"கட்டளைகள்"


I. பிறர் அன்புக்கான – இறை “விருப்பங்கள்”:


1. துன்பத்தில் அன்பு :


செய் :

 • பிறர் உங்களை துன்புறுத்தி, தூற்றும்போது பேருவகை கொள்ளுங்கள் - மத் 5:11-12.
 • எதிரியோடு செல்லும் வழியில், அவரோடு உடன்பாடு செய்து கொள்ளுங்கள் - மத் 5:25.
 • ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தை காட்டுங்கள் - மத் 5:39.
 • எவராவது உங்களை ஒரு கல் தொலை அழைத்தால், இருகல் தொலை செல்லுங்கள் - மத் 5:41.
 • உங்கள் பகைவருக்கு அன்பு செய்யுங்கள் - மத் 5:44
 • உங்களை துன்புறுத்துவோருக்காக கடவுளிடம் வேண்டுங்கள் - மத் 5:44.
 • உங்கள் பகைவர்களுக்கு நன்மை செய்யுங்கள் - லூக் 6:35.
 • உங்களை துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள் - உரோ 12:44.
 • நன்மையால் தீமையை வெல்லுங்கள் - உரோ 12:21.

செய்யாதே :

 • உங்களை துன்புறுத்துவோரை சபிக்க வேண்டாம் - உரோ 12:14.
 • தீமைக்கு பதில் தீமை செய்யாதீர் - உரோ 12:17.

2. பிறர் நலம் பேணுதல் :


செய் :

 • ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருங்கள் - உரோ 14:13.
 • வலுவற்றவரை தாங்குங்கள் - உரோ 15:1.
 • அடுத்தவருடைய வளர்ச்சிக்காக செயல்பட்டு, அவர்களுக்கு உகந்தவர்களாக இருங்கள் - உரோ 15:2.
 • ஒருவர் மற்றவருடைய சுமையை தாங்குங்கள் - கலா 6:2.
 • தன்னலத்தை நாடாது, பிறர் நலத்தை நாடுங்கள் - பிலி 2:4.
 • நன்றியுள்ளவர்களாயிருங்கள் - கொலோ 3:15.
 • ஒருவரை ஒருவர் தேற்றுங்கள் - 1தெச 4:18.
 • ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி வளர்ச்சியடைய செய்யுங்கள் - 1தெச 5:11.
 • சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள் - 1தெச 5:14.
 • மனதளர்ச்சியற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள் - 1தெச 5:14.
 • வலுவற்றோர்க்கு உதவுங்கள் - 1தெச 5:14.
 • எல்லாரோடும் பொறுமையாயிருங்கள் - 1தெச 5:14.
 • எல்லாருக்கும் நன்மை செய்யுங்கள் - 1தெச 5:15.
 • ஒருவருக்கொருவர் ஊக்க மூட்டுங்கள் - எபி 10:25.
 • நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் - உரோ 14:1.
 • பிற இனத்தார் நடுவில் நன்னடத்தை உடையவராயிருங்கள் - 1பேது 2:12.
 • நன்மை செய்து பகைவரை வெல்லுங்கள் - 1பேது 2:15.

செய்யாதே :

 • உன்னிடம் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதே – மத் 5:42.
 • நமக்கு உகந்ததையே தேடாதீர் - உரோ 15:11.
 • தீமை உங்களை வெல்ல விடாதீர் - உரோ 12:21.
 • நீங்கள் யாருக்கும் இடைஞ்சலாய் இராதீர் - 1கொரி 10:32.
 • தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் - 1பேது 3:9.
 • பழி சொல்லுக்கு பழி சொல் கூறாதீர்கள் - 1பேது 3:9.

3. குடும்ப கடமைகள் :


செய் :

 • திருமணமான பெண் ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல, கணவருக்கு பணிந்திருக்க வேண்டும் - எபே 5:22.
 • திருச்சபை கிறிஸ்துவுக்கு பணிந்திருப்பது போல் மனைவி கணவருக்கு பணிந்திருக்கட்டும் - எபே 5:24.
 • கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல், கணவன் மனைவியை அன்பு செய்யுங்கள் - எபே 5:25.
 • கணவன் மனைவியை தன் சொந்த உடலென கருதி அன்பு செய்யுங்கள் - எபே 5:28.
 • தன் மீது அன்பு காட்டுவது போல, கணவன் மனைவி மீது அன்பு காட்டுங்கள் - எபே 5:33.
 • பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் - எபே 6:11.
 • பெற்றோரே, உங்கள் பிள்ளைகளை கண்டித்து, திருத்தி, ஆண்டவருக்கு ஏற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்துங்கள் - எபே 6:4.
 • பிள்ளைகள் மனந்தளர்ந்து போகாதபடி பெற்றோர் பார்த்து கொள்ளுங்கள் - கொலோ 3:20.
 • பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் - கொலோ 3:20.
 • திருமணமான பெண்கள் கணவருக்கு பணிந்திருங்கள் - கொலோ 3:18, 1பேது 3:1.
 • திருமணமான ஆண்கள் மனைவியோடு இணைந்து வாழுங்கள் - 1பேது 3:7.
 • கணவர் தம் மனைவிக்கு மதிப்பு கொடுங்கள் - 1பேது 3:7.
 • இளைஞர்களே, முதியவர்களுக்கு பணிந்திருங்கள் - 1பேது 5:5.
 • திருமணமான ஆண்கள் மனைவியிடம் அன்பு செலுத்துங்கள் - கொலோ 3:19.

செய்யாதே :

 • கணவன் மனைவியை கைவிடலாகாது – 1கொரி 7:11.
 • தந்தையர் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர் - எபே 6:4.

4. இல்லாதவர்களுக்கு உதவும் அன்பு :


செய் :

 • ஒருவர் உங்கள் அங்கியை கேட்டால், மேலுடையையும் கொடுங்கள் - மத் 5:40.
 • உங்களிடம் கேட்கிறவருக்கு கொடுங்கள் - மத் 5:42.
 • இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் - லூக் 3:11.
 • எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள் - லூக் 6:35.
 • உன் எதிரி பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடு – உரோ 12:20.
 • உன் எதிரி தாகத்தோடிருந்தால் அவனுக்கு குடிக்க கொடு – உரோ 12:20.

5. சகோதர அன்பு :


செய் :

 • நீங்கள் காணிக்கை செலுத்தும் முன், உங்கள் சகோதரரோடு நல்லுறவு ஏற்படுத்தி கொள்ளுங்கள் - மத் 5:24.
 • சகோதரன் குற்றம் செய்தால், ஏழு எழுபது தடவை மன்னியுங்கள் - மத் 18:22.
 • தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள் - லூக் 6:36.
 • உங்கள் சகோதர் குற்றம் செய்தால், அவரை கடிந்து கொள்ளுங்கள் - லூக் 17:3.
 • உங்கள் சகோதர் மனம் மாறினால், அவரை மன்னியுங்கள் - லூக் 17:3.
 • நீதியோடு தீர்ப்பளியுங்கள் - யோவா 7:24.
 • உடன் பிறப்புகளுக்குரிய முறையில் அன்பு காட்டுங்கள் - உரோ 12:10.
 • விருந்தோம்பலில் கருத்தாயிருங்கள் - உரோ 12:13.
 • மகிழ்வாரோடு மகிழுங்கள், அழுவாரோடு அழுங்கள் - உரோ 12:15.
 • நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள் - உரோ 12:16.
 • சகோதரருக்கு இடையூறாக இருப்பதில்லை என தீர்மானியுங்கள் - உரோ 14:13.
 • நீங்கள் ஒத்த கருத்துடையவராய் இருங்கள் - 1கொரி 1:10.
 • எல்லாருக்கும், சிறப்பாக விசுவாசிகளுக்கு நன்மை செய்யுங்கள் - கலா 6:10.
 • ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் - எபே 4:32.
 • ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் - எபே 4:32.
 • சகோதர அன்பில் நிலைத்திருங்கள் - எபி 13:11.
 • சிறைப்பட்டவரோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பது போல, அவர்களை நினைத்து கொள்ளுங்கள் - எபி 13:3.
 • சகோதரர் சகோதரர்களிடம் அன்பு செலுத்துங்கள் - 1பேது 2:17.
 • எல்லோரும் ஒருமனப்பட்டவராயிருங்கள் - 1பேது 3:8.
 • இரக்கம், சகோதர அன்பு, பரிவுள்ளம் கொண்டிருங்கள் - 1பேது 3:8.
 • முணுமுணுக்காமல் விருந்தோம்புங்கள் - 1பேது 4:9.
 • விசுவசிக்க தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள் - யூதா 1:22.

செய்யாதே :

 • பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்காதீர்கள் - மத் 7:1
 • விருந்தோம்ப மறவாதீர் - எபி 13:2.
 • துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர் - எபி 13:3.

6. துன்பம் கொடுக்காத – அன்பு :


செய் :

 • பழிவாங்குதல் எதையும் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள் - உரோ 12:19.
 • பிரிவனை உண்டாக்குகிறவர் மேல் கவனமாயிருங்கள் - உரோ 16:17.
 • நன்மை செய்ய ஞானமுடையவராக இருங்கள். தீமை செய்ய கபடற்றவராக இருங்கள் - உரோ 16:19.
 • எல்லாரும் பிறர் நலமே நாடுங்கள் - 1கொரி 10:24.
 • பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும் - எபே 4:26.
 • மனக்கசப்பு, சீற்றம், சினம் ஒழியட்டும் - எபே 4:31.
 • தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள் - எபே 4:31.
 • சினம், சீற்றம், தீமையை நீக்குங்கள் - கொலோ 3:8.
 • சினம்கொள்ள தாமதிக்க வேண்டும் - யாக் 1:19.
 • தீமையையும், வஞ்சகத்தையும் அகற்றுங்கள் - 1பேது 2:1.
 • அவதூறு பேசுவதை அகற்றுங்கள் - 1பேது 2:2.

செய்யாதே :

 • உங்களுக்கு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக தண்டாதீர்கள் - லூக் 3:13.
 • எவரையும் அச்சுறுத்தி, பணம் பறிக்காதீர்கள் - லூக் 3:14.
 • யார்மீதும் பொய்குற்றம் சுமத்தாதீர்கள் - லூக் 3:14.
 • மற்றவர்களை கண்டனம் செய்யாதீர்கள் - லூக் 6:37.
 • யாருக்கும் எதிலும் கடன் படாதீர் - உரோ 13:8.
 • கருத்து வேறுபாடுகளை பற்றி வாதாடாதீர் - உரோ 14:1.
 • ஒருவரை ஆதரித்து கொண்டு, வேறொருவரை எதிர்க்காதீர் - 1கொரி 4:6.
 • ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாதீர் - கலா 5:26.
 • பொறாமைப்படாதீர் - கலா 5:26.
 • பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு, உங்கள் வாயில் வராதிருக்கட்டும் - கொலோ 3:8.

7. கனி நிறைந்த அன்பு :


செய் :

 • நான் உங்கள் காலடிகளை கழுவியது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யுங்கள் - யோவா 13:14.
 • நான் உங்களுக்கு அன்பு செலுத்தியது போல, நீங்களும் செய்யுங்கள் - யோவா 13:34.
 • உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருக்கட்டும் - உரோ 12:9.
 • பிறர் உங்களை விட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள் - உரோ 12:10, பிலி 2:3.
 • எப்பொழுதும், எதிர்நோக்கோடும், மகிழ்ச்சியோடுமிருங்கள் - உரோ 12:12.
 • உயர்வு மனப்பான்மை கொள்ளாமல், தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள் - உரோ 12:16.
 • முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள் - உரோ 12:18.
 • ஆள்பவருக்கு பணிந்திருங்கள் - உரோ 13:1.
 • மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள் - உரோ 13:7.
 • அன்பு செலுத்துவதே உங்கள் கடனாயிருக்கட்டும் - உரோ 13:8.
 • கிறிஸ்து உங்களை ஏற்றுகொண்டது போல, நீங்களும் பிறரை ஏற்றுக்கொள்ளுங்கள் - உரோ 15:7.
 • அன்போடு அனைத்தையும் செய்யுங்கள் - 1கொரி 16:14.
 • முழு தாழ்மை, கனிவு, பொறுமையோடு ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள் - எபே 4:2.
 • அமைதியுடன் இணைந்து வாழுங்கள் - எபே 4:3.
 • கிறிஸ்துவுக்கு அஞ்சி, ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள் - எபே 5:21.
 • ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் உடையவராயிருங்கள் - பிலி 2:2.
 • மனத்தாழ்மையோடு பிறரை உயர்ந்தவராக எண்ணுங்கள் - பிலி 2:3.
 • கீழ்படிதலோடு நடயுங்கள் - பிலி 2:12.
 • கனிந்த உங்கள் உள்ளம், அனைவர் முன்னும் விளங்குவதாக – பிலி 4:5.
 • பரிவு, கனிவு, பொறுமையை கொண்டிருங்கள் - கொலோ 3:12.
 • ஒருவருக்கொருவர் பொறுத்து கொள்ளுங்கள் - கொலோ 3:13.
 • உங்கள் பேச்சு இனியதாகவும், சுவையுடையதாகவும் இருக்கட்டும் - கொலோ 4:6.
 • அன்பு செய்யவும், நற்செயல்கள் புரியவும் தூண்டியெழுப்புங்கள் - எபி 10:24.
 • அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள் - எபி 12:14.
 • மனதாழ்மையுடையோராய் இருங்கள் - 1பேது 3:8.
 • பணிவோடும், மரியாதையோடும் விடை அளியுங்கள் - 1பேது 3:16.
 • ஒருவருக்கொருவர் ஆழந்த அன்பு காட்டுங்கள் - 1பேது 1:22, 4:8.
 • மனதாழ்மையை ஆடையாய் அணியுங்கள் - 1பேது 5:5.
 • கடவுளுடைய கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துங்கள் - 1பேது 5:6.
 • உங்கள் செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்யுங்கள் - 1யோவா 3:18.

செய்யாதே :

 • உங்களை நீங்களே அறிவாளிகளாக கருதாதீர் - உரோ 12:16.
 • சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள் - எபே 4:26.
 • வீண் பெருமை பாராட்டாதீர் - கலா 5:26.

II. கடவுள் அன்புக்கான – இறை “விருப்பங்கள்”:


1. செப வாழ்வும் - இறைவேண்டலும் :


செய் :

 • கதவை அடைத்து கொண்டு, மறைவாய் தந்தையை நோக்கி வேண்டுங்கள் - மத் 6:6.
 • கர்த்தர் கற்பித்த ஜெபம் செய்யுங்கள் - மத் 6:9.
 • இறைவேண்டலில் நிலைத்திருங்கள் - உரோ 12:12.
 • வேண்டுதல்களையும், மன்றாட்டுகளையும், இறைவனிடம் எழுப்புங்கள் - எபே 6:18.
 • தூய ஆவியின் துணையால் வேண்டுதல் செய்யுங்கள் - எபே 6:18.
 • இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் - எபே 6:18.
 • தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள் - கொலோ 4:2.
 • இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் - 1தெச 5:16.
 • ஞானம் இல்லையேல் கடவுளிடம் கேளுங்கள் - யாக் 1:5.
 • செபத்தில் ஐயப்பாடின்றி நம்பிக்கையோடு கேளுங்கள் - யாக் 1:6.
 • கடவுளை அணுகி செல்லுங்கள் - யாக் 4:8.
 • உங்கள் நிலையை அறிந்து புலம்பி அழுங்கள் - யாக் 4:9.
 • துன்புற்றால் இறைவனிடம் வேண்டுங்கள் - யாக் 5:13.
 • கடவுளை அணுகுங்கள் - 1பேது 2:4.
 • இறைவேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும், அறிவுத்தெளிவோடும் இருங்கள் - 1பேது 4:7.

செய்யாதே :

 • வெளிவேடக்காரரைப் போல் இறைவேண்டல் செய்யாதீர் - மத் 6:5.

2. ஜெப வாழ்வும் - இறை உறவும் :


செய் :

 • ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் - பிலி 4:1.
 • எதை செய்தாலும் ஆண்டவர் பெயரால் செய்யுங்கள் - கொலோ 3:17.
 • சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக செல்லுங்கள் - எபி 10:25.
 • விண்ணக தந்தைக்கு பணிந்து வாழுங்கள் - எபி 12:9.
 • ஆண்டவர் முன் உங்களை தாழ்த்துங்கள் - யாக் 4:10.

3. ஜெப வாழ்வும் - வேதமும் :


செய் :

 • வேத உபதேசங்களை பற்றிகொண்டு நிலையாயிருங்கள் - 2தெச 2:15.
 • இறைவார்த்தையை கேட்பதோடல்லாமல், அதன்படி நடக்கிறவர்களாக இருங்கள் - யாக் 1:22.
 • தேவ அறிவுரைக்கு செவிசாயுங்கள் - 2கொரி 13:11.

4. ஜெப வாழ்வும் - நோன்பும் :


செய் :

 • நோன்பு வேளையில் எண்ணெய் தேய்த்து முகத்தை கழுவுங்கள் - மத் 6:17.
 • ஒருவருக்கொருவர் பாவ அறிக்கை செய்யுங்கள் - யாக் 5:16.
 • கடவுளுக்கு அஞ்சி வாழுங்கள் - 1பேது 1:17.

செய்யாதே :

 • நோன்பு வேளையில் முகவாட்டத்தோடு இராதே – மத் 6:16.

5. ஜெபவாழ்வும் - ஆவியின் வரங்களும் :


செய் :

 • இறைவாக்குரைக்கும் கொடையை நாடுங்கள் - 1கொரி 14:11.
 • அனைவரும், பரவசப்பேச்சு, பேசலாம். ஆனால், இறைவாக்கு வரத்தை தேடுங்கள் - 1கொரி 14:5.
 • திருச்சபையை கட்டி எழுப்பும் கொடைகளை தேடி வளர்ச்சியடையுங்கள் - 1கொரி 14:12.
 • பரவசநிலையில் இறைவேண்டுதல் செய்யுங்கள். அப்பொழுது தூயஆவியாரே இறைவேண்டுதல் செய்கிறார் - 1கொரி 14:14.
 • தூயஆவியால் ஆட்கொள்ளப்படும், அறிவோடும் இறைவேண்டல் செய்யுங்கள் - 1கொரி 14:15.
 • தூயஆவியால் ஆட்கொள்ளப்படும், அறிவோடும் திருப்பாடல் பாடுவேன் - 1கொரி 14:15.
 • பரவசப்பேச்சு பேசுகிறவர், விளக்கும் ஆற்றலைப் பெற வேண்டுங்கள் - 1கொரி 14:13.
 • பரவசத்தில் பேசுகிறவர், ஒருவர் பின் ஒருவராக பேசி அதை சபையில் விளக்க வேண்டும் - 1கொரி 14:27.
 • பரவசத்தில் இறைவேண்டல் செய்வோர் கடவுளோடு பேசட்டும் - 1கொரி 14:28.
 • தூயஆவியாக ஆட்கொள்ளப்படுங்கள் - எபே 5:18.
 • ஆண்டவரின் இறைவாக்கினரை மாதிரியாய் கொள்ளுங்கள் - யாக் 5:10.
 • தூயஆவியின் தூண்டுதலை சோதித்து அறியுங்கள் - 1யோவா 4:1.

செய்யாதே :

 • பரவசப்பேச்சை தடுக்காதீர் - 1கொரி 14:39.
 • தூயஆவியின் செயல்பாட்டை தடுக்காதீர் - 1தெச 5:19.
 • இறைவாக்குகளை புறக்கணியாதீர் - 1தெச 5:20.

6. செபவாழ்வும் - துதிபலியும் :


செய் :

 • திருப்பாடல்கள், புகழ்பாக்கள் இவற்றை உளமார, இசைபாடி போற்றுங்கள் - எபே 5:19.
 • எல்லாவற்றிற்காகவும் எப்போதும் நன்றி கூறு – எபே 5:20.
 • எல்லாத் தேவையிலும், நன்றியோடு மன்றாடு – பிலி 4:6.
 • திருப்பாடல்கள், புகழ்பாக்கள், ஆவிக்குரிய பாடல்களை உளமாரப் பாடுங்கள் - கொலோ 3:16.
 • எப்போதும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் - கொலோ 3:17.
 • எல்லா நேரமும் விழிப்போடம், நன்றி உணர்வோடும் ஜெபத்தில் ஈடுபடு – கொலோ 4:2.
 • எல்லா சூழ்நிலையிலும் கடவுளுக்கு நன்றி கூறு – 1தெச 5:18.
 • கடவுளுக்கு எப்போதும், புகழ்ச்சி பலியை செலுத்து – எபி 13:15.
 • நீ மகிழ்ச்சியாயிருந்தால், கடவுளை திருப்பாடல் பாடி துதி – யாக் 5:13.
 • உன் உள்ளத்தில், ஆண்டவரை தூயவரென போற்று – 1பேது 3:15.

III. உடல் வாழ்வுக்கான – இறை “விருப்பங்கள்”:


1. உடலும் - பாவ நிலையும் :


செய் :

 • உன் உறுப்புக்கள் உனக்கு இடறலாய் இருந்தால அதை அழித்து விடு – மத் 5:29,30.
 • நீங்கள் பரத்தமையை விட்டு விலகுங்கள் - 1கொரி 6:9, 1தெச 4:3.
 • பரத்தமை, சிலைவழிபாடான பேராசை இவற்றை நீங்கள் ஒழித்து விடுங்கள் - கொலோ 3:5.

செய்யாதே :

 • பாவம் உங்கள் உடலில் ஆட்சி செலுத்த விடாதீர் - உரோ 6:12.
 • உங்கள் உறுப்புகளை பாவம் செய்யும் கருவியாக பாவத்துக்கு ஒப்புவிக்காதீர் - உரோ 6:13.
 • ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடந்தராதீர் - உரோ 13:14.
 • பரத்தமையில் ஈடுபடுவோருடன் நீங்கள் உறவு வைக்காதீர் - 1கொரி 5:9,11.
 • நீங்கள் பரத்தமையில் ஈடுபடாதீர் - 1கொரி 10:8.
 • உங்கள் உரிமைவாழ்வு, ஊனியல்பின் செயல்களாக இருக்க விட்டுவிடாதீர் - கலா 5:13.
 • நீங்கள் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள் - எபே 5:18.

1. உடலும் - தூய்மை நிலையும் :


செய் :

 • உங்கள் உறுப்புக்கள் , கடவுளுக்கு ஏற்புடையதை செய்யுமாறு கடவுளிடம் ஒப்படையுங்கள் - உரோ 6:13.
 • தூய வாழ்வுக்கு உங்கள் உறுப்புக்களை அடிமையாக்குங்கள – உரோ 6:19.
 • தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களை சாகடியுங்கள் - உரோ 8:13.
 • உங்கள் உடலை தூய பலியாக படையுங்கள் - உரோ 12:1.
 • நீங்கள் உடலிலும், உள்ளத்திலும் தூய்மையாக்குங்கள் - 2கொரி 7:1.
 • கடவுளுக்கு அஞ்சி, தூய வாழ்வில் நிறைவடையுங்கள் - 2கொரி 7:1.
 • உங்கள் உள்ளம், ஆன்மா உடலை குற்றமின்றி காத்துக் கொள்ளுங்கள் - 1தெச 5:23.

செய்யாதே :

 • பெண்ணை இச்சையோடு பார்க்காதே – மத் 5:28.
 • பாலுணர்வுக்கு இடம் கொடுக்காதே – 1தெச 4:5.

3. உடல்வாழ்வு பற்றிய வேறு விருப்பங்கள் :


செய் :

 • நீங்கள் எல்லாரும் என்னைப்போல் இருங்கள் - 1கொரி 7:7.
 • நீங்கள் எந்த நிலையில் அழைக்கப்பட்டீர்களோ, அந்த நிலையில் நிலைத்திருங்கள் - 1கொரி 7:20,24.
 • உங்களில் மனைவி உள்ளவர் இல்லாதவர் போல் இருங்கள் - 1கொரி 7:29.
 • புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள் - எபே 4:24.

செய்யாதே :

 • உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது – 2தெச 3:10.
 • திருமணமானவர்கள் பிரிந்தால், மறுமணம் செய்யாதீர் - 1கொரி 7:11.

IV. ஆத்மீக வாழ்வுக்கான – இறை “விருப்பங்கள்”:


1. ஆத்மீக வாழ்வும் - தூய்மையும் + பாவமும் :


செய் :

 • முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள் - மத் 7:5.
 • குடிவெறி, களியாட்டம், இவ்வுலக கவலையால், உங்கள் உள்ளம் மந்தம் அடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் - லூக் 21:34.
 • களியாட்டம், சண்டை சச்சரவுகளை தவிர்த்து கொள்ளுங்கள் - உரோ 13:13.
 • பாவம் உன் மீது ஆட்சி செலுத்தாதபடி பார்த்துக்கொள் - உரோ 6:14.
 • சலைவழிபாட்டை விட்டு விலகு – 1கொரி 10:14.
 • தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள் - 1கொரி 5:13.
 • தீங்கு செய்வதில் நீங்கள் குழந்தையை போலிருங்கள் - 1கொரி 14:20.
 • தூயதையும், நற்பண்புகளையும் உங்கள் மனதில் இருத்துங்கள் - பிலி 4:8.
 • தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள் - எபி 3:12.
 • உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாறாதபடி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள் - எபி 3:13.

செய்யாதே :

 • பாவம் செய்யாதே – 1கொரி 15:34.
 • பரத்தமை, ஒழுக்ககேடு, பேராசை ஆகியவற்றின் பெயரை கூட சொல்லாதே – எபே 5:3.
 • எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள் - 1தெச 5:22.

2. ஆத்மீக வாழ்வும் - மனமாற்றமும் :


செய் :

 • நீங்கள் மனம் மாறுங்கள் - மத் 4:17.
 • நீங்கள் மனம் மாறியதை, உங்கள் செயல்களில் காட்டுங்கள் - மத் 3:8.
 • மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் - மாற் 1:15.
 • நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவ வார்த்தையை கேட்கிறீர்கள் என்று கவனமாயிருங்கள் - லூக் 8:18.
 • மன உறுதியோடிருந்து ஆத்மீக வாழ்வை காத்து கொள்ளுங்கள் - லூக் 21:19.
 • அழியாத உணவுக்காக உழையுங்கள் - யோவா 6:27.
 • தாகமாய் இருப்பவர் என்னிடம் வரட்டும் - யோவா 7:37.
 • ஓளி இருக்கும் போதே நடந்து செல்லுங்கள் - யோவா 12:35.
 • இயேசுவிடம் விசுவாசம் கொள்ளுங்கள் - யோவா 14:1.
 • மனம்மாறி, பாவங்களிலிருந்து மன்னிப்படைந்து, தூயஆவியை பெறுங்கள் - தி.தூ 2:38.
 • உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடையச் செய்யுங்கள் - உரோ 12:2.
 • இருளின் செயல்களை களைந்து, ஒளியின் ஆட்சியை அணிந்து கொள்ளுங்கள் - உரோ 13:12.
 • உங்கள் மனதில் நீங்கள் செய்து கொண்ட முடிவின் படி நடயுங்கள் - உரோ 14:5.
 • மனம் திரும்புதலின் காலத்தை நன்கு பயன்படுத்துங்கள் - கொலோ 4:5.
 • கடவுளிடம் ஆர்வம் கொண்டு மனம் மாறுங்கள் - வெளி 3:19.

3. ஆத்மீக வாழ்வும் - ஆவியின் கனிகளும் :


செய் :

 • பிறர் உனக்கு செய்ய வேண்டுமென்று, நீ விரும்புகின்றவற்றை நீயும் பிறருக்கு செய் - மத் 7:12.
 • நீ பெரியவராக விரும்பினால், தொண்டராய் இரு – மத் 20:26.
 • உன் உடமைகளை விற்று தர்மம் செய் - லூக் 12:33.
 • கடவுளின் அன்பில் நிலைத்திரு – யோவா 15:9, யூதா 1:21.
 • தீமையை வெறுத்து, நன்மையை பற்றி கொள் - உரோ 12:9.
 • விசுவாசத்தில் நிலைத்திரு – 1கொரி 16:13.
 • ஆர்வத்தோடு பிறருக்கு கொடு – 2கொரி 8:12.
 • உனக்கு மிகுதியாயிருந்தால், குறையாயிருப்போரின் குறையை நீக்கு – 2கொரி 8:14.
 • விசுவாசத்தையும், பொறுமையையும் உரிமையாக்கி கொண்டவர்களை நீ பின்பற்று – எபி 6:12.
 • உன் ஞானத்தை நடத்தையால் காட்டு – யாக் 3:13.
 • நம்பிக்கை, நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், மனஉறுதி, இறைப்பற்று, சகோதர நேயம், அன்பு இவற்றை கொண்டிரு – 2பேது 1:5-7.
 • எல்லாவகை பேராசையையும் விட்டுவிடு – லூக் 12:15.
 • எப்பொழுதும் மகிழ்ச்சியாயிரு, இடைவிடாது ஜெபி, எந்த சூழ்நிலையிலும் நன்றி கூறு – 1தெச 5:16-18.
 • உண்மை, நீதி, விசுவாசம், நற்செய்தி, மீட்பு இவற்றை அணிந்து கொள் - எபே 6:14-17.
 • அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து, நல்லதை பற்றிகொள் - 1தெச 5:21.
 • பொய்யை விலக்கி உண்மை பேசு – எபே 4:25.
 • அருள்வளர்ச்சிக்கு ஏற்ப, நல்ல வார்த்தைகளை பேசு – எபே 4:29.
 • கெட்ட வார்த்தையை உன் வாயிலிருந்து விலக்கி விடு – எபே 4:29.

செய்யாதே :

 • நன்மை செய்வதில் மனம் தளராதே – 2தெச 3:13.
 • உன்னை குறித்து, நீ மட்டுமீறி மதிப்பு கொள்ளாதே – உரோ 12:16.

4. ஆத்மீக வாழ்வும் - இறைப்பற்றும் + இயேசுவின் சாயலும் :


செய் :

 • விண்ணகதந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல், நீயும் நிறைவுள்ளவனாய் இரு – மத் 5:48.
 • கடவுளின் ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடு – மத் 6:33.
 • கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கு கொடு – மத் 22:21.
 • கடவுளைப் போல ஆகுங்கள் - எபே 5:1.
 • கடவுளின் சாயலான புதிய இயல்பை அணிந்து கொள் - எபே 4:24.
 • ஓளிபெற்ற மக்களாக வாழுங்கள் - எபே 5:8.
 • கிறிஸ்துவில் இருந்த மனநிலையை நீங்களும் கொண்டிருங்கள் - பிலி 2:5.
 • கிறிஸ்துவோடு இணைந்து வாழந்திடு – கொலோ 2:6.
 • கிறிஸ்துவில் வேரூன்றி, அவர் மீது கட்டியெழுப்பப்படுங்கள் - கொலோ 2:7.
 • நீங்கள் உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் - கொலோ 3:1.
 • கடவுளுக்குகந்த வாழ்வில் முன்னேறி செல் - 1தெச 4:1.
 • எதிர்ப்பை தாங்கி கொண்ட இயேசுவை சிந்தையில் இருத்து – எபி 12:3.
 • உன்னை உழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல், நீயும் தூய்மை உள்ளவனாய் இரு – 1பேது 1:15.
 • நீ கடவுளுக்கு அடிமையாயிரு – 1பேது 2:16.
 • துன்புற்ற இயேசுவின் மனநிலையை கொண்டிரு – 1பேது 4:1.
 • இயேசு கிறிஸ்து வாழ்ந்தது போல், நீங்களும் வாழுங்கள் - 1யோவா 2:6.
 • நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்து வாழுங்கள் - 1யோவா 2:27.

5. ஆத்மீக வாழ்வில் - விழிப்பும் + உறுதியும் :


செய் :

 • எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள் - மத் 24:42.
 • நீங்கள் எந்நேரமும் ஆயத்தமாயிருங்கள் - மத் 24:44.
 • நீ கேட்கும் இறைவார்த்தையை குறித்து கவனமாயிரு – மாற் 4:24.
 • நீங்கள் கவனமாகவும், விழிப்பாகவும் இருங்கள் - மாற் 13:33.
 • ஆண்டவர் தீடீரென வரும்போது, நீ தூங்கி கொண்டிராதே – மாற் 13:36.
 • உள்ளம் கலங்காதே, மருளாதே – யோவா 14:27.
 • நீ அறிவு தெளிவுடனும், நேர்மையுடனும் நட – 1கொரி 15:34.
 • விசுவாசத்தில் நிலைத்திரு – 1கொரி 16:13.
 • நீ துணிவுடன் நடந்துகொள் - 1கொரி 16:13.
 • நீ வலிமையுடன் செயல்படு – 1கொரி 16:13.
 • விடுவிக்கப்பட்ட (மீட்படைந்த) நிலையில் நிலைத்திரு – கலா 5:1.
 • உன் மனப்பாங்கை புதுப்பித்து கொள் - எபே 4:23.
 • விசுவாசத்தில் நீ உறுதி பெற்று, நன்றியுள்ளவனாயிரு – கொலோ 2:7.
 • தொடக்கத்திலிருந்த விசுவாசத்தை இறுதிவரை பற்றி கொள் - எபி 3:14.
 • நீ அறிக்கையிடும் விசுவாசத்தை விடாமல் பற்றிகொள் - எபி 4:14.
 • நீ அறிக்கையிடும் விசுவாசத்தில் நிலைத்திரு – எபி 10:23.
 • உலகப்போக்கை பின்பற்றாதபடி, நீ கவனமாயிரு – எபி 12:16.
 • உனக்கு வரும் பலவகை சோதனைகளை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள் - யாக் 1:12.
 • நீ அலகையை எதிர்த்து நில் - யாக் 4:7.
 • நீ எதிர்நோக்கி இருப்பதற்கு விளக்கம் தர ஆயத்தமாயிரு – 1பேது 3:15.
 • நீ அறிவு தெளிவோடும், விழிப்பாயிரு -1பேது 5:8, 1:13, 1தெச 5:6.
 • நீ தெரிந்து கொள்ளப்பட்ட நிலையில் உறுதியாய் நில் - 2பேது 1:10.
 • நீ கேட்டு அறிந்ததை, உன்னில் நிலைத்திருக்க செய் - 1யோவா 2:24.
 • இறக்கும் வரையில் நீ விசுவாசத்தோடிரு, நம்பிக்கையோடிரு – வெளி 2:10.
 • பெற்றுகொண்ட போதனையில் பிடிப்புள்ளவனாயிரு – வெளி 2:25.
 • நீ பெற்றுகொண்டதை உறுதியாய் பற்றிக்கொள் - வெளி 3:11.

6. ஆத்மீக வாழ்வும் - இறைதன்மைகளும் :


செய் :

 • உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரட்டும் - மத் 5:16.
 • உன் வலக்கை செய்வது, இடக்கைக்கு தெரியாதபடி பார்த்து கொள் - மத் 6:3.
 • உங்கள் வேலையில் கிடைக்கும் ஊதியமே போதுமென்றிருங்கள் - லூக் 3:14.
 • இயேசு உங்களுக்கு சொல்வதையெல்லாம் செய்யுங்கள் - யோவா 2:5.
 • கடவுள் முன் கற்புள்ள கன்னியாக இருங்கள் - 2கொரி 11:12.
 • உங்கள் செயல்களை ஆய்ந்து பாருங்கள் - கலா 6:4.
 • இறைவார்த்தையை கற்போர், கற்று கொடுப்போருக்கு தனக்குள்ளதில், பங்கு கொடுங்கள் - கலா 6:6.
 • நீங்கள் பெற்றுக்கொண்ட, அழைப்புக்கேற்ப வாழுங்கள் - எபே 4:1.
 • நேர்மையோடு, பாடுபட்டு, உழையுங்கள் - எபே 4:28.
 • உன் நடத்தையைப் பற்றி கருத்தாயிரு – எபே 5:5.
 • ஞானமற்றவர்களாய் வாழாமல், ஞானத்தோடு வாழுங்கள் - எபே 5:15.
 • மனித போதனைகளால் அலைக்கழிக்கப்படாதே – எபே 4:14.
 • உலக போக்கிலானவற்றை ஒழித்து விடுங்கள் - கொலோ 3:5.
 • படிப்பினையின் தொடக்க நிலையை தாணடி, முதிர்நிலைக்கு செல் - எபி 6:1.
 • பொருளாசையை விலக்கிவிடு – எபி 13:5.
 • நீங்கள் கீழ்படிதலுள்ள மக்களாயிருங்கள் - 1பேது 1:14.
 • மனச்சான்றை குற்றமற்றதாய் காத்துக்கொள் - 1பேது 3:16.

செய்யாதே :

 • நீ எதர்க்காகவும் ஆணையிடாதே – மத் 5:34.
 • தீமை செய்பவரை எதிர்க்காதே – மத் 5:39.
 • மனிதர் பார்க்க வேண்டுமென்று அறச்செயல் செய்யாதே – மத் 6:1.
 • மணணுலகில் செல்வத்தை சேமித்து வைக்காதே – மத் 6:19.
 • உன் உணவு உடை பற்றி கவலைபடாதே – மத் 6:25.
 • சிறியோரை இழிவாக கருதாதே – மத் 18:10.
 • எதை உண்பது எதை குடிப்பது என்று கவலைப்படாதே – லூக் 12:29.
 • இவ்வுலகை சார்ந்தவற்றை எண்ணாதே – கொலோ 3:2.
 • உலகின் மீது அன்பு செலுத்தாதே – 1யோவா 2:15.
 • காயீனைப் போல் இராதே – 1யோவா 3:12.

7. ஆத்மீக வாழ்வும் - தேவ கட்டளையும் :


செய் :

 • நீ வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளை கடைபிடி – மத் 19:17.
 • கடவுளின் திருவுளத்தை தேர்ந்து தெளியுங்கள் - உரோ 12:2.
 • ஆண்டவருக்கு உகந்தது எது என ஆய்ந்து பார் - எபே 5:10.
 • ஆண்டவரின் திருவுளம் எது என புரிந்து கொள்ளுங்கள் - எபே 5:17.
 • கற்றுகொண்டதையும், பெற்றுக்கொண்டதையும், கடைபிடியுங்கள் - பிலி 4:9.

8. ஆத்மீக வாழ்வும் - துன்பமும் :


செய் :

 • இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் - மத் 7:13.
 • தன்னலம் துறந்து அன்றாட சிலுவையை, தூக்கிக் கொண்டு என்னை பின்பற்று – மத் 16:24.
 • கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு பெறு – உரோ 8:17.
 • துன்பத்தில் தளரா மனத்துடன் இரு – உரோ 12:12.
 • முன்னைய நாட்களின் துன்பத்தை நினைவில் கொள் - எபி 10:32.
 • துன்ப தீயில் நீங்கள் சோதிக்கபடும் போது, கிறிஸ்துவின் துன்பங்களில் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள் - 1பேது 4:12,13.

செய்யாதே :

 • துன்ப தீயில் நீ சோதிக்கப்படும் போது, வியந்து போகாதே – 1பேது 4:12.
 • கொலைஞன், திருடன், பிறர் காரியத்தில் தலையிடுபவன் என்று துன்பத்துக்கு உள்ளாகாதே - 1பேது 4:15.
 • கிறிஸ்தவன் என்பதற்காக துன்பத்திற்கு உள்ளானால் வெட்கபடாதே – 1பேது 4:16.

9. ஆத்மீக வாழ்வும் - தூய ஆவியும் :


செய் :

 • கடவுளின் ஆவி உங்களுள் குடிகொள்ளட்டும் - உரோ 8:9.
 • ஆவியானவரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் - கலா 5:16.
 • ஆவியானவர் காட்டும் நெறியில் நடந்து செல் - கலா 5:25.
 • தூய ஆவிக்கு துயரம் வருவிக்காதே – எபே 4:30.

V. ஆத்மீக பணிக்கான – இறை “விருப்பங்கள்”:


1. ஆத்மீக பணியும் - உலக ஆசீரும் :


செய் :

 • நலம் குன்றியவர்களை குணமாக்குங்கள் - மத் 10:8.
 • இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள் - மத் 10:8.
 • தொழுநோயாளரை நலமாக்குங்கள் - மத் 10:8.
 • பேய்களை ஓட்டுங்கள் - மத் 10:8.

2. ஆத்மீக பணியும் - பரலோக ஆசீரும் (நற்செய்தி அறிவிப்பும்) :


செய் :

 • விண்ணரசு நெருங்கி வந்து விட்டது என பறைசாற்றுங்கள் - மத் 10:7.
 • எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் - மத் 28:9
 • தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் - மத் 22:19.
 • நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கடைபிடிக்கும் படி கற்பியுங்கள் - மத் 28,20.

3. ஆத்மீக பணியின் - பாதையில் :


செய் :

 • கொடையாகப் பெற்றீர்கள், கொடையாகவே வழங்குங்கள் - மத் 10:13.
 • தகுதியுடையவரோடு தங்கியிருங்கள் - மத் 10:11.
 • நீங்கள் போகும் வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள் - மத் 10:12.
 • உங்களை வீட்டில் ஏற்றுகொள்ளாதவரிடமிருந்து திரும்பி வாருங்கள் - மத் 10:14.
 • நீங்கள் பாம்புகளைப் போல் முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் இருங்கள் - மத் 10:16.
 • எச்சரிக்கையாக இருங்கள் - மத் 10:17.

செய்யாதே :

 • பயணத்துக்கு, பொன், வெள்ளி, செப்புகாசு எதுவும் வைத்துகொள்ள வேண்டாம் - மத் 10:9.
 • வசதி (ஆடம்பர) பொருட்களை எடுத்து கொள்ள வேண்டாம் - மத் 10:10.

4. ஆத்மீக பணியும் - ஆவியின் கனிகளும் :


செய் :

 • முதியோரை தந்தையராக மதித்து ஊக்குவி – 1திமொ 5:1.
 • கைம்பெண்களுக்கு மதிப்புகொடு – 1திமொ 5:1-3.
 • நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு – 1திமொ 6:11.
 • கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்குகொள் - 2திமொ 2:3.
 • புணியாளராகிய நீ வெட்கமுறாதே – 2திமொ 2:15.
 • நீதி, விசுவாசம், அன்பு, அமைதி, ஆகியவற்றை நாடித்தேடு – 2திமொ 2:22.
 • தூய்மையான உள்ளத்தோடு, ஆண்டவரை வழிபடுவோரிடம் சமாதானத்தை நாடு – 2திமொ 2:22.
 • மடத்தனமான அறிவற்ற விவாதங்களை விட்டுவிடு – 1திமோ 2:23.
 • அனைவரிடமும் கனிவு காட்டு – 2திமொ 2:24.
 • துன்பத்தை ஏற்றுக்கொள் - 2திமொ 4:5.
 • கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய் - 1பேது 5:2.
 • மேய்ப்பர்கள், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை, அடக்கி ஆளாமல், முன் மாதிரியாய் இருங்கள் - 1பேது 5:3.

செய்யாதே :

 • முதியோரிடம் கடுமையாய் இராதே – 1திமொ 5:1.
 • வெறும் சொற்களைப் பற்றி சண்டையிடாதே – 2திமொ 2:14.

5. ஆத்மீக பணியில் - வேறு விருப்பங்கள் :


செய் :

 • நீங்கள் யூதர்கள் முன்னும், பிற இனத்தவர் முன்னும் (எனக்கு) சான்று பகருங்கள் - மத் 10:18.
 • கடவுளுக்கு அஞ்சுங்கள் - மத் 10:28.
 • பணிக்கப்பட்ட பணியை முடித்தபின், நாங்கள் பயனற்ற பணியாளர்கள் என சொல்லுங்கள் - லூக் 17:10.
 • எனக்கு தொண்டு செய்ய விரும்பினால், என்னைப் பின்பற்று – யோவா 12:26.
 • உலகின் கடையெல்லை வரைக்கும் நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருங்கள் - தி.தூ 1:8.
 • நீங்கள் பெற்ற அருட்கொடைகளை, விசுவாசத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துங்கள் - உரோ 12:6-8.
 • நீங்கள் இறைவனிடம் மன்றாடுங்கள், வேண்டுங்கள் பரிந்து பேசுங்கள், நன்றி செலுத்துங்கள் - 1திமொ 2:1.
 • அரசர்களுக்காகவும், உயர்நிலையிலுள்ள மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள் - 1திமொ 2:2.
 • ஆண்கள், தூய உள்ளத்தோடு, கைகளை உயர்த்தி, இறைவேண்டல் செய்யுங்கள் - 1திமொ 2:8.
 • உன் வாழ்வும்(உன்னை), பணியும்(போதனை) பற்றி விழிப்பாயிரு – 1திமொ 4:16.
 • நீ எடுத்து கொண்ட பணியில்(போதனை) நிலைத்திரு – 1திமொ 4:16.
 • இறைப்பற்றில் வளர பயிற்சி செய் - 1திமொ 4:7.
 • விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு – 1திமொ 4:12.
 • சபைகளை நன்முறையில் நடத்து – 1திமொ 5:17.
 • நீ நித்திய வாழ்வைப்; பற்றிக்கொள் - 1திமொ 6:12.
 • உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மீட்பின் பணியை பாதுகாத்துக் கொள் - 1திமொ 6:20.
 • உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு – 2திமொ 2:16.
 • இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு – 2திமொ 2:22.
 • நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில் - 2திமொ 3:14.
 • அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு – 2திமொ 4:5.
 • பெற்றுக்கொண்ட அருள்கொடைக்கேற்ப ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள் - 1பேது 4:10.
 • மேய்ப்பர்கள், கடவுளின் மந்தையை மேய்த்து பேணுங்கள் - 1பேது 5:2.
 • விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபாடு – 1திமோ 6:12.

செய்யாதே :

 • பரிசேயருக்கு அஞ்சாதே – மத் 10:26.
 • ஆன்மாவை கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்க்கு அஞ்சாதே – மத் 10:28.
 • அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து, அக்கறையற்றவனாய் இராதே – 1திமொ 4:14.
 • குற்றச்சாட்டை, சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே – 1திமொ 5:19.
 • அவசரப்பட்டு, யார் மேலும் கைகளை வைத்து, திருப்பணியில் அமர்த்தாதே - 1திமொ 5:22.
 • எவ்வகை குறைசொல்லுக்கும் இடம் தராதே – 1திமொ 6:14.
 • இறைப்பற்றில்லாதவரோடு சேராதே – 2திமோ 3:1-5.

6. செல்வர்க்கு கட்டளை :


செய் :

 • கட்டளை மட்டுமே எதிர்நோக்கி இரு – 1திமொ 6:18.
 • நீ நல்லதை செய்து, நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேர்த்து வை – 1திமொ 6:18.

செய்யாதே :

 • நிலையில்லா செல்வத்தில் நம்பிக்கை வைக்காதீர் - 1திமொ 6:17.
 • செல்வர்கள், மேட்டிமை உணர்வு கொள்ளாதே – 1திமொ 16:17.

7. முதிய பெண்களுக்கு கட்டளை :


செய் :

 • தூய நடத்தையை கொண்டிரு – தீத் 2:3.
 • இளம்பெண்களுக்கு நற்போதனை அளி – தீத் 2:3,4.
 • புறங்கூறுவதை தவிர்த்துவிடு – தீத் 2:3.

8. இளம் பெண்களுக்கு கட்டளை :


செய் :

 • கணவரிடமும், பிள்ளைகளிடமும் அன்பு காட்டு – தீத் 2:4.
 • வீட்டு வேலைகளை செவ்வனே செய் - தீத் 2:5.
 • கட்டுப்பாடும் கற்பும் கொண்டு, கணவருக்கு பணிந்திடு – தீத் 2:5.

9. இளைஞர்க்கு கட்டளை :


செய் :

 • நீ கட்டுப்பாடு கொண்டிரு – தீத் 2:6.
 • தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணிந்து கீழ்படிதலோடு நட – தீத் 3:1.
 • அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிரு – தீத் 3:1.
 • பழித்துரைத்தல், சண்டையிடுதலை தவிர்த்து விடு – தீத் 3:2.
 • கனிந்த உள்ளத்தோடு, நிறைந்த பணிவுடன், அனைவருடனும் பழகு – தீத் 3:2.

10. ஆத்மீக பணியில் - திருச்சபை மேற்பார்வையாளரின் தகுதிகள் :


செய் :

 • அறிவு தெளிவோடிரு – 1திமொ 3:2.
 • கட்டுப்பாடோடிரு – 1திமொ 3:2.
 • விருந்தோம்பும் பணிவோடிரு – 1திமொ 3:2.
 • கற்பிக்கும் ஆற்றல் பெற்றவராயிரு – 1திமொ 3:2.
 • கனிந்த உள்ளம் கொண்டிரு – 1திமொ 3:3.
 • குடும்பத்தை நல்ல முறையில் நடத்துபவராயிரு – 1திமொ 3:4,12.
 • திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடம் நற்சான்று பெறு – 1திமொ 3:7.
 • குடிவெறி, வன்முறை, பொருளாசையை தவிர்த்துவிடு – 1திமொ 3:3.

11. ஆத்மீக பணியில் - திருச்சபை திருப்பணியாளரின் தகுதிகள் :


செய் :

 • கண்ணியத்தோடிரு – 1திமொ 3:8,11.
 • விசுவாசத்தின் மறைபொருளை காத்துக்கொள் - 1திமொ 3:9.

செய்யாதே :

 • இரட்டை நாக்கு கொண்டிராதே – 1திமொ 3:8.
 • குடிவெறிக்கு அடிமைப்படாதே – 1திமொ 3:8.
 • இழிவான ஊதியத்தின் மேல் ஆசை வைக்காதே – 1திமொ 3:8.
 • குறைகளோடு இராதே – 1திமொ 3:10.
 • நம்பதக்கவராயிரு – 1திமொ 3:11.

12. “மூப்பருக்குரிய” கட்டளைகள் :


செய் :

 • விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம், ஆகியவற்றை கொண்டிரு – தீத் 1:8.
 • உண்மை செய்தியை பற்றி கொண்டிரு – தீத்
 • எதிர்த்து பேசுவோரின் தவற்றை எடுத்து காட்ட வல்லவராய் இரு – தீத் 1:9.
 • அகந்தை, குடிவெறி, முன்கோபம், வன்முறை, இவற்றை, அறவே அகற்று – தீத் 1:7.

செய்யாதே :

 • குறை சொல்லுக்கு ஆளாகாதே – தீத் 1:7.
 • இழிவான ஊதியத்தின் மேல் ஆசை வைக்காதே – தீத் 1:7.


"உபதேசங்கள்"


I. பிறர் அன்புக்கடுத்த “உபதேசம்”:


1. குற்றம் செய்தவர் பற்றிய உபதேசம் :


 • உன் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம் செய்தால்,
  • 1. அவரது குற்றத்தை எடுத்துக்காட்டு,
  • 2. உன்னோடு ஒன்றிரண்டு பேரை கூட்டிப்பேசு,
  • 3. திருச்சபையிடம் கூறு,
  • திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உனக்கு வேற்று இனத்தார் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும் - மத் 18:15-17.
 • உன் சகோதரன் உனக்கெதிராக குற்றம் செய்தால், எழுபது தடவை ஏழு முறை மன்னித்து விடு – மத் 18:21,22.
 • உன் சகோதரர் சகோதரிகளை நீ மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் தந்தையும் உன்னை மன்னிக்கமாட்டார் - மத் 18:35.
 • யாராவது உங்களுக்கு கீழ்படியாவிட்டால், அவர்களை பகைவர்களாக கருதாது, சகோதர் சகோதரிகளாக எண்ணி அறிவுறுத்துங்கள் - 2தெச 3:15.

2. கடவுளன்பு :


 • கடவுள் உங்கள் தந்தையெனில், நீங்கள் என்மேல் அன்பு கொள்வீரகள் - யோவா 8:42.
 • நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால், என் கட்டளைகளை கடைபிடிப்பீர்கள் - யோவா 14:15.
 • எங்களைப் போலவே, நீங்களும், உங்கள் இதய கதவை கடவுளுக்கு திறந்து வையுங்கள் - 2கொரி 6:13.
 • கடவுளை எவருமே என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால், கடவுள் நம்மோடு இணைந்திருப்பார். அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும் - 1யோவா 4:12.

3. சகோதர அன்பு :


 • நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து, நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் - யோவா 13:35.
 • இயலுமானால், முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள் - உரோ 12:18.
 • பிறரிடத்தில் அன்பு கூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார் - உரோ 13:8.
 • நீங்கள் உண்ணும் உணவு, உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மனவருத்தம் உண்டாக்கினால், நீங்கள் அன்பு நெறியில் நடப்பவர்கள் அல்ல – உரோ 14:15.
 • நீங்கள் செய்யும் எதுவும், உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு தடையாக இருக்குமாயின் அவற்றை தவிர்ப்பதே நல்லது – உரோ 14:21.
 • நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள் - கலா 5:13.
 • உண்மைக்கு கீழ்படிந்து, உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால், நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும் - 1பேது 1:22.
 • இயேசு ஒளியில் இருப்பது போல், நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம் - 1யோவா 1:7.
 • நம் அன்பு சொல்லிலும், பேச்சிலும் அல்ல, மாறாக செயலில் உண்மையான அன்பை வெளிப்படுத்துவோம் - 1யோவா 3:18.
 • நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது – 1யோவா 4:7.
 • ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அன்பு நெறியில் வாழ வேண்டும் என்பதே கட்டளை – 2யோவான் 1:5,6.

4. ஈகை :


 • மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் - மத் 25:40.
 • நல்லதை செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேருங்கள். தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளியுங்கள் - 1திமொ 6:18.
 • நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்கு தீமை செய்யப் போகிறவர் யார்? – 1பேது 3:13.


II. கடவுளன்புக்கடுத்த “உபதேசம்”:


1. ஜெபம் :


 • மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் - லூக் 18:1.
 • நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை தெரிவியுங்கள் - பிலி 4:6.
 • ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண், கடவுள் மேல் கொண்ட எதிர்நோக்குடன், அல்லும், பகலும் மன்றாட்டிலும், இறைவேண்டலிலும் நிலைத்திருப்பாராக – 1திமொ 5:5.
 • நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளை கண்டடையவும் அருள்நிறைந்த, இந்த அரியணையை துணிவுடன் அணுகிச் செல்வோம் - எபி 4:16.
 • இயேசுவின் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்கு புகழ்ச்சி பலியை செலுத்துவோம் - எபி 13:15.
 • இயேசுவின் பெயரை அறிக்கையிடுவதன் வழியாக, நாம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சி பலியாகும் - எபி 13:15.
 • உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்கும். அப்பொழுது அவரும் ஞானத்தை கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர் - யாக் 1:5.

2. மீட்பு :


 • ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும். அப்பொழுது நீரும், உம் வீட்டாரும் மீட்படைவீர்கள் - தி.தூ 16:31.
 • “இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழ செய்தார் என நீங்கள் உள்ளுர விசுவசித்தால் மீட்பு பெறுவீர்கள் - உரோ 10:9.
 • ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்பு பெறுவர் - உரோ 10:13.
 • நன்மை செய்யவும், பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகை பலிகளே கடவுளுக்கு உகந்தவை – எபி 13:16.
 • எல்லாவகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையை பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது – யாக் 1:21.
 • ஆண்டவர் முன் உங்களை தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார் - யாக் 4:10.
 • உங்கள் கவலைகளையெல்லாம் ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார் - 1பேது 5:7.

3. ஆவியின் வரங்கள் :


 • நீங்கள் மேலான அருட்கொடையை ஆர்வமாய் நாடுங்கள் - 1கொரி 12:31.
 • தூயஆவியார் அருளும் கொடைகளை ஆர்வமாய் நாடும் நீங்கள், திருச்சபையை கட்டி எழுப்பும் கொடைகளையே தேடி அவற்றில் வளரச்சியடையுங்கள் - 1கொரி 14:12.
 • நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம். அப்போதுதான் நீங்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவும், ஊக்கம் பெறவும் இயலும் - 1கொரி 14:31.
 • நீங்கள் வல்லமையுடையவர்களாய் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியே – 2கொரி 13:9.
 • உனக்குள் எழுந்த கடவுளின் அருள் கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன் - 2திமொ 1:6.

4. ஆண்டவரின் நாள் (விண்ணரசு) :


 • என்னை நோக்கி, “ஆண்டவர், ஆண்டவரே” எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. தந்தையின் விருப்பப்படி நடப்பவரே செல்வர் - மத் 7:21.
 • நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் - லூக் 12:40.
 • ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என்று இறைவாக்காகவோ, அருளுரையாகவோ, திருமுகத்தின் செய்தியாகவோ, யாராவது சொன்னால் மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம் - 2தெச 2:2.


III. 2. உடல் வாழ்வுக்கடுத்த “உபதேசம்”:


1. நன்னெறி :


 • உனது வாளை அதன் உறையில் திரும்ப போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர் - மத் 26:52.
 • அறிவுத்தெளிவுடன் இருங்கள், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள், பவாம் செய்யாதீர்கள், ஏனெனில் உங்களுள் சிலருக்கு கடவுளைப் பற்றிய அறிவு இல்லை – 1கொரி 15:34.
 • நீங்கள் வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்p – அதை உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்து கொள்ளுங்கள் - கலா 5:13.

2. உணவு, நோய் :


 • பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால், மது தோற்பைகளை வெடிகச் செய்யும் - மதுவும், தோற்பைகளும் பாழாகும். புதிய மது புது தோற்பைகளுக்கே ஏற்றது – மாற் 2:22.
 • உணவின்பொருட்டு கடவுளின் படைப்பே அழிக்காதீர் - எல்லா உணவும் தூயதுதான். ஆனால் அடுத்தவருக்கு தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்குத் தீயது தான் - உரோ 14:20.
 • உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து, அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமடைவார் - யாக் 5:14,15.

3. கணவன் மனைவி :


 • பரத்தமைக்காக அன்றி, தன் மனைவியை விலக்கி விடுகிறவர் எவரும் அவரை விபச்சாரத்தில் ஈடுபட செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர் - மத் 5:31,32.
 • கணவர் தம் மனைவிக்கு, மண வாழ்க்கைக்குரிய உரிமைகளை கொடுக்க வேண்டும். அதுபோல மனைவியும் தம் கணவருக்கு கொடுக்க வேண்டும் - 1கொரி 7:3.
 • மனைவிக்கு தன் உடலின் மேல் அதிகாரம் இல்லை, கணவனுக்கே அந்த அதிகாரம் உண்டு – 1கொரி 7:4.
 • மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள் - 1கொரி 7:5
 • கணவன், மனைவி இருவரும் ஒத்துக்கொண்டால், இறைவேண்டலில் ஈடுபடுவதற்காக சிறிது காலம் பிரிந்து வாழலாம் - 1கொரி 7:5.
 • உணர்ச்சிகளை அடக்கமுடியாத நிலையில், சாத்தான் உங்களை சோதிக்காதபடி, பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள் - 1கொரி 7:5.
 • தன்னடக்கமில்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், காமத்தீயில் உருகுவதை விட திருமணம் செய்து கொள்வதே மேல் - 1கொரி 7:9.

4. தொழில் + மறுவுலக வாழ்வு


 • கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு, இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்தல்ல, மறுவுலகையும் சார்ந்ததே – 1கொரி 15:19.
 • உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு, உங்கள் சொந்த கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள் - 1தெச 4:11.


IV. ஆத்மீக வாழ்வுக்கடுத்த “உபதேசம்”:


1. பாவம் :


 • தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் தம் சகோதரரையோ, சகோதரியையோ, “முட்டாளே” என்பவர் தலைமைச் சங்க தீர்ப்புக்கு ஆளாவார் - மத் 5:22.
 • பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கபடுவீர்கள் - உரோ 8:10.
 • தூயஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களை சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள் - உரோ 8:13.
 • உங்களுக்கு நன்மையாய் இருப்பது, பிறருடைய பழிச்சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக – உரோ 14:16.
 • மனச்சாற்றின் உறுத்தலுக்கு ஆளாகாதோர் பேறுபெற்றோர் - உரோ 14:22.
 • பரத்தமையில் ஈடுபடுவோர், பேராசையுடையோர், கொள்ளையடிப்போர் சிலைகளை வழிபடுவோர் ஆகியோருடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் - 1கொரி 5:9,10.
 • ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டுவிட வேண்டும் - 2திமொ 2:19.

2. மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் :


 • மணமகன் அவர்களை விட்டு பிரிய வேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் - மாற் 2:20.
 • நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்கு பெறுங்கள். அப்பொழுது தூயஆவியை கொடையாக பெறுவீர்கள் - தி.தூ 2:38.
 • உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி, அவரிடம் திரும்புங்கள், அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார் - தி.தூ 3:19,20.
 • உனது தீய போக்கைவிட்டு, நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை, உன் உள்ளத்தில் எழுந்த தீய எண்ணம் மன்னிக்கப்படலாம் - தி.தூ 8:22.
 • மனம்மாறி கடவுளிடம் திரும்ப வேண்டுமென்றும், மனம் மாறியவர்கள் எனபதை அதற்கேற்ற செயல்களால் அவர்கள் காட்ட வேண்டும் என்றும் அறிவித்தேன் - தி.தூ 26:20.
 • அடிமைநிலையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றி கவலைப்பட வேண்டாம் எனினும் அந்நிலையிலிருந்து விடுதலை பெற முடியுமானால், அவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் - 1கொரி 7:21.
 • நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள். எனவே, மனிதருக்கு அடிமையாக வேண்டாம் - 1கொரி 7:23.
 • நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம் - 1தெச 4:3.
 • ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள் - யாக் 5:16.
 • நம் பாவங்களை நாம் ஒப்புகொள்வோமென்றால், கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைபடுத்துவார் - 1யோவா 1:90
 • நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று, அவர்களோடு உணவு அருந்துவேன் - வெளி 3:20.

3. இறைவார்த்தையில் விசுவாசம் :


 • நான் சொல்வதை விசுவசியுங்கள். என் வார்த்தையின் பொருட்டு விசுவசிக்காவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது விசுவசியுங்கள் - யோவா 14:11.
 • நான் உங்களுக்கு கூறியதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் - யோவா 15:20.
 • கிறிஸ்துவை சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் இருக்கலாம். ஆனால், தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக, நான் உங்களை கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன். ஆகையால், நீங்கள் என்னைப் போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன் - 1கொரி 4:15,16.
 • பெண்தான் ஏமாந்து கட்டளையை மீறினார். இருப்பினும் அவர்கள் தன்னடக்கத்தோடு, விசுவாசம், அன்பு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருந்தால் தாய்மை பேற்றின் வழியாக மீட்பு பெறுவார்கள். – 1திமொ 2:14,15.
 • பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவார். அவர்கள் தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர்கள் - யாக் 3:2.
 • நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால், தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள் - யாக் 5:12.
 • நீங்கள் அழைக்கப்பட்டவர்கள், இந்த நிலையில் உறுதியாக நிற்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் தவறமாட்டீர்கள் - 2பேது 1:10.
 • இறைவாக்கை நீங்கள் கருத்தில் கொள்வது நல்லது. ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை, அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது – 2பேது 1:19.
 • நீங்கள் பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால், உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை – 1யோவா 2:27.
 • நீங்கள் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள் - 1யோவா 2:27.
 • நீங்கள் பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உண்மையானது, பொய்யானது அல்ல, நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள் - 1யோவா 2:27.

4. இறைவார்த்தையின் படி நடத்தல் :


 • நான் சொல்லும் இவ்வார்த்தைகளை கேட்டு, இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டை கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் - மத் 7:24.
 • நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையை கேட்டு புரிந்த கொள்வார்கள். அவர்கள் 100,60,30 மடங்கு பலனளிப்பார்கள் - மத் 13:23.
 • நீர் வாழ்வடைய விரும்பினால், கட்டளைகளை கடைபிடியும் - மத் 19:17.
 • என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும், தம் உயிரை இழக்கும் எவரும் அதை காத்துக்கொள்வார் - மாற் 8:35.
 • நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள் - யோவா 15:14.
 • மனிதர்களுக்கு கீழ்படிவதைவிட, கடவுளுக்கு அல்லவா கீழ்படிய வேண்டும் - தி.தூ 5:29.
 • திருச்சட்டத்தின் வழியாய் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, நியமங்களையும், ஆணைகளையும், கடைபிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர் - உரோ 10:5.
 • கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை – எபி 10:36.
 • இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாய் இருங்கள் - யாக் 1:22.
 • இறைவார்த்தையை கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றி கொள்ள வேண்டாம் - யாக் 1:22.
 • ஆண்டவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்தால், நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும் - 1யோவா 2:3.

5. ஈகையும், நற்செயல்களும் :


 • நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு, உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள் - லூக் 16:9.
 • அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள் - உரோ 13:13.
 • நீங்கள் வாக்களித்த நன்கொடை கட்டாயப்படுத்தி திரட்டபட்டதாக அன்றி, நீங்கள் கொடுத்த நன்கொடையாக இருக்கட்டும் - 2கொரி 9:5.

6. கடவுளுக்கு கொடுத்தல் (காணிக்கை) :


 • நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் - மாற் 4:24.
 • ஏழைக்கைம்பெண் தமக்கு பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே கடவுளுக்கு காணிக்கை போட்டுவிட்டார் - லூக் 21:3,4.
 • கடவுளுக்கு ஆர்வத்தோடு கொடுத்தால், நம் நிலைக்கு ஏற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும், அது இறைவனுக்கு ஏற்புடையதாகும் - 2கொரி 8:12.
 • முகமலர்ச்சியோடு கடவுளுக்கு கொடுப்பவரே, கடவுளின் அன்புக்கு உரியவர் - 2கொரி 9:7.
 • மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ எதையும் கடவுளுக்கு கொடுக்க வேண்டாம் - 2கொரி 9:7.


IV. ஆத்மீக வாழ்வுக்கடுத்த “உபதேசம்”: - தொடர்ச்சி :


7. முன்மாதிரி :


 • நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்று போனால், எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளாதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் - மத் 5:13.
 • நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது – மத் 5:14.
 • யாரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை, மாறாக விளக்குத்தண்டின் மீதே வைப்பர் - மத் 5:15.
 • நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள், ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள் - மாற் 9:50.
 • நீங்களே விசுவாசத்தின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள். ஆகையால், உங்களுக்கு இருக்க வேண்டியது, உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே – உரோ 11:20.
 • பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள் - 1பேது 2:12.

8. சீடர்க்கு (விசுவாசிக்கு) :


 • மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும், விண்ணுலகு இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன் - மத் 10:33.
 • என்னைவிடத் தம் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்பட தகுதியற்றோர் - மத் 10:37.
 • தம் உயிரை காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர், என் பொருட்டு தன் உயிரை இழப்போரோ அதை காத்துக்கொள்வர் - மத் 10:39.
 • தம் உயிரை காக்க விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். முhறாக என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார் - மத் 16:25.
 • என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள் - யோவா 8:31.
 • பெருமை பாராட்ட விரும்புகிறவர், ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும் - 1கொரி 1:31.
 • இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர், தாங்களே மடையராகட்டும் - 1கொரி 3:18.
 • நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார் - 2திமொ 2:12.
 • கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துங்கள், அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார் - 1பேது 5:6.
 • நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு என கருதுங்கள் - 2பேது 3:15.

9. துன்பம் - “உபதேசம்” :


A. சோதனைக்காக துன்பம்:


 • பலவகை சோதனைகளுக்கு உள்ளாகும்போது, நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டிருங்கள் - யாக் 1:2.
 • சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர் - யாக் 1:12.
 • இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகை சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாட்களில் பேருவகை கொள்வீர்கள் - 1பேது 1:6.
 • அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் விசுவாசமும் மெய்ப்பிக்கபடவே துயருறுகிறீர்கள் - 1பேது 1:7.

B. ஆவிக்குரிய வாழ்வும் துன்பமும் :


 • கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப்போன்று, துன்பங்களில் பங்கு கொள் - 2திமொ 2:3.
 • துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள் - எபி 13:3.
 • ஒருவர் அநியாயமாக துயருறும் போது, கடவுளை மனதில் கொண்டு, அதை பொறுமையோடு ஏற்றுக்கொள்வாரானால், அதுவே அவருக்கு உகந்ததாகும் - 1பேது 2:19.
 • நன்மை செய்தும் அதற்காக துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும் - 1பேது 2:20.
 • கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று, ஒரு முன்மாதரியை வைத்து சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள். இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள் - 1பேது 2:21.
 • நீதியின் பொருட்டு துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறுபெற்றவர்களே – 1பேது 3:14.
 • கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டு கொள்ளுங்கள் - 1பேது 4:1.
 • நீங்கள் துன்புறும் போது, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள் - 1பேது 4:13.

C. கிறிஸ்துவின் பொருட்டு துன்பம் :


 • என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும் போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் - மத் 5:11,12.
 • மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கி வைத்து, நீங்கள் பொல்லாதவர்கள் என்று இகழ்ந்து தள்ளிவிடும் போது, நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி அகமகிழ்ந்து கொண்டாடுங்கள். – லூக் 6:22,23.
 • இயேசுவின் வாழ்வே, எங்கள் உடலில் வெளிப்படுமாறு, நாங்கள் எங்கு சென்றாலும், அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம் - 2கொரி 4:10.
 • கிறிஸ்துவின் பொருட்டு பிறர் உங்கள் மீது வசை கூறும் போது, நீங்கள் பேறுபெற்றவர்கள் - 1பேது 4:14.
 • நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கபடலாகாது. அந்த பெயரின் பொருட்டு கடவுளைப் போற்றிப் புகழுங்கள் - 1பேது 4:16.

D. இறையரசின் பொருட்டு துன்பம் :


 • நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும் - தி.தூ 14:22.
 • இயேசுவின் துன்பங்களில் நாம் பங்குபெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்குபெறுவோம் - உரோ 8:17.

10. பணிவும், கண்டிப்பும் :


 • கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சான்றின் பொருட்டும் நீங்கள் தலைவர்களுக்கு பணிந்திருத்தல் வேண்டும் - உரோ 13:5.
 • தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களை தண்டிக்கிறார். ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களை கண்டிக்கிறார் - எபி 12:6.
 • திருத்தப்படுவது, இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல் துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால், பின்னால் இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும், நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர் - எபி 12:11.
 • உங்கள் தலைவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால், உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள் - எபி 13:17.
 • ஆண்டவர் உன்னை கண்டித்து திருத்துவதை வேண்டாம், எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும் போது தளர்ந்து போகாதே – எபி 12:5.
 • உங்கள் ஆன்மீக தலைவர்களுக்கு கீழ்படியுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது – எபி 13:17.

11. இறைப்பற்று :


 • கடவுள் பற்று உள்ளவர்கள் என சொல்லிக்கொள்ளும் பெண்களுக்கு ஏற்ற அணிகலன்கள் நற்செயல்களே – 1திமொ 2:10.
 • இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவது தான், ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும் - 1திமொ 6:6.
 • நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் - பில 1:6.
 • துணிவையும் எதிர்நோக்கோடு கூடிய பெருமையையும் நாம் உறுதியாகப் பற்றி கொண்டால், கடவுளுடைய குடும்பத்தராய் இருப்போம் - எபி 3:6.
 • விசுவாசத்தை தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு பெற செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம் - எபி 12:2.
 • நீங்கள் உங்கள் விசுவாசத்தோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள் - 2பேது 1:5-7.

12. ஆவிக்குரிய வாழ்வு :


 • மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதை கொடுப்பார் - மத் 16:26.
 • என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் - மாற் 8:34.
 • இருள் உங்கள் மேல் வெற்றி கொள்ளாதவாறு, ஒளி உங்களோடு இருக்கும் போதே நடந்து செல்லுங்கள – யோவா 12:35.
 • ஓளி உங்களோடு இருக்கும் போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியை சார்ந்தவர்கள் ஆவீர்கள் - யோவா 12:36.
 • நீ என்னை கண்டதால் விசுவசித்தாய், காணாமலே விசுவசிப்போர் பேறுபெற்றோர் - யோவா 20:29.
 • கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாடுங்கள், தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும், உங்கள் மேல் பரிவும் இயேசு காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவை பெறுபவர்களாக வாழாவிட்டால், நீங்களும் தறிக்கப்படுவீர்கள் - உரோ 11:22.
 • உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது – உரோ 12:3.
 • வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம் - உரோ 14:8.
 • அவரவருக்கே கடவுள் வரையறுத்துக் கொடுத்த விசுவாசத்தின் அளவுக்கேற்ப, ஒவ்வொருவரும் தம்மை மதித்து கொள்ளட்டும் - உரோ 12:3.
 • அமைதிக்கு வழிவகுப்பதை நாடுவோமாக – உரோ 14:19.
 • உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூயஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல, கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார் - 1கொரி 5:19,20.
 • நாம் மண்ணை சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம் - 1கொரி 15:49.
 • இயேசுவோடு இணைந்து வாழ்வோருக்கு, அன்பின் வழியாய் செயலாற்றும் விசுவாசம் ஒன்றே இன்றியமையாதது – கலா 5:6.
 • புதிய படைப்பாவதே இன்றியமையாதது – கலா 6:15.
 • நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் - எபே 4:4.
 • அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும் - எபே 4:15.
 • கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் - பிலி 2:5.
 • கிறிஸ்துவைப் பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையிலேயே நின்று விடாமல், நாம் முதிர்;ச்சி நிலையை அடைய வேண்டும் - எபி 6:1.
 • உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன, உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப்பார்த்து நீங்களும், அவர்களைப் போல விசுவாசம் உடையவர்களாய் இருங்கள் - எபி 13:7.
 • ஆண்டவருக்கு திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம். இன்னின்ன செய்வோம் என்று சொல்வதே முறை – யாக் 4:15.

13. ஆத்மீக வாழ்வின் ஆகாரம் :


 • விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால், அவர் என்றுமே வாழ்வார் - யோவா 6:51.
 • யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் விசுவாசம் கொள்வோர் பருகட்டும் - யோவா 7:37.
 • நற்கருணைப் பந்தியில், இது ஆண்டவரது உடல் என உணராமல் உண்டு பருகுபவர், தம் மீது தண்டனை தீர்ப்பையே வருவித்து கொள்கிறார் - 1கொரி 11:29.
 • நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. அவ்வாறே நீங்கள் பேய்களின் பந்தியிலும், ஆண்டவரின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது – 1கொரி 10:21.
 • புதிதாய் பிறந்த குழந்தைகள் போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவராயிருங்கள். இதை அருந்துவதால், நீங்கள் மீட்பில் வளருவீர்கள் - 1பேது 2:3.

14. முடிவில்லா வாழ்வும் + விண்ணரசும் :


 • விண்ணுலகில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள் - மத் 6:20.
 • விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின் படி செயல்படுபவரே விண்ணுலகுக்கு செல்வர் - மத் 7:26.
 • சிறுப்பிள்ளையைப் போலத் தம்மை தாழ்த்தி கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர் - மத் 18:4.
 • நிறைவுள்ளவராக விரும்பினால், நீர் போய், உம் உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் - மத் 19:21.
 • கலப்பையில் கை வைத்த பின, திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்பட தகுதியுள்ளவர் அல்ல – லூக் 9:62.
 • நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது, அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம் - உரோ 8:25.
 • நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய் - 1திமொ 6:12.
 • நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்திருந்தால், அவரோட ஆட்சி செய்வோம் - 2திமொ 2:11,12.


V. ஆத்மீக பணிக்கடுத்த “உபதேசம்”:


1. நற்செயல் :


 • உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றி புகழ்வார்கள் - மத் 5:16.
 • மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால், உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார் - மத் 6:14.
 • மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும், உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார் - மத் 6:15.
 • தூய்மையானது எதையும், நாய்களுக்கு கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களை கடித்துக் குதறும். உங்கள் முத்துக்களை பன்றிகள் முன் எறிய வேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும் - மத் 7:6.
 • நேர்மையற்ற செல்வத்தை கையாளவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால், யார் உங்களை நம்பி உண்மை செல்வத்தை ஒப்படைப்பார். பிறருக்கு உரியவற்றை கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் போனால், உங்களுக்கு உரியவற்றை உங்களுக்கு கொடுப்பவர் யார்? – லூக் 16:11,12.
 • உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக – உரோ 12:2.
 • குறித்த காலம் வருமுன், ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம் - 1கொரி 4:5.
 • நன்மை செய்வதில் மனம் தளராதிருப்போமாக, நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை செய்வோம் - கலா 6:9.
 • நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம் - 2தெச 3:13.
 • நீர் செய்யும் நன்மையை கட்டாயத்தினால் செய்யாமல் மனமார செய்ய வேண்டும் - பில 1:14.
 • தாம் சமயப்பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர் தம் நாவை அடக்கமாலிருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப்பற்று பயனற்றது – யாக் 1:26.
 • உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால் ஞானம் தரும் பணிவாலும், நன்னடத்தையாலும், அவற்றை காட்டட்டும் - யாக் 3:13.

2. கட்டளை கடைபிடிக்க உபதேசம் :


 • இக்கட்டளைகளில் மிகச்சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே, மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச்சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைபிடித்து கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் என கருதப்படுவார் - மத் 5:19.
 • தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள், நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள் - எபி 12:12.
 • விடுதலையளிக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும் - யாக் 2:12.

3. பணியாளர் (ஊழியர்) :


 • இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் - லூக் 9:60.
 • நீங்கள் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என சொல்லுங்கள் - லூக் 17:10.
 • எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது – லூக் 16:13.
 • நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர் - யோவா 12:26.
 • நீங்கள் கனிதரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன் - யோவா 15:16.
 • நீங்கள் யாவரும் உங்களை சார்ந்தவற்றில் அல்ல, பிறரை சாந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும் - பிலி 2:4.
 • வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால், நாம் வருந்தி உழைத்து வருகின்றோம். அவரே எல்லாருக்கும், சிறப்பாக விசுவாசம் கொண்டோருக்கும் மீட்பர் - 1திமோ 4:10.
 • மாற்றுக் கருத்துடையோருக்கு பணிவோடு பயிற்றுவியும் - 2திமொ 2:25.
 • கீழ்படியாதவர்களின் மாதிரியை பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு, அந்த ஓய்வை பெற முழு முயற்சி செய்வோமாக – எபி 4:11.

4. தூயதும், தீயதும் :


 • தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே – தி.தூ 10:15.
 • கூடா ஒழுக்கமுடையவனை சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும், ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம் - 1கொரி 5:5.
 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com