தின ஊழியங்கள்

"Daily Ministries"

 1. ஐந்து வேளை ஜெபம்:

எப்போதும் ஜெபிக்க வேண்டும் - 1தெச 5:17. என்றாலும், தாவீது தினமும், ஏழு முறை ஜெபித்தார் - தி.பா 119:164. நம் உடலுக்கு தேவையான பிராண வாயுவை, எப்போதும், சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், மற்ற உணவுகளுக்காக, மூன்று வேளை, ஐந்து வேளை என்று, உணவருந்த நேரம் குறிப்பிட்டுள்ளோம். அவ்வாறே, நம் ஆத்மீக தேவைகளுக்காக, சில குறிப்பிட்ட வேளைகளில், ஜெபிப்பது, தொடர்ந்து தேவைப்படுகிறது. எனவே, CPM விசுவாசிகள், தங்கள் தனி வாழ்விலும், CPM சபையில் ஆலயத்திலும், ஐந்து வேளை ஜெபம், எல்லா நாட்களும், தொடர்ந்து செய்கிறோம்.

  • ஜெப நேரங்கள் : காலை 5மணி, முற்பகல் 10 மணி, பகல் 12 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 6 மணி.
  • எவ்வளவு நேரம் : அவரவர் வசதி போல்.
  • ஜெப கருத்து : சொந்த நலனுக்காக, சபைக்காக, உலக மீட்பிற்காக.

 2. ஆத்மீக ஆலோசனைகள்:

நெருக்கடி நேரங்களில், தாவீது, ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்டார் - 1சாமு 23:2,4,9-11. துன்ப வேளையில், தம்மிடம் ஆலோசனைக் கேட்காமல், உலக உதவியை இஸ்ராயேல் தேடியதைக் கண்டு, கடவுள் மனம் வருந்தினார் - எசா 31:1. இயேசு “வியத்தகு ஆலோசகர்” என்று அறியப்படுகிறார் - எசா 9:6. தேவப்பிள்ளைகள், ஆவியானவருடைய ஆலோசனையின் படியே, வாழ வேண்டும் என்று, வேதம் கற்பிக்கிறது - கலா 5:16,18. துன்ப கலக்க நாட்களில், கடவுளிடம் வரும்போது, அவர் நமக்கு, நல்ல ஆலோசனைத் தந்து, வழிநடத்துவார் - எசா 30:20,21.

தாவீது, அதிகாலையில் எழுந்து, இறை ஆலோசனைக்காக காத்திருந்தார் - தி.பா 119:147,148. அதிகாலையில், இறை அடியாராகிய எசாயாவுக்கு, கடவுள் நல்ல ஆலோசனைகள் தந்தார் - எசா 50:4,5. தெய்வீக ஆலோசனைகளை, இறை மக்களுக்கு வழங்கி, மக்களை வழிநடத்த, எழுபது பேரை நியமித்து, தம்முடைய ஆவியை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்று, கடவுள் மோசேக்கு ஆலோசனை கூறினார் - எண் 11:16,17. இந்த ஒப்பற்ற ஊழியத்தை, தம் விசுவாசி களுக்கும், ஏனையோருக்கும் ஆற்ற, இறை ஊழியர்கள், CPM ஆலோசனை அறைகளில், உங்களுக்காக, தினமும் காலை 9 - மாலை 3 வரை, காத்திருக்கிறார்கள்.

 3. மொபைல் வழி ஊழியம்:

கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்கு திறக்கப்படும் - மத் 7:7,8. நம் தேவைகளில் ஜெபிக்கும்போது, கடவுள் செவிசாய்க்கிறார் - எரே 33:3. உன் எல்லா துன்ப நேரத்திலும், என்னைக் கூப்பிடு, உன்னை நான் காப்பாற்றுவேன் - தி.பா 50:15 என்று, இறைவன் கூறுகின்றார்.

தங்கள் துன்பத்தில், அவர்கள் என்னைத் தேடுவர் - ஓசே 5:15, என்று கூறிய கடவுள், அவ்வாறு மனிதர் கேட்கும்போது, பதிலளிப்பேன் என்றும், கூட இருப்பேன் என்றும், தப்புவித்து பெருமைப்படுத்துவேன் என்றும், சொல்கிறார் - தி.பா 91:15. இன்றைய அறிவியல் உலகில், தொலைத் தொடர்பு வசதிகள், மிகவும் அருகாமையில் நம்மைக் கொண்டு வரும் போது, அழைத்த உடன் பதில் தரும், தெய்வச் செயலை நாம் அனுபவிக்கிறோம். அல்லும் பகலும், தம்மை நோக்கி கேட்பவருக்கும், உடனடியாகப் பதில் கொடுக்க காத்திருக்கும், நல்ல தகப்பனின் பணியை, நாம் மொபைல் ஊழியம் வழியாகச் செய்கிறோம் - லூக் 18:7.

மொபைல் எண் : 9443604787, 9442382511

மொபைல் வழி ஜெப நேரம் : இரவு 7-9.30மணி.

“அவசர சேவை” நேரம் : 24X7.

 4. இணையதள ஊழியம் :

நேரத்தை சுருக்கி, இடைவெளியை குறைக்கும் ஆற்றல், இணையதள சேவைக்கு உண்டு. கடவுள், காலத்தையும், இடத்தையும் கடந்தவர். எனவே, கடவுளோடு உறவு கொள்ள, காலமோ, இடமோ, ஒரு தடையாக இருக்ககூடாது. அந்த காரியத்தை, இணையதள சேவை செய்கின்றது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நம்மோடு நிழலாக இணைந்திருந்து, செயலாற்றுபவர், நம்முடைய கடவுள் - இ.ச 4:7. எனவே, இணையதளம் மூலமாக, இறை ஊழியம் செய்வது, இன்றைய காலத்தின் கட்டாயமும், இறை விருப்பமும் ஆகும்.

இணையதள ஜெப நேரம் : இரவு 7 - 9.30 மணி.

“அவசர சேவை” நேரம் : 24X7.

 5. வீடு சந்தித்தல்:

இயேசு, பேதுருவின் இல்லத்துக்குச் சென்று, அவர் மாமியாரை சுகப்படுத்தி னார் - மத் 8:14,15. இயேசு ஜெபக்கூடத் தலைவனுடைய வீட்டிற்கு சென்று, அவர் மகளுக்கு உயிர் கொடுத்தார் - மத் 9:23-26. தீர், சீதோனில், இயேசு ஒரு வீட்டிற்கு சென்று, அங்கே அமர்ந்திருந்து, ஊழியம் செய்தார் - மாற் 7:24. மேலும், இயேசு சக்கேயுவின் வீட்டிற்குச் சென்று, அவருக்கு மீட்பு அளித்தார் - லூக் 19:5. உயிர்த்த இயேசு, சீடர்கள் மறைந்திருந்த வீட்டிற்குச் சென்று, அவர்களுக்கு அமைதி அளித்தார் - யோவா 20:19,26. இறுதியாக, தம் சீடர்களிடம், இருவர் இருவராகச் சென்று, இல்லங்களுக்கு அமைதி அளிக்க, இயேசு கட்டளையிட்டார் - லூக் 10:5.

நோயில் அவதிப்படுபவர்கள், மரணக்கண்ணியில் தவிப்பவர்கள், பேயின் கட்டுக்களில் இருப்பவர்கள், அமைதியிழந்து கலக்கத்தோடிருப்பவர்கள், மீட்புக்காக காத்திருப்பவர்கள் என, அனைவருடைய இல்லங்களுக்கும் சென்று, விடுதலை அளிக்க வேண்டும் என்று, இயேசு பணித்தார் - லூக் 10:9. இந்த மீட்பின் ஊழியத்தை, CPM ஊழியர்கள், இருவர் இருவராக இல்லங்களுக்குச் சென்று, தினமும் செய்கின்றார்கள்.

 6. வீட்டுக்கூட்டங்கள் :

இயேசு தன் சொந்த வீட்டில் அமர்ந்திருந்து, போதித்தார் என்றும், விடுவித்தார் என்றும் காண்கின்றோம் - மாற் 2:1-5. தீர் எனும் இடத்தில், ஒரு வீட்டில், இயேசு தங்கியிருந்து, நற்செய்தி ஊழியம் செய்தார். ஆதி ஆவிக்குரிய சபையிலும், வீட்டுக்கூட்டங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. உதாரணமாக, மாற்குவின் வீட்டில் கூடும் திருச்சபை - தி.ப 12:12; பிரிஸ்கா, அக்கரிப்பா வீட்டில் கூடும் திருச்சபை - 1கொரி 16:19; உரோ 16:5; காயுவின் வீட்டில் கூடும் திருச்சபை - உரோ 16:23; பிலமோன் வீட்டில் கூடும் திருச்சபை - பில 1:2; சகோதரர் நிம்பாவின் வீட்டில் கூடும் திருச்சபை - கொலோ 4:15, போன்றவை.

இவ்வாறு இல்லங்கள் தோறும், மீட்பின் செய்தியை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊழியம், CPM சபையிலும் நடைபெறுகிறது. திருநிலைப்படுத்தப்பட்ட மேய்ப்பர்கள், இருவர் இருவராக, விசுவாசிகளின் இல்லங்களுக்கு சென்று, சுற்றியுள்ள மக்களை, அங்கே ஒரு வீட்டில் கூட்டி, அவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்காக ஜெபித்து, மீட்பின் செய்தியை அறிவித்து, விடுதலை அளிக்கிறார்கள்.

 7. பரிந்து பேசும் ஜெபம் :

நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்பது, கடவுளின் விருப்பம் - 1தெச 5:17. இந்த இடைவிடாத ஜெபம், இடைவிடாமல் பரிந்து பேசும் ஜெபமாக, CPM சங்கிலி ஜெப அறையில், நடைபெறுகின்றது. ஜெப ஆலோசனை, மொபைல் ஊழியம், வீடு சந்திப்பு, விடுதலை அளிக்கும் ஆராதனைகள், இணையதள ஊழியம், போன்ற பல்வேறு வழிகளில் வரும், ஜெப விண்ணப்பங்களுக்காக, ஜெப வீரர்கள், இரவும் பகலும், சங்கிலி ஜெப அறையில், கரம் விரித்து ஜெபிக்கிறார்கள்.

இந்த ஜெப அறைக்கு முன்பகுதியில், நற்கருணையும், திருமறைநூலும், ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். அறையின் பின்பகுதியில், மரச்சிலுவைகள் நாட்டப்பட்டிருக்கும். இந்த மரச்சிலுவைகளில் கரம் விரித்து, ஜெப ஊழியர்கள், மக்களின் விண்ணப்பங்கள் நிறைவேற, பரிந்து பேசி, இடைவிடாமல் ஜெபிக்கிறார்கள். இந்த பரிந்து பேசும் ஜெபத்தால், விடுதலை அடைந்தவர்களின் உயிருள்ள சாட்சிகளையும், நாம் பெற்ற வண்ணமிருக்கிறோம்.

பரிந்து பேசும் ஜெபம் : இரவு பகல் - 24 X 7.

 8. திருமணிமாலை :

ஒருமணி நேரம் கூட, என்னோடு விழித்திருக்க, உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான்; ஆனால், உடல் வலுவற்றது; எனவே சோதனைக்கு உட்படாதிருக்க, விழிப்பாயிருந்து, இறைவனிடம் வேண்டுங்கள் என்று, கெத்சமெனியில், இயேசு தம் சீடரிடம் கூறினார் - மத் 26:40,41. CPM சபை, இயேசுவின் இந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டு, சபையின் ஒவ்வொரு விசுவாசியும், தினமும் ஒருமணி நேரம், தனி ஜெபம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இந்த ஒழுங்கின்படி, பல ஆயிரம் விசுவாசிகள், நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், ஏதேனும் ஒரு மணி நேரத்தை, தங்களுக்கென்று தேர்ந்துகொண்டு, ஜெபிக்கிறார்கள். இவ்வாறு, இந்த ஒரு மணி நேர ஜெபம், இருபத்து நான்கு மணி நேரமும் நடப்பதால், இந்த ஜெபத்திற்கு, “திருமணிமாலை” என்று பெயர் வழங்கப்படுகிறது.

திருமணிமாலையின் நேரம் : அவரவர் தீர்மானித்துக்கொண்டபடி

திருமணிமாலையின் இடம் : அவரவர் இருக்கும் இடம்

திருமணிமாலையின் கருத்து : 1. தனக்காக, 2. சபைக்காக, 3. உலக மீட்புக்காக.


 

My status
 பைபிள் விளக்கம்


 திருவருட்சாதனங்கள்


 கி.மு கி.பி......

ஐந்து வேளை ஜெபம்ஆத்மீக ஆலோசனைகள்


 ஆண்டு ஊழியங்கள்


 திருமறை வகுப்புக்கள்


 சாட்சிகள்


மொபைல் வழி ஊழியம்


இணையதள ஊழியம்


வீடு சந்தித்தல்


வீட்டுக்கூட்டங்கள்......

பரிந்து பேசும் ஜெபம் -1


பரிந்து பேசும் ஜெபம் -2


திருமணிமாலை

My status
 
 
copyrights © 2012 catholicpentecostmission.com