“சீனாய் மலை” தியானங்கள்

“Mount Sinai” Retreats

Rev.Fr.R.John Joseph  அன்புக்குரியவர்களே! எபிரேயனாகிய மோசே, எகிப்து மன்னனின் அரண்மனையில், ஒரு எதிர்கால அரசருக்குரிய அந்தஸ்தில், வளர்க்கப்படுகிறார். அதற்குரிய எல்லா பயிற்சிகளும் பெற்றார் - வி.ப 2:10. ஆனால், அரசனுக்குரிய ஆட்சியின் பயிற்சிகளை அவர் பெற்றுக்கொண்டது, உலக மக்களை ஆளுவதற்காக அல்ல. மாறாக, கடவுளின் மக்களை ஆளுவதற்காக.

  எனவே, எகிப்தின் அரச குடும்பத்தில் பயிற்சியை முடித்ததும், கடவுள் மோசேயை அங்கிருந்து தப்பி ஓடும்படி செய்தார் - வி.ப 2:15. பின்பு, மோசேயைப் பற்றிய, கடவுளின் திட்டத்தை, அவர் மோசேக்கு வெளிப்படுத்தினார்.

  அந்த வெளிப்படுத்தலுக்காக, கடவுள் தேர்ந்து கொண்ட இடம் தான், “சீனாய் மலை” - வி.ப 3:1,2.

  அங்கே, முதல் வெளிப்பாடாக,

 • தன்னை கடவுள் மோசேக்கு அறிமுகப்படுத்தினார் - வி.ப 3:14.
 • தனது திட்டங்களை மோசேக்கு வெளிப்படுத்தினார் - வி.ப 3:7-10.
 • மோசேயின் ஐயப்பாடுகளை கடவுள் அகற்றினார் - வி.ப 3:11,12.
 • எகிப்து மக்களின் தலைவனை, இஸ்ராயேலின் தலைவனாக, உருமாற்றினார் - வி.ப 3:10.
 • மோசேயின் பயத்தை நீக்கி, தைரியத்தை உருவாக்கி, எந்த துன்பத்தைக் கண்டு, மோசே ஓடினாரோ, அந்த துன்பத்துக்கே, மோசேயை திரும்பிப் போகச் செய்தார் - வி.ப 4:28-31.
 • அங்கே மோசே “கடவுள் மனிதரானார்” - வி.ப 4:16.

அதே சீனாய் மலையிலேயே, இரண்டாவது வெளிப்பாடும் நடந்தது. கூட இருப்பேன் என்றவர், கூட இருந்தார் - வி.ப 14:13,14. சொன்னபடியே, இஸ்ராயேல் மக்களை, சீனாய் மலை அடிவாரத்தில் கொண்டு சேர்த்தார் - வி.ப 19:1,2. அங்கே,

 • எல்லார் முன்னிலையிலும், கடவுள் மோசேக்கு, தன்னை மகிமையாக வெளிப்படுத்தினார் - வி.ப 19:17-20.
 • நாற்பது நாட்கள், அவரை தன் கூடவே வைத்திருந்தார் - வி.ப 24:14-18.
 • மோசேயின் ஊழியத்தை, அவருக்கு தெளிவுப்படுத்தினார் - வி.ப 24:12-13.
 • மோசேயோடுள்ள உறவைப் புதுப்பித்தார் - வி.ப 24:15-17.
 • ஒரு நண்பனோடு பேசுவது போல, கடவுள் அவரோடு பேசினார் - வி.ப 33:11.
 • தன் மீட்பின் பணியைச் செய்வதற்கான, அறிவை, பெலத்தை, வழிகாட்டுதலை, அங்கே மோசேக்கு கொடுத்தார் - வி.ப 33:7-10.
 • இஸ்ராயேல் மக்களோடு சேர்த்து, மோசேயை தம் சொந்த மகனாக உருமாற்றி, உடன்படிக்கை செய்து கொண்டார் - வி.ப 24:3-11.

இத்தனையும், இந்த சீனாய் மலையில், மோசேக்கு நடந்தேறியது. இதை வாசிக்கின்ற அன்பர்களே! மீட்படைந்து, அருட்பொழிவு பெற்று, ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நீங்கள், உங்களை அழைத்தவரோடு, இன்னும் நெருக்கமாக இருக்க ஆசையா? உங்கள் வாழ்க்கையில், கடவுளுடைய திட்டங்கள் நடந்தேற விருப்பமா? நீங்கள் வெகு விரைவிலேயே, கடவுளின் சாயலாக உருமாறி, தெய்வப்பிள்ளையாகி, கடவுளின் கரத்திலிருக்கும், ஆற்றல்மிகு ஊழியராக மாற விருப்பமா? வாருங்கள்! சீனாய் மலைக்குப் போவோம். அங்கே, நாற்பது இரவும், நாற்பது பகலும், கடவுளோடிருப்போம். அங்கே, உங்கள் வாழ்வின் பெரிய ஆச்சரியங்களை அனுபவிப்பீர்கள். கடவுளை, முகமுகமாக தரிசித்து, உங்களையும், ஒரு மோசேயாக உருமாற்ற, சீனாய் மலை காத்திருக்கிறது. மிகுந்த ஆர்வத்தோடும், தேடலோடும், ஆயத்தத்தோடும், சீனாய் மலைக்கு வாருங்கள். அங்கே, நாற்பது நாட்கள், கடவுளோடிருந்து உருமாறுவோம்.

வெகு விரைவில், இந்த அதிசய நிகழ்ச்சியை, இந்த பகுதியில் எதிர்பார்க்கலாம்.

 
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com