“தாபோர் மலை” தியானங்கள்

“Mount Tabor” Retreats

Rev.Fr.R.John Joseph


அன்பானவர்களே! இயேசு “உருமாற்றம்” அடைந்த மலை, தாபோர் மலை என்று பாரம்பரியம் கூறுகிறது. இந்த மலையில் இயேசு, தோற்றம் மாறினார். இது ஒரு, “அடையாள”மான செயல். இந்த செயலுக்கு, மிகப்பெரிய பொருள் உண்டு.

இந்த நிகழ்ச்சியை லூக்கா 9:28-36 - ல், நாம் காண்கிறோம். இதில், முதல் நிகழ்ச்சி, “தோற்றம் மாறுதல்”. இங்கே, “தோற்றம் மாறுதல்” என்பது, மீட்பால் ஒருவரிடம் உண்டாகும் மாற்றம். மீட்படைந்தவர், பழைய மனிதனைக் களைந்து, புதிய மனிதனை அணிந்து கொள்கிறார் - எபே 4:22-24. எனவே, இயேசு தம் சீடர்கள் முன் தோற்றம் மாறிய போது, நீங்களும், “மீட்கப்பட்டு, தோற்றம் மாற வேண்டும்” என்று காட்டினார்.

இரண்டாவது நிகழ்ச்சி, வானத்தினின்று, “இவரே என் அன்பார்ந்த மகன்” என்ற குரல் கேட்டது. இது, “அருட்பொழிவுக்கு” அடையாளம். இயேசு, “அருட்பொழிவு” பெற்ற போதும், இதே குரல் கேட்டது. “இவரே என் அன்பார்ந்த மகன்” - மத் 3:17. “அருட்பொழிவால்” நாம் கடவுளின் பிள்ளைகள் ஆகிறோம் - உரோ 8:15,16.

எனவே, “தாபோர் மலையின்” உருமாற்றம், இயேசு மனுக்குலத்துக்கு அளிக்கவிருக்கும், “மீட்பு”, “அருட்பொழிவுக்கு” முன் அடையாளம்.

அவ்வண்ணமே, CPM சபையில், மிக முக்கியமான “மீட்பு, அருட்பொழிவு” ஊழியம், “தாபோர் மலை - தியானம்” மூலமாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை தொடங்கி, ஆறு நாட்கள், “இரட்சிப்பு - அபிஷேக” தியானம் நடத்துகிறோம்.

இந்த தியானத்தில், ஆர்வமுள்ளவர்களையும், ஆயத்தமானவர்களையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாரும் இங்கே வந்து, இந்த தியானத்தில் கலந்து கொள்ள முடியாது. எனவே, இணையதளத்தில், “தாபோர் மலை” ஒன்றை உருவாக்கி, அங்கே, எங்கள் “இரட்சிப்பு - அபிஷேக” தியானத்தை நடத்துகிறோம். வெகு சீக்கிரத்தில், இந்த தியானத்தை, “தாபோர் மலை - தியானங்கள்” பகுதியில் எதிர்பாருங்கள்.

 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com