மீட்படைந்து மீட்பளிக்க இயேசு நம்மை அழைக்கிறார்Rev.Fr.R.John Josephகிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !


 • அழைப்பு :
  • இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது, அவன்மேல் அன்பு கூர்ந்தேன். எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் - ஓசே 11:1.
  • உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன். தொலைநாட்டினின்று உன்னை அழைத்தேன் - எசா 41:9.
  • அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன். உன் பெயரை சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்கு உரியவன் - எசா 43:1.
  • பெயர்சொல்லி உன்னை அழைத்தேன். நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு பெயரும் புகழும் வழங்கினேன் - எசா 45:4.
  • என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக் கொண்டு வா – எசா 43:7.
  • தொலைநாட்டினின்று என் புதல்வரையும் புதல்வியரையும் அழைத்து வா – எசா 43:6.
  • அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள் - 1கொரி 1:26.


 • அழைத்தவர் :
  • இருளில் மறைத்து வைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்து வைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன். பெயர்சொல்லி உன்னை அழைத்த கடவுள் நான் என்பதை நீ அறியும்படி இதை செய்வேன் - எசா 45:3.
  • என் திட்டத்தை செயல்படுத்தும் ஒருவனை தொலைநாட்டினின்று வரவழைக்கிறேன். சொல்லியவன் நான். நானே அதை நிறைவேற்றுவேன். திட்டமிட்டவன் நான். நானே அதை செயல்படுத்துவேன் - எசா 46:11.


 • விடுதலைக்கான அழைப்பு :
  • பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது என்றார் - மத் 11:28-30.
  • உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள் என்கிறார் ஆண்டவர். உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள் என்கிறார் யாக்கோபின் அரசர் - எசா 41:21.
  • “வாருங்கள் நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள் - நீ.மொ 9:5.
  • தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர் நிலைக்கு வாருங்கள். கையில் பணமில்லாதவர்களே நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள்; வாருங்கள். காசு பணமின்றி திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள் - எசா 55:1.
  • தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து வருக வருக என்கிறார்கள். இதை கேட்போரும் வருக வருக என்று சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும். விருப்பம் உள்ளோர் வாழ்வுதரும் தண்ணீரை இலவசமாய் குடிக்கட்டும் - வெளி 22:7.
  • யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் - யோவா 7:37.
  • என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் - யோவா 6:37.
  • தனியனாய் இருந்த ஆபிரகாமை அழைத்தேன். அவனுக்கு ஆசி வழங்கி பெரும் திரளாக்கினேன் - எசா 51:2
  • அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன். இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழ செய்வேன் - எசா 56:7.
  • இஸ்ரயேலை அதன் மேய்ச்சல் நிலத்துக்கு திரும்ப அழைத்து வருவேன் - எரே 50:19.


 • விடுதலை பெற்ற சம்பவம்:
  • ஆண்டவரின் தூதர் வானத்திலிருந்து கூப்பிட்டார். ஆகார் உனக்கு என்ன நிகழ்ந்தது. அஞ்சாதே – தொ.நூ 21:17.
  • பார்த்திமேயுவின் கூக்குரல் கேட்டு, இயேசு நின்று அவனை கூப்பிடுங்கள் என்றார் - மாற் 10:49.
  • மார்த்தா, மரியாளிடம் போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார் - யோவா 11:28.
  • இயேசு உரத்த குரலில், லாசரே வெளியே வா என்று கூப்பிட்டார் - யோவா 11:43.
  • சக்கேயு விரைவாய் இறங்கி வாரும், இன்று உம் வீட்டில் நான் தங்க வேண்டும் - லூக் 19:5.
  • பத்து கன்னியர்கள் மணமகனை எதிர்கொள்ள வாருங்கள் - மத் 25:6.


 • திரும்பி வர அழைப்பு :
  • கைவிடப்பட்டு மனமுடைந்து போன துணைவி போலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார். நொடிப்பொழுதே நான் உன்னை கைவிட்டேன். ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன் - எசா 54:6,7.
  • என்னிடம் திரும்பி வா. உன்மீது சினம் கொள்ளமாட்டேன் - எரே 3:12.
  • என்னைவிட்டு விலகிய மக்களே, திரும்பி வாருங்கள் உங்களை குணமாக்குவேன் - எரே 3:22.
  • என்னிடம் திரும்பி வாருங்கள். விடுதலை பெறுங்கள் - எசா 45:22.
  • உங்களுடைய தீய நெறிகளை விட்டு திரும்புங்கள் - செக் 1:4.


 • செவி கொடுக்க அழைப்பு :
  • நான் அழைத்திருக்கும் யாக்கோபே, எனக்கு செவிகொடு – எசா 48:12.
  • விடுதலையை நாடுவோரே, ஆண்டவரை தேடுவோரே எனக்கு செவிகொடுங்கள். நீங்கள் எந்த பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்த குழியின்று தோண்டப்பட்டீர்களோ அதை நோக்குங்கள் - எசா 51:1.
  • என் மக்களே, நான் சொல்வதை கேளுங்கள். என் இனமே, எனக்கு செவிகொடு – எசா 51:4.
  • எனக்கு கவனமாய் செவிகொடுங்கள். நல்லுணர்வை உண்ணுங்கள் கொழுத்ததை உண்டு மகிழுங்கள் - எசா 55:2.
  • எனக்கு செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள், கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள் - எசா 55:3.
  • வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே எனக்கு செவிகொடுங்கள் - எசா 46:12.
  • எனவே, வாருங்கள்; இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்; இளமை உணர்வோடு படைப்புப்பொருட்களை முழுவதும் பயன்படுத்துவோம் - சா.ஞ 2:6.


 • என்னிடம் வந்தால் :
  • நீ திரும்பி வந்தால், நான் உன்னை முன்னைய நிலைக்கு கொண்டு வருவேன் - எரே 15:19.
  • நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள் - எசா 30:15.
  • தீயவர் தம் எண்ணங்களை விட்டு விட்டு ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார் - எசா 55:7.
  • அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும் ஏனெனில், அவர் மன்னிப்பதில் தாராள மனத்தினர் - எசா 55:7.


 • விருந்திற்கு அழைப்பு :
  • ஒருவர் உங்களைத் திருமணம் விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒவருவரையும் அவர் அழைத்திருக்கலாம் - லூக் 14:8.
  • நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம் நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள் - லூக் 14:10.


 • அழைப்பை ஏற்றவர்க்கு புது வாழ்வு :
  • கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார் - 1கொரி 7:15.
  • அவர் விடுத்த அழைப்பின் படி வாழுங்கள் - 1கொரி 7:17.
  • கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார் - 1கொரி 1:9.
  • எந்நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அந்நிலையில் நிலைத்திருக்கட்டும் - 1கொரி 7:20.
  • அழைக்கப்பட்ட உங்களுக்கு 1கொரி 1:2.
   • இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு
   • தூயோராக்கப்பட்டு
   • இறைமக்களாக இருக்க

  • தாம் முன்குறித்து வைத்தோரை அழைத்தார். அழைத்தோரை தமக்கு ஏற்புடையவர் ஆக்கினார் - உரோ 8:30.
  • அவரது இரக்கத்திற்கு உரித்தான கலன்கள் மாட்சி பெற வேண்டும் என்று முன்னேற்பாடு செய்திருந்தார். அக்கலன்களைப் பொறுத்தவரை அவர் தமது அளவற்ற மாட்சியை வெளிப்படுத்த விரும்பினார். யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள் - உரோ 9:23,24.


 • மீட்பு பெற்றவர் மீட்பை கொடுக்க அழைப்பு :
  • என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரை பிடிப்போராக்குவேன் - மத் 4:19.
  • உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு, நான் உன்னை பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன் - எசா 49:6.


சம்பவம்


1. எசாயாவின் அழைப்பு – எசா 6:8

 • மக்களின் விடுதலைக்காக – எசா 6:8 :
  • மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன் - எசா 6:8.
  • கருப்பையில் இருக்கும்போதே, ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லி கூப்பிட்டார் - எசா 49:1.


2. ஆபிரகாமின் அழைப்பு – தொ.நூ 12:1-3


 • விசுவாச சந்ததியை உருவாக்க :
  • ஆண்டவர் அபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் - தொ.நூ 12:1.
  • உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய் - தொ.நூ 12:2.
  • உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார் - தொ.நூ 12:3.


3. மோசேயின் அழைப்பு – வி.ப. 3:1-14


 • அடிமை நிலையிலிருந்து விடுவிக்க :
  • எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் நாட்டிற்கு – அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன் - வி.ப. 3:8.
  • எனவே இப்போதே என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன் - வி.ப. 3:10.


4. யோசுவாவின் அழைப்பு – யோசு 1:2


 • வாக்களித்த நாட்டில் சேர்க்க :
  • என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல் - யோசு 1:2.
  • மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக்கொடுப்பேன் - யோசு 1:3.


5. கிதியோனின் அழைப்பு – நீ.த 6:12-14


 • எதிரியிடமிருந்து மக்களை பாதுகாக்க :
  • ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்றார் - நீ.த 6:12.
  • ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா? என்றார் - நீ.த 6:14.


6. எரேமியாவின் அழைப்பு – எரே 1:10


 • தவறிபோனவர்களை எச்சரிக்க :
  • பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும் இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் - எரே 1:10.


7. பவுலின் அழைப்பு – தி.ப. 9:15,16, 18:9,10


 • ஆவிக்குரிய சந்ததியை உருவாக்க :
  • அதற்கு ஆண்டவர் அவரிடம் “நீ சொல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார் – தி.ப. 9:15.
  • இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே! பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே – தி.ப 18:9.
  • ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர் என்று சொன்னார் - தி.ப 18:10.


அழைப்பை ஏற்க மறுப்பு


வசனம் :

 • எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ. அவ்வளவுக்கு என்னைவிட்டு பிடிவாதமாய் விலகி போனார்கள் - ஓசே 11:2.
 • நான் அழைத்த போது பதில் தர எவனும் இல்லாதது ஏன்? நான் வந்த போது ஒருவனும் இல்லாமல் போனது ஏன்? - எசா 50:2,1.
 • நான் அழைப்பு விடுத்தேன். நீங்கள் மறுமொழி தரவில்லை. நான் பேசினேன். நீங்களும் கவனிக்கவில்லை – எசா 65:12, 66:4.
 • நான் அவர்களோடு பேசியிருந்தும், அவர்கள் எனக்கு செவிசாய்க்கவில்லை. நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் எனக்கு மறுமொழி கூறவில்லை.
 • நீங்கள் இதற்கு செவிகொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும் - எரே 13:17.


சம்பவம் :

 • திருமணவிருந்தின் அழைப்பை ஏற்க மறுத்து சாக்கு போக்கு கூறினர் - லூக் 14:15-24.
 • வழியோரங்களிலும், நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்தி கூட்டி வாரும். அழைக்க பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தை சுவைக்க போவதில்லை – லூக் 14:23,24. 

 

 

 

My status 

உயிர்த்த இயேசு

சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.


மரித்த இயேசு உயிர்த்துவிட்டார். 

யூதா ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார். 


அஞ்சாதீர்கள்! நான் உலகை வென்றேன்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


மன்னாதி மன்னன் இயேசு, உயிர்த்தெழுந்தார். 


இயேசு உயிர்த்தார். இனி நாமும் உயிர்ப்போம்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


இயேசு, கல்லறையில் இல்லை. 


அம்மா அழாதீர்! 


உயிர்த்த இயேசு மதலேன் மரியாளிடம். 


என் சீடருக்கு இதை அறிவிப்பீர். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.சீடர்களின் விசுவாசத்தை, உறுதிப்படுத்தினார். 


உயிர்த்த இயேசு, சீடர்களை உறுதிப்படுத்தினார். 


விசுவாசம் அற்றவனாயிராதே. 


நான் தான் அஞ்சாதீர்கள்.சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார். 


திபேரியாக் கடலருகில், உயிர்த்த இயேசு 


பிள்ளைகளே! சாப்பிட வாருங்கள். 


சிலுவையில் கையளித்த ஆவி, நம்மீது பொழியப்பட்டார்.உயிர்த்த இயேசு, எம்மாவூஸ் சீடரோடு. 


உயிர்த்த இயேசு, மறைநூலை விளக்கினார் . 
 
copyrights © 2012 catholicpentecostmission.in