"திருவருட்சாதனங்கள்"

"SACRAMENTS"

Rev.Fr.R.John Joseph1. திருவருட்சாதனங்கள் என்றால் என்ன?

திருவருட்சாதனங்கள் என்பது, ஒருவருடைய உடல் - உலக - ஆத்மீக வாழ்வின், எல்லாக் கட்டங்களிலும், அவருக்கு மீட்பளித்து, அவரை ஆவியில் பிறக்க வைத்து, அவர் இறை ஆட்சியில், வாழ, வளர, தேவக் கிருபையைத் தொடர்ந்து பெற்றுத் தரும், “இறை ஊழியம்” (Divine Ministry).

2. எத்தனை திருவருட்சாதனங்கள் உள்ளன?

 • முதன்மை திருவருட்சாதனங்கள் (Major Sacraments) - இரண்டு.
 • சிறிய திருவருட்சாதனங்கள் (Minor Sacraments) - ஏழு.
 • என, மொத்தம் ஒன்பது திருவருட்சாதனங்கள் உள்ளன.

3. முதன்மை (Major) திருவருட்சாதனங்கள்:

 • மீட்பு - தி.ப 16:31; உரோ 10:10.
 • அருட்பொழிவு - லூக் 24:49,53; தி.ப 1:14; 2:1-4.

4. சிறிய (Minor) திருவருட்சாதனங்கள்:

 • திருமுழுக்கு - தி.ப 10:47,48; 2:41,47.
 • உறுதிபூசுதல் - உரோ 1:11; 2கொரி 1:21,22; 14:12; 1திமொ4:14; 2திமொ 1:6.
 • நற்கருணை - 1கொரி 11:23-25; லூக் 22:19.
 • பாவ மன்னிப்பு - யோவா 20:22,23.
 • நோயில் பூசுதல் - யாக் 5:14,15.
 • குருத்துவம் - லூக் 9:1-3; தி.ப 13:1-3.
 • திருமணம் - மத் 19:6; யோவா 2:1-10.

5.முதன்மை திருவருட்சாதனங்களுக்கும், சிறிய திருவருட் சாதனங்களுக்கும் உள்ள, வேறுபாடுகள், எந்த அடிப்படையில் உண்டாயின?

மீட்பும், அருட்பொழிவும், ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய வாழ்வின், அஸ்திவாரங்கள். இந்த அஸ்திவாரத்தின் மேல்தான், ஒருவரின் ஆத்மீக வாழ்வு, கட்டி எழுப்பப்படுகிறது. மீட்படையாத, அருட்பொழிவு பெறாத ஒருவர், இன்னும் “கிறிஸ்தவர்” (அருட்பொழிவு பெற்றவர்) ஆகவே இல்லை.

அப்படியே, கிறிஸ்தவராகாத ஒருவருக்கு, மேற்சொன்ன சிறிய திருவருட்சாதனங்களால், எந்த பயனும், உண்டாகாது. அது, அஸ்திவாரம் இல்லாமல், கட்டிடம் கட்டுவது போலாகிவிடும். எனவே, முதன்மையான திருவருட்சாதனங்களை, அடிப்படையாகப் பெற்று, அதன்மேல், தம் ஆவிக்குரிய வாழ்வைக் கட்டுபவர்களுக்கே, சிறிய திருவருட்சாதனங்கள் உருவாக்கப்பட்டன.


6. முதன்மை திருவருட்சாதனங்கள், மீட்பும் அருட்பொழிவும் என்று கூறுவதற்கு, அடிப்படையான காரணங்கள் என்னென்ன?

இதை நாம், கீழ்க்காணும் பகுதிகளில் விளக்குகிறோம்:

இந்த திருவருட்சாதனங்களைப் பற்றி, ஆழமாகப் படிக்க, இயேசு பரலோகம் செல்லும் முன், தம் சீடருக்கு, “மீட்பின் பணி” பற்றிக் கூறிய, கட்டளைகளை அலசிப் பார்ப்போம்.

மத்தேயு 28:19,20; மாற்கு 16:15-20; லூக்கா 24:47-49; என, மூன்று நற்செய்திகளிலும், சீடர்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய தம்முடைய “மீட்புப்பணி” பற்றிய இறுதிக்கட்டளையை இயேசு கொடுத்தார்.


A. மத்தேயு 28:19,20


1. எல்லா மக்களினத்தாரையும், சீடராக்குங்கள் - மத் 28:19.

2. தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால், திருமுழுக்கு கொடுங்கள் - மத் 28:19.

3. நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்கள் கடைபிடிக்கும்படி, போதியுங்கள் - மத் 28:20.


இவற்றின் பொருள்:

மத்தேயு நற்செய்தி, யூதர்களுக்கு எழுதப்பட்டது. எனவே, மத்தேயு தன் நற்செய்தியை, முடிக்கும் போதும், யூதர்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே, “பணிக்குரிய கட்டளைகளையும்” அமைக்கிறார்.

யூத ராபீக்கள், இயேசுவின் காலத்தில் செய்து கொண்டிருந்த பணியே அது. போதிப்பதும், சீடராக்குவதும், திருமுழுக்கு அளிப்பதும், தொடர்ந்து வாழ்க்கைப் பாடத்தை தருவதும், யூத ராபீக்களின் பணியாயிருந்தது.

இதையே, திருமுழுக்கு யோவானும் பின்பற்றினார். 1. போதித்தார் - சீடராக்கினார், 2. திருமுழுக்கு அளித்தார், 3. தொடர்ந்து கற்பித்தார். இங்கே, “சீடராக்குவது” என்பது:- ஒருவர் போதிப்பதைக் கேட்பவர்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்; குருவின் போதனையை ஏற்றுக் கொள்பவர்கள், அவருடைய “சீடர்கள்” ஆகிறார்கள். அதை ஊர்ஜிதப்படுத்த, அந்த சீடர்களுக்கு, திருமுழுக்கு என்னும் சடங்கும் நடைபெறும். ராபீக்களின் பழக்கத்தில், இந்நடைமுறை இருந்து வந்தது. (இயேசுவின் சீடர்களும், இதை செய்தார்கள் - யோவா 3:22,26; 4:1-3).

இந்த சீடராக்குதல், திருமுழுக்கு அளித்தல், தொடர்ந்து கற்பித்தல், என்ற ராபீக்களின் திருப்பணியை, ஒரு “ஆவிக்குரிய” அர்த்தத்தோடு, அதாவது, “கிறிஸ்தவ மயமாக்கி”, மத்தேயு கூறினார்.

மத்தேயு காணும் சீடராக்குதலும், திருமுழுக்கும், தொடர் போதனையும், முழுக்க முழுக்க, ஆவிக்குரிய பொருளோடு தான், ஆதிசபையில் பின்பற்றப்பட்டது. மேற்கூறிய மூன்று கட்டளைகளுக்குமுள்ள, ஆவிக்குரிய பொருளை, மேலும் காண்போம்.

I. எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் - மத் 28:19

இயேசுவின் சீடர் என்றால் யார்?

 • கடவுளின் வார்த்தையை கடைபிடிப்பவர் - இயேசுவின் சீடர் - யோவா 8:31.
 • இயேசு அன்பு செய்தது போல, பிறரை அன்பு செய்பவர் - இயேசுவின் சீடர் - யோவா 13:35.
 • அனைத்தையும் விட, இயேசுவை மேலாக கருதுபவர் - இயேசுவின் சீடர் - லூக் 14:26.
 • அன்றாட சிலுவையை, நாள்தோறும் சுமந்து, இயேசுவை பின்செல்பவர் - இயேசுவின் சீடர் - லூக் 14:27.


மேற்சொன்ன நான்கு காரியங்களின் படி, ஒருவர் இயேசுவுக்கு சீடராக வேண்டுமென்றால், அது அவருடைய “சொந்த பெலத்தால்” ஆகக்கூடிய ஒன்று அல்ல. அவர், “தெய்வீக பெலத்தால்” மட்டுமே, அவற்றை கடைபிடிக்க முடியும். அப்படியென்றால் அவர், கடவுள் ஈவாக அவருக்கு அருளும், “மீட்பையும்”, “அருட்பொழிவையும்” பெற்றுத்தான் ஆக வேண்டும் - உரோ 3:22,23. அங்கே அவர், “தெய்வீக பெலத்தை” அடைகிறார் - லூக் 24:49; தி.ப 1:8.

இந்தக் கட்டளைகளையெல்லாம் கொடுக்கும்போது, இயேசு, வரவிருக்கும் “பெந்தக்கோஸ்து - நிகழ்ச்சி” யின் தாக்கத்தையும், நினைவில் வைத்திருந்தார். யூத பாரம்பரிய சீடராயிருந்தவர்களுக்கும், பெந்தக்கோஸ்து நாளுக்குப்பின் ஊழியம் செய்த சீடருக்கும், வேறுபாடு இல்லையா?

உதாரணமாக, இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்வொம். புனித மத்தேயு எழுதிய படி, இந்த பிரசங்கம், “சீடர்களுக்கு” சொல்லப்பட்டது - மத் 5:1. ஆனால் அதை கடைபிடிப்பவர்கள், மீட்படைந்து, அருட்பொழிவை பெற்ற, ஆவிக்குரிய சீடராகத்தான் இருக்க முடியும். அதாவது, கடவுளுடைய விஷேச கிருபையை பெற்று, தெய்வத் தன்மைகளை கொண்டவர்களே, “மலைப்பிரசங்கத்தை” கடைபிடிக்க முடியும். “மீட்பு – அருட்பொழிவு” எனும், அருட்சாதனங்களால் மட்டுமே, ஒருவர், இந்த தெய்வீக நிலையை அடைய முடியும் - கொலோ 2:20.

II.தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், திருமுழுக்கு கொடுங்கள் - மத் 28:19

இங்கே, இயேசு குறிப்பிடும் “திருமுழுக்கு”, தண்ணீரால் கொடுக்கின்ற, “திருமுழுக்கு சடங்கு” அல்ல. தண்ணீரால் கொடுக்கின்ற திருமுழுக்கு, கொர்னேலியுவின் வீட்டில், பேதுரு கொடுக்க கூறிய திருமுழுக்கு. அதாவது, மீட்படைந்தவர்களை, “சபையில் சேர்க்கும் திருமுழுக்கு சடங்கு” - தி.ப 2:41,47. “திருமுழுக்கு கொடுக்க, கிறிஸ்து என்னை அனுப்பவில்லை” என்று, பவுல் கூறியது, இந்த தண்ணீர் திருமுழுக்கு சடங்கைப் பற்றியே - 1கொரி 1:14-17.

ஆனால், தந்தை, மகன், தூய ஆவியின் பெயரில், திருமுழுக்கு என்பது வேறு. அதில் தண்ணீரில் மூழ்குதல் இல்லை. மாறாக, “தந்தை, மகன், தூய ஆவியில் மூழ்குதல்” உண்டு. இதன் விளக்கத்தை சுருக்கமாக, கீழே காண்போம்.

பெயரால் – eis onoma - பெயருக்குள்:-

“பெயரால்” என்றால், வெறும் பெயரை “உச்சரித்து” என்பது அல்ல. மாறாக, “பெயர் ஆளைக் குறிக்கிறது”. என் “பெயரால்”, நீங்கள் எதைக் கேட்டாலும், பெற்றுக் கொள்வீர்கள் - யோவா 14:13,14; 15:16; 16:23. அவ்வண்ணமே, நீங்கள் என் “உள்ளும்”என் வார்த்தைகள் உங்கள் “உள்ளும்” நிலைத்திருந்தால், எதைக் கேட்டாலும் பெறுவீர் - யோவா 15:7. எனவே, இயேசுவின் “பெயரால்” என்பதும், இயேசுவின் “உள்ளிருப்பது” என்பதும் ஒன்றே.

மேலும், “பெயரால்” என்பதன் கிரேக்க மூலம் – eis onoma என்பதாகும். இங்கே, eis என்றால், into (உள்) என்று பொருள். எனவே, பெயருக்குள் என்று, பொருள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தந்தையின் பெயரால்:-

தந்தையின் பெயயரால் திருமுழுக்கு, அல்லது, “தந்தைக்குள் மூழ்கி” திருமுழுக்கு, என்பதன் பொருள் என்ன என்று பார்ப்பொம். இங்கே தந்தை என்பது, “இறைவார்த்தை”.

என் தந்தை “உண்மை”யாயிருக்கிறார் என்று, இயேசு சொன்னார் - யோவா 8:26. இயேசுவே “உண்மை” – யோவா 14:6. தூய ஆவியாரே “உண்மை” - யோவா 16:13; 14:17. இந்த உண்மை என்பது என்ன என்றால், “இறைவார்த்தை”யே உண்மை - யோவா 17:17.

இனி வார்த்தையை பற்றி பார்ப்போம். ஆவியாரே, “வார்த்தை” - யோவா 6:63. இயேசுவே “வார்த்தை” - யோவா 1:1,2,14. அதுபோலவே, தந்தையே “வார்த்தை” - யோவா 8:26; 17:17.

மேலும் வார்த்தை என்பது, “கடவுளுடைய விருப்பம்” ஆகும். வாக்கு கடவுளாயிருந்தது எனக் கண்டோம் - யோவா 1:1. எனவே, ஏகத்திருத்துவமே, இறை வார்த்தை தான் - யோவா 8:26; 14:6; 16:13. தந்தையின் வார்த்தைகளையே, இயேசு பேசினார் - யோவா 8:26.

தந்தையின் “விருப்பத்தை” நிறைவேற்றுவதே, என் உணவு என்று, இயேசு கூறினார் - யோவா 4:34. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே, என் பணி என்று, இயேசு கூறினார் - யோவா 5:30; 6:38,39. இங்கே, தந்தையின் “வார்த்தையை” நிறைவேற்றுவதும், “விருப்பத்தை” நிறைவேற்றுவதும், ஒன்றே. எனவே, “தந்தையின் பெயரால் திருமுழுக்குப் பெறுவது” என்றால், “தந்தையின் விருப்பங்களில்” மூழ்கி, திருமுழுக்குப் பெறுவது, என்று தான் பொருள்படும் - மத் 6:10.

மகனின் பெயரால்:-

மகன் என்றால், “இயேசு” - யோவா 8:32. இயேசு என்றால், “மீட்பர்” - மத் 1:21, என்று பொருள். இயேசு, மீட்பைத்தரவே, இவ்வுலகிற்கு வந்தார் - 1திமொ 1:15. இயேசு, பாவமன்னிப்பால் வரும் மீட்பை, தம் மக்களுக்கு அறிவிப்பார் - லூக் 1:77. இழந்து போனதை, “மீட்கவே” இயேசு வந்தார் - லூக் 19:10. இயேசு வந்த வீட்டில், மீட்பு வந்தது - லூக் 19:9. இயேசு எனும் “நாமத்தில்” (ஆளில்), மட்டுமே மீட்பு உண்டு - தி.ப 4:12.

இயேசுவை விசுவசிப்பவருக்கு, மீட்பு கிடைக்கும் - தி.ப 16:33; உரோ 10:10. எனவே, இயேசுவின் பெயரால் திருமுழுக்கு என்பது, “இயேசு தரும் ‘மீட்பில்’ மூழ்கி, திருமுழுக்குப் பெறுவது ஆகும்”.

தூய ஆவியின் பெயரால்:-

“தூய ஆவியின் பெயரால்” என்பதற்கும், இவ்வாறே பொருள் உண்டு. நாம் தூய ஆவியால், “ஆட்கொள்ளப்பட” வேண்டும் - லூக் 4:1. அதாவது, நாம் தூய ஆவியின் வரங்களைப் பெற வேண்டும் - 1கொரி 12:5-11. நாம், தூய ஆவியின் கனிகளைப் பெற வேண்டும் - கலா 5:22,23. நாம் தூய ஆவியின் கொடைகளைப் பெற வேண்டும் - எசா 11:2. நாம் தூய ஆவியின் அன்பைப் பெற வேண்டும் - உரோ 5:5.

எனவே, நாம் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு பெற வேண்டும், என்றால், “தூய ஆவியின் - அன்பில், வரத்தில், கனியில், கொடையில் - மூழ்கி, திருமுழுக்குப் பெற வேண்டும்”, என்பதாகும். தூய ஆவியால், “ஆட்கொள்ளப்படுவது” என்றாலும், இதே பொருள்தான் - தி.ப 2:4.

திருமுழுக்கு:

மத்தேயு 28:19 - ல் வரும் “திருமுழுக்கு”, “கழுவுதல்” எனும் பொருள் கொண்ட, ஒரு சடங்கு அல்ல. இங்கே, “முழுகுதல்” என்றால், “உள்ளே புகல்” என்பது பொருள். கையளித்தல், ஒப்புக்கொடுத்தல், சரணடைதல், அடிமையாதல், ஒன்றாக இணைதல் என்றெல்லாம், இதற்கு பொருள் கொள்ளலாம்.

En, eis போன்ற வார்த்தைகளை, பவுல் அடிக்கடி பயன்படுத்துவார். இங்கே, en என்ற வார்த்தைக்கு, “இணைந்து” என்று மொழிபெயர்த்துள்ளோம். ஆனால், eis என்றால், “உட்புகுதல்” என்று பொருள். மேற்சொன்ன பகுதியில், “உட்புகுந்து”, “மூழ்கிக் குளித்தல்” என்ற, ஆழமான அர்த்தங்களில், கட்டளை கொடுக்கப்படுகிறது.

ஒருவன் கிறிஸ்துவுக்கு “உள்” வாழ்ந்தால், அவன் புதிய படைப்பாகிறான் - 2கொரி 5:17. ஒருவன் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், அவன் புதிய மனிதனாக மாறி விடுகிறான். இவ்வாறு, “பழைய ஆதாமின்” மனிதனை, ஒருவரிடமிருந்து களைந்து விட்டு, “புதிய ஆதாமாகிய கிறிஸ்துவை”, உருவாக்குவதே, இயேசுவினுடைய சீடரின் பணி. இதைத்தான், இயேசு இங்கே தம் சீடருக்கு மொழிந்தார் - எபே 4:22-24.

III. நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்கள் கடைபிடிக்கும்படி, போதியுங்கள் - மத் 28:20a.

“போதனை” என்பது, திருப்பணிகளில், மூன்றாவது பணி. இந்த “போதனை” யாருக்கு என்றால், நற்செய்தியைக் கேட்டு, இயேசுவில் விசுவாசம் கொண்டு, மீட்படைந்து, அருட்பொழிவு பெற்று, திருமுழுக்குச் சடங்கால், திருச்சபையின் “பிள்ளைகள்” ஆனவர்களுக்கே. அதாவது, ஒரு “ஆவிக்குரிய விசுவாசிக்கே”.

ஒரு ஆவிக்குரிய விசுவாசி, உலக - மாமிச - “கூடாரத்துக்குள்” வாழ்ந்து கொண்டிருப்பவர் - 2கொரி 5:1-10. இந்த வாழ்க்கையில், உலகத் தேவைகளையும், மாமிசத் தேவைகளையும், அவர் ஈடு செய்ய வேண்டியவர். ஆனால், அவ்வாறு உலக-மாமிசத் தேவைகளை, ஈடு செய்கிற, ஒரு ஆவிக்குரிய விசுவாசி, அவற்றின் மாய ஈர்ப்புகளால், சமநிலை இழந்து போகாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு விசுவாசியில், உலக அழுத்தம் அதிகமாகும் போது, அவர் உலக பக்கம் சாய்ந்து விடுவார். அவ்வண்ணமே, மாமிச அழுத்தம் அதிகமாகும் போது, அவர் மாமிசத்தின் பக்கம் சாய்ந்து விடுவார். ஆனால், “ஆவிக்குரிய சபையின்” தொடர் வழிநடத்தல்கள், அவரை சமநிலையோடு வாழச் செய்யும். உலகத்துக்கு “உரியவற்றை” உலகத்துக்கும், கடவுளுக்கு “உரியவற்றை” கடவுளுக்கும் கொடுக்க, ஒரு விசுவாசிக்கு, தொடற்பயிற்சி அளிக்க வேண்டும் - லூக் 20:25.

இவ்வுலகில், ஒரு விசுவாசியினுடைய, எல்லா வாழ்க்கை சூழ்நிலைகளுக்கும், இயேசுவுடைய வழிநடத்தல் உண்டு. அதுவே, ஆவியானவருடைய வழிநடத்தலும் ஆகும் - கலா 5:16,18; எபே 5:17.

தகப்பன், தன் மகனை கரம்பிடித்து நடத்துவது போல், இயேசுவின் வார்த்தைகள், (விருப்பங்கள்) ஒரு விசுவாசியை, இவ்வுலக வாழ்வின் இறுதிவரை, “நிழலாக” நின்று, வழிநடத்துகின்றது - எசா 30:19-21. “பாவ” இருளில் வாழ்பவருக்கு, அந்த நிழல் தெரியாது. “விசுவாசம் - வார்த்தை” என்ற, வெளிச்சத்தில் வாழும் போது, “நிழல்” நன்கு தெரியும். பாதையும் தெளிவாகத் துலங்கும்.

மத் 28:20b - இதோ! உலக முடிவு வரை, எந்நாளும், நான் உங்களோடு இருக்கிறேன்.

இந்த வசனத்தையும், மேற்கூறிய வசனங்களோடு இணைத்தே, பார்க்க வேண்டும். இயேசு, இம்மானுவேல் கடவுள் - மத் 1:22. அவர் உடலெடுத்து வாழ்ந்த போது, மக்களோடு இருந்தார். ஆனால், “எந்நாளும்” உடனிருக்க வேண்டுமென்றால், அவர் உடலோடு இருக்க முடியாது. எனவே அவர், “ஆவியாக வேண்டும்”.

இவ்வாறு, “ஆவியான தேவன்” மூலமாகவே, இயேசு நம்மோடு எப்போதும் இருக்கிறார். தூய ஆவிக்கு, “இயேசுவின் ஆவி” என்றும் பெயர் உண்டு - தி.ப 16:7. இயேசு பரலோகம் சென்ற பின், “நம்மோடு என்றும் இருக்கும்படி”, துணையாளரை அனுப்புவார் - யோவா 16:7. அவ்வாறே, அவர் தூய ஆவியாரை அனுப்பினார் - தி.ப 2:33. சிலுவையில் இயேசு தந்தையிடம் கொடுத்ததை - லூக் 23:46, உயிர்த்த பின்பு மீண்டும் பெற்று, உலகுக்கு அனுப்பினார் - தி.ப 2:33.

மேலும், உடலெடுத்த இயேசு, உலக முடிவு வரை, எந்நாளும், உலகில் இருக்க முடியாது என்பதால், எந்நாளும் உலகில் இருக்க, ஆவியாக வந்தார் - யோவா 14:16,17; தி.ப 16:7. எனவே, உலக முடியும் வரை, நம்மோடு இருக்க வந்த ஆவி, இயேசுவின் ஆவி. தூய ஆவி மூலமாகவே, இயேசு இன்றும் நம்மோடு இருக்கிறார்.

மத் 28:20b - யில், இயேசு கூறியது: “தூய ஆவியாரின் காலத்தையே” என்பது, இதிலிருந்து தெளிவாகிறது. எனவே, இந்த இறுதி வார்த்தைகளோடு, மேற்சொன்ன கட்டளைகளை தியானித்தால், “நிறை உண்மை” - யோவா 16:13 - நமக்கு எளிதாகப் புலப்படும்.

மத்தேயுவில் இயேசுவின் கட்டளை:

இவ்வாறு, மத்தேயு கூறியபடி, இயேசு தம் சீடர்களுக்கு, இறுதியாகக் கொடுத்த கட்டளை, “மீட்பும்”, “அருட்பொழிவுமே”. ஓர் “ஆவிக்குரிய சபையுடைய” மீட்பின் பணி என்பது, உலகுக்கு மீட்பும், அருட்பொழிவும் கொடுத்து, ஆவிக்குரிய மக்களை, இறை விருப்பத்தில் வழிநடத்துவதே ஆகும்.


B. மாற்கு 16:15-20

மாற்கு 16:15,16:-

உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம், நற்செய்தியை பறைசாற்றுங்கள். விசுவாசம் கொண்டு, திருமுழுக்கு பெறுவோர், “மீட்பு” பெறுவர்.

நற்செய்தி - விசுவாசம் - திருமுழுக்கு - மீட்பு:

A. படைப்பிற்கெல்லாம், நற்செய்தி அறிவிக்க, இயேசு கட்டளையிட்டார். இந்த நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம், அதைக் கேட்பவரிடம், விசுவாசம் உண்டாவதே - உரோ 10:17.

இயேசு நற்செய்தி அறிவித்த போது, அதைக் கேட்ட மக்கள், “விசுவாசம்” கொண்டனர் - யோவா 4:41,39,42; 8:47. திருத்தூதர்கள், நற்செய்தி அறிவித்த போது, மக்கள் விசுவாசம் கொண்டனர் - தி.ப 6:7.

நற்செய்தி அறிவிப்பு என்பதன் நோக்கமே, மக்களிடம் விசுவாசத்தை உருவாக்குவது தான். நற்செய்தி அறிவிக்க, இயேசு சீடருக்குப் பணித்த போது, புதுமைகள் செய்யவும், நோய்களை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும், அதிகாரமும் வல்லமையும், அளித்தார் - லூக் 9:1. திருத்தூதர்களும், நற்செய்தி அறிவித்த போது, வல்ல செயல்களோடேயே அறிவித்தனர். இறை வார்த்தையின் பொருட்டும், வல்ல செயல்களின் பொருட்டும், மக்கள் விசுவாசம் கொண்டனர்.

வார்த்தையால் விசுவாசம் - தி.ப 2:41,47; 4:4; 6:7; 8:6; 10:44; 11:20,21; 13:48; 14:1; 17:3.

வல்ல செயல்களால் விசுவாசம் - தி.ப 5:14; 8:6; 9:35,42; 19:11; மாற் 16:20.

பொதுவாக, நற்செய்தி அறிவிப்பு, கேட்பவரிடையே விசுவாசத்தை உருவாக்கும் வண்ணமாக, அவர்களிடையே “வல்ல செயல்களும்” நடைபெற வேண்டும். எனவே தான், மாற்கு கூறும்போது, அவர்கள் எங்கும் சென்று தூதுரைத்தனர்; ஆண்டவரும் அவர்களோடு இருந்து, உடன் நிகழ்ந்த அருங்குறிகளால், தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார் - மாற் 16:20, என்று குறிப்பிட்டார். இயேசுவின் ஊழியத்தில், நற்செய்தி அறிவிப்பும், வல்ல செயல்களும், இணைந்தே சென்றன - யோவா 10:38; 14:1.

ஆதிசபையில், திருத்தூதர்கள் நற்செய்தி அறிவித்த போது, ஆண்டவரும் தம் அருள்செய்திக்குச் சான்றாக, பல அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், அவர்கள் வழியாகச் செய்தார். “அவர்களில் திரளானோர், விசுவாசம் கொண்டனர்” - தி.ப 14:3,1.

B. நற்செய்தியால் உருவாகும் விசுவாசம், “மீட்பை” அளிப்பது. நற்செய்தியை விசுவசிக்கும் ஒவ்வொருவருக்கும், அது கடவுளுடைய மீட்பளிக்கும் வல்லமை - உரோ 1:16. பேய்களை ஓட்டவும், நோய்களைத் தீர்க்கவும், புதுமைகள் செய்யவும், அதிகாரமும், வல்லமையும் பெற்று, நற்செய்தியை அறிவிக்கின்றவர்கள், மக்களிடம், தாமாகவே விசுவாசத்தை உருவாக்குகின்றனர் - லூக் 9:1; மாற் 6:12-13.

அங்கே உருவாகும் “விசுவாசத்துக்குள்” நற்செய்தியைக் கேட்பவர்கள் “நுழையும் போது”, மீட்பு அவர்களைத் தொட ஆரம்பிக்கும். நற்செய்தி அறிவிப்பால் - உண்டாகும் விசுவாசத்தில் - ஒருவர் மூழ்கினால் - அவர் மீட்பை பெற்றுக் கொள்வார்.

இதில், “விசுவாசம் கொண்டு, திருமுழுக்கு பெறுதல்” என்பதை, என்ன பொருளோடு பார்க்கிறோம். நற்செய்தியை முதலில் விசுவசித்து, பின்பு போய், தண்ணீரில் திருமுழுக்குப் பெற்றால், நாம் மீட்படைவோம் என்று கூறினால், அதில் முழுப்பொருளை காண முடியாது. இங்கே, “தண்ணீர் திருமுழுக்கு” சொல்லப்படவே இல்லை. “இயேசுவில் ஒருவர் கொள்ளும் விசுவாசமே, அவருக்கு மீட்பைத் தரும்”. என்னிடம் விசுவாசம் கொள்பவர், இறப்பினும் வாழ்வார். உயிர் வாழும் போது, என்னிடம் விசுவாசம் கொள்பவர், ஒருபோதும் சாகமாட்டார் - யோவா 11:25,26.

நீங்கள் விசுவாசத்தின் வழியாய், மீட்கப்பட்டிருக்கிறீர்கள் - எபே 2:8. இயேசுவின் மீது, விசுவாசம் கொண்டவர்கள், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகிறார்கள் - உரோ 4:24. மேலும் எங்கேயும், “விசுவசித்து, தண்ணீர் திருமுழுக்குப் பெற்றால் தான் மீட்பு” என்று, இயேசு சொல்லவில்லை. அப்படியானால், இங்கே கூறப்படும், “திருமுழுக்கு” என்பதன் பொருள் என்ன? இந்த திருமுழுக்கு, ராபீக்களின் மரபுவழி வந்த, “சபையில் சேர்க்கும்” “திருமுழுக்கு சடங்கு” அல்ல. மாறாக, மத்தேயு கூறிய, ஆவிக்குரிய பொருள் கொண்ட, திருமுழுக்கு ஆகும்.

அதாவது, “விசுவாசத்தில் மூழ்கி”, திருமுழுக்குப் பெறுபவர், மீட்படைவார் என்று, ஆதிசபை போதித்தது. அந்த படிப்பினையே, மாற் 16:16 - ல், பிரதிபலிக்கின்றது. எனவே, மாற்கு கூறும் முதல் கட்டளையில், இயேசு தம் சீடரிடம், உலகெங்கும் சென்று, நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு “மீட்பு” அளியுங்கள் என்று கூறினார்.

மாற்கு 16:17,18:-

“விசுவாசம் கொண்டோர்” என்றால், விசுவசித்து மீட்படைந்தோர் என்று, பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு மீட்கப்பட்டவர்களுக்கு, அதே விசுவாசத்தினால், “அருட்பொழிவும்” கிடைக்கிறது - கலா 3:14.

தூய ஆவியைப் பெற்றவரிடம், வெளிப்படையாகக் காணும், அல்லது செயலாற்றும் வரங்களைப் பற்றியே, மாற்கு 16:17,18 (தி.ப 2:17-21) ஆகிய வசனங்களில், மாற்கு கூறுகிறார். எனவே, மாற்கு நற்செய்தியில் நாம் காணும் இரண்டாவது கட்டளை, “அருட்பொழிவு” பெற வேண்டும் என்பதே.

மாற்குவில் இயேசுவின் கட்டளை:

ஆக, மாற்கு நற்செய்தியில், இயேசு தம் சீடருக்கு, மீட்புப்பணியாற்ற அளித்த கட்டளை, “எல்லா மக்களுக்கும், ‘மீட்பும்’, ‘அருட்பொழிவும்’ கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

C. லூக்கா 24:47-49

லூக்கா 24:47:-

பாவமன்னிப்பு பெற, மனம் மாறுங்கள் என, எருசலேம் தொடங்கி, அனைத்து நாடுகளிலும், அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும்.

இங்கே, மனம் மாறி, பாவமன்னிப்பு பெறுவதே, “மீட்பு” ஆகும் - லூக் 1:77. மக்கள், மனம்மாறி, பாவமன்னிப்புப் பெற வேண்டும் என்ற, “மீட்பின் செய்தி”, உலகெல்லாம் அறிவிக்கப்பட வேண்டும். அதாவது, இயேசுவின் சீடருடைய திருப்பணி மூலமாக, எல்லா மக்களும், “மீட்புப் பெற வேண்டும்” என்பதே பொருள்.

லூக்கா 24:49:-

“தந்தை வாக்களித்த ஆவிக்காக, காத்திருக்க வேண்டும்” என்பது, இரண்டாவது கட்டளை. இந்தக் கட்டளையை, சீடர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்றால், அவர்கள் கோயிலில் சென்று, இடைவிடாமல், கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டிருந்தார்கள் - லூக் 24:53. அதோடு, தந்தை வாக்களித்த ஆவிக்காக, ஜெபத்தில் காத்திருந்தனர் - தி.ப 1:14. அப்படியே, காத்திருந்தவர்கள், பெந்தக்கோஸ்து நாளன்று, தூய ஆவியின் வருகையால், ஆட்கொள்ளப்பட்டனர் - தி.ப 2:1-4.

எனவே, லூக்காவின் இரண்டாவது கட்டளை, எல்லா மக்களுக்கும், “அருட்பொழிவு” கொடுக்க வேண்டும் என்பதேயாகும். உலகத்தின் கடையெல்லை வரைக்கும் சென்று, எனக்கு (இயேசு + கிறிஸ்துவுக்கு), அதாவது “இரட்சிப்பு, அபிஷேகத்துக்கு” சாட்சிகளாயிருப்பீர்கள் என்று, இயேசு சீடருக்குப் பணித்ததும், இந்த கட்டளையின் பின்னணியிலேயே. தி.ப 1:8 - ல் வரும், கட்டளையை ஒப்பிட்டு, மேற்சொன்ன மூன்று கட்டளைகளையும் பார்க்க வேண்டும். மேற்சொன்ன மூன்று கட்டளைகளும், உயிர்த்த இயேசு கூறியவையே. அதே உயிர்த்த இயேசு தான், தி.ப 1:8 - யையும் கூறினார். “தூய ஆவியையும் வல்லமையையும் பெற்று”, “சாட்சிகளாயிருங்கள்” என்றால், “கொடையாகப் பெற்றீர்கள், கொடையாகக் கொடுங்கள்” - மத் 10:8, என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனவே, இந்த ஆவிக்குரிய பின்னணியில், மேற்சொன்ன மூன்று கட்டளைகளையும் பார்க்க வேண்டும்;.

லூக்காவில் இயேசுவின் கட்டளை:

எனவே, லூக்காவைப் பொறுத்தவரையில், இயேசு தம் சீடருக்கு, அவர்களின் மீட்புப்பணி பற்றிக் கூறிய, கடைசி கட்டளை, எல்லா மக்களுக்கும், “மீட்பும்”, “அருட்பொழிவும்” கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

இயேசுவின் சீடர்களும், பெந்தக்கோஸ்து அனுபவமும்

“இயேசுவின் சீடர்கள்” என்று, பைபிளில் அறியப்படுபவர்கள், யூத பாரம்பரியத்திலும், ராபீக்களின் பாரம்பரியத்திலும் வந்த “சீடர்கள்”. எனவே, நற்செய்திகளில், நாம் காணும் “சீடர்கள்” இந்த வழி வந்தவர்களே.

ஆனால், இயேசு இந்த சீடர்களை, “தம்முடைய சீடராக” மாற்றியது, பெந்தக்கோஸ்து பொழிதலால் தான். அங்கே, “ஆவிக்குரிய சீடர்கள்” உருவாகிறார்கள்.

பெந்தக்கோஸ்து - பொழிதலின் தாக்கத்தை, கருத்தில் கொண்டுதான், மேற்சொன்ன கட்டளைகளை ஆராய வேண்டும். இயேசுவின் வாழ்விலும் - யோவா 6:66; பாடுகள் மரணத்திலும் - மாற் 14:27-31,50; இந்த சீடர்கள் எல்லாம், இயேசுவை மறுதலித்தவர்கள் - மாற் 14:66-72; காட்டிக்கொடுத்தவர்கள் - மாற் 14:44,45; இயேசுவை விட்டுவிட்டு ஓடிப்போனவர்கள் - மாற் 14:50; பயந்து, அறைக்குள் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் - யோவா 20:19.

இப்படிப்பட்ட, பெந்தக்கோஸ்து பொழிதலுக்கு முந்திய ஒரு “சீடரை” உருவாக்க, இயேசு நிச்சயம் கூறியிருக்கமாட்டார்.

ஆனால், பெந்தக்கோஸ்து பொழிதலுக்குப் பின்னால் உள்ள சீடர்களோ, “நில உலகை” ஆண்டு வந்த, உரோமைப் பேரரசையே, நடுங்க வைத்தவர்கள் - திப 26:24-32. அதுபோலவே, “அறிவுலகை” ஆண்டு வந்த, கிரேக்கப் பண்பாட்டையே, அதிர வைத்தவர்கள் - தி.ப 17:16-34. உயிருக்குப் பயந்து, அறைக்குள் ஒளிந்திருந்தவர்கள் - யோவா 20:19, இன்று, “உலகத்தையே குழப்புபவர்கள்” ஆயினர் - தி.ப 17:6.

நீங்கள் தூய ஆவியையும், வல்லமையும் பெற்று, யூதேயா, கலிலேயா, சமாரியா என, உலகின் கடையெல்லை வரைக்கும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் - தி.ப 1:8. இது, இயேசு இறுதியாகக் கொடுத்த, ஆவிக்குரிய கட்டளை. இயேசுவின் இந்த கட்டளையோடு, மத்தேயு, மாற்கு, லூக்காவில் வரும், இறுதிக் கட்டளைகளை இணைத்துப் பார்த்தால், அந்த கட்டளைகளும், ஆவிக்குரிய கட்டளைகளே என்பது புலனாகும்.

இயேசுவின் இறுதிக் கட்டளையும் - பேதுருவின் பணியும்

மத்தேயு, மாற்கு, லூக்கா, ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும், இயேசுவின் இறுதிக்கட்டளையாகக் கூறியது என்ன என்று, கண்டோம். திருச்சபையின் திருப்பணியாளர்கள், செய்ய வேண்டிய, தலையாய கடமையை, இயேசு சொல்லிச் சென்றார்.

அதையே, பேதுருவும், தன்னுடைய முதல் அருளுரையில் செய்து முடித்தார். அதாவது, மக்கள், பேதுருவின் உரையைக் கேட்டு, உள்ளம் குத்துண்டவர்களாய், சகோதரரே, நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.

பேதுருவும், இயேசுவின் இறுதிக்கட்டளையை நினைவில் வைத்து, மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற, “இயேசு”, “கிறிஸ்துவின்” “பெயரால்”, திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது, “தூய ஆவியை” கொடையாகப் பெறுவீர்கள் என்றார் - தி.ப 2:37,38.

இங்கு, மனம் மாறி, பாவமன்னிப்புப் பெறுவது, “மீட்பு” பெறுவது ஆகும் - லூக் 1:77. தூய ஆவியைப் பெறுவது, “அருட்பொழிவு” பெறுவது ஆகும். “இயேசு” + “கிறிஸ்துவில்” திருமுழுக்குப் பெறுவது என்பது, “மீட்பு + அருட்பொழிவு” ஆகிய இரண்டிலும், மூழ்கி, திருமுழுக்குப் பெறுவது, என்று பொருள்.

தி.ப 2:41; தி.ப 10:44-48

தி.ப 2:41:-

பேதுருவுடைய “பெந்தக்கோஸ்து உரை” முடிந்ததும், 1. அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள், 2. திருமுழுக்குப் பெற்றார்கள், 3. மூவாயிரம் பேர், அவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.

முதலில் “ஏற்றுக்கொண்டவர்கள்” யார் என்று பார்ப்போம்

 • திடீரென்று, கொடுங்காற்று வீசுவது போன்ற, ஓர் இரைச்சல், வானத்திலிருந்து உண்டாகி, சீடர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும், ஒலித்ததைக் “கேட்டவர்கள்”.
 • மேலும், நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள், சீடர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததைக் “கண்டவர்கள்”.
 • சீடர்கள் அனைவரும், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, தூய ஆவியின் தூண்டுதலால், வொவ்வேறான மொழிகளில் பேசுவதைக் “கேட்டவர்கள்” - தி.ப 2:1-
 • இந்த நிகழ்ச்சிகளைக் கண்ணுற்று, மலைத்துப் போனவர்கள் - தி.ப 2:7.
 • சீடர்கள் பேசுவதை, தம் தாய் மொழியில் கேட்டு, புரிந்து கொண்டவர்கள் - தி.ப 2:8.
 • உலகின் பல்வேறு பாகங்களிலுமிருந்து வந்த, “இறைப்பற்றுள்ள” யூதர்கள் - தி.ப 2:5.
 • பெந்தக்கோஸ்து சீடர்கள், பரவசத்தில் “கடவுளுடைய மாபெரும் செயல்களை” பேசுவதைக் கேட்டு, மலைத்துப் போனவர்கள் - தி.ப 2:11.
 • எங்களைத் தேடி வந்த “மீட்பரை” கொன்றதால், தேடி வந்த “மீட்பை” இழந்து விட்டோமே என்று, “உள்ளம் குத்துண்டவர்கள்” - தி.ப 2:23,37.
 • யோவேல் இறைவாக்கினர் வழியாய், தந்தை வாக்களித்த “ஆவியை” இயேசு விண்ணகம் சென்ற போது, அனுப்பி வைத்தார் - தி.ப 2:17-21,33. அந்த “அருட்பொழிவையும்” நாங்கள் இழந்துவிட்டோமே என்று, “உள்ளம் குத்துண்டவர்கள்” - தி.ப 2:37.
 • சகோதரரே! நீங்கள் பெற்றுக்கொண்ட, “மீட்பையும்” “அருட்பொழிவையும்” நாங்களும் பெற்றுக்கொள்ள, “இனி நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று”, “பெந்தக்கோஸ்து உரை” ஆற்றிய பேதுருவிடம் கேட்டவர்கள் - தி.ப 2:37.

இனி எந்த “வார்த்தையை: ஏற்றுக்கொண்டார்கள் என்று பார்ப்போம்:-

a. முதல் வார்த்தை:

 • கடவுளின் அனாதி திட்டத்தின்படியே, “மீட்பர்” உங்களைத் தேடி வந்தார்; ஆனால், அவரை நீங்கள் கொன்று விட்டீர்கள் - தி.ப 2:22-28, என்ற வார்த்தையை.
 • யோவேல் இறைவாக்கினர் வழியாய், தந்தை வாக்களித்த “ஆவியை” இயேசு விண்ணகம் சென்று, அனுப்பி வைத்தார் - தி.ப 2:21, 33, என்ற வார்த்தையை.

b. இரண்டாவது வார்த்தை:

1. மனம் மாறுங்கள், 2. உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற, 3. “இயேசு” + “கிறிஸ்துவின்” பெயரால், திருமுழுக்குப் பெறுங்கள், 4. அப்பொழுது, “தூய ஆவியை” கொடையாகப் பெறுவீர்கள் - என்ற வார்த்தையை.

விளக்கம்:-

 • மனம் திரும்புங்கள் என்றால், மனத்தை “பாவம் போக்கும்” ஆட்டுக்குட்டியின் பக்கம் திருப்புவது ஆகும் - யோவா 1:36-42.
 • தூய ஆவியைப் பெறுவீர்கள் என்பது, “அருட்பொழிவு” - லூக் 4:1, தி.ப 2:1-4, பெறுவது ஆகும்.
 • இயேசு + கிறிஸ்துவின் பெயரால், திருமுழுக்கு என்பது, “மீட்பு + அருட்பொழிவுக்குள்” மூழ்கி, திருமுழுக்குப் பெறுவது ஆகும்.

எனவே, “வார்த்தையை” “ஏற்றுக்கொண்டவர்கள்” என்றால், முழுப்பொருள் என்ன?

1. அவர்கள் இறைப்பற்றுள்ள யூதர்கள், 2. முதல் “பெந்தக்கோஸ்து அனுபவத்திற்கு” சாட்சிகளானவர்கள், 3. “பெந்தக்கோஸ்து சீடர்கள்” “பேசியதை” புரிந்துகொண்டவர்கள், 4. எங்களுக்கு இப்படி கிடைக்கவில்லையே என்று, உள்ளம் குத்துண்டவர்கள், 5. இந்த அற்புத அனுபவத்தை, தாங்களும் பெற, எதையும் செய்ய, தயாரானவர்கள். இந்த மக்கள், பேதுருவும் சீடரும் பெற்ற, மீட்பையும், அருட்பொழிவையும் தவிர, வேறு எதைத்தான், அவர்களிடம் எதிர்பார்த்திருப்பார்கள்?

அவர்கள் “ஏற்றுக்கொண்ட வார்த்தை” எத்தகையது?

ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு தேவக்கிருபையை அளிக்கும் வார்த்தை - தி.ப 20:32. ஏற்றுக்கொண்ட ஒருவரை, கடவுளோடு ஒப்புரவாக்கும் வார்த்தை - 2கொரி 5:19. ஏற்றுக்கொண்டவர்களுடைய பாவங்களினின்று, அவர்களைத் தூய்மையாக்கும் வார்த்தை - எபி 1:3; யோவா 15:5; 1திமொ 4:5. ஏற்றுக்கொண்டவர்களிடம், விசுவாசத்தை உருவாக்கும் வார்த்தை - உரோ 1:16. ஏற்றுக்கொண்டவர்களுக்கு, புதுப்பிறப்பு அளிக்கும் வார்த்தை - 1பேது 1:23. ஏற்றுக்கொண்டவர்களுக்கு, “மீட்பளிக்கும்” வார்த்தை - தி.ப 13:26. ஏற்றுக்கொண்டவர்களுக்கு, “ஆவியையும்” உயிருமான வார்த்தை - யோவா 6:63. இத்தகைய “வார்த்தை” அவர்களுக்குள், மீட்பையும் அருட்பொழிவையும், தராமல் இருந்திருக்குமா?

ஆகவே, வார்த்தையை “ஏற்றுக்கொண்டவர்கள்” என்றால், “வார்த்தை” யால், “உருமாற்றப்பட்டவர்கள்” என்பது பொருள். வார்த்தை எந்த நோக்கத்தோடு அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை, அதை ஏற்றுக் கொண்டவர்களிடம் அது நிறைவேற்றிவிட்டது, என்று பொருள் - எசா 55:11. வார்த்தை அனுப்பப்பட்டதன் நோக்கம், “மீட்பும் - அருட்பொழிவுமே” என்று மேலே கண்டோம்.

மேலும், “அவர்களோடு” சேர்ந்தார்கள் என்றால் என்ன?

இங்கே, “அவர்கள்” என்பது, “பெந்தக்கோஸ்து அனுபவம்” பெற்ற, ஆதி சீடர்கள். மீட்பைப் பெற்று, அருட்பொழிவு பெற்று, தங்களுக்கு பேருரை ஆற்றியவர்கள். தங்கள் கண்முன்னாலேயே, “மீட்பின் மகிழ்ச்சியில்” களித்தவர்களாய், “அருட்பொழிவின்” ஆனந்தப்பரவசத்தில் மூழ்கியவர்களாய், நின்றவர்களின் கூட்டத்தோடு, “அதே அனுபவங்கள் பெற்ற”, மூவாயிரம் பேர் சேர்ந்து கொண்டார்கள்.

“திருமுழுக்கு” பெற்றார்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்:

இங்கே, திருமுழுக்கு என்பது, ஆவியில் திருமுழுக்கு அல்ல. இந்த திருமுழுக்கு, மீட்படைந்து, அருட்பொழிவு பெற்ற ஒருவரை, சபையில் சேர்க்கும், “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” ஆகும்.

இதை இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ள, தி.ப 10:44-48 - ல் வரும் நிகழ்ச்சியையும் தியானிக்க வேண்டும்.

தி.ப 10:44-48

இந்த வசனமும், மேற்சொன்ன வசனத்தைப் போலவே, பேதுருவுடைய “மீட்பின் பணியில்” ஒன்றே. இங்கே கொர்னேலியுவின் வீட்டில், “மீட்பின் பிரசங்கம்” நடைபெறுகிறது.

இந்தப் பிரசங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அதைக் கேட்டவர்கள் மேல், “அருட்பொழிவு” நடைபெற்றது - தி.ப 10:44. உடனே பேதுரு, அவர்களுக்கும் “தண்ணீர் திருமுழுக்கு” அளிக்க கட்டளையிட்டார். இங்கே, “அருட்பொழிவு” பெற்றவர்க்கே, “தண்ணீர் திருமுழுக்கு” அளிக்கப்பட்டது என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆக, முதல் பிரசங்கத்திலும், இதுவே நடந்திருக்க வேண்டும். தொடர்ந்து செய்த திருப்பணிகளிலும், இந்த முறையையே பின்பற்றியிருக்க வேண்டும். அதாவது, “மீட்படைந்து - அருட்பொழிவு” பெற்றவர்களுக்கு, “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நிறைவேற்றி, விசுவாசிகள், சபையில் சேர்க்கப்பட்டார்கள்.

ஆக, மத்தேயு, மாற்கு, லூக்காவில், இயேசு வெளிப்படுத்திய இறுதிக் கட்டளைகளை, பேதுரு, தம்முடைய முதல் “பெந்தக்கோஸ்து மிஷனில்” செய்து முடித்தார்.

இனி, மீட்பு, அருட்பொழிவு என்ற, அருட்சாதனங்களைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

மீட்பு

பாவிகளை மீட்டு இரட்சிக்கவே, இயேசு கிறிஸ்து, இந்த உலகத்திற்கு வந்தார் - 1திமொ 1:15. எல்லாரும் மீட்படைய வேண்டுமென்பதே, கடவுளுடைய விருப்பம் - 1திமொ 2:4. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவசி. அப்பொழுது, நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள் - தி.ப 16:31. உள்ளத்தால் விசுவசித்து, நாவால் அறிக்கையிடுபவர், மீட்பு பெறுவார் - உரோ 10:10.

நாம் கிறிஸ்து மீது விசுவாசம் கொண்ட போது, இருந்ததைவிட, இப்போது மீட்பு மிக அண்மையில் உள்ளது - உரோ 13:11. இதுவே ஏற்ற காலம், இன்றே மீட்பின் நாள் - 2கொரி 6:2. இந்தக் காலத்தை நன்கு பயன்படுத்துங்கள் - கொலோ 4:5. ஆகவே, அச்சத்தோடும் நடுக்கத்தோடும், உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள் - பிலி 2:12.

இழந்து போனதை, தேடி மீட்பதே, இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்திப் பணி - லூக் 19:10. இயேசுவின் பணி, “மீட்பின் பணி”. எனவே, திருச்சபையின் முதல் பணியும், அதுவே. திருச்சபையின் மற்றெல்லா பணிகளும், மனுக்குலத்தை, பாவ, துன்ப நிலையிலிருந்து மீட்பதற்கு வழி வகுப்பதாகவே இருக்க வேண்டும்.

இந்த வேத பின்னணியில், “மீட்பே” விசுவாசிகள் பெற வேண்டிய, முதல் அருட்சாதனம் என்று, CPM சபை கருதுகிறது.

அருட்பொழிவு

அருட்பொழிவு அல்லது, அபிஷேகம் என்பது, தூய ஆவியினால் ஆட்கொள்ளப்படுதல் ஆகும் - லூக் 4:1; தி.ப 2:1-4. எதற்காக, இந்த அருட்பொழிவு வழங்கப்படுகிறது என்றால், “மீட்பை” உறுதிப்படுத்துவதற்காக - 2கொரி 1:21,22. அருட்பொழிவு யாருக்கு கிடைக்கும் என்றால், மீட்படைந்தவர்களுக்கு - தி.ப 2:38.

பழைய ஏற்பாட்டில், அருட்பொழிவை, “திருப்பொழிவு” அல்லது, “எண்ணெய் அபிஷேகம்” என்று கூறுவர் - லேவி 8:30. இதன் நோக்கம், தூய்மையாக்குவது, அல்லது, புனிதப்படுத்துவது - லேவி 8:30. இந்த திருப்பொழிவு, எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? பொருட்களை - லேவி 8:10,11; இடங்களை அல்லது ஆட்களை புனிதப்படுத்த - லேவி 8:12; 1சாமு 10:1; 16:12,13.

புதிய ஏற்பாட்டில், அருட்பொழிவு என்பது, “ஆவிக்குரிய அபிஷேகம்” என்று அறியப்படுகிறது. இந்த அருட்பொழிவு முதலாவது, இயேசுவுக்கு அருளப்பட்டது - மத் 3:16; தி.ப 10:38; லூக் 4:18. இரண்டாவது, கிறிஸ்தவர்களுக்கு அதாவது, “ஆதி சீடர்களுக்கு” ஆவிக்குரிய அபிஷேகம் வழங்கப்பட்டது - தி.ப 2:1-4; 2கொரி 1:21,22; தி.ப 5:32; கலா 3:14.

“உறுதிப்பூசுதல்” எனும் அருட்சாதனத்துக்கும், “அருட்பொழிதல்” என்னும் அருட்சாதனத்துக்கும், மிகுந்த வேறுபாடு உண்டு. எண்ணெய் பூசி அபிஷேகிப்பது என்பது, பழைய ஏற்பாட்டின் அபிஷேகம். அது ஆண்டவருக்கென்று ஒதுக்கப்பட்ட பொருட்களை, அல்லது ஆட்களை புனிதப்படுத்துவது. இங்கும், ஆவியானவர் செயல்படுவார் - 2தெச 2:13.

ஆனால், அருட்பொழிவு என்பது, மனிதருக்கு மட்டும் வழங்கப்படுவது. அருட்பொழிவு பொருட்களுக்கு வழங்கப்படுவதில்லை. தூய ஆவியால் ஒருவர் ஆட்கொள்ளப்படுவது, அருட்பொழிவு ஆகும் - லூக் 4:1. அருட்பொழிவு என்பது, ஒருவரை, “உருமாற்றும்” அல்லது, “புதிய மனிதராக்கும்” தேவ கிருபை.

பழைய ஏற்பாட்டில், இந்த இரண்டு அபிஷேகத்துக்கும் உள்ள வேறுபாட்டை உதாரணமாக காணலாம். சாமுவேல் இறைவாக்கினர், சவுலுக்கு, எண்ணெய் அபிஷேகம் (திருப்பொழிவு) செய்தார் - 1சாமு 10:1. ஆனால், அதற்குப் பின், அதே இறைவாக்கினர், சவுலை, “அருட்பொழிவு பெற” வழிகாட்டினார்.

“இறைவாக்கினர் கூட்டத்தில், அவர் போய் சேர்ந்ததும், அங்கே அவர், கடவுளுடைய ஆவியானவரின் வல்லமையால், ஆட்கொள்ளப்பட்டு, பரவசமடைந்து பேசினார் - 1சாமு 10:6,10. இதனால், அவர் “வேறு மனிதரானார்” - 1சாமு 10:6.

எண்ணெய் அபிஷேகம், கடவுளுடைய பணிகளை செய்வதற்கு, “அதிகாரம்” (தகுதி) அளிக்கிறது. “அருட்பொழிவு”, கடவுளுடைய பணிகளைச் செய்ய, “வல்லமை” அளிக்கிறது. இயேசு இவை இரண்டையும், தம்முடைய சீடருக்கு அளித்து, தம் பணிக்கென்று, அவர்களைத் “திருநிலைப்படுத்தினார்” - லூக் 9:1.

மேலும், சவுல் மன்னன், பாவம் செய்த போது, அருட்பொழிவால் பெற்றுக்கொண்ட “ஆவியானவர்” - “வல்லமை” அவரிடமிருந்து அகன்றார் - 1சாமு 16:14. ஆனால், திருப்பொழிவால் அவர் பெற்றுக்கொண்ட, “அதிகாரத்தால்” அவர் தொடர்ந்து, இஸ்ராயேல் மக்களுக்கு அரசராயிருந்து, பலகாலம் ஆண்டார் - 1சாமு 17:1,2.

“அருட்பொழிவால்” வரும் தூய ஆவியை, மனுக்குலத்துக்கு கொடுக்கவே, இயேசு, இவ்வுலகிற்கு வந்தார் - யோவே 2:28-29; யோவா 14:16,17,26; 15:26; 16:7,13,14. அந்த பொழிதலை, பெந்தக்கோஸ்து நாளன்று, சீடர்கள் பெற்றுக் கொண்டார்கள் - தி.ப 2:1-4. அந்த பொழிதலை, அவர்கள் “கண்டார்கள்”, “தொட்டு உணர்ந்தார்கள்”, அதனால் “உருமாறினார்கள்” - தி.ப 2:1-4; 14:15; 1யோவா 1:1; 1சாமு 10:5-20. இதனால், இந்தப் பொழிதலை, “பெந்தக்கோஸ்து (ஆவிக்குரிய) - பொழிதல்” என்றும் கூறுவர்.

இந்த உண்மைகளின் பின்னணியில், “அருட்பொழிவு” என்பது, ஒரு விசுவாசி பெற வேண்டிய, முதன்மையான திருவருட்சாதனம் என்று, CPM சபை கூறுகிறது.

 

My status
 கி.மு கி.பி


 திருமறை வகுப்புக்கள்

மனம் திரும்புதலுக்கான அழைப்பு


மனம்திரும்புதலுக்கான பகிர்தல்
......மனம் திரும்புதலுக்கான வழிநடத்தல் பைபிள் விளக்கம்


 சத்தியக் கதம்பம்


மனம்திரும்புதலுக்கான குழு ஜெபம் - 1.....மனம்திரும்புதலுக்கான குழு ஜெபம் - 2பாவமன்னிப்பின் வழிநடத்தல்


பாவ பொறுத்தல் வேண்டி ஜெபம்
...... ஆவிக்குரிய திருமணம்

 சாட்சிகள்

அபிஷேகத்திற்கான அழைப்புஅபிஷேக ஜெபம் - 1அபிஷேக வழிநடத்தல்
......அபிஷேக ஜெபம் - 2அருட்பொழிவுஆவிக்குரிய மக்கள்


“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29


“மீட்பையும்” “அருட்பொழிவையும்” பெறுவதற்கு முன் சீடர்கள்பேதுரு


குறைவான விசுவாசமும், ஐயமும் கொண்ட பேதுரு – மத் 14:31


.....இயேசுவுக்கு தடையாகவும், சாத்தானாகவும் இருந்த பேதுரு – மத் 16:23


நெருக்கடி நேரத்தில், இயேசுவை மறுதலித்த பேதுரு – மத் 26:74சீடர்கள்

யார் பெரியவன் என்று, போட்டியிட்ட சீடர்கள் - மாற் 9:34


இயேசுவின் துன்ப வேளையில், தூங்கிக்கொண்டிருந்த சீடர் - மத் 26:43


இயேசுவின் துன்பத்தில், அவரை விட்டு ஓடிப்போன சீடர்கள் - மத் 26:50.


இயேசுவை முத்தமிட்டு, காட்டிக்கொடுத்த யூதாஸ் - மத் 26:49


.....


பண ஆசையால், இயேசுவை கொலை செய்யத் துணிந்த யூதாஸ் - மத் 27:4,5


கண்டு விசுவசிக்கும் தோமா – யோவா 20:29......

“மீட்பையும்” “அருட்பொழிவையும்” பெற்ற பின் சீடர்கள்


பேதுரு

கோழையான பேதுரு, கிளர்ந்தெழுந்து போதித்தார் - தி.ப 2:14-41


“இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்” – யோவா 21:15கொர்னேலியுவின் வீட்டில், பேதுரு போதித்த போது, மக்கள் அருட்பொழிவு பெற்றனர் - தி.ப 10:44-48


தம் ஆண்டவராம் இயேசுவுக்காய், தலைகீழாய் தொங்கி மடிந்த பேதுரு – யோவா 21:18,19


.....விண்ணரசின் திறவுகோலை பெற்றுக் கொண்ட பேதுரு – மத் 16:19......பவுல்

பவுலையும், சீலாவையும் அடித்து துன்புறுத்தினர் - தி.ப 16:22,23, மத் 10:18சீலாவும் பவுலும், சிறையில் பாடித் துதித்தார்கள் - தி.ப 16:25


.....பவுலும், சீலாவும், ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, விடுதலை பெற்றனர் - மத் 16:26


ஆண்டவராகிய இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ளுங்கள். அப்பொழுது, நீங்களும் வீட்டாரும் மீட்படைவீர்கள் - தி.ப 16:31


கப்பல் சிதைவால், பவுல் துன்பப்படல் - தி.பா 28:41


.....உலகை கலக்கியவர்கள், ஏதென்ஸ் நகரில் போதித்தார்கள் - தி.ப 17:6, 16-34


பவுல் தான் போதித்த திருச்சபைகளுக்கு, பல கடிதங்கள் எழுதினார் - 2பேது 3:15,16
.....

My status


 
 
copyrights © 2012 catholicpentecostmission.com