பழைய ஏற்பாட்டில் நோன்பு :


1. பெயர் விளக்கம்:

 • எபிரேயத்தில், நோன்பு என்ற வார்த்தைக்கு, “SOM” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “SUM” என்றால், நோன்பிருப்பது என்று அர்த்தம்.

 • கிரேக்கத்தில், நோன்பு என்ற வார்த்தைக்கு “Nestis” அல்லது, “Nesteia” என்ற வார்த்தை, பயன்படுத்தப்படுகிறது. “Nesteua” என்றால், “நோன்பிருப்பது” என்று அர்த்தம்.

2. பொருள்:

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, உண்ணும் உணவையும், குடிக்கும் பானத்தையும் நிறுத்தி வைப்பது, என்று பொருள்.

3. எத்தனை முறை நோன்பு:

 • தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது "ஒப்புரவு நாளில்", நோன்பிருந்தார்கள் - லேவி 16:30-31, 23:27-32, எண் 29:7,11.

 • நாடுகடத்தலுக்குப் பின் ஆண்டுக்கு நான்கு முறை, நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில், நோன்பிருந்தார்கள் - செக் 8:19.

4. எத்தனை வகை நோன்பு:

 • தனி நோன்பு – தாவீது – 2சாமு 12:22.
 • கூட்டு நோன்பு - இஸ்ராயேலர் - நீ.த 20:26.
 • நாள் குறிப்பிட்டு நோன்பு – யோவே 1:14.


எதற்காக நோன்பு :

1. மனத்துயரத்தின் வெளிப்பாடு நோன்பு :

 • சவுல் மன்னனின் இறப்புக்காக மக்கள் நோன்பிருந்தார்கள் – 1சாமு 31:13, 2சாமு 1:12.
 • ஆப்னேரின் இறப்புக்காக தாவீது நோன்பிருந்தார் – 2சாமு 3:35.
 • எருசலேம் தீக்கிரையான போது, நெகேமியா நோன்பிருந்தார் - நெகே 1:4.
 • பிறரின் நோயில், தாவீது நோன்பிருந்தார் - தி.பா 35:13-14.

2. பாவப் பரிகாரத்துக்காக நோன்பு :

 • எலியாவின் காலத்தில், ஆகாபு மன்னன், பாவ அறிக்கையிட்டு, நோன்பிருந்தான் - 1அர 21:27.
 • நெகேமியா மக்களை ஒன்றுகூட்டி, நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டார் - நெகே 9:1-2.
 • தானியேல் நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டார் - தானி 9:3-4.
 • நினிவே மக்கள், அரசன் என யாவரும், நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டனர் - யோனா 3:5-8.

3. கடவுளுடைய உதவியும், வழிநடத்தலும் பெற நோன்பு:

 • பத்துக் கட்டளையை பெறுவதற்காக – மோசே நோன்பு இருந்தார் – வி.ப 34:28, இ.ச 9:9.
 • தன் குழந்தை நலம் பெற, தாவீது நோன்பு இருந்தார் – 2சாமு 12:16-23.
 • போர் வேளையில், கடவுளின் உதவி பெற, மக்களிடம் நோன்பிருக்குமாறு, யோசேபாத் கட்டளையிட்டார் - 2குறி 20:3-4.
 • நாடு திரும்புதலின் வேளையில், பயணம் நலமாக அமைய, எஸ்றா நோன்பு நாளைக் குறிப்பிட்டார் - எஸ்றா 8:21-23.

4. பிறருக்காக நோன்பு :

 • நாடு திரும்பியவர்களின் குற்றங்களுக்காக, எஸ்றாவின் நோன்பு – எஸ்றா 10:6.
 • மக்களின் மீட்புக்காக – எஸ்தரின் நோன்பு – எஸ் 4:15-17.


 
"பல்வேறு கருத்துக்களுக்காக, நோன்பிருந்தவர்கள்"


1. மோசே – “இறை வழிநடத்தல் பெற”

 • மோசே, சீனாய் மலையில், நாற்பது நாட்கள், ஆண்டவருடன் இருந்தார் - வி.ப 34:28.
 • அவர் அப்பம் உண்ணவுமில்லை, தண்ணீர் பருகவுமில்லை – வி.ப 34:28.
 • கடவுளிடமிருந்து, பத்துக் கட்டளைப் பெற்றார் - வி.ப 34:28,29.

2. எலியா– “கடவுளின் பாதுகாப்பு பெற”

 • எலியா நாற்பது இரவும் பகலும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார் - 1அர 19:8.
 • எதிர்த்தவர்களை வீழ்த்த, கடவுள் துணை செய்தார் - 1அர 19:17,18.

3. தானியேல் - a.“பாவமன்னிப்புக்காக”

 • தானியேல் நோன்பிருந்து, சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து, வேண்டினார் - தானி 9:3.
 • பாவ அறிக்கை செய்தார் - தானி 9:4-19.
 • தானியேலின் மன்றாட்டு கேட்கப்பட்டது – தானி 9:23,24.

- b.“மனத்திடன் கிடைக்க”

 • தானியேல் மூன்று வாரங்கள், நோன்பிருந்து ஜெபித்தார் - தானி 10:2,3.
 • அவரது மன்றாட்டு கேட்கப்பட்டது – தானி 10:12.

4. தாவீது - a. "மனத்துயரத்தைப் போக்க"

 • சவுல், யோனத்தான் ஆகியோரின் இறப்பைக் குறித்து, அழுது புலம்பி, தாவீது மாலைவரை நோன்பிருந்தார் - 2சாமு 1:12.

- b.“குழந்தைக்கு நலம் கிடைக்க ”

 • தாவீது, தன் குழந்தை சாகுந்தருவாயில் இருந்தபோது, உண்ணா நோன்பு மேற்கொண்டு, தரையில் படுத்துக் கிடந்தார் - 2சாமு 12:16,22.

- c.“பாவ மன்னிப்புக்காக”

 • தாவீது, சாக்கு உடை உடுத்தி, முகங்குப்புற விழுந்து கிடந்தார் - 1குறி 21:16.
 • நானே குற்றவாளி என்று அறிக்கையிட்டார் - 1குறி 21:17.
 • அவரது மன்றாட்டு கேட்கப்பட்டது – 1குறி 21:18-22.

5. இஸ்ராயேல் மக்கள்- "சபையார் நோன்பு"

 • கூடாரத் திருவிழா முடியும் நாளில், இஸ்ராயேல் மக்கள், நோன்பிருக்குமாறு ஒன்று கூட்டப்பட்டனர் - நெகே 9:1.
 • அவர்கள் தங்கள் தலைமேல், புழுதியைப் பூசிக்கொண்டு, நோன்பிருந்தனர் - நெகே 9:1
 • தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் - நெகே 9:3.

6. மத்தத்தியாவும் மைந்தர்களும் - “எருசலேமிற்காக”

 • எருசலேம், அன்னியர் கையில் அகப்பட்டதால், மத்தத்தியாவும், அவருடைய மைந்தர்களும், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, அழுது புலம்பினர் - 1மக் 2:14.

 
"விடுதலை அளிக்கும் நோன்பு"


1. யோபு - “துன்பத்திலிருந்து மீட்புக்காக”

 • யோபு தனக்குள்ள எல்லாவற்றையும், இழந்த போது, சாம்பலில் உட்கார்ந்தார் - யோபு 2:8.
 • “என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார்” என்று நம்பினார் - யோபு 19:25.
 • விடுதலை - இருமடங்கு ஆசீரைப் பெற்றுக்கொண்டார் - யோபு 42:10,11.

2. எஸ்ரா- “மக்களின் மீட்புக்காக”

 • எஸ்ரா உண்ணாமலும், குடிக்காமலும், மக்களின் குற்றத்திற்காக நோன்பிருந்து அழுது புலம்பினார் - எஸ்ரா 10:6.
 • மக்களுக்கு, குற்றத்தை சுட்டிக்காட்டி, எச்சரித்தார் – எஸ்ரா 10:10,11.
 • விடுதலை - மக்கள், தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டு, மனம் திரும்பினர் - எஸ்ரா 10:1-2,12.

3. நெகேமியா- “எருசலேமின் மீட்புக்காக”

 • நெகேமியா எருசலேமைக் குறித்து, பல நாட்கள் துக்கம் கொண்டாடினார். தரையில் உட்கார்ந்து அழுதார். நோன்பிருந்து, கடவுளிடம் மன்றாடினார் - நெகே 1:4.
 • பாவங்களை அறிக்கையிட்டார் - நெகே 1:5,6.
 • விடுதலை - எருசலேம் நகர், நெகேமியாவால் கட்டி எழுப்ப, கடவுள் திருவுளம் கொண்டார் - நெகே 2:5-8.

4. இஸ்ராயேல் மக்கள்- “அன்னிய அரசனிடமிருந்து பாதுகாக்க”

 • ஆண்கள் நோன்பிருந்து, தங்களைத் தாழ்த்தினர் - யூதி 4:9.
 • பெண்களும், சிறியோர்களும், இடுப்பில் சாக்கு உடை உடுத்தி, தலையில் சாம்பலைத் தூவினார்கள் - யூதி 4:10,11.
 • சாக்கை விரித்து, கோயிலின் முகப்பில் விழுந்து கிடந்தனர் - யூதி 4:11.
 • சாக்கு உடை அணிந்து, தன்னார்வக் காணிக்கைகளும், எரிபலிகளும், நேர்ச்சைகளும், செலுத்தினார்கள் - யூதி 4:14.
 • விடுதலை - ஆண்டவர் அவர்களின் குரலுக்கு, செவிசாய்த்தார். அவர்களின் துயரத்தைக் கண்ணுற்றார் - யூதி 4:13.

5. எஸ்ராவும், மக்களும் - “பயணம் நலமாக அமைய”

 • எஸ்ராவும், மக்களும், தங்கள் பயணம் நலமாக அமைய, அகாபு ஆற்றருகே நோன்பிருந்தனர் - எஸ்ரா 8:21.
 • விடுதலை - ஆண்டவர் அவர்களின் மன்றாட்டைக் கேட்டார் - எஸ்ரா 8:23.

6. யூதாவும் மக்களும்- “போரில் வெற்றி கிடைக்க”

 • இஸ்ராயேல் மக்கள், கூட்டாக மிஸ்பாவுக்குச் சென்றனர்.
 • நோன்பிருந்து, சாக்கு உடை உடுத்தி, சாம்பல் தூவினர் - 1மக் 3:47.
 • எதிர்த்து வந்தவர்கள், ஓடிப்போனார்கள் - 1மக் 4:22.
 • விடுதலை - அன்றே இஸ்ராயேலுக்கு மீட்பு வந்தது – 1மக் 4:25.

7. ஆகாபு- “தீமை வராமல் பாதுகாக்க”

 • நாபோத்தைக் கொன்று, பாவம் செய்ததற்காக, எலியா இறைவாக்கினர், ஆகாபை எச்சரித்தார் - 1அர 21:17-25.
 • எச்சரிக்கையின் வார்த்தையைக் கேட்ட ஆகாபு, வெற்றுடலின் மீது, சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்து, சாக்குத்துணி மீது படுத்தான் - 1அர 21:27.
 • விடுதலை - ஆகாபு, தன்னைத் தாழ்த்திக் கொண்டதால், அவனுக்கு தீமை வராமல், காப்பாற்றப்பட்டான் - 1அர 21:29.

8. யூதாவும் சகோதரர்களும் - “திரு உறைவிடம் தூய்மைப்பட”

 • எதிரிகளால் தீக்கிரையாக்கப்பட்ட, திரு உறைவிடத்;தைக் கண்டு, யூதாவும், சகோதரர்களும், அழுது புலம்பிக் கொண்டு, சாம்பலைத் தூவிக் கொண்டார்கள் - 1மக் 4:39.
 • நெடுஞ்சாண்கிடையாய் கிடந்து, ஆண்டவரை மன்றாடினார்கள் - 1மக் 4:40.
 • பலிபீடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அர்ப்பண விழா கொண்டாடினர் - 1மக் 4:59.
 • விடுதலை - மக்களிடையே பழிச்சொல் நீங்கி, அக்களிப்பு நிலவியது - 1மக் 4:59.

9. யூதாவும் மக்களும்- “கடவுளின் உதவி பெற”

 • திருச்சட்டம், நாடு, திருக்கோவில், போன்றவை இழக்கும் தருவாயில் இருந்ததால், அவர்கள் பிற இனத்தாரின் கையில் விழாதிருக்க, மூன்று நாட்கள், இடைவிடாமல், உண்ணா நோன்பிருந்து, மன்றாடினர் - 2மக் 13:10,12.
 • ஆண்டவரின் உதவி, யூதாவுக்கு பாதுகாப்பு அளித்ததால், பகைவர்கள் அழிக்கப்பட்டனர் - 2மக் 13:17.
 • விடுதலை - “கடவுளுக்கே வெற்றி” என்று, போர்க்குரல் எழுப்பினர் - 2மக் 13:15.

10. நினிவே மக்கள் - “கடவுளின் இரக்கத்திற்காக”

 • இன்னும் நாற்பது நாளில், நினிவே அழிக்கப்படும் என்ற யோனாவின் எச்சரிக்கையை கேட்ட போது, பெரியோர், சிறியோர், அனைவரும் சாக்கு உடை உடுத்தினர் - யோனா 3:5.
 • நினிவே அரசன் சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான் - யோனா 3:6.
 • விடுதலை - எனவே, கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, தண்டனையை அனுப்பவில்லை – யோனா 3:10.

11. யூதித் - “இஸ்ராயேலின் மீட்புக்காக, எதிரியை அழிக்க”

 • யூதித் குப்புற விழுந்து, தலையில் சாம்பலை தூவிக் கொண்டார் - யூதி 9:1.
 • நோன்பு முடித்து, சாக்கு உடையை களைந்துவிட்டு, ஆலயத்தில் உரத்தக் குரலில் மன்றாடினார் - யூதி 9:1.
 • மன்றாட்டை முடித்து விட்டு, எதிரியான ஒலோபெர்னஸை சந்திக்கச் சென்றார் - யூதி 10:1,6.
 • விடுதலை - கடவுள் யூதித்தைக் கொண்டே, எதிரியை வீழ்த்தினார் - யூதி 13:8.

 
"நோன்புக்கு ஆயத்தம்"

கடவுள், எசேக்கியா மன்னனை நோன்புக்கு ஆயத்தம் செய்தார்:

1. எசேக்கியா மன்னன், கடவுளுக்குப் பிரியமானவர்.

 • அவர், ஆலயத்திலும், வழிபாட்டிலும், திருச்சட்டத்திலும், பல மறுமலர்ச்சிகளை செய்தார் - 2குறி 29,30,31 அதி.

2. எனவே, கடவுள் அவரை ஆசீர்வதித்தார்.

 • பல செல்வங்களால் நிரப்பினார் - 2குறி 32:27-30.

3. பின்னர், எசேக்கியா கடவுளை விட்டுப் பிரிந்தார்:

 • செருக்கு, அவரை கடவுளிடமிருந்து பிரித்தது – 2குறி 32:25.

4. கடவுள், எசேக்கியாவுக்கு கொடுத்த எச்சரிக்கை:

 • வியாதியைக் கொடுத்தார் .
 • “வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்து” என்றார் - 2அர 20:1.
 • அதுவே அவருக்கு, நோன்பிருக்க விடுத்த அழைப்பானது.

5. எசேக்கியா எவ்வாறு நோன்பிருந்தார் :

 • தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தினார். அதாவது ,
 • சுவர்ப்பக்கமாகத் திரும்பினார் - எசா 38:2.
 • தான் செய்த நன்மைத்தனங்களை சொல்லி, கதறி அழுதார் - எசா 38:3.
 • கண்ணீர் விட்டு, புலம்பி ஜெபித்தார் - எசா 38:10-16.
 • தன்னை தரைமட்டும் தாழ்த்திக்கொண்டார்.
 • இவ்வாறு, எசேக்கியா நோன்பிருந்து, வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தினார்.

நோன்பிருக்க ஆயத்தம் செய்த மற்றவர்கள்:

1. எஸ்தர் மக்களை ஆயத்தப்படுத்துதல் :

 • ஆமானின் சூழ்ச்சியினால், யூதகுலம் முழுவதும், அழிக்கப்படும் நிலையில் இருந்தது – எஸ் 3:13.

 • அப்போது, யூதகுலம் மீட்படையும்படியாக, மூன்று நாட்கள் நோன்பிருக்குமாறு, எஸ்தரும், மார்தொக்கேயும், மக்களை ஆயத்தம் செய்தனர் - எஸ் 4:16.

2. நினிவே அரசன் மக்களை ஆயத்தப்படுத்துதல் :

 • இன்னும் நாற்பது நாட்களில், நினிவே அழிக்கப்படும்” என்ற யோனாவின் எச்சரிக்கை வார்த்தை, நினிவே மக்களுக்கு, நோன்புக்கு ஆயத்தமாக இருந்தது – யோனா 3:4,5.
 • நினிவே அரசனின் கட்டளை, மக்கள் அனைவரையும், நோன்பிருக்க ஆயத்தம் செய்தது – யோனா 3:7,8.
 • குடும்பத்தில், பெற்றோர், பெரியோர், குடும்பத்தின் காரியங்களை கவனித்து, நோன்புக்கு ஆயத்தம் செய்தனர்.

3. யோசேபாத் அரசன் மக்களை ஆயத்தப்படுத்துதல் :

 • எதிர் நாட்டு அரசர்கள், படையெடுத்து வந்தபோது, யோசேபாத், கட்டளை மூலமாக, யூதா மக்களை நோன்பிருக்க ஆயத்தம் செய்தார் - 2குறி 20:3.

4. எஸ்ரா மக்களை ஆயத்தப்படுத்துதல்:

 • எஸ்ரா, தங்கள் பயணம் நலமாக அமைய வேண்டுமென்று, உபதேசம் மூலமாக, மக்களை நோன்புக்கு ஆயத்தம் செய்தார் - எஸ்ரா 8:21.

5. வானதூதர் சிம்சோனின் பெற்றோரை ஆயத்தம் செய்தல்:

 • சிம்சோனின் பெற்றோரை, வானதூதர் நோன்பிருக்க ஆயத்தம் செய்தார் - நீ.த 13:4,5.
 • பிள்ளைகள் நோன்பிருக்க, பெற்றோர் பிள்ளைகளை ஆயத்தம் செய்ய வேண்டும் (உ.ம்) சிம்சோன் நோன்பு வாழ்வு வாழ, சிம்சோனை ஆயத்தப்படுத்தும்படி, அவர் பெற்றோரை, வானதூதர் கட்டளை மூலமாக, ஆயத்தம் செய்கின்றார் - நீ.த 13:13,14.

 
"சாம்பல் - மண் - புழுதி "

A. மனித உடல் உருவானது:

 • கடவுள், நிலத்தின் மண்ணால், மனிதனை உருவாக்கினார் - தொ.நூ 2:7.
 • எல்லாம் மண்ணிலிருந்தே தோன்றின – ச.உ 3:20.

B. மனித உடல் செல்ல வேண்டிய இடம்:

 • நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால், அதற்கு திரும்புவாய் - தொ.நூ 3:19.
 • நீ மண்ணாய் இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் - தொ.நூ 3:19.
 • மணிதர் மீண்டும் மண்ணுக்கே திரும்புவர் - யோபு 34:15.
 • நீர் மூச்சை நிறுத்தினால், உயிரினங்கள் மாண்டு, மறுபடியும் புழுதிக்கேத் திரும்பும் - தி.பா 104:29.
 • மண்ணிலிருந்து வந்த உடல், மண்ணுக்கே திரும்பும் - ச.உ 12:7, 3:20.

C. நிலையில்லா, பயனில்லா – தாழ்ந்த – நிலைக்கு அடையாளம்:

 • தூசியும், சாம்பலுமான நான், என்று ஆபிரகாம் கூறுகின்றார் - தொ.நூ 18:27.
 • புழுதியினின்று ஏழைகளை உயர்த்துகின்றார் - 1சாமு 2:8.
 • குப்பையினின்று வறியவரை தூக்கி விடுகின்றார் - 1சாமு 2:8.
 • சிமயி, தாவீதை புழுதியை வாரி எறிந்து, தூற்றினான் - 2சாமு 16:13.
 • தூசிக்கு நிகரான உன்னை, உயர்த்தினேன்” என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறுகின்றார் - 1அர 16:2.
 • “புழுதியும் சாம்பலும் போல் ஆனேன்” என்று யோபு கூறுகின்றார் - யோபு 30:19.
 • நாம் தூசி என்பது, அவர் நினைவிலுள்ளது – தாவீது – தி.பா 103:14.
 • ஏழையை தூசியினின்றும், வறியவனை குப்பை மேட்டினின்றும், தூக்கி விடுகின்றார் - தி.பா 113:7.
 • யோபு சாம்பலில் உட்கார்ந்தார் - யோபு 2:8.

D. மனஸ்தாபத்தை வெளிப்படுத்த:

 • இஸ்ராயேலர், தோல்வியுற்ற போது, யோசுவாவும், இஸ்ராயேலின் முதியோரும், பேழையின் முன், முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலை மீது, புழுதியை வாரிப் போட்டுக் கொண்டனர் - யோசு 7:6.
 • நாடு தோல்வியுற்ற போது, சீயோனின் பெரியோர், தங்கள் தலைமேல் புழுதியை தூவிக் கொண்டனர் - புல 2:10.
 • தீர் நாட்டின் அழிவைப் பற்றி, எசேக்கியேல் இறைவாக்கினர் எச்சரிக்கின்றார். “மாலுமிகள், புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர். சாம்பலில் புரண்டழுவர்”- எசே 27:30.
 • பாபிலோனியர், தங்கள் தலைமேல், புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு, அழுது புலம்பினர் - வெளி 18:19.

E. மனத்துயரத்தை வெளிப்படுத்த:

 • யோபுவின் நலம் விசாரிக்க வந்த நண்பர்கள், தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டனர் - யோபு 2:12.
 • துயரத்தின் உச்சக்கட்டத்தில் யோபு, “நான் மண்ணுக்கு உறங்கப் போகிறேன்” என்கிறார் - யோபு 7:21.
 • யோபு புழுதியிலும், சாம்பலிலும் இருந்து, மனம் வருந்துகிறேன் என்கிறார் - யோபு 42:6.


 
"சாக்கு உடை"

A. மனத்துயரத்தை வெளிப்டுத்த:

 • யாக்கோபு, இடுப்பில் சாக்கு உடை கட்டிக்கொண்டு, பல நாட்கள், மகன் யோசேப்புவுக்காக, துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34.
 • சீரியர், சாக்கு துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு, இஸ்ராயேல் அரசனிடம் வந்தனர் - 1அர 20:31,32.
 • எசேக்கியா மன்னன், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, ஆலயத்தில் நுழைந்தார் - 2அர 19:1.
 • என் சாக்குத் துணியை களைந்துவிட்டு, என்னை மகிழ்ச்சியால் உடுத்தினீர் - தாவீது – தி.பா 30:11.

B. மனஸ்தாபத்தை வெளிப்படுத்த:

 • “சாக்கு உடை அணியுங்கள்” என்று, தாவீது கட்டளையிட்டார் - 2சாமு 3:31.
 • தாவீதும், பெரியோர்களும், சாக்கு உடை உடுத்தி, முகம் குப்புற விழுந்தனர் - 1குறி 21:16.
 • எஸ்தரும் பெரியோர்களும், சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டனர் - எஸ் 4:1-4.
 • தெருவில் நடமாடுவோர், சணல் ஆடை உடுத்தினர் - எசா 15:3.
 • எசேக்கியா மன்னன், சாக்கு உடையால், தம்மை மூடிக்கொண்டு, ஆலயம் சென்றார் - எசா 37:1,2.
 • பெரியோர், சிறியோர் என, நினிவே மக்கள் அனைவரும், சாக்கு உடை உடுத்திக்கொண்டனர் - யோனா 3:5.
 • என் சாட்சிகள், சாக்கு உடை உடுத்தி, இறைவாக்குரைப்பர் - வெளி 11:3.

C. பாவப்பரிகாரமாக:

 • அய்யாவின் மகள் இரிசபா, தனக்காக சாக்கு உடையை பாறை மீது விரித்து, மழை பொழியுமட்டும் இருந்தாள் - 2சாமு 21:10.
 • ஆகாபு, வெற்றுடலில் சாக்கு உடை உடுத்தி, சாக்குத் துணியில் படுத்தான் - 1அர 21:27.
 • நாட்டின் பஞ்சத்தைக் கண்ட, இஸ்ராயேல் மன்னன், கோணி ஆடை அணிந்தான் - 2அர 6:30.
 • எசேக்கியா மன்னன், குருக்களில் முதியோரை, சாக்கு உடை உடுக்கச் செய்தார் - 2அர 19:2.
 • சாக்கு உடையை உடலுக்குத் தைத்தேன். புழுதியில் , மேன்மையை புதைத்தேன் - யோபு – யோபு 16:15.
 • நான் நோயுற்றிருந்த போது, சாக்கு உடை உடத்திக்கொண்டேன் - தாவீது – தி.பா 35:13.
 • சாக்குத்துணியை என் உடையாகக் கொண்டேன் - தாவீது – தி.பா 69:11.
 • ஆடம்பர உடைக்குப் பதில், சாக்கு உடை உடுத்துவர் - எசா 3:24.
 • வான்வெளியை, சாக்கு உடையால் போர்த்துகின்றேன் - எசா 50:3.
 • அனைவரும், சாக்கு உடை உடுத்திக் கொள்வர் - எசே 7:18.
 • சாக்கு உடை உடுத்திக்கொண்டு, உனக்காக உள்ளம் நொறுங்கி அழுவர் - (தீர் நகர்) – எசே 27:31.
 • எல்லாரும், இடுப்பில் சாக்கு உடை உடுத்தச் செய்வேன் - ஆமோ 8:10.
 • மனிதரும், விலங்குகளும், சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும் - யோனா 3:8.
 • நினிவே அரசன், சாக்கு உடை உடுத்தி, சாம்பல் மீது உட்கார்ந்தான் - யோனா 3:6.
 • சாக்கு உடை அணிந்து, புழுதியை பூசி, நோன்பிருக்க ஒன்றுகூடினர் - நெகே 9:1

D. கடவுளின் கட்டளை:

 • சாக்கு உடை உடுத்த, ஆண்டவர் கட்டளையிட்டார் - எசா 22:12.
 • இடையில், சாக்கு உடையைக் கட்டிக்கொள்ளுங்கள் - எசா 32:11.
 • சாக்கு உடை உடுத்துங்கள், ஒப்பாரி வையுங்கள் - எரே 4:8
 • குருக்கள், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, தேம்பி அழுங்கள் - யோவே 1:13.
 • கணவனாக வரவிருந்தவனை இழந்ததால், சாக்கு உடை உடுத்தும் கன்னிப்பெண் போல், கதறி அழுங்கள் - யோவே 1:8.
 • சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள் - எரே 4:8.
 • சாக்கு உடை உடுத்துங்கள், சாம்பலில் புரளுங்கள் - எரே 6:26.

E. நோன்பிருந்து, பாவப்பரிகாரம் செய்வதன் வெளி அடையாளம்:

 • சாக்கு உடையையும், சாம்பலையும் அணிவதா நோன்பு – எசா 58:5.
 • அவர்களின் இடைகளில், சாக்கு உடை காணப்படுகிறது (மோவாபு) – எரே 4:37.
 • சாக்கு உடை உடுத்தினர், தலைகளை தரைமட்டும் தாழ்த்தினர் - புல 2:10.
 • நான் சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து வேண்டினேன் - தானி 9:3.
 • சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் அமர்ந்து, மனம் மாறியிருப்பர் - மத் 11:21, லூக் 10:13.


 
யோவேலில் நோன்பு (யோவே 1:2 – 2:29.)

A. யார் யார் நோன்பிருக்கணும்?

1. கடவுளின் ஊழியர் - யோவே 2:17.

 • குருக்கள் - 1:9,13, 2:17.
 • பலிபீடத்தில் பணிபுரிபவர்
 • மூப்பர் - யோவே 2:16.

2. இறைமக்கள் - யோவே 2:16.

1. மாசற்ற நீதிமான்கள்

 • பால் குடிக்கும் குழந்தைகள்
 • பிள்ளைகள்

2. மன – சரீர – உலக மாசுபடிந்தவர்:

 • மணமகள் - மஞ்சம் - 2:16.
 • மணமகன் - மண அறை – 2:16.


B. எப்படி நோன்பிருக்கணும்?

1. மன, சரீர – உலக ஆசைகளைக் கட்டுப்படுத்தி, தன்னடக்கத்தோடு:

 • மஞ்சத்தை விட்டுப் புறப்பட்டு (செயல்) - 2:16.
 • மண அறையை விட்டு வெளியேறி (சூழ்நிலை) – 2:16.

2. பரிகாரம் செய்து:

 • சாக்கு உடை உடுத்தி – 1:8,13.
 • இரவில் சாக்கு உடை அணிந்து – 1:13.
 • உண்ணா நோன்பிருந்து – 1:14.

3. முழு தீர்மானத்தோடு:

 • நோன்புக்கு நாள் குறித்து – 1:14, 2:15.
 • முழு இதயத்தோடு – 2:12.

4. மனஸ்தாபத்தோடு :

 • இதயத்தைக் கிழித்துக்கொண்டு – 2:13.
 • தேம்பி அழுதுகொண்டு – 1:13.

5. வெளிப்படையாக துக்கித்து:

 • அலறி புலம்பி – 1:13.
 • அழுது புலம்பி – 2:12.

6. சபையாக சேர்ந்து:

 • எக்காளம் ஊதி – 2:15.
 • வழிபாட்டு பேரணியை திரட்டி – 1:14, 2:15.

7. ஆலய வழிபாட்டோடு இணைந்து:

 • கோயிலில் கூடி வந்து – 1:14.
 • கோயிலின் முன் அழுது புலம்பி – 1:14, 2:17.

C.எப்போது நோன்பிருக்க வேண்டும்?

1. எச்சரிக்கும் துன்பத்தை கண்டவுடன்:

 • விளைச்சல்களை வெட்டுக்கிளிகள் தின்னத்தொடங்கின – யோவே 1:4.
 • வேற்றினம் ஒன்று நாட்டுக்கு எதிராகத் திரும்புகிறது – யோவே 1:6.
 • உணவுப்பொருளெல்லாம், பாழாய் போகின்றன – யோவே 1:16.
 • மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமல் போயின – யோவே1:16.
 • மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லை – யோவே 1:18.
 • மேய்ச்சல் நிலம் நெருப்புக்குள்ளானது – யோவே 1:19.
 • தண்ணீரின்றி, காட்டு விலங்குகள் தவிக்கின்றன – யோவே 1:20.

2. ஆண்டவரின் இறுதி தண்டனை வரும் முன் - யோவே 1:15.

3. இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்புங்கள் - யோவே 2:12.


D.நோன்பின் பலன் என்ன?

1. மீட்பு (யோவே 2:18,23,26,27)

 • அப்போது ஆண்டவர், நாட்டின்மீது கருணை காட்டுவார் - யோவே 2:18.
 • முன்போலவே கடவுள், மன்மாரியும் பின்மாரியும் தந்தார் - யோவே 2:23.
 • வேண்டிய மட்டும், உணவு கிடைக்கும், நிந்தை இல்லாமல் போகும் - யோவே 2:26.
 • இஸ்ராயேல் மக்கள் நடுவே, கடவுள் இனி வாசம் செய்வார் - யோவே 2:27.

2. அபிஷேகம் (யோவே 2:28,29)

 • அதற்குப்பின்பு, யாவர் மேலும், ஆவியைப் பொழிவேன் - யோவே 2:28.
 • புதல்வர், புதல்வியர் இறைவாக்குரைப்பர் - யோவே 2:28.
 • முதியோர், கனவுகள் காண்பர் - யோவே 2:28.
 • இளைஞர் காட்சிகள் காண்பர் - யோவே 2:28.
 • பணியாளர், பணிப்பெண்கள் மேல், ஆவியைப் பொழிவேன் - யோவே 2:29.

 
"யூதித்தின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு (யூதி 8:4-6) "

A. யூதித்தின் வாழ்வில் நோன்புக்கு மூன்று விதி:


1. உலக மோகங்களை கட்டுப்படுத்தினார் - யூதி 8:4.

 • “யூதித்து கைம்பெண் ஆனார். மூன்று ஆண்டு, நான்கு மாதமாய் தம் இல்லத்திலேயே இருந்தார்”

2. உடலின் விருப்பங்களை அடக்கினார் - யூதி 8:5.

 • “தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காக கூடாரம் ஒன்று அமைத்துக் கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்”.

3. மனம் ஆசைப்படுவதைக் கட்டுப்டுத்தினார் - யூதி 8:6.

 • “தம் கைம்மைக் காலத்தில், ஓய்வு நாளுக்கு முந்தின நாளும், ஓய்வுநாள் அன்றும், இஸ்ராயேல் இனத்தாருக்குரிய திருநாட்கள், மகிழ்ச்சியின் நாட்கள் தவிர, மற்ற நாட்களில், அவர் நோன்பிருந்து வந்தார்”.

B. யூதித்தின் பரிசுத்தம்:


1. யூதித் அழகானவர், செல்வந்தர் - யூதி 8:7.

 • “யூதித் பார்வைக்கு அழகானவர். தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண்பெண் பணியாளர்களோடு, பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவை எல்லாம் யூதித்தின் உடமைகள்”.

2. ஆயினும், யூதித் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தார் - யூதி 8:8.

 • “யூதித்து, கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப் பற்றி, யாரும் தவறாகப் பேசியதில்லை”.

C. யூதித்தின் இந்த நோன்பு வாழ்வின் பலன் என்ன?

1. மீட்பு 2. அபிஷேகம்

1. மீட்பு:

 • எதிரிப்படையால், மக்களுக்கு உண்டான துன்பத்தை நீக்க, மூப்பர்களோடு ஆலோசனை செய்தார் - யூதி 8:9-36.
 • எதிரியை அழிக்க, யூதித்தின் இறைவேண்டல் - யூதி 9:1-14.
 • ஒலோபெர்னஸின் தலையை துண்டித்து, இஸ்ராயேலை மீட்டல் - யூதி 13:1-14.

2. அபிஷேகம்:

 • எதிரிகளை சூறையாடி, மக்கள் பெரும் செல்வத்தை சேர்த்தனர் - யூதி 15:6,7.
 • யூதித்தை இஸ்ராயேலின் பெரியோர் வந்து வாழ்த்தினர் - யூதி 15:8-10.
 • யூதித்தோடு மக்கள் வெற்றிப்பவனி சென்றனர் - யூதி 15:11-13.
 • யூதித் அக்களிப்பால் நிறைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடினார் - யூதி 16:1-20.
 • யூதித், இன்னும் அதிகமாய் கடவுளுக்குப் பிரியமானவர் ஆனார்.
 • இஸ்ராயேல் மக்களும், கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்தனர்.

 • “அவருடைய புகழ், ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில், நூற்றைந்து வயது வரை, உயிர் வாழ்ந்தார் - யூதி 16:23.
 • “யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும், அவர் இறந்து நெடுங்காலத்திற்குப் பிறகும், எவரும் இஸ்ராயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை – யூதி 16:28.

 
புதிய ஏற்பாட்டில் நோன்பு:

 • புதிய ஏற்பாட்டின் காலத்தில், “உண்ணா நோன்பு” Asistos – என்ற கருத்து, வழக்கத்தில் இருந்தது.
 • தொடக்கத்திலிருந்தே, யூதருடைய ஒப்புரவின் நோன்பு கடைபிடிக்கப்பட்டது – தி.தூ 27:9.
 • சில பரிசேயர், வாரத்தில் இரண்டு நாள் நோன்பிருந்தனர் - லூக் 18:12.
 • பக்தியுள்ளோர், அடிக்கடி நோன்பிருப்பர் - அன்னா – லூக் 2:37.
 • இயேசு, தன் மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்குமுன், நாற்பது நாள், நோன்பிருந்தார் - மத் 4:1,2.
 • இது, பழைய ஏற்பாட்டின், நாற்பது நாள் நோன்பின் நிறைவே – மோசே, எலியா – வி.ப 34:28, 1அர 19:8.

இயேசுவின் போதனை:

 • தம் சீடர்கள், மனிதரின் பார்வைக்கு அல்ல, கடவுளின் பார்வைக்கு நோன்பிருக்க வேண்டும் - மத் 6:16-18.
 • அதாவது, வெளித்தோற்ற நோன்பை அல்ல, அகமாற்ற நோன்பை, இயேசு வலியுறுத்துகின்றார்.
 • தம் சீடர்கள், தன்னைப் பிரியும் போது, நோன்பிருக்க வேண்டும் - மத் 9:15.
 • கடவுளை விட்டுப் பிரிந்தவர்கள், மீண்டும் திரும்பி வரவும், கடவுளோடிருப்பவர்கள், அவரை விட்டுப் பிரியாமலிருக்கவும், நோன்பிருக்க வேண்டும்.

ஆதிசபையில் நோன்பு:

 • நோன்பிருந்து ஜெபிக்கும் போது, ஆவியானவர் ஆட்கொண்டார் - தி.தூ 13:2.
 • நோன்பிருந்து வேண்டி, ஊழியரை அனுப்பினர் - தி.தூ 13:3.
 • ஊழியத்தின் போது, நோன்பிருந்து வேண்டல், நடைமுறையில் இருந்தது – தி.தூ 14:23.

புதிய ஏற்பாட்டில் தன்னடக்கம் கட்டுப்பாடே நோன்பு:


பழைய ஏற்பாட்டில்

 • பழைய ஏற்பாட்டிலும் தன்னடக்கம் கட்டுப்பாடு போதனை இருந்தது

 • பந்தியில் உணவடக்கம் வேண்டும் - நீ.மொ 23:3.
 • உணவில் சுவையடக்கம் வேண்டும் - நீ.மொ 25:16.
 • நகரை அடக்குவதைவிட, தன்னை அடக்குபவரே மேலானவர் - நீ.மொ 16:32.

புதிய ஏற்பாட்டில்,

 • பவுல், ஆளுநர் பெலிக்சுவிடம், தன்னடக்கம் பற்றி பேசினார் - தி.தூ 24:25.
 • தன்னடக்கப் பயிற்சி வேண்டும் என்றும், இயேசுவிடமிருந்து பிரியாதிருக்க, தானே உடலைக் கட்டுப்படுத்துவதாகவும், பவுல் கூறினார் - 1கொரி 9:25,27.
 • சபை உறுப்பினரும், ஊழியரும், கட்டுப்பாடு உடையவராயிருக்க வேண்டும் - தீத் 2:2.
 • தன்னடக்கத்தை தேடுங்கள் என்று, ஆதிசபைக்கு பேதுரு கூறினார் - 2பேது 1:6.
 • தூய ஆவியின் கனிகளில் ஒன்று, தன்னடக்கம் - கலா 5:23.

உலகம் - பிசாசு – சரீரத்தை, தன்மறுப்பு, தன்னடக்கம், கட்டுப்பாடோடு மேற்கொள்வது நோன்பு

1. உலகம்:

 • உறவுகள், உடமைகள், ஆசைகளைத் துறப்பது அல்லது இழப்பது.

 • உறவுகள், உடமைகளைத் துறக்க வேண்டும் - மத் 19:29.
 • தன்னலம் துறந்து, இயேசுவையே பின்செல்ல வேண்டும் - மத் 16:24.
 • எதையும் இழக்காதவன், இயேசுவைப் பின்செல்ல முடியாது - லூக் 14: 26,27.
 • ஆதி சீடர்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்சென்றனர் - மாற் 10:28.
 • மத்தேயு, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்சென்றார் - லூக் 5:27,28.
 • உடமையை எல்லாம் விடாதவர், இயேசுவின் சீடனாக முடியாது – லூக் 14:33.
 • இழக்காதவர், இறை ஆட்சியில் நுழைய முடியாது - லூக் 18:29,30.
 • இயேசுவுக்கு முன், பவுல், மற்ற அனைத்தையும் குப்பை எனக் கருதினார் - பிலி 3:8.
 • உலகப் போக்கிலான, இச்சைகளை ஒழித்துவிடுங்கள் - கொலோ 3:5.

2. பிசாசு:

 • உங்களில் பாவம் ஆட்சி செலுத்த விடாதீர்கள் - உரோ 6:12.
 • எதற்கும் அடிமையாகாதீர்கள் - 1கொரி 6:12.
 • அலகை ஏமாற்றுவான், எச்சரிக்கை – 2தெச 2:9,10.
 • அலகையின் கண்ணியைப் பற்றி எச்சரிக்கை – 1திமொ 3:7.
 • பேயின் விருப்பப்படி வாழாமல் இருக்க எச்சரிக்கை – 2திமொ 2:26.
 • அலகையை எதிர்த்து நில்லுங்கள் - யாக் 4:7.
 • அவர்கள், மனிதனின் தீய நாட்டங்களுக்கு இசையவில்லை – 1பேது 4:2.

3. சரீரம்:

 • ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடுங்கள் - 1பேது 2:11.
 • ஊனியல்பின் நாட்டங்களுக்கு, இடம் கொடுக்க வேண்டாம் - உரோ 13:14.
 • உங்கள் உறுப்புகள், தேவ சித்தப்படி வாழ, இடறலாயிருந்தால், வெட்டி விடுங்கள் - மத் 5: 29,30.
 • ஊனியல்பை, அதன் இயல்புணர்ச்சியோடு சிலுவையில் அறைந்து விடுங்கள் - கலா 5:24.
 • நாவடக்கம், உடல் முழுவதையும், கட்டுப்படுத்துவதற்கு சமம் - யாக் 3:2.
 • உடலின் தீச்செயல்களை, சாகடியுங்கள் - உரோ 8:13.
 • உடலின் பாவ இயல்பு, சிலுவையில் அறையப்படட்டும் - உரோ 6:6. 

"இயேசுவின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு"


"A. இயேசுவின் வாழ்வும் அருட்பொழிவும்"

 • இயேசு, மீட்பராகவே பிறந்தார் - மத் 1:21.
 • எனவே, இயேசுவிடம் மீட்பு இருந்தது.
 • அந்த மீட்பை உறுதிப்படுத்த – 2கொரி 1:21,22; 5:5, இயேசு அருட்பொழிவு பெற்றார் - மத் 3:16.
 • இயேசுவின் பணி, அருட்பொழிவோடு ஆரம்பமாகிறது – லூக் 4:17,18.
 • எனவே அவர், மெசியா அதாவது ஆவிக்குரிய இயேசுவானார்.

B. இயேசுவின் ஆவிக்குரிய வாழ்வும், நோன்பும்

 • ஆவிக்குரிய வாழ்வு என்பது, சொந்த விருப்பம் போல் வாழாது, கடவுளின் விருப்பம் போல் வாழும் வாழ்வு.
 • கடவுளின் விருப்பம் போல், ஒருவர் வாழ வேண்டுமென்றால், அவர் “தன் சுய விருப்பங்களை” கட்டுப்படுத்த வேண்டும்.
 • ஒரு மனிதரின் “சுய விருப்பங்கள்” எவற்றில் அடங்கியுள்ளன?
  • அவரது உலக மோகங்களில்,
  • அவரது உடலின் இச்சைகளில்,
  • அவரை சுற்றி வரும் அலகையின் தந்திரங்களில்.
 • இவற்றை எல்லாம், “தன்னடக்கம் -கட்டுப்பாடு” எனும் நோன்பால் வெற்றி கொள்ள வேண்டும்.
 • இதுவே ஆவிக்குரிய நோன்பு.
 • இயேசுவும் இத்தகைய ஒரு வாழ்வையே வாழ்ந்தார்.

“உலகம்”

“இந்த உலகத்தோடுள்ள இயேசுவின் நிலைப்பாடும் உறவும்”

A. பாவ உலகம்:

 • தீயவனின் பிடியில் உள்ள உலகம் - 1யோவா 5:19.
 • பாவ உலகம் - 2பேது 2:5, உரோ 5:12,13.
 • நெறிகெட்ட உலகம் - யாக் 3:6.
 • இருள் நிறைந்த உலகம் - எபே 6:12.
 • குற்றம் நிறைந்த உலகம் - 2கொரி 5:19.

B.உலகமும் கடவுளும்:

 • உலகம், கடவுளோடு ஒப்புரவு ஆக வேண்டும் - உரோ 11:15.
 • உலக ஞானத்தால் கடவுளை அறிய முடியாது – 1கொரி 1:21.
 • உலகம், மேன்மை எனக்கருதியதை, கடவுள் குப்பை எனக்கண்டார் - 1கொரி 1:8.
 • உலகத்தால் ஒருவர் மாசுபடாமல் இருப்பது, கடவுளுடைய பார்வையில் உயர்ந்தது – யாக் 1:27.
 • உலக ஞானம், கடவுளுக்கு முன் மடமை – 1கொரி 3:19.
 • உலகை மீட்க, கடவுள் மகனை அனுப்பினார் - யோவா 17:18.

C.உலகமும் - இயேசுவும்:

 • இயேசு உலகின் பாவம் போக்க வந்தார் - யோவா 1:29.
 • இயேசுவும் அவர் சீடர்களும் உலகை சார்ந்தவர்கள் அல்ல – யோவா 17:14,16.
 • உலகின் பாவங்களுக்கு, இயேசு பரிகாரி – 1யோவா 2:2.
 • இயேசு உலகை வென்றுவிட்டார்- யோவா 16:33.
 • இயேசு, உலகத்துக்கு ஒளி –யோவா 8:12, 9:5, 12:46.
 • இயேசு உலகின் மீட்பர் - 1யோவா 4:14, 1திமொ 1:15, யோவா 12:47, 3:17, யோவா 6:33,51 , 17:18.
 • இயேசுவின் அரசு, உலகை சார்ந்தது அல்ல- யோவா 18:36,37.

D.உலகமும் - ஆவிக்குரியவர்களும்:

 • உலகப் போக்கை பின்பற்றாதீர்கள் - 1திமொ 1:9.
 • இவ்வுலக வாழ்வை, ஒரு பொருட்டாக கருதாதீர் - யோவா 12:25.
 • உலகத்தின் போக்கின்படி, தீர்ப்பிடாதீர்கள் - யோவா 8:15.
 • உலகப் போக்கின்படி, ஒழுகாதீர்கள் - உரோ 12:2.
 • உலகப் போக்கின்படி, வாழாதீர்கள் - எபே 2:2.
 • உலகப் போக்கிலான விதிமுறைகளுக்கு உட்படாதீர் - கொலோ 2:20.
 • உலகின் மீதும், அதன் எதன்மீதும், அன்பு செலுத்தாதீர் - 1யோவா 2:15.
 • உலகை வெல்பவன், கடவுளிடமிருந்து பிறந்தவன் - 1யோவா 5:4.
 • விசுவாசி, உலகை வெல்வான் - 1பேது 5:5.

“அலகை”

“அலகையோடுள்ள இயேசுவின் நிலைப்பாடும், உறவும்”

A. அலகையின் தன்மைகள்:

 • உலகின் தலைவன் - யோவா 14:30.
 • இருள் நிறைந்த உலகின் ஆற்றல் - எபே 6:2.
 • உலகை தன் பிடியில் வைத்திருக்கும் தீயோன் - 1யோவா 5:19.
 • இயேசுவை ஏற்க மறுப்பவர்களின் தந்தை – யோவா 8:44.
 • தன்னை கடவுளாக காட்டிக்கொள்பவன் - 2தெச 2:4.

B.அலகையின் செயல்கள் :

 • பொறாமையை தூண்டும் பேய் - 1சாமு 18:8.
 • எண்ணங்களை சீரழிக்கும் பேய் - 2கொரி 11:3.
 • அறிவுக்கண்ணை குருடாக்கும் பேய் - 2கொரி 4:4.
 • பாவ எண்ணங்களை தூண்டும் பேய் - யோவா 13:2.
 • பாவம் செய்யும் பேய் - 1யோவா 3:8.
 • பெருமை, கட்சிமனப்பான்மை, குழப்பம், கொடும் செயல் செய்யத் தூண்டும் பேய் - யாக் 3:16.

C.அலகையும் இயேசுவும்:

 • அலகையின் செயல்களை இயேசு ஒழிக்க வந்தார் - 1யோவா 3:8.
 • இயேசுவை அலகை சோதித்தது – லூக் 4:1-13.
 • இயேசுவைக் கண்டு அலகை அஞ்சியது – மத் 8:29.
 • அலகையின் பிடியினின்று, பிணியாளரை இயேசு மீட்டார் – தி.ப 10:38.
 • அலகையைப் பற்றி, விழிப்பாயிருக்க இயேசு கூறினார் - லூக் 8:12.

D.அலகையும் ஆவிக்குரியவர்களும்:

 • அலகையைப் பற்றி, எச்சரிக்கையாயிருக்க வேண்டும் - 1பேது 5:8.
 • அலகையை எதிர்த்து நில்லுங்கள் , அவன் ஓடிவிடுவான் - யாக் 4:7.
 • சீடர்களுக்குள் அலகையிருப்பான் - யோவா 13:2,27.
 • சீடர்கள், துன்பத்தை ஏற்க விடாமல் தடுப்பான் - மத் 16:22,23.
 • சீடரை, சோதனையால் புடமிடுவான் - லூக் 22:31.
 • சீடரை, தம் மாய வலையில் சிக்க வைத்து, தன் விருப்பங்களுக்கு அடிமைப்படுத்துவான் - 2திமொ 2:26.

“உடல்”

“உடலின் எட்டு தேவைகள் மட்டில், இயேசுவின் நிலைப்பாடும், உறவும்”

1. உடல் பசிக்கு உணவு தேடும் - தொ.நூ 25:30-33:

இயேசுவுக்கு - “தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே என் உணவு”– யோவா 4:34.

ஆவிக்குரியவருக்கு - “மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறார்” - மத் 4:4;


2. உடல் நோயில் மருந்தை தேடும் - சீரா 38:9,12.

இயேசுவுக்கு - “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவன் தேவை” – லூக் 5:31.

ஆவிக்குரியவருக்கு - “மருந்தோ பச்சிலையோ அவர்களை குணப்படுத்த வில்லை, அவருடைய வார்த்தையே அவர்களை குணமாக்கியது” – சா.ஞா 16:12, தி.பா 107:20.


3. உடல் களைப்பில் உறக்கம் கேட்கும் - மாற் 14:40.

இயேசுவுக்கு - “இயேசு பகலெல்லாம் போதித்தார், இரவெல்லாம் ஜெபித்தார்” - லூக் 21:27.

ஆவிக்குரியவருக்கு - “சோதனைக்கு உட்படாதபடி, விழிப்பாயிருந்து ஜெபியுங்கள்” - மத் 26:41.


4. உடல் பருவத்தில் இணையைத் தேடும் - தொ.நூ 24:67, 28:2.:

இயேசுவுக்கு - “அருள் பெற்றவருக்கே, மணத்துறவின் மேன்மை புரியும் - மத் 19:11,12 - இயேசு அருள் நிறைந்தவர்” - 2கொரி 13:13.

ஆவிக்குரியவருக்கு - “திருமணம் செய்யாமலிருப்பதே நல்லது” – 1கொரி 7:28, 32-38.


5. உடல் இணையில் சந்ததியை விரும்பும் - தொ.நூ 15:3

இயேசுவுக்கு - “இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் பிறப்பவர்களே, கடவுளின் பிள்ளைகள்” - யோவா 1:12,13.

ஆவிக்குரியவருக்கு - “ஆபிரகாமுக்கு இக்கற்களிலிருந்தும் பிள்ளைகளை எழுப்ப கடவுள் வல்லவர் ” - மத் 3:9.


6. உடல் தங்குவதற்கு வீட்டைத் தேடும் - 2அர 4:10.

இயேசுவுக்கு - “நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவைகளுக்கு, தங்க கூடுகள் உண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை” – லூக் 9:58.

ஆவிக்குரியவருக்கு - “என் தந்தை வாழும் இடத்தில், உறைவிடங்கள் பல உள்ளன. நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்” - யோவா 14:2,3 .


7. உடல், நாளைக்கென்று சேமிக்க ஆசிக்கும் - தொ.நூ 41:35.

இயேசுவுக்கு - “ஒன்றுமில்லாமல் , அனுப்பிய போது உங்களுக்கு ஏதாவது குறைவுபட்டதா?” - லூக் 22:35

ஆவிக்குரியவருக்கு - “விண்ணுலகில் செல்வம் சேருங்கள் - மத் 6:19-21.”


8. ஆபத்தில் பாதுகாப்பு - மத் 26:51.

இயேசுவுக்கு - “என் அரசு, இவ்வுலக அரசு போலன்று, இருந்திருந்தால், என் காவலர்கள் போராடியிருப்பார்கள்” - யோவா 18:38.

ஆவிக்குரியவருக்கு - “இதோ! ஓநாய்களிடையே ஆடுகளைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்” - மத் 10:16.

“இயேசு உலகம், பிசாசு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்”

 • மேற்கூறிய கருத்துக்களிலிருந்து, உலகம், பிசாசு உடலோடு, இயேசுவுக்குள்ள நிலைப்பாடும், உறவும் என்ன என்பதைக் காண்கிறோம்.
 • தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு தடையான இம்மூன்றையும், இயேசு, தன்னடக்கம், கட்டுப்பாடோடு மேற்கொண்டார்.
 • ஆவிக்குரியவர்களும் அவ்வண்ணமே, உலகம், பிசாசு, உடலை மேற்கொண்டு வாழ, தன்னடக்கம், கட்டுப்பாடு எனும் நோன்பை, வாழ்நாள் முழுவதும் கைக்கொள்ள வேண்டும் என்று, மேற்சொன்ன பாடம் நமக்கு அறிவுறுத்துகிறது.
 • இதை மேற்கோளாக காட்டவே, இயேசுவின் பாலைவன நோன்பு அமைந்திருந்தது.

 "இயேசுவும் பாலைவன நோன்பும்"


 • இறைவிருப்பத்துக்கு கட்டுப்பட்டு வாழும் போது, பாவ சோதனையும், துன்ப சோதனையும் நமக்கு உண்டாகும்.
 • இந்த சோதனைகளை, உலகம், பிசாசு, உடல், ஆகிய மூன்றும் நமக்குத் தரும்.
 • உலகம், பிசாசு, சரீரத்தை, தன்னடக்கம் கட்டுப்பாடோடு வெற்றிக்கொள்ளும் போது, பாவ துன்ப சோதனைகளையும், நாம் எளிதாக வெற்றி கொள்வோம்.
 • இவ்வாறு வெற்றி கொள்வதால், நாம் இறைவிருப்பத்துக்கு என்றும் உறுதியாய் கட்டுப்பட்டிருப்போம்.
 • ஆவிக்குரிய வாழ்வும் சீராக வளரும்.

"இயேசுவுக்கு பாலைவனத்தில் பாவ, துன்ப சோதனை"


1. பாவ சோதனை

 • அலகை – நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, என்னை வணங்கினால், உலக அரசையும், அதன் மேன்மையையும், உமக்குத் தருகிறேன் - மத் 4:8,9.
 • இயேசு – உன் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வணங்கி, அவர் ஒருவருக்கே பணிவிடை செய்வாயாக – மத் 4:10.
 • இவ்வாறு, கடவுளை மறுதலிக்கிற பாவ சோதனையை இயேசு வென்றார்.

2. துன்ப சோதனை

 • இயேசு பசியுற்றபோது, அலகை, “கற்களை அற்புதமாக அப்பமாக்கி உண்ணும்” என்று சோதித்தான் - மத் 4:3.
 • அதற்கு இயேசு, “மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும், உயிர் வாழ்கிறான்” என்றார் - மத் 4:4.
 • இவ்வாறு, துன்ப சோதனையையும், இயேசு வென்றார்.

"இயேசுவின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?"

 • இயேசு உலகம், பிசாசு, உடலை, தன்னடக்கம் - கட்டுப்பாடோடு மேற்கொண்டதே – அதாவது "நோன்பிருந்ததே" காரணம்.

1. உலகம்:

 • அலகை இயேசுவை, உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்று, உலக அரசையும், மேன்மையையும் காட்டி, இயேசுவை மயக்கப் பார்த்தான் - மத் 4:8.
 • ஆனால், அந்த ஆசைக்கு இயேசு மயங்கவில்லை.

2. பிசாசு :

 • அலகை இயேசுவிடம், என்னை ஆராதித்தால், எல்லா உலக மேன்மைக்கும் நீர் சொந்தமாகலாம், என்று தந்திமாகப் பேசினான் - மத் 4:9.
 • ஆனால், இயேசு விழிப்போடிருந்து, அவன் தந்திரத்தைப் புரிந்துகொண்டு, அவனைத் துரத்தினார் - மத் 4:10.

3. உடல்:

 • உண்ணாமல் இருந்த இயேசுவுக்கு, பசி உண்டாவதை உணர்ந்த அலகை, அங்கேயும் அவரை உடலின் இச்சைக்கு அடிமைப்படுத்தப் பார்த்தான் - மத் 4:3.
 • ஆனால் இயேசு, இறைவார்த்தையைக் கைக்கொண்டு, உடலின் இச்சைகளை மேற்கொண்டார் - மத் 4:4.

"இயேசு செய்த நோன்பு"

 • மேற்சொன்ன நிகழ்ச்சிகளிலிருந்து, உலகம், பிசாசு, உடலை, தன்னடக்கம் கட்டுப்பாடோடு, இயேசு மேற்கொண்டார் எனக் காண்கிறோம்.
 • இதுவே இயேசு செய்த நோன்பு.
 • இந்த தன்னடக்கம் கட்டுப்பாடு என்ற நோன்பால், இயேசு உலகம், பிசாசு, சரீரத்தை மேற்கொண்டு, பாவ துன்ப சோதனையை வென்றார்.
 • இவ்வாறு, ஆவிக்குரிய வாழ்வில் நிலைத்து, ஆவியின் வல்லமை பூண்டார் - லூக் 4:14.

 "முடிவுரை"


"ஆவிக்குரிய நோன்பின் ஆரம்பம் ஏதேன் தோட்டத்தில்"

 • நோன்பின் “தேவை” என்ன என்று கேட்டால், “கடவுளின் விருப்பத்தின் படி வாழ்வதற்கு நோன்பு தேவை” என்று நாம் கூறுவோம்.
 • ஆதி மனிதன், உலகம், பிசாசு, உடலின் மட்டில், தன்னடக்கம், கட்டுப்பாடோடு, வாழாததால், , உலகம், பிசாசு, சரீர விருப்பங்களுக்கு அடிமையாகி கடவுளின் விருப்பத்தை மீறினான் - தொ.நூ 2:16,17, 3:1-6.
 • ஆதிப்பெற்றோர், தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற, “நோன்பு” வாழ்க்கை வாழாததே “பாவம்” உண்டாகக் காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
 • இதனால், பாவத்தின் விளைவான, “துன்பத்துக்கும்” மனிதன் அடிமையானான் - தொ.நூ 3:14-19.
 • இவ்வாறு, “நோன்பு வாழ்க்கையை” ஆதிமனிதன் இழந்ததால், “பாவ”, “துன்ப” நிலைக்கு, அவன் அடிமையானான்.

"இந்நிலை மாற கடவுள் தந்த “முதல் உபதேசம்”

 • ஆதி மனிதனிடம், பாவம் பலுகிப்பெருகியது போலவே, துன்பமும் பலுகிப் பெருகியது.
 • பாவத்தில் விழுந்த ஆதிப்பெற்றோரின், முதல் பிள்ளைகளையும், அந்த பாவமும், துன்பமும் பற்றிக்கொண்டது.
 • காயீன் கொலையாளியானான் (பாவம்), ஆபேல் கொலை செய்யப்பட்டான் (துன்பம்).
 • இதைக் கண்ணுற்ற கடவுள், காயீனுக்கு முதல் “உபதேசம் கொடுத்தார்”.

 • “தன்னடக்கமே, பாவ – துன்பத்தை வெல்லும் வழி”

 • “பாவம் உன்மேல் வேட்கைகொண்டு, உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை “அடக்கி” ஆள வேண்டும் - தொ.நூ 4:7.
 • இதன் பொருள்:- “கடவுளுக்கு விருப்பமானதை செய்ய விடாதபடி, உலகம், பிசாசு, சரீரத்துக்கு விருப்பமானதை செய்ய, உனக்கு உள்ளும் புறமும், தூண்டுதல் இருக்கும். ஆனால், நீ அதை “தன்னடக்கம், கட்டுப்பாடு” எனும் நோன்பால் மேற்கொள்ள வேண்டும்” .
 • இதுவே, மனித குலத்துக்கு, ஏதேன் தோட்டத்தில் கடவுள் அருளிய உபதேசம்.
 • ஆவிக்குரிய வாழ்வில், நிலைத்து நிற்க, தன்னடக்கம் கட்டுப்பாடு என்ற, “நோன்பு வாழ்வு” வேண்டும்.
 • அது இல்லாததால், ஆதிப்பெற்றோர் ஆவிக்குரிய வாழ்வை இழந்தார்கள் - தொ.நூ 3:1-6, 14-19.
 • மேலும், இழந்த ஆவிக்குரிய வாழ்வை, மீண்டும் பெற்றுக்கொள்ள, தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற நோன்பு வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் - தொ.நூ 4:6,7.
 • இதுவே, ஆவிக்குரிய நோன்பு பற்றிய கடவுளின் “ஆதி உபதேசம்”.

"ஆவிக்குரிய வாழ்வின் பாதுகாப்பும் வளர்ச்சியும்"

 • எதிரியின் கையினின்று, ஆவிக்குரிய வாழ்வைப் “பாதுகாக்க”, அல்லது எதிரிக்கு அடிமையான நிலையிலிருந்து “மீண்டு வர”, தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற நோன்பு அவசியமே.
 • ஆவிக்குரிய வாழ்வுக்கு (கடவுளின் விருப்பப்படி வாழ) எதிரிகளாகிய உலகம், பிசாசு, சரீரத்தை மேற்கொள்ள வேண்டும்.
 • அவ்வண்ணமே, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு, “ஆவியின் கனிகளும்”, “தேவசித்தம் செய்யும்” வாஞ்சையும் வேண்டும்.

வேலியும், எருவும் போல:

 • இது எப்படி என்றால், ஒரு செடியை நடுகிறோம்.
 • அதைச்சுற்றி, செடியை “எதிரியிடமிருந்து பாதுகாக்க” “வேலி” அமைக்கிறோம்.
 • பின்பு, “எரு போட்டு”, “தண்ணீர் ஊற்றுகிறோம்”.
 • இதில், பயிருக்கு வேலி என்பது, நமக்கு “நோன்பு வாழ்வு” ஆகும்.
 • பயிருக்கு “எருவும், தண்ணீரும்” என்பது, நமக்கு “ஆவியின் கனிகளும்”, “தேவசித்தம் செய்வதும்” ஆகும்.

போராட்டத்தில் ஜெபமும், வாளும் போல:

 • “மதில் கட்டுவோரும், சுமை சுமப்போரும், ஒரு கையால் வேலை செய்தனர், மறுகையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்” – நெகே 4:17.
 • “யூதாவும், மக்களும், கையால் போர் செய்துகொண்டும், உள்ளத்தால் ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள் - 2மக் 15:26,27.
 • இங்கே எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற, “வாளும்”, “போரும்” உதவியது போல, நமக்கு “நோன்பு வாழ்வு” அமைகிறது.
 • அவ்வாறே, ஒரு கையால் வேலை செய்தும், உள்ளத்தால் ஜெபித்தும், அவர்கள் கட்டி எழுப்பி, வெற்றி பெற்றது போல, நமக்கு ஆவியின் கனிகளோடும், ஆவிக்குரிய கடமைகளோடும், ஆவிக்குரிய வாழ்வை வளர்ச்சியின் பாதையில் கட்டி எழுப்புவோம்.

"நோன்பிருக்க வாருங்கள்"

பாடல், பண் - அருட்தந்தை.R. ஜாண் ஜோசப் அடிகள்

காலம்: 13-2-2006, 6am


பல்லவி


நோன்பிருக்க வாருங்கள் - இயேசுவோடு

பாலைவனம் செல்ல வாருங்கள்


அனுபல்லவி


உபவாசமே தவக்கோலமே

தன்னடக்கம் கட்டுப்பாட்டை ஏற்க வாருங்கள்


சரணங்கள்


1

அபிஷேகம் பெற்றவர்கள் நோன்பிருக்கணும்

பாலைவன சோதனையை ஏற்று வாழணும்

ஆவியில் பெலனடைய பாடு ஏற்கணும்

அன்றாடம் பெந்தக்கோஸ்து நாளைக் காணணும்

2

மணவாளன் இயேசுவைப் பிரியும் நேரத்தில்

மணவாட்டி சபை சேர்ந்து நோன்பிருக்கணும்

பிரிய வைக்கும் சக்தியோடு போராடணும்

உறவை பெலப்படுத்த நோன்பிருக்கணும்

3

உலகம், பிசாசு, மாமிசத்தின் இச்சைகள்

இயேசுவைப் பிரிக்கும் சக்தி என்றுணரணும்

தன்னடக்க பயிற்சியை என்றும் செய்யணும்

இலக்கை நோக்கி நோன்பிருந்து ஓடி ஜெயிக்கணும்

4

உலக ஆசை மேற்கொள்ளாமல் கட்டுப்படுத்தணும்

பாவ இச்சை ஆண்டிடாமல் விழித்திருக்கணும்

மாமிசத்தின் தேவைகளை கட்டுப்படுத்தணும்

கட்டுப்பாடே நோன்பு என்று ஏற்று வாழணும்

CPM பாமாலை :பாடல் எண் 373


 

 

My status 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


என்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.


ஆண்டவரே! என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


ஆண்டவரே! நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

இயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்? – எசா 53:8.


தாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்


இயேசுவே! என் இதயக் கலக்கத்தை மாற்றும்.


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


இயேசுவே! மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்


 

X


ஆடைகளை உரிதல்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

XI


சிலுவையில் அறைதல்

நம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

இயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


அப்பா! எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.


 

XIII


தாயின் மடியில்

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


ஆண்டவரே! நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.


 

XIV


கல்லறையில் இயேசு

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


ஆண்டவரே! எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்


 

XV


உயிர்த்த இயேசு

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு


 உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.


 

I


அநியாய தீர்ப்பு

 

 

II


சிலுவை சுமக்கின்றார்

 

 

III


முதன்முறை விழுகின்றார்

 

 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

 

 

V


சீமோன் உதவி செய்கின்றார்

 

 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

 

 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

 

 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

 

 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

 

 

X


ஆடைகளை உரிதல்

 

 

XI


சிலுவையில் அறைதல்

 

 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

 

 

XIII


தாயின் மடியில்

 

 

XIV


கல்லறையில் இயேசு

 

 

XV


உயிர்த்த இயேசு

   

 


My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com