"தகவல் பலகை"

"Information Box"


CPM இணையதளம் :

தலைவர் :  அருட்திரு.R.ஜாண்ஜோசப் அடிகள்
இயக்குநர்                              :               அருட்சகோதரி.P.றெக்ஸிலின் தீபா
முதன்மை பொறியாளர் :  திருமிகு.Er.M.A.ஜோணிபர் கிறிஸ்டோ B.Tech
தொழில்நுட்ப ஆலோசகர்கள் :  திருமிகு.Er.G.மைக்கேல் சிங் பிரபு BE; திருமிகு. Er. M.A.ஜீன்பர் கிறிஸ்டோ .B.Tech.AME
செய்தித் தொகுப்பாளர் :  அருட்சகோதரிகள். J.ஜாண்செலின், P.புஷ்பலதா

 தலைவர்:

அருட்தந்தையவர்களின் இரவு பகல் இருபத்து நான்கு மணி நேர – 24 X 7, உழைப்பும் ஜெபமுமே, CPM இணையதளத்தை தலைமை தாங்கி நடத்துகிறது. அன்னாரது தொலை நோக்குப் பார்வையும், அவரது “விஷனும்”, “உலகின் கடையெல்லை வரைக்கும்” “பெந்தக்கோஸ்து மிஷன்” பரவ வேண்டும் என்ற, அவரது ஆர்வமும், இணையதள உலகில், நிச்சயம் பெரும் புரட்சிகளை ஏற்படுத்தும். அடிகளாரின் பணி சிறக்க, ஜெபிப்போம்.


 இயக்குநர்:

அருட்சகோதரி P.றெக்ஸிலின் தீபாவின், பணி ஆர்வமும், அயரா உழைப்பும், இன்று CPM இணையதள ஊழியமாக வளர்ந்திருக்கிறது. தலைவர், தலைமைப்பொறியாளர், தொழில்நுட்ப ஆலோசகர்கள், செய்தித் தொகுப்பாளர்கள், இவர்களை ஒருங்கிணைத்து, அனைவருடைய உழைப்பையும் ஓர் “இணையதளமாக” உருமாற்றும், அபூர்வ ஆற்றல் உடையவர், சகோதரி அவர்கள். எந்த சூழ்நிலையிலும், சோர்வுறாமல், விசுவாசத்தில் நிலைத்திருந்து, இந்த புனித ஊழியம் தொடர, அருட்சகோதரியின் பலிவாழ்வு, மிகுந்த துணை செய்யும்.


 முதன்மைப் பொறியாளர்:

திருமிகு பொறியாளர், ஜோணிபர் கிறிஸ்டோ, அவர்களின் கடினமான தொழில்நுட்ப உழைப்பே, CPM இணையதளம். அன்னார், அருட்தந்தையவர்களின் அன்புத்தம்பியின், மூத்த மகன். இவர், சென்னையில், பணியாற்றுகின்றார். இன்பர்மேஷன் டெக்னாலஜியில், இவருடைய பல ஆண்டு காலஅனுபவம், இன்று CPM இணையதளமாக உருவெடுத்துள்ளது. CPM சபை மீது, இவர் கொண்டுள்ள பற்றும், ஈடுபாடும், தொடர்ந்து, CPM இணையதளத்தை உயர்த்தும்.


 தொழில்நுட்ப ஆலோசகர்கள்:

திருமிகு மைக்கேல்சிங் பிரபு அவர்கள், சென்னையில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர், CPM சபையின் ஸ்தாபகர்களில் ஒருவரான, திருமிகு. ஞானக்கண் ஆசிரியர் அவர்களின் இளைய மகன். CPM சபையில் அபிஷேகம் பெற்ற, ஓர் ஆவிக்குரிய விசுவாசி. இந்த இணையதள ஊழியம் ஆரம்பிக்க, தந்தையவர்களைத் தூண்டிய முதல் ஆளே இவர்தான். அன்னாரது அன்பான ஆர்வம், தந்தையவர்களுக்கு புதிய வெளிச்சத்தை ஈந்தது. அதோடு, அவரது, தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து, CPM இணையதளத்துக்கு கிடைக்கும்.

திருமிகு. ஜீன்பர் கிறிஸ்டோ அவர்கள், அருட்தந்தையவர்களின் பாசமிகு தம்பியும், CPM சபையின் இணைஸ்தாபகருமான, R.மரிய ஆன்றணி அவர்களின் இளைய மகன். இவர் பெங்களுரில், பொறியாளராகப் பணியாற்றுகிறார். தமது அண்ணன், பொறியாளர் ஜோணிபர் கிறிஸ்டோ அவர்களுக்கு, ஒரு நல்ல தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து, CPM இணையதளத்துக்காக இவர் உழைக்கிறார். CPM சபை மீது, அவருக்குள்ள, அன்பும், ஆர்வமும், தொடர்ந்து, CPM இணையதளத்தின் ஊழியத்தை, அதிக பலனுள்ளதாக்கும் என்று நம்பலாம்.


 செய்தித் தொகுப்பாளர்கள்:

அருட்சகோதரி, ஜாண்செலின் அவர்கள், தம் ஆத்மீக ஞானத்தாலும், ஆவிக்குரிய அர்ப்பணத்தாலும், இணையதளத்தின் எழுத்துச் செய்திகள் அனைத்தையும், தயாரித்து, திருத்தம் செய்து, இயக்குநர் அவர்களுக்கு, மிகவும் துணையாக உள்ளார்கள். அவரது ஆழ்ந்த இறைப்பற்றும், விசுவாச உறுதியும், ஞானமும், பல ஆண்டுகால கல்வி, ஆத்மீக அனுபவமும், CPM இணையதளத்துக்கு, கடவுள் தரும் அன்புக் கொடைகளே.

அவ்வண்ணமே, அருட்சகோதரி புஷ்பலதா அவர்களின் பல ஆண்டுகால வேத அறிவும், செய்தி சேகரிப்பும், பாதுகாப்பும், ஏற்ற நேரத்தில், உரிய குறிப்புக்களையும், தொகுப்புக்களையும் தந்து, இயக்குனருக்கு உதவுகின்றார்கள். அன்னாரின் நீடிய பொறுமையும், பணி சுத்தியும், CPM இணையதளத்தை மேன்மேலும், வளர்க்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com