச்சயமாக மாறுகிறது.

 • இந்த கி.மு சபையிலுள்ள விசுவாசிகள், வேதத்தை வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், “ஆழமாக” ஈடுபடும் போது, ஆவியானவர் அவர்கள் அகக்கண்களைத் தொடுகிறார்.

 • இதனால், “நிறைவு அடைய”, மத் 19:21, இவர்கள், கி.பி சபையை அணுகுகின்றார்கள்.

6.எல்லா கி.மு சபைகளும், கி.பி சபைகளாக மாறுமா?

 • வெகு சீக்கிரத்திலேயே மாறும்.

 • “சூனாமி அலை” திரண்டு வரும்போது, அதை, பணம், அதிகார பெலம், உலக ஆதாயம், பயமுறுத்துதல், அச்சுறுத்துதல், பொய், புரட்டு, போன்ற “கைவிசிறியை” வைத்து தடுக்கப் பார்க்கலாமா?

 • ஆவியானவரின் வருகையும், “சூனாமி அலை” போன்றதே. அழிப்பதற்கல்ல, ஆக்குவதற்கு.

 • காரணம், திருச்சபையை உருவாக்குவதும், உருமாற்றுவதும், விசுவாசிகளுக்கு புத்துயிர் அளிப்பதும், ஆவியானவரின் வேலை.

 • ஆவியானவரின் செயல்பாட்டை, மனித, உலக, சக்திகள் தடுக்க முடியாது.

 • ஆவியானவர், இறுக்கமான இதயங்களை, தொட ஆரம்பித்து விட்டார்.

 • ஆவியானவர், “கட்டுகளுக்குள்” வாழும், சபை மேல்மட்டங்களை உடைக்க ஆரம்பித்துவிட்டார்.

 • ஆம்! இது, ஆவியானவர் ஆட்சி புரியும் காலம். அவர் தொடங்கிய பணியை வெற்றியோடு முடிப்பார்.

 • கி.மு, கி.பி - யாக மாற, நம்மைத் தாழ்த்தி, ஜெபத்தில் நிலைப்போம். ஆமென்.


My status
 திருவருட்சாதனங்கள்


 உத்தரிக்கும் ஸ்தலம்


மனம் திரும்புதலுக்கான அழைப்புமனம்திரும்புதலுக்கான பகிர்தல்
......மனம் திரும்புதலுக்கான வழிநடத்தல்மனம்திரும்புதலுக்கான குழு ஜெபம் - 1 திருமறை வகுப்புக்கள்


 பைபிள் விளக்கம்


மனம்திரும்புதலுக்கான குழு ஜெபம் - 2.....பாவமன்னிப்பின் வழிநடத்தல்பாவ பொறுத்தல் வேண்டி ஜெபம் தாபோர் தியானம்


 சீனாய் மலை தியானம்


அபிஷேகத்திற்கான அழைப்பு


அபிஷேக ஜெபம் - 1
......அபிஷேக வழிநடத்தல் சபை வரலாறு


 தகவல் பலகை

அபிஷேக ஜெபம் - 2அருட்பொழிவுஆவிக்குரிய மக்கள்.....இயேசு உருவாக்கிய சபையில் - கி.மு, கி.பி


கி.மு சபை பேதுரு


குறைவான விசுவாசமும், ஐயமும் கொண்ட பேதுரு – மத் 14:31இயேசுவுக்கு தடையாகவும், சாத்தானாகவும் இருந்த பேதுரு – மத் 16:23நெருக்கடி நேரத்தில், இயேசுவை மறுதலித்த பேதுரு – மத் 26:74
......


.....கி.மு சபை சீடர்கள்

யார் பெரியவன் என்று, போட்டியிட்ட சீடர்கள் - மாற் 9:34இயேசுவின் துன்ப வேளையில், தூங்கிக்கொண்டிருந்த சீடர் - மத் 26:43இயேசுவின் துன்பத்தில், அவரை விட்டு ஓடிப்போன சீடர்கள் - மத் 26:50.இயேசுவை முத்தமிட்டு, காட்டிக்கொடுத்த யூதாஸ் - மத் 26:49.....பண ஆசையால், இயேசுவை கொலை செய்யத் துணிந்த யூதாஸ் - மத் 27:4,5கண்டு விசுவசிக்கும் தோமா – யோவா 20:29.....


கி.பி சபை பேதுரு

கோழையான பேதுரு, கிளர்ந்தெழுந்து போதித்தார் - தி.ப 2:14-41.....
கொர்னேலியுவின் வீட்டில், பேதுரு போதித்த போது, மக்கள் அருட்பொழிவு பெற்றனர் - தி.ப 10:44-48தம் ஆண்டவராம் இயேசுவுக்காய், தலைகீழாய் தொங்கி மடிந்த பேதுரு – யோவா 21:18,19“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15


விண்ணரசின் திறவுகோலை பெற்றுக் கொண்ட பேதுரு – மத் 16:19.....கி.பி சபை பவுல்

பவுலையும், சீலாவையும் அடித்து துன்புறுத்தினர் - தி.ப 16:22,23, மத் 10:18அனைவருடைய மீட்புக்கும் ஈடாக, இயேசு தம் உயிரைக் கொடுத்தார் - மத் 20:28சீலாவும் பவுலும், சிறையில் பாடித் துதித்தார்கள் - தி.ப 16:25பவுலும், சீலாவும், ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, விடுதலை பெற்றனர் - மத் 16:26
......ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ளுங்கள். அப்பொழுது, நீங்களும் வீட்டாரும் மீட்படைவீர்கள் - தி.ப 16:31கப்பல் சிதைவால், பவுல் துன்பப்படல் - தி.பா 28:41
......உலகை கலக்கியவர்கள், ஏதென்ஸ் நகரில் போதித்தார்கள் - தி.ப 17:6, 16-34பவுல் தான் போதித்த திருச்சபைகளுக்கு, பல கடிதங்கள் எழுதினார் - 2பேது 3:15,16My status


 
 
copyrights © 2012 catholicpentecostmission.com