"சத்தியக் கதம்பம்"

"Bouquet of Truths"

Rev.Fr.R.John JosephI. தெரிந்து கொள்வோமா?

A. Super Computer

"ROAD RUNNER"

 • இதன் விலை 120 மில்லியன் டாலர்
 • இதன் ஆற்றல் :
  • ஒரு கணக்கை, அறுநூறு கோடி பேர், நாற்பத்தி ஆறு ஆண்டுகளாக செய்து முடிப்பதை, சூப்பர் கம்ப்யூட்டர், ஒரு நாளில் செய்து முடிக்கும்.
  • CRAY – 1, என்ற சூப்பர் கம்ப்யூட்டர், 1970 – ல், செய்யப்பட்டது. இந்த கம்ப்யூட்டர், 1500 ஆண்டுகளில் செய்யக்கூடிய ஒன்றை, ROAD RUNNER இரண்டே மணி நேரத்தில் செய்து முடிக்கும்.
  • 2008 – ம் ஆண்டு மேய் 20 –ம் நாள், இந்த சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்க இராணுவத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

B. சீக்கிய குர்பானியிலிருந்து

ஜெபம்:


இறைவா! நான் நன்மை செய்யும் போது,

தவறிழைக்காமலிருக்க அருள் தாரும்!

நான் போர்க்களத்தில் இருக்கும் போது,

என் இதயத்தில்

அச்சம் உண்டாகாமலிருக்க அருள் தாரும்!

என் மனத்தில் எப்போதும்,

தூய்மையான எண்ணங்கள் இருக்கச் செய்யும்!

நான் பேராசைப்படாமல் இருக்கச் செய்யும்!

என் இறுதி நாள் நெருங்கும் போது

நான் போர்க்களத்தில் மடியச் செய்யும்!

குறிப்பு :

 • 21-07-2008 அன்று, பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலளிக்கும் போது, பாரதப் பிரதமர், இந்த ஜெபத்தைச் சொல்லியே, தன் உரையை முடித்தார் .
 • பஞ்சாப் ரெஜிமென்டிலுள்ள சீக்கியப்படை வீரர்கள், இந்த ஜெபத்தை தினமும் கட்டாயமாக சொல்வர்.

தகவல்: HINDU .p.10 -22-07-2008.


C. பொய் சொன்னவரை, கடவுள் தண்டித்தார்

 • இடம் - சீனாவில் புகிங் நகரம்
 • கடன் கொடுத்தவர் - குவாங்
 • தொகை – 500 யென்
 • கடனைப் பெற்றவர், தான் கடன் வாங்கவே இல்லை என்று வாதிட்டார்
 • ஆனால் கடன் கொடுத்தவரோ, ஊர் மக்கள் முன், கடவுள் பெயரால், அவரை சத்தியம் செய்ய வற்புறுத்தினார்.
 • என்ன தான் வந்துவிடப் போகிறது என்று, கடன் பெற்றவர், கடவுள் பெயரால், பொய் சத்தியம் செய்தார்.
 • ஊர் கலைந்து வீடு சென்றது.
 • என்ன ஆச்சரியம்! அரை மணி நேரத்திலேயே, ஒரு மழை பெய்ய, நடந்து சென்று கொண்டிருந்த, கடன் பெற்றவர் தலையில் இடி ஒன்று விழ, அவர் அங்கேயே மடிந்தார்.

தகவல் - தினத்தந்தி – 31-08-2008 – ஞாயிறு p 24


II. கருத்துக் களஞ்சியம்


தீயவன் தவறாகப் புரிந்து கொள்வதை விட

நல்லவர் அக்கரை காட்டாமல் புரிந்து கொள்வது

பல மடங்கு வேதனைக்கு உரியது

- மார்ட்டின் லூதர் கிங்


முழுமையான புறக்கணிப்பை விட,

அரைகுறை ஏற்பு கொடுமையானது

- மார்ட்டின் லூதர் கிங்


III. J.J. கவிச்சோலை

உதவி


தீயவன் செய் உதவி

பிரதிபலன் நோக்கி நிற்கும்

நல்லவர் உதவி செய்தால்

நினைவிலும் கொள்ளார் தானே !

- J.J

பணம்


கஷ்டப்படாமல் பணத்தை சேர்ப்பவர்

கஷ்டப்பட்டு அதை செலவிடுவர்

- J.J

அன்பு


தாம் அன்பு செய்வாரின் எச்சில்

எந்த வாயிலிருந்து வந்தாலும்

அது அமுதமாய் இனிக்கும்

- J.J


TRUTH


THE TRUTH SUFFERS

IN THE HANDS OF LIERS

- J.J


SUCCESS


THE LOSERS HAVE TO BE GRACIOUS

BUT THE WINNERS HAVE TO BE MAGNANIMOUS

- J.J


திருத்தம்


கழுவ மறுக்கும் மலத்துவாரத்துக்கு மிஞ்சுவது

நாற்றமும் புழுவும்

திருந்த மறுக்கும் மனிதனுக்கு மிஞ்சுவது

அவமானமும் அடியும்.

- J.J


IV. நலம் தரும் நல்வாக்கு

வசதி வரும் போது கடவுளை மறக்காதே


 • ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்கு கொடுப்பதாக, ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், உன் கடவுளாகிய ஆண்டவர், உன்னைப் புகச் செய்யும் போதும், நீ கட்டி எழுப்பாத பரந்த வசதியான நகர்களையும்,
 • நீ நிரப்பாத எல்லா செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும் போதும்,
 • அடிமைத்தன வீடாகிய, எகிப்து நாட்டினின்று, உன்னை வெளியே கூட்டி வந்த, ஆண்டவரை மறந்து விடாதபடி, கவனமாய் இரு - இ.ச 6:10-12.

 • இன்று, நான் உங்களுக்கு கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள், ஆகியவற்றினின்று, வழுவியதன் மூலம், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, மறந்து போகாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:11.

 • நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும் போதும், அழகிய வீடுகளை கட்டி, அவைகளில் குடியிருக்கும் போதும்,
 • உங்கள் ஆடு மாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும், உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்,
 • நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய, எகிப்து நாட்டிலிருந்து, உங்களை கூட்டி வந்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து விட வேண்டாம் - இ.ச 8: 12-14.

 • அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும், தேள்களும் நிறைந்த, நீரற்று, வறண்ட நிலமான, பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர். இறுகிய பாறையிலிருந்து, உங்களுக்காக, நீரைப் புறப்படச் செய்தவர் - இ.ச 8:15.
 • உங்கள், மூதாதையருக்கு தெரிந்திராத மன்னாவால், பாலைநிலத்தில் உங்களை, உண்பித்தவர், இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக, உங்களை எளியவராக்கி, சிறுமைப்படுத்தி, சோதித்தவரும் அவரே - இ.ச 8:16.
 • எனவே, எங்கள் ஆற்றலும், எங்கள் கைகளின் வலிமையுமே, இந்த செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று, உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:17.

 • உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டு செய்து கொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற, செல்வங்களை ஈட்ட வல்ல, ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, நினைவில் கொள்ளுங்கள் - இ.ச 8:18.
 


My status
..... சபை வரலாறு


 திருவருட்சாதனங்கள்
......“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29 
 
copyrights © 2012 catholicpentecostmission.com