"CPM - பாடல்கள்"

Song - 1

நீ ஒருவன் மட்டும்


நீ ஒருவன் மட்டும் மீட்படைந்தால்

உன்னையும் உலகையும் மீட்டிடலாம்

ஹலேலூயா ஹலேலூயா

ஓசான்னா ஓசான்னா ஹலேலூயா


சரணங்கள்


1. சோதோம் கொமோரா அழிவதில்லை

ஒரே ஒரு நீதிமான் இருந்திருந்தால்

மீட்படைவாய் மீட்பளிப்பாய்

மீட்படைவாய் மகனே மீட்பளிப்பாய்


2. குடும்பத்தில் யாவரும் மீட்கப்பட்டனர்

நோவா என்ற ஒரு நீதிமானால்

மீட்படைவாய் ............................


3. சக்கேயுவின் வீடு மீட்கப்பட்டதே

சத்தியத்தின் தேவனை ஏற்றுக்கொண்டதால்

மீட்படைவாய் ............................


4. பரிசுத்தவான்களின் கூடாரத்தில்

மகிழ்ச்சியின் எக்காளம் தொனிக்கின்றது

மீட்படைவாய் ............................Song - 2

நெருக்கடி இல்லாத இடத்தில்


நெருக்கடி இல்லாத இடத்தில்

என்னை வாழ வைக்கும் தெய்வம்

இயேசு என் இயேசு, இயேசு என் இயேசு


சரணங்கள்


1 . மகனே மகளே திடன் கொள் - உன்

அடைக்கலமும் பரிசும் நானே

பதறாதே இங்கே புயலுண்டு

பக்கத்தில் நான் உடனுண்டு


2 . ஆட்டுக் குட்டியே அஞ்சாதே – உன்

நல்ல மேய்ப்பன் நானே

ஓநாய்கள் இங்கே பல உண்டு

ஓட்டி விரட்ட என் புயமுண்டு


3 . ஊழியப் பிள்ளையே பயராதே – உன்

உடமையும் பங்கும் நானே

உலகினில் உனக்கு துன்பமுண்டு

ஊக்கப்படுத்த நான் உண்டு


4 . விசுவாசியே நீ திடன் கொள் - உன்

வழியும் சத்தியமும் நானே

வீழ்த்திடும் தடைகள் உனக்குண்டு

வழுவாது காக்க என் கரமுண்டு 


Song - 3

பரிசுத்த ஆவியே பரம்பொருளே


பரிசுத்த ஆவியே பரம்பொருளே

பரிசுத்தவான்களின் உயிர் மூச்சே

பரலோக பயணத்தில் துணை வாரும்

பரிசுத்தமாய் வாழ வரம் தாரும்


சரணங்கள்


1 . சோதனை வாழ்வை தொடர்ந்திடும் போது

சகலமும் எனக்கு நீர் தானய்யா!

சத்திய பாதையில் தவறிடும் போது

சாந்த சொரூபியே துணை நீரய்யா!


2 . வேதனை துன்பம் துரத்திடும் போது

தாங்கிடும் துணிவை தாருமைய்யா!

வாழ்க்கையே இருளாய் மாறிடும் போது

விண்ணொளி எனக்கு நீரே ஐயா!


 


Song - 4

தேவா உந்தன் திருவசனம்


தேவா உந்தன் திருவசனம் தியானிக்க வேண்டும் - அந்த

வசனத்தை நான் காலமெல்லாம் வாழ்ந்திட வேண்டும்


சரணங்கள்


1 . இளைஞன் தான் செல்லும் வழியில் பரிசுத்தனாவான் - அவன்

பாவம் செய்யா புனித நிலை பெற்று வாழுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


2 . தவறும் வழியில் நடவாமல் உம்மை தொடருவான் - அவன்

பயனற்றதில் பார்வை வைக்காமல் கண்ணைக் காத்திடுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


3 . அவன் நடக்கும் பாதையிலே விளக்கை கண்டிடுவான் - அவன்

செல்வழியில் இருள் அகல வெளிச்சம் பெற்றிடுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


4 . இரவினிலும் பகலினிலும் உம்மை தியானிப்பான் - அவன்

உறங்கும் போதும் விழிக்கும் போதும் உம்மில் மகிழுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


 


Song - 5

பொறுத்தருளும் பொறுத்தருளும்


பொறுத்தருளும் பொறுத்தருளும் பொறுத்தருளும் தேவா

பாவ உடல் சுமக்கின்றேன் பெலவீனன் தேவா


சரணங்கள்


1 . தாய் வயிற்றில் குறையோடு கருவானேன் தேவா

சேய் என்னை பாவத்திலே பெற்றெடுத்தாள் அன்னை

என் குற்றம் எல்லாமே என் கண்முன்னே நிற்குதே

உம் முன்னே நின்று எந்தன் பாவம் மறைவதில்லை


2 . தற்பெருமை அகந்தையாலே மாளுகிறேன் தேவா

திருமுன்னே சுயம் என்னை அடிமையாக வாட்டுதே

பெரும் பாவம் செய்வதற்கு மாய வலை வீசுதே

பாவமிலா தூய நிலை வாழ என்னை தடுக்குதே


3 . நான் நினையா காரியங்கள் செய்கிறேனே தேவா

நான் ஒன்றை நினைக்கின்றேன் வேறொன்றையே செய்கிறேன்

என்னுள்ளே குடிகொண்ட பாவம் இதை செய்யுதே

வலுவற்ற என் இயல்பில் நன்மை ஏதும் இல்லையே


4 . பாதாள குழி நின்று கூவுகிறேன் தேவா

பரிதாபக் குரல் செவி கேட்டிடாதோ தேவா

என் பாவம் ஒவ்வொன்றாய் நீர் கணக்கிட்டே பார்த்தால்

உம் முன்னே நிற்பவர் யார் பரிசுத்த தேவா 


Song - 6

கர்த்தர் இரக்கமும் சாந்தமும்


கர்த்தர் இரக்கமும் சாந்தமும் உடையவர்

எளிதில் சினம் கொள்ளாதவர்

எல்லாருக்கும் அன்பு காட்டி நன்மை செய்பவர்


சரணங்கள்


1 . தடுக்கி விழும் யாவரையும்

கர்த்தர் தாங்குவார்

தாழ்த்தப்பட்ட யாவரையும்

தூக்கி நிறுத்துவார்


2 . உயிரினங்கள கண்களெல்லாம்

கர்த்தரை நோக்கிடும்

தக்க வேளையில் உணவால்

அவற்றை மகிழ்விப்பார் 


Song - 7

தம்மை நம்பிடுவோரைக்


தம்மை நம்பிடுவோரைக் கைவிடா தேவன்

இயேசு ஆண்டவரே – நம்

இயேசு ஆண்டவரே

அவர் நாமம் பாடுவேன்

அவர் பாதம் வாழுவேன்


சரணங்கள்


1 . அவரே வழியும் சத்தியமும் ஜீவன் என்றாரே

அவரின் வழியில் வாழ்ந்திடுவேன் ஜீவன் தருவாரே


2 . அவரே உயிர்ப்பும் உயிர் என்றார் வாயில் நான் என்றார்

அவரில் வாழ்ந்து மடிந்திடுவேன் உயிர்ப்பை தருவாரே


3 . அவரே நல்ல மேய்ப்பனுமாம் காக்கும் அரண் என்றார்

அவரின் ஆடாய் வாழ்ந்திடுவேன் பேணிக் காப்பாரே


4 . அவரே ஜீவ அப்பமுமாம் வானின் உணவென்றார்

அவரிடமே நான் சென்றிடுவேன் பசியை தீர்ப்பாரே


5 . அவரே திராட்சைக் கொடி என்றார் நானோ கிளை என்றார்

அவரின் மார்பில் படர்ந்திடுவேன் கனியால் நிறைப்பாரே
 


Song - 8

தேவா உந்தன் திருவசனம்


தேவா உந்தன் திருவசனம் தியானிக்க வேண்டும் - அந்த

வசனத்தை நான் காலமெல்லாம் வாழ்ந்திட வேண்டும்


சரணங்கள்


1 . இளைஞன் தான் செல்லும் வழியில் பரிசுத்தனாவான் - அவன்

பாவம் செய்யா புனித நிலை பெற்று வாழுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


2 . தவறும் வழியில் நடவாமல் உம்மை தொடருவான் - அவன்

பயனற்றதில் பார்வை வைக்காமல் கண்ணைக் காத்திடுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


3 . அவன் நடக்கும் பாதையிலே விளக்கை கண்டிடுவான் - அவன்

செல்வழியில் இருள் அகல வெளிச்சம் பெற்றிடுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால்


4 . இரவினிலும் பகலினிலும் உம்மை தியானிப்பான் - அவன்

உறங்கும் போதும் விழிக்கும் போதும் உம்மில் மகிழுவான்

உந்தன் வசனம் கடைபிடித்தால் 


Song - 9

நாங்க நல்லா இருக்கணும்


நாங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே

எங்க குடும்பம் தழைக்கணும் ஆண்டவரே


சரணங்கள்


1 . கடன் தொல்லை தீரணும் ஆண்டவரே – எங்க

கஷ்ட நஷ்டம் மாறணும் ஆண்டவரே

வியாதிப் பிணி நீங்கணும் ஆண்டவரே – நீங்க

நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே


2 . வீண் பயங்கள் மாறணும் ஆண்டவரே – எங்க

அறியாமை நீங்கணும் ஆண்டவரே

சண்டை பகை தீரணும் ஆண்டவரே – நீங்க

நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே


3 . வேலை தொழில் கிடைக்கணும் ஆண்டவரே – நல்ல

வருமானம் கிடைக்கணும் ஆண்டவரே

செய்யும் தொழில் வளரணும் ஆண்டவரே – நீங்க

நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே


4 . தடைகளெல்லாம் மாறணும் ஆண்டவரே – வீட்டில்

நல்ல காரியம் நடக்கணும் ஆண்டவரே

பேயின் தொல்லை நீங்கணும் ஆண்டவரே – நீங்க

நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

5 . குடிவெறிகள் நீங்கணும் ஆண்டவரே – எங்க

பாவ மாசு அகலணும் ஆண்டவரே

பற்றெல்லாம் மாறணும் ஆண்டவரே – நீங்க

நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

6 . அன்பு கொண்டு வாழணும் ஆண்டவரே – நாங்க

ஒன்று கூடி ஜெபிக்கணும் ஆண்டவரே

வேத வசனம் படிக்கணும் ஆண்டவரே – நீங்க

நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே
 


Song - 10

பொறுத்தருளும் பொறுத்தருளும்


பொறுத்தருளும் பொறுத்தருளும் பொறுத்தருளும் தேவா

பாவ உடல் சுமக்கின்றேன் பெலவீனன் தேவா


சரணங்கள்


1 . தாய் வயிற்றில் குறையோடு கருவானேன் தேவா

சேய் என்னை பாவத்திலே பெற்றெடுத்தாள் அன்னை

என் குற்றம் எல்லாமே என் கண்முன்னே நிற்குதே

உம் முன்னே நின்று எந்தன் பாவம் மறைவதில்லை


2 . தற்பெருமை அகந்தையாலே மாளுகிறேன் தேவா

திருமுன்னே சுயம் என்னை அடிமையாக வாட்டுதே

பெரும் பாவம் செய்வதற்கு மாய வலை வீசுதே

பாவமிலா தூய நிலை வாழ என்னை தடுக்குதே


3. நான் நினையா காரியங்கள் செய்கிறேனே தேவா

நான் ஒன்றை நினைக்கின்றேன் வேறொன்றையே செய்கிறேன்

என்னுள்ளே குடிகொண்ட பாவம் இதை செய்யுதே

வலுவற்ற என் இயல்பில் நன்மை ஏதும் இல்லையே


4 . பாதாள குழி நின்று கூவுகிறேன் தேவா

பரிதாபக் குரல் செவி கேட்டிடாதோ தேவா

என் பாவம் ஒவ்வொன்றாய் நீர் கணக்கிட்டே பார்த்தால்

உம் முன்னே நிற்பவர் யார் பரிசுத்த தேவா
 


 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.in