நான் எழுதிய போலிஸ் தேர்வில் வெற்றி பெற போலிஸ் வேலை கிடைக்க எனக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன் |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே! உங்கள் ஏக்கம் நிறைந்த விண்ணப்பதை தேவ பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கின்றோம். “விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்” (எசாயா 58:8) என்ற வேத வசனத்தின் படியே, தங்கள் வாழ்விலும், எதிர்பார்க்கின்ற வேலையையும், வெற்றியையும், விரைவில் தந்து, நலமான வாழ்வையும், வளமான எதிர்காலத்தையும் தருவதாக தேவன் வாக்குத்தத்தம் தருகிறார். வாக்கு மாறாத தேவனை பற்றிக் கொண்டு, தொடர்ந்து ஜெபிப்போம். வெற்றி நிச்சயம் உண்டு. தம்மை நம்பின யாரையும் அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. மீட்படைவோம்- மீட்பளிப்போம், ஆசீர் அருட்சகோதரிகள் - J.John Celin, V.Catherine Vimala |
|
|
health condition very weak for Jesus the prayer
immediate god is word |
|
-------------------------------------- |
இறை இயேசுவில், மிகவும் பிரியமான சகோதரரே! வியாதியோடு போராடிக்கொண்டிருக்கும் தங்களின் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை தேவ பாதத்தில் கண்ணீரோடு ஒப்புக் கொடுக்கிறோம். “பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் அவர் ஓட்டினார்” (மாற் 1:34) என்ற வேத வசனத்தின்படியே, இயேசுவை நம்பி, கண்ணீரோடு ஜெபிக்கின்ற தங்கள் விண்ணப்பத்தையும் ஆண்டவர் இப்போதே கேட்கின்றார். மெய்யாகவே, அவர் நம் பிணிகளை எல்லாம் பாரச்சிலுவையில் சுமந்து தீர்த்தார். என்ன வியாதியாக இருந்தாலும், அவரால் விடுதலை தர முடியும் என்ற விசுவாசத்தோடு தொடர்ந்து உங்களுக்காக கரம் விரித்து கண்ணீரோடு ஜெபிக்கின்றோம். வெகு விரைவில் தங்கள் விடுதலையின் சாட்சிக்காக காத்திருக்கின்றோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin |
|
|
எனக்கு ஒரு மகள் ,எனக்கு ஆண் குழந்தை வேண்டும் அதற்காக ஜெபிக்கவும்.இப்படி ஒரு சபை இருப்பது இப்போது தான் அறிந்தேன் மிக்க மழிச்சி |
|
-------------------------------------- |
இறை இயேசுவில் அன்பு சகோதரியே! தங்களின் மன்றாட்டை ஆண்டவரின் பாதத்தில் சமர்ப்பித்து, உங்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்கின்றோம். “பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்” (தி.பா 127:3) என்ற வசனத்தின்படியே ஆண்டவர் தந்திருக்கின்ற பிள்ளைகளுக்காக நன்றி. 1சாமு 1:11 – ல், அன்னா என்ற பெண்மணியும், தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆண்டவரி;டம் மன்றாடினார். அவர் மன்றாட்டை கேட்டு, கடவுளும், சாமுவேல் என்ற இறைவாக்கினரை மகனாக கொடுத்தார். உங்கள் விண்ணப்பத்தையும், ஆண்டவர் கேட்டு, உங்கள் மன விருப்பத்தை நிறைவேற்ற, தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கின்றோம். அற்புத சாட்சிகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
My daughter Agalya is going to attend the 12th board exam. Please pray for her to get the mercy of god so that she can get good marks in her exams. Also pray for her future studies. |
|
|
நான் கிறிஸ்தவம் பற்றி புரிந்துணர விரும்புகிறேன், எனக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்குமா? பணம்,தொழில்,குடும்பம், என எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, தனிமை தவிர..உதவ முடியுமா? |
|
|
கர்த்தருக்கு சித்தமான ஒரு பெண் 24 மணி நேரத்தில் நான் பார்க்க வேண்டும் தயவு செய்து கல்யாணம் சீக்கிரம் முடிய ஜெபம் செய்ய வேண்டுகிறேன் |
|
|
எனக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபம் செய்ய வேண்டுகிறேன் |
|
|
அரசாங்க வேலை கிடைக்க......குறிப்பாக ஆசிரியை வேலை கிடைக்க........எனக்காக ஜெபிக்குமாறு வேண்டுகிறேன். |
|
|
பேயின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். |
|
|
குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலம் பெற, கடவுளுக்கு விரோதமாக செய்த பாவத்திலிருந்து விடுபட , கடன் பிரச்சனைலிருந்து விடுதலை பெற, அவருடைய ஆசிர்வாதம் பெற மன்றாடுகிறோம். |
|
|
Priya is having always stomach pain. So please pray for her. Praise The Lord. |
|
|
எனது மகன் டேவிட் லீஜே வயது 16 ஆட்டிசம் எனும் மன நலமின்மையால் இயல்பான வாழ்வு முறை இல்லாது வாழ்ந்து வருகிறான். அவனுக்கு தெய்வீக சுகம் கிடைக்க மன்றாட வேண்டுகிறேன் |
|
|
மன குழப்பம், மன வேதனை தீர, சாத்தானின் கட்டுகள் உடைய,
நல்ல உடல் சுகம் வேண்டும், மன தைரியம் வேண்டும்.
எந்தவித தடைகள் இல்லாமல் திருமணம் நடை பெற வேண்டும்.
நான்கு வருடமாக காதலித்த பெண் இப்போது என்னுடன் பேச, பார்க்க மறுக்கிறாள். அவளின் வீட்டில் எதிர்ப்புகள், தீய கட்டுகள் அவளிடம் போடப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் சம்மதம், அவள் வீட்டில் எதிர்ப்பு.
எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்.
என் பாவத்தை கடவுள் மன்னித்து என் வாழ்க்கை மாற்றி தர வேண்டும். |
|
|
எனக்கு இடது பக்கமாக ஒரு வித கஷ்டமும் தொடர் காஸ் பிரச்சினையும் உள்ளது. இதிலிருந்து நான்விடு பட ஜெபியுங்கள் |
|
|
எனக்கு வேலை கிடைக்க ஜெபிக்கவும். |
|
|
நான் மிகவும் கஷ்ட படுக்கிறேன் எனக்கு நிரந்தர ஒரு வருமானம் இல்லை என் பாவத்தை கடவுள் மன்னித்து என் வாழ்க்கை மாற்றி தர வேண்டும் என கேட்க்கிறேன் என்னோடைய பழைய சிந்தனைகளை நான் மறக்க என் நிலை மாற வேண்டும் ப்ளீஸ் எனக்கு prayer பண்ணுங்க also please change my life.i am waiting for your one word please lord change my life. |
|
|
இறை இயேசுவில் எனக்கு அன்பான அருட்தந்தை அவர்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்! சிறுவயதுமுதல் பல சந்தர்ப்பங்களில் என் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை நடத்தி வைத்து தப்புவிக்க அன்பு தகப்பனின் நேசகரம் என்றும் கூடேயுண்டு! இன்றும் அதுபோல எங்கள் குடும்பத்தில் நிலவும் கருத்துவேறுபாடு, பிளவு, வெறுப்பு, வைராக்கியம், பொல்லாத எண்ணங்கள் இவைகளை குடும்பத்தில் கொண்டு சேர்க்க முயலும் பொல்லாங்கனின் சூழ்ச்சிகளில் இருந்து தப்புவிக்கவும் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் மேலோங்கி ஒற்றுமை நிலவ இறை பாதத்தில் மிகுந்த மன பாரத்துடன் என் விண்ணப்பத்தை சமர்பிக்கிறேன். |
|
|
இறை இயேசுவில் அன்பான தந்தையவர்களுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
தொலை தூர தேசத்தில்(சவுதி அரேபியா) இருந்து தன்னந்தனியே ஒரு அபய குரல் தான் அறிந்த ஆண்டவரை நோக்கி, இதுவரை உதவி செய்தார், இனியும் காத்திடுவார் என்ற நம்பிக்கையில். என் எளிய விண்ணப்பம் எதுவெனில், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில், வருடாந்திர விடுமுறையும் இந்த மாதம் முதல் வந்துள்ளது. இச்சூழ்நிலையில், மற்றுமொரு புதிய கம்பெனியில் இருந்து சிறந்ததொரு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அழைக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த கம்பெனி அனுமதி தர மறுப்பதோடு, விடுமுறைக்கும் அனுப்ப மறுக்கின்றனர். இப்போது அவர்கள் என்னிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு நல்ல முடிவு ஏற்பட ஆண்டவர் சமூகத்தில் ஜெபம் ஏறெடுக்க சபையார் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்,
F.ஹெட்விஜ் சுரேஷ்
ரியாத்(சவுதி அரேபியா) |
|
|
இறை இயேசுவில் அன்பான தந்தையவர்களுக்கும் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
தொலை தூர தேசத்தில்(சவுதி அரேபியா) இருந்து தன்னந்தனியே ஒரு அபய குரல் தான் அறிந்த ஆண்டவரை நோக்கி, இதுவரை உதவி செய்தார், இனியும் காத்திடுவார் என்ற நம்பிக்கையில். என் எளிய விண்ணப்பம் எதுவெனில், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இரண்டு வருட ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில், வருடாந்திர விடுமுறையும் இந்த மாதம் முதல் வந்துள்ளது. இச்சூழ்நிலையில், மற்றுமொரு புதிய கம்பெனியில் இருந்து சிறந்ததொரு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அழைக்கிறார்கள். ஆனால் முன்பிருந்த கம்பெனி அனுமதி தர மறுப்பதோடு, விடுமுறைக்கும் அனுப்ப மறுக்கின்றனர். இப்போது அவர்கள் என்னிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு நல்ல முடிவு ஏற்பட ஆண்டவர் சமூகத்தில் ஜெபம் ஏறெடுக்க சபையார் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்,
F.ஹெட்விஜ் சுரேஷ்
ரியாத்(சவுதி அரேபியா) |
|
|
dear.father,I m searching for job,all doors r closed..please pray for me and for my future ,and also my wishes to complete.. |
|
|
குடும்பங்களில் சமாதானம் மன கசப்புகள் கருத்து வேறுபாடுகள் நீங்க
என் மகனுக்கு இருக்கும் பிடிவாத குணத்திலிருந்து விடுவிக்க
என் மனைவிக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை தீர
என் தாய் தந்தைக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை தீர
என் தந்தை நாங்கள் குடியிருக்கும் வீட்டை என் பெயருக்கு எழுதி தர
எனக்கு பனி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்திட எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென் |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே! தங்கள் உள்ளம் கனத்த விண்ணப்பத்தோடு, தேவ பாதத்தில் வேண்டுகிறோம். பயந்து போய், மிகுந்த நடுக்கத்துடன், அறைக்கதவை பூட்டிக் கொண்டு ஒளிந்திருந்த சீடர்கள் மத்தயில் உயிர்த்த இயேசு தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (யோவா 20:19) என்று கூறி வாழ்த்தினார். அந்த இயேசு, நிச்சயமாக இன்றும் தம்மை தேடும் ஒவ்வொருவரோடும் வாழ்கின்றார். அவர் எல்லாருக்கும் நன்மை செய்கின்றவர். நிச்சயமாக உங்கள் குடும்பத்தையும் எல்லாவித நன்மைகளாலும் நிரப்பி, யாராலும் எடுக்க முடியாத, நிலையான சமாதானத்தை தந்தருள்வார். தோடர்ந்து தொடர்பில் இருங்கள். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
எனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் அல்லது என் தொழில் சிறக்க வேண்டும்.
நான் தற்போது மிகவும் கஷ்டத்தில உள்ளேன். என் கஷ்டம் நீங்க ,
இறை அருள் கிடைக்க ஜெபியுங்கள்.
நன்றி. |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே!
உங்கள் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை, தேவ சமூகத்தில் ஏறெடுத்து கண்ணீரோடு நிற்கின்றோம். உயிர்த்த இயேசு, தம் சீடர்களின் தொழிலிலே, ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் தொழிலில் ஏற்பட்ட தொய்வுகளை எல்லாம் சீராக்கினார். வெற்றியையும, செழிப்பையும் கொடுத்தார் என்று யோவா 21:1-8 வரையுள்ள வசனங்களில் வாசிக்கின்றோம்.
உயிர்த்த இயேசு, இந்த நாட்களில் நம்மோடு இருக்கின்றார். வெகுவிரைவில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.தொடர்ந்து ஜெபிக்கின்றோம். முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
அரசங்க வேலை கிடைக்கவாழ்க்கையில் முன்னேர கர்த்தரிடம் எனக்காக ஜெபிக்குமாரு வேண்டுக்கிறேன்................. |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே! மத் 7:7 – ன் படி, ஆண்டவர் உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் தருகிறார். “கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்” என்று சொன்ன தேவன் உங்கள் விண்ணப்பத்தை நிச்சயம் கேட்பார். விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள். ஆண்டவர் நீங்கள் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக அதிசயங்களை செய்ய வல்லவர். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
நான் MSC 2009ல் முடித்தேன் இதுவரை எந்த
வேலையிலும் நிரந்திரமாக பணிபுரிய முடியவில்லை, பிரச்சனைகள் வந்து வெளியேர
வெண்டிய நிலை உருவகிறது. இப்பொலுதும் உடல் நிலை சரியில்லாமல் அருவை
சிகிச்சை செய்து வீட்டில் உள்ளேன். என்னுடைய படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளேன், நிரந்தர வேலை கிடைத்து வாழ்க்கையில்
முன்னேர கர்த்தரிடம் எனக்காக ஜெபிக்குமாரு வேண்டுக்கிறேன்................. |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே! பாரம் நிறைந்த உங்கள் விண்ணப்பத்தை ஆண்டவர் நிச்சயம் கேட்டருள்வார். ஏசா 53:4-5 ன்படி, “அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களை சுமந்து கொண்டார். அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” என்று நம் தேவன், கல்வாரியில் தன்னை பலியாக்கி, நமக்கு விடுதலையை தந்துள்ளார். அவரை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள். இடைவிடாமல் ஜெபியுங்கள் - 1தெச 5:16. தேவன் உங்களை எழுப்பிவிட்டு, நிச்சயமாக ஒரு நிரந்தர வேலையையும் இப்போதே ஆயத்தம் செய்வார். உங்களை சாட்சியாக மாற்றி ஆசீர்வதிப்பார். தொடர்ந்து உங்களை ஜெபத்தில் தாங்கும் . மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
நான் கடன் பிரச்னை இல் இருந்து விடுபட வேண்டும் நான் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அம்மா நன்றாக இருக்க மற்றும் என் காதலி விஜயலஷ்மி யை நான் திருமணம் செய்து கொண்டு கர்த்தருடைய பத்திரமாக இறுக்க ஜெபிக்க வேண்டுக்கிறேன் |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே! 1யோவா 5:14 – ன்படி ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகின்றார். “நாம் கேட்பது, அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்கு செவிசாய்க்கின்றார்" என்று சொன்ன நல்ல தேவன், தம்முடைய விருப்பத்தின்படியே, உங்கள் தேவைகளையும் சந்திப்பார். தங்களுக்காகவும் தங்கள் விண்ணப்பத்திற்காகவும், தொடர்ந்து இறை பாதம் நிற்கின்றோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
என் அம்மாவிற்கு வயிற்று வலி சுகமாக ஜெபிக்க வேண்டும் |
|
|
எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமாறு ஜெபிக்க வேண்டும் |
|
-------------------------------------- |
அன்பு சகோதரி 1 சாமு 1 : 17 - ன் படி, தங்கள் ஜெபத்தை, ஆண்டவர் கேட்டருள்வார். மனிதனாலே கூடாதது, நம் தேவனாலே கூடும் - தொ. நூ 18 : 13,14 . வேலையில்லாதவர்களுக்கு, வேலை அளித்த இயேசு, உங்கள் விண்ணப்பத்துக்கு, வெகு விரைவில் செவி சாய்க்கிறார். - மத் 20 : 1 -8 . தங்கள் விண்ணப்பத்தோடு, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தாங்கி ஜெபிக்கிறோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
என் கணவரின் குடி பழக்கம் மாற வேண்டும் |
|
-------------------------------------- |
அன்பு சகோதரி, தங்களின் பாரம் நிறைந்த விண்ணப்பத்தை, கண்ணீரோடு தேவ சமூகத்தில் ஏறெடுக்கிறோம். அல்லும் பகலும் தம்மை நோக்கி ஜெபிக்கின்றவர்களுக்கு விரைவில் பதில் கொடுப்பேன் என்று சொன்ன நல்ல தேவன், உங்கள் கணவரின் குடிபழக்கத்தை விரைவில் மாற்ற சித்தம் கொண்டார். இரவும் பகலும் சோர்ந்து போகாமல், தேவ பாதத்தில் ஜெபியுங்கள். வெற்றி நிச்சயம் உண்டு. மீட்படைவோம் - மீட்பளிப்போம் - இப்படிக்கு, உங்களை என்றும் ஜெபத்தில் தாங்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
Dear Father, Iam searching for nursing job in Bahrain.I had completed Bsc.Nursing .Also if i want to work here i need nursing license approved by Bahrain govt.please pray for me for approval of license as well as job |
|
-------------------------------------- |
அன்பு சகோதரி, தங்களுடைய விண்ணப்பத்தை பார்த்தோம். மத் 6 : 32 - 34 -ன் படி, தங்களுடைய விண்ணப்பம் கேட்கப்பட்டது. தடைகள் எல்லாம் வெகு சீக்கிரத்தில் நீங்கி, நீங்கள் ஒரு வேலையை சீக்கிரம் பெற்று கொள்வீர்கள். "தம்மிடம் வருபவரை ஒருபோதும் தள்ளிடாத தேவன், (யோவா 6 : 37 ), உங்களை ஆசீர்வதிக்கிறார் . “மீட்படைவோம் - மீட்பளிப்போம்”. இப்படிக்கு தங்களை தாங்கி ஜெபிக்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
என் அக்காமா புதுப்பிக்க முடியாமலும், நான் இந்நாட்டிலிருந்து வெளியேறக்கூடிய நெருக்கடியான சூழல் உருவாக உள்ளது. எனக்கு உதவி செய்ய இங்கு யாரையும் காணவில்லை. தயவு தேடி ஆண்டவர் சமூகத்தில் என் விண்ணப்பத்தை ஏறெடுக்கிறேன் எனக்காக தேவ சமூகத்தில் ஜெபிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். lovingly, Hedwige |
|
-------------------------------------- |
அன்பு சகோதரரே! தங்களுடைய பாரம் நிறைந்த விண்ணப்பம், இறை சமூகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தி.பா18:16-30 – ன் படி, தங்களுடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் தருகிறார். தம்மைத் தாழ்த்தும் நீதிமானின் ஜெபம், மேகங்களை ஊடுருவி சென்று, பதில் பெறாமல் திரும்பாது – சீரா 35:17. திடம் கொள்ளுங்கள், உறுதியாயிருங்கள், ஆண்டவர் தங்கள் பக்கம் இருந்து, தங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறார் - தி.பா 37:5. “மீட்படைவோம் - மீட்பளிப்போம்”. இப்படிக்கு தங்களை தாங்கி ஜெபிக்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
Dear Father, எனது இரண்டு கை விரல்களும் நடுங்கும் (nervous).சிறு வயதுலிருந்தே எனக்கு இந்த பிரச்சினை உண்டு ஆனால் இப்போ அதை விட பயங்கரமா இருக்கு. i have fear that it will affect my carrier. Father please pray for me to strengthen my fingures |
|
-------------------------------------- |
அன்பு சகோதரி, பிணி தீர்ப்பதற்கான, ஆண்டவரின் வல்லமை இயேசுவோடிருக்கிறது – லூக் 5:17. இயேசு பல்வேறு பிணிகளாலும், வாதைகளாலும், வருந்திய அனைவரையும், குணமாக்கினார் - மத் 4:24. எனவே, தங்கள் நம்பிக்கை வீண்போகாது. விடுதலையளிக்கும் இயேசு, தங்கள் விரல்களின் நடுக்கத்தை, நீக்கிப்போடுவார். மீட்படைவோம் - மீட்பளிப்போம் - இப்படிக்கு, உங்களை என்றும் ஜெபத்தில் தாங்கும் அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|
Dear father...!!! please pray for my studies.And my future.. |
|
-------------------------------------- |
அன்புள்ள அகிலா, தாங்கள் ஏறெடுத்த விண்ணப்பங்களை இறை சமூகத்தில் வைத்து ஜெபிக்கிறோம். எசயா 46 : 3 ,4 வசனங்களின் படி, ஆண்டவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தருகிறார். ஜெபமே ஜெயம். விடாது ஜெபித்தால், விடுதலை உண்டு. மீட்படைவோம், மீட்பளிப்போம். இப்படிக்கு, உங்களை தாங்கி ஜெபிக்கும், அருட்சகோதரிகள், Catherine Vimala , John Celin . |
|
|
Dear Father, I got married, two years ago. But, we have no children. The Doctors say that, we have some problem. Would you please kindly pray for us, that we may have a child, very soon. I have finished B.sc Nursing, and I am searching for a job. Please keep this intention, in your chain prayer. |
|
-------------------------------------- |
அன்பு சகோதரி 1 சாமு 1 : 17 - ன் படி, தங்கள் ஜெபத்தை, ஆண்டவர் கேட்டருள்வார். மனிதனாலே கூடாதது, நம் தேவனாலே கூடும் - தொ. நூ 18 : 13,14 . வேலையில்லாதவர்களுக்கு, வேலை அளித்த இயேசு, உங்கள் விண்ணப்பத்துக்கு, வெகு விரைவில் செவி சாய்க்கிறார். - மத் 20 : 1 -8 . தங்கள் விண்ணப்பத்தோடு, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தாங்கி ஜெபிக்கிறோம். மீட்படைவோம் - மீட்பளிப்போம். ஆசீர் - அருட்சகோதரிகள் - Catherine Vimala, John Celin. |
|
|