மாத ஊழியங்கள்

Monthly Ministries

 1. இரட்சிப்பு அபிஷேகத் தியானங்கள் :

இயேசு இந்த உலகுக்கு வந்தது, மனிதனை “மீட்டு” இரட்சிக்க - 1திமொ 1:15. இயேசு உலகிலிருந்து பரலோகத்திற்குச் சென்றது, மீட்படைந்த மனிதனுக்கு, ஆவியின் “அபிஷேகம்” வழங்க - யோவா 16:7. எல்லா மனிதரும், மீட்படைய வேண்டுமென்று, விரும்பிய இயேசு - 1திமொ 2:4, மக்களை, “மனம் திரும்புவதற்கு” அழைத்தார் - மாற் 1:15.

இதுவே, ஆதி ஆவிக்குரிய சபையின், போதனையுமாயிருந்தது. பெந்தக்கோஸ்து நாளன்று, ஆவியின் அபிஷேகம் பெற்ற பேதுரு, முதல் ஆவிக்குரிய நற்செய்தியை அறிவித்தார். அந்த அறிவிப்பின் முடிவில், அதைக் கேட்டவர்கள், உள்ளம் குத்துண்டவராய், தாங்கள், இனி என்ன செய்ய வேண்டும் என்று, பேதுருவிடம் கேட்டார்கள். அதற்குப் பேதுரு அவர்களிடம், மனம் திரும்புங்கள், பாவமன்னிப்பு அடையுங்கள், அப்பொழுது, தூய ஆவியாரின் திருக்கொடையை பெறுவீர்கள் என்றார் - தி.ப 2:37,38. இந்த மீட்பின் பணியை, “பைபிள் திருச்சபை” தொடர்ந்து ஆற்றியது. கொர்னேலியுவின் வீட்டில் - தி.ப 10:44-48, சமாரியாவில் - தி.ப 8:14-16, எபேசு திருச்சபையில் - தி.ப 19:2-6.

இந்த பைபிள் பாரம்பரியத்தின்படியே, CPM சபையும், செய்கிறது. மீட்புக்காக, ஏற்கெனவே ஆயத்தம் செய்யப்பட்ட மக்களை, மாதமொருமுறை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு, ஆறு நாட்கள், “இரட்சிப்பு – அபிஷேக” சத்தியங்களைக் கற்றுத் தந்து, ஆவிக்குரிய அனுபவங்களையும், கொடுக்கிறோம். ஆறு நாட்களின் செய்திகளாலும், ஜெப அனுபவங்களாலும், மீட்படைந்து, அபிஷேகம் பெற்று, புது மனிதர்களாக மாற்றப்பட்ட விசுவாசிகள், CPM சபையில் சேர்ந்து வளர்கிறார்கள்.

தியான நாட்கள் : எல்லா மாதமும், இரண்டாவது சனி தொடங்கி ஆறு நாட்கள்

தியான இடம் : CPM, பரிசுத்த ஆவிப் பேராலயம்.

தியான நேரம் : காலை 9.30 - பிற்பகல் 3 மணி.

 2. மேய்ப்பர்கள் ஐக்கியம் :

இயேசு தம்முடைய ஊழியர்களை ஆசீர்வதித்து, இருவர் இருவராக, ஊழியத்துக்கு அனுப்பினார் - மாற் 6:7. அவர்களும் எங்கும் சென்று, மக்கள் மனம் மாற வேண்டுமென்று, பறைசாற்றினர்; பல பேய்களை ஓட்டினர்; உடல் நலமற்றோர் பலரை குணப்படுத்தினர் - மாற் 6:12,13.

அந்த திருத்தூதர்கள், இயேசுவிடம் திரும்பி வந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம், அவருக்கு அறிவித்தார்கள்; இயேசு அவர்களிடம், பாலைவனத்திலுள்ள, தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று, அவர்களை ஓய்வெடுக்கச் சொன்னார்; ஏனெனில், பலர் வருவதும், போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக் கூட, அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை; அவ்வாறே, அவர்கள் படகேறி, பாலைநிலத்திலுள்ள, தனிமையான ஓர் இடத்துக்கு சென்றார்கள் - மாற் 6:30-32.

CPM ஊழியர்களும், மாதமொரு முறை, ஆலயத்தில் கூடி, தங்களுடைய ஒரு மாத பணிகளை அலசுகிறார்கள். இவர்கள், ஒவ்வொரு மிஷன்களாகப் பிரிந்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஜெபித்து, அந்த நாளை சிறப்பிப்பார்கள். அவர்களுக்கு, ஊக்கமூட்டும் அறிவுரைகளும், ஊக்கமூட்டும் செய்திகளும், வழங்கப்படும். ஒரு நாள் முழுவதும், இறை பாதத்தில் அமர்ந்து, ஜெபித்து, பகிர்ந்து உண்டு நிறைவடைந்து, தங்கள் குடும்பங்களுக்கு திரும்புவர்.

நாள்: பிரதி மாதம், கடைசி வியாழக்கிழமை

நேரம்: காலை 9.30 - பிற்பகல் 1.30 மணி.

இடம்: CPM, பரிசுத்த ஆவி பேராலயம்.

 3. அருங்கொடையாளர் ஐக்கியம் :

புனித பவுல், உரோமை விசுவாசிகளுக்கு எழுதும் போது, நான் அங்கு வந்து, உங்களை உறுதிப்படுத்த, ஆவிக்குரிய கொடைகள் ஏதேனும், வழங்கலாம் என, விழைகிறேன் என்றார் - உரோ 1:11. ஆதிசபையின் இந்த ஆவிக்குரிய புதுப்பித்தலையே, சில சபைகளில், “உறுதிப்பூசுதல்” என்கிறார்கள்.

பல ஆண்டுகள், ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு, அவ்வப்போது, அவர்களை உறுதிப்படுத்த, ஆவிக்குரிய கொடைகள் வழங்கும் பணியும், CPM சபை செய்கிறது. இவ்வாறு, அருங்கொடைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், “அருங்கொடையாளர்கள்” என்று அறியப்படுகிறார்கள்.

இவர்கள், தாங்கள் வாழும் குடும்பங்களிலும், சமுதாயத்திலும், நற்செய்திப் பணியாற்றும் போது, தாங்கள் பெற்ற வரங்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு, மாதமொரு முறை, அருங்கொடையாளர் ஐக்கியத்தின் மூலம், கூடி ஜெபிக்க, கூடி பகிர்ந்து கொள்ள, கூடி ஊக்கமூட்ட, வாய்ப்புக்களைத் தருகிறோம். வேதத்தின் ஆழமான படிப்பினைகளையும் பெற்று, இவர்கள் நிறைவோடு இல்லம் செல்கிறார்கள்.

கூட்ட நாள் :பிரதி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை

கூட்ட நேரம் :காலை 9.30 - பிற்பகல் 1.30 மணி

கூட்ட நேரம் :CPM, பரிசுத்த ஆவி பேராலயம்.

 4. அன்பு விருந்து :

ஆதி ஆவிக்குரிய சபையில், விசுவாசிகள், அவர்கள் கூடி வந்த போதெல்லாம், அப்பத்தைப் பிட்டு, உணவை பகிர்ந்து உண்டு வந்தார்கள் - தி.ப 2:46. இந்த வழக்கம் தொடர்ந்து, அது அன்புறவை பிரதிபலிக்கும் ஒரு பழக்கமாகவே மாறியது. கிரேக்கத்தில், இது 'கோயிநொனியா" என்று, அழைக்கப்படுகிறது - 2பேது 2:13; 1கொரி 11:20-22.

ஆதி ஆவிக்குரிய சபையின், அதே பழக்கத்தை, CPM சபையும் பின்பற்றுகிறது. ஆவிக்குரிய பிள்ளைகள், மாதமொரு முறை, ஒன்று கூடுகிறார்கள். இரட்சிப்பு அபிஷேக தியானம் முடிகின்ற ஞாயிறு அன்று, சபையில் அபிஷேகம் பெற்ற, எல்லா விசுவாசிகளும் ஒன்று கூடுவார்கள். புதிதாக மீட்படைந்த விசுவாசிகளை, அவர்கள் அன்பொழுக அரவணைத்து ஊக்கப்படுத்துவார்கள். அந்த புதியவர்களுக்காக, ஒரு பெரிய ஆவிக்குரிய குடும்பம், என்றும் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஊட்டுவார்கள்.

இந்தப் பின்னணியில், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபையில், ஞாயிறு ஆராதனை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில், ஒன்பது மணியிலிருந்து, பிற்பகல் ஒன்றரை மணி வரையிலும், வழிபாடுகளும், பலிவிருந்தும் நடைபெறுகின்றன.

ஒரு மாத காலம், விசுவாசிகள் சேமித்து வைத்த, நன்றி காணிக்கைகளை, பணமாகவும், பொருளாகவும், அன்றைய பலிவிருந்தில் ஒப்புக் கொடுப்பர். அன்று மதியம், பலிவிருந்துக்குப் பின்பு, அன்பு விருந்து நடைபெறும். அதில், புதியவர்களும், பழையவர்களும், கலந்து கொண்டு, அன்பால் கட்டுண்டு, புதிய ஆவிக்குரிய வாழ்வை, அன்று ஆரம்பிப்பார்கள்.

நாள்: இரட்சிப்பு அபிஷேக தியானம் முடிகின்ற ஞாயிறு.

நேரம்: ஞாயிறு ஆராதனையில்

இடம் : CPM, பரிசுத்த ஆவி பேராயலம்.

 5. இயேசுவின் நண்பர் சபைக் கூட்டங்கள் :

ஒருவன், தன் நண்பனோடு பேசுவது போலவே, ஆண்டவர் மோசேயிடம் பேசுவார் - வி.ப 33:11. ஆபிரகாம் கடவுளின் நண்பர் என்று, யோசேபாத் மன்னன் ஜெபித்தார் - 2குறி 20:7. இஸ்ராயேல் மக்களைப் பற்றி, கூறும் போது, என் நண்பன் ஆபிரகாமின் வழிமரபே என்று, கடவுள் கூறினார் - எசா 41:8, யாக் 2:23.

இயேசு தம் சீடர்களைப் பற்றி கூறும் போது, நீங்கள் என் நண்பர்கள் என்று, கூறினார் - யோவா 15:15. இயேசு தாம் அன்பு செய்த லாசருவை, தன் நண்பன் என்று அறிவித்தார் - யோவா 11:11. இவ்வாறு, இயேசுவின் நண்பர்களாக இருப்பவர்களுக்காக, இயேசு தன் உயிரையும் கொடுக்கிறார் - யோவா 15:13,14.

எனவே, ஆவிக்குரிய விசுவாசிகள், உலகுக்கு நண்பர்களாக அல்ல; இயேசுவுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும் - 1யோவா 2:15. இந்த படிப்பினையின் படி, CPM சபையின் ஆவிக்குரிய விசுவாசிகள், “இயேசுவின் நண்பர் சபையில்” உறுப்பினர்களாகி, இயேசுவின் நண்பர்களாக, இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று, பயிற்சி பெறுகிறார்கள். இயேசுவின் நண்பர் சபையில் உறுப்பினராயிருக்கும் ஆவிக்குரிய விசுவாசிகள், மாதம் ஒருமுறை, ஒன்றாக கூடி, உரையாடி, உறவாடி, அன்புப் பணிகளும், அறப்பணிகளும், சபையிலும், வெளியிலும், செய்கிறார்கள்.

நாள்: அன்பு விருந்து நடைபெறும் நாள்.

நேரம்: பிற்பகல் 2.30 - 3.30 மணி

இடம் : CPM, பரிசுத்த ஆவி பேராயலம்.

 6. உழைப்பாளர், வாலிபர், மாணவர் சிறப்பு ஆராதனை :

நீ கையிட்டுச் செய்யும் தொழில்களை, நான் ஆசீர்வதிப்பேன் என்று, கடவுள் கூறுகிறார் - இ.ச 28:8. வாழ்வுக்குத் தேவையான, வருமானங்களை உண்டாக்க, வேலை இல்லையே என்று, வருந்தி நின்றவர்களை, இயேசு அழைத்து, வேலை கொடுத்ததாக, உவமை ஒன்றில் காண்கிறோம் - மத் 20:1-7. சீடர்கள், வேலைக்குச் சென்று, பலன் இல்லாமல், சோர்ந்திருந்த போது, நல்ல ஆலோசனை வழங்கி, தொழிலை இயேசு ஆசீர்வதித்தார் - லூக் 5:4-7. வேலை செய்து, களைத்துப் போன சீடர்களுக்கு, இயேசு உணவு சமைத்து தந்து, அவர்களின் களைப்பை ஆற்றினார் - யோவா 21:11-14.

கடவுள், மனிதருடைய இளமைப்பருவத்தை, கனம் செய்கிறார். உன் வாலிப நாட்களில், உன்னைப் படைத்தவரை மறவாதே என்று, கடவுள் கூறுகிறார் - ச.உ 12:1. இளைஞர்களை, தம்பிகளாக நடத்த வேண்டும் என்று, திமொத்தேயுவுக்கு, பவுல் அறிவுரை கூறினார் - 1திமொ 5:1. இளைஞர், முதியவருக்கு பணிந்திருக்க வேண்டுமென்றும், மனத்தாழ்மையை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டுமென்றும், பேதுரு அறிவுரை கூறுகிறார் - 1பேது 5:5.

மாணவர்கள், தாங்கள் கற்றுக்கொள்ளும் படிப்பில், வளர வேண்டுமென்றால், கடவுளிடம் ஞானம் பெற்றுக்கொள்ள வேண்டும் - யாக் 1:5. பள்ளிப்பாடத்தை கற்றுக் கொள்வதற்கு முன்னால், இயேசுவிடம், நற்குணங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, இயேசு கூறினார் - மத் 11:29. மேலும், பரிசுத்தவான்களின் வாழ்க்கையைப் பார்த்து, தூய வழிகளை, கற்றுக்கொள்ள வேண்டும் - 1கொரி 4:6. கடவுளைப் பழித்துரைக்காதிருக்க, மாணவர்கள், முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் - 1திமொ 1:20. பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்த, கற்றுக் கொள்ள வேண்டும் - தீத் 3:14.

இந்த வேதப்படிப்பினைகளின் பின்னணியில், ஆவிக்குரிய உழைப்பாளர், இளைஞர், மாணவர்களை, ஒன்று கூட்டி, அவர்களுக்கென்று, மாதமொருமுறை, தனி ஆராதனைகளும், குழு பகிர்தலும், ஜெபங்களும் நடத்துகிறோம். இதனால் அவர்கள், தங்கள் நிலைகளில், நாளுக்கு நாள், முன்னேறுகிறார்கள். சோர்வு, பின்னடைதல்கள் இன்றி, சோதனைகளை வென்று, வாழ்வில் வெற்றி அடைகிறார்கள்.

நாள்:மாதத்தின் நான்காவது ஞாயிறு.

நேரம்:ஞாயிறு ஆராதனையில்

இடம்:CPM, பரிசுத்த ஆவி பேராலயம்.

 

My status......இரட்சிப்பு அபிஷேகத் தியானங்கள் ஆண்டு ஊழியங்கள்


 ஆவிக்குரிய திருமணம்......மேய்ப்பர்கள் ஐக்கியம்


.....


அருங்கொடையாளர் ஐக்கியம்.....


 திருமறை வகுப்புக்கள்


 பைபிள் விளக்கம்......“வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29


 திருவருட்சாதனங்கள்


 உத்தரிக்கும் ஸ்தலம்


 நல்லவரோடு கடவுள்


.....அன்பு விருந்து
......


இயேசுவின் நண்பர் சபைக் கூட்டங்கள்

My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com