இன்று இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்

எங்கள் இதயங்களில் பேரிடி முழங்க,

பர வாழ்வை அடைந்தனையோ! – அன்பே!!

இன்று இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்

நீவீர் எம் இதயங்களில் பதித்து வைத்த நினைவுகளை,

இன்று இந்நாள்வரை சுமந்து வாழ்கிறோம் - ஏந்தலே!

உம் அன்பு, பாசம், கருணை, இரக்கம்,

அக்கரை எல்லாம் எங்கள் நாடி நரம்புகளில்

இன்றும் வாழ்கின்றன – உடன்பிறப்பே!உறுப்பு ஒன்று போனாலும், மாற்று உறுப்பு வைத்திடுவர்.

உம்மை இழந்த பின்போ,

மாற்று உறவு காண வழியில்லை

உமக்கு நிகர் நீவீரே!!!

அப்பாவாக, அம்மாவாக, அண்ணனாக,

தம்பியாக, தோழனாக, ஏன் தெய்வமாக,

எங்களோடு உறவு கொண்டீர்.

நீர் எங்கள் இதயங்களில் ஏற்றி வைத்த,

அன்பு, பாசம், நம்பிக்கை, அனைத்துக்கும்,

இன்று இருபத்தி ஐந்து வயது தொடங்குகிறது.ஓவ்வொரு ஆண்டும் இந்நாளில்,

எங்களை நீர் சந்திக்க வருவதை, நாங்கள் அறிவோம்.

இன்றும் உம் பாச வருகைக்காய்

கண்ணீரோடு காத்திருக்கிறோம்.

மீட்பராம் இயேசுவோடு ஒன்றிவிட்ட உறவே!

எங்களுக்காக பரிந்து பேசும்.

உம் உடன்பிறப்புக்கள் இங்கே போராடி நலிகையிலே,

உம் பரிந்துரைகள் எங்களை தாங்கட்டும்.

நீர் சென்ற வழி நோக்கி,

நாங்களும் கடந்து வர, எங்களுக்காக மன்றாடுவீர்!இப்படிக்கு


அக்கா – நந்தினி

தங்கை - ஸ்வீட்டி

தம்பி – நளின்

மற்றும் உறவுகள்.


 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com