"நினைவு அஞ்சலி""அங்கே சாவு இராது; துயரம் இராது; அழுகை இராது; துன்பம் இராது; முன்பு இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன” – வெளி 21:4."


அம்மா! அம்மா!!
அம்மா! அம்மா! என்று சொல்லி ஆசை தீர்க்கும் முன்னாலே!

அப்பா வந்து அழைத்தாரோ! அம்மா! செல்ல அம்மா!

அம்மா அம்மா முதிர் வயது உனக்கில்லை பார்க்கின்றோம்

என்றென்றைக்கும் இளமையாக இருக்கத்தானே சென்றீரோ!இயேசு அப்பா மூன்றாணியில் மூன்றே மணி நேரம் தான் தொங்கினார்.

அம்மா! முப்பத்து மூன்று ஆண்டு, முள்ளாம் நோயில் தொங்கினீரே!

இயேசு அப்பா பாதம் பற்றி வாழ்ந்ததாலோ அம்மா! அம்மா!

இயேசு போன வயதில் நீரும் போய் சேர்ந்தீரோ அம்மா! அம்மா!பாடும் பலியும் பூவில் வாழும் எம்மவர்க்கு சுமை என்றாலும்,

விசுவாசிக்கும் இயேசு பாதை செல்பவர்க்கும் சுமை அல்ல

அழியும் பொன்னும் பொருளும் சேர்ப்போர், பிள்ளைகள்க்கு எதைத்தருவர்?

அழியா செல்வம் விண்ணில் சேர்த்தீரே அம்மா அதை யாம் பெறுகின்றோம்.எங்களுக்கும் சேர்த்து நீங்கள் உடலில் பாடு சுமந்தீரே!

நாங்கள் இன்று சுமக்கும் பாடை, உம் பாடுகளால் தாங்குகிறீர்!

அம்மா உந்தன் பிள்ளைகளின் அழுகைச் சத்தம் கேட்கிறதோ!

அப்பா அருகில் பிள்ளைகள் எமக்காய், பரிந்து பேசி தாங்குகிறீர்!!இப்படிக்கு


உங்கள் அன்பில் என்றும் வாழும்,

மக்கள், மருமக்கள்,

பேரன்கள், பேத்திகள்

மற்றும் குடும்பத்தார்.


 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com