முன்னுரை


உலகம் விரும்பாத துன்பம்:

 • பொதுவாகவே, துன்பம் என்றால் உலகம் அதை விரும்பி ஏற்காது.
 • அவ்வண்ணமே “உலக கிறிஸ்தவர்களும்” துன்பத்தை ஏற்க விரும்புவதில்லை.
 • துன்பத்தை “சாபம்” என்ற ஒரு வார்த்தையால் அணிசெய்து, இழிவுபடுத்தி ஒதுக்குகிறது இந்த உலகம்.
 • ஆனால் உலகம் புறக்கணித்ததை கடவுள் ஏற்றுக்கொண்டு, “அந்த துன்பத்தாலேயே” உலகை மீட்டார்.
 • அதிலிருந்து, “சாபமான துன்பம்”, மீட்பின் துன்பமாயிற்று”.

"ஆவிக்குரியவர்களும் துன்பமும்"

 • எனவே, ஆவிக்குரியவர்கள், துன்பத்தை, சாபமாக அல்ல, அதை “ஆசீராகவே” ஏற்றுக்கொள்வார்கள்.
 • ஆதி அப்போஸ்தல சபையும், துன்பத்தை விரும்பி ஏற்று, அதையே தம் மக்களுக்கும் போதித்தது.
 • அந்த போதனையைப் பற்றிய “வேதபாடத்தை” தொடர்ந்து பார்ப்போம்.

ஆதி ஆவிக்குரிய சபையில் துன்பத்தைப்பற்றிய உபதேசம்


A.சிலுவையும் இயேசுவும்:


ஆதி ஆவிக்குரிய சபை போதனையில் “துன்புறும் இயேசு”:

 • நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றி பறைசாற்றுகிறோம் - 1கொரி 1:23
 • நான் உங்களிடையே இருந்த போது மெசியாவாகிய இயேசுவை தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரை தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. – 1 கொரி 2:2.
 • இவ்வுலக தலைவர்கள் மறைவாயிருந்த இறை ஞானத்தை அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள் - 1கொரி 2:8.
 • இயேசு வலுவற்றவராய் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், கடவுளின் வல்லமையினால் அவர் உயிர் வாழ்கிறார். – 2கொரி 13 : 4.
 • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய், உங்கள் கண்முன் படம் பிடித்து காட்டப்படவில்லையா? – கலா 3 : 1.
 • சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் அம்மாநகரில் தான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார் - வெளி 11 : 8.
 • இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார் - பிலி 2:8.

ஆதி ஆவிக்குரிய சபை, இயேசுவின் துன்பத்தில் பங்கு பெற்றது:

 • அவருடைய “வலுவின்மையில் பங்குபெறும்” நாங்களும், உங்கள் பொருட்டு கடவுளின் வல்லமையால், அவரோடு வாழ்வோம். – 2 கொரி 13 : 4.
 • நானோ ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன் - கலா 6 : 14.


 
"பல்வேறு கண்ணோட்டத்தில் சிலுவை"


1. இயேசுவின் சிலுவையில் பங்குபெற்ற ஆதி ஆவிக்குரிய சபை:

 • நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய “பழைய மனித இயல்பு” அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. – உரோ 6 : 6.
 • நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். - கலா 2 : 19.
 • கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டார்கள் - கலா 5 : 24.

2. பின்வாங்கி போகிறவர் இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்:

 • ஒரு முறை விண்ணக கொடையை சுவைத்த பின் நெறி பிறழ்ந்து விடின், அவர்களை மனம்மாற்றி புத்துணர்வு பெற செய்வது அரிது. ஏனெனில், இவர்கள் இறைமகனை “தாங்களே சிலுவையில் அறைந்து” வெளிப்படையாக இழிவுபடுத்துகிறவர்கள் ஆவர் - எபி 6 : 4-6.

3. சிலுவையிலேயே மகிமையும் உள்ளது:

 • பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. – யோவா 19:19.

4. “மனித ஞானம்” சிலுவையை ஏற்காது:

 • மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில், இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்று போய்விடும் - 1 கொரி 1 : 17.

"கிறிஸ்தவனும் சிலுவையும்"


அன்றாட துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்று, கிறிஸ்துவுக்குப் பின் செல்பவனே, அவருடைய சீடன்

 • தம் சிலுவையை சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர் - மத் 10 : 38.
 • தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்கு சீடராய் இருக்க முடியாது. – லூக் 14:27.
 • என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை தூக்கி கொண்டு என்னைப் பின்பற்றட்டும் - மத் 16:24, மாற் 8 :34.
 • என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை “நாள்தோறும்” தூக்கி கொண்டு என்னைப் பின்பற்றட்டும் - லூக் 9 : 23.

நீ விரும்பாமலும், எதிர்பார்க்காமலும் கூட, சிலுவை உன்மீது திணிக்கப்படும்.

 • அவர்கள் வெளியே சென்ற போது, சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள். இயேசுவின் சிலுவையை சுமக்குபடி அவரை “கட்டாயப்படுத்தினார்கள்”; - மத் 27 : 32, லூக் 23 : 26.

இயேசுவோடு “நெருக்கமான உறவு" உள்ளவர்கள், துன்பத்தில் இயேசுவை விட்டு, தூரம் போகமாட்டார்கள்.

 • சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தார்கள் - யோவா 19:25.

சிலுவையை ஏற்காத உலகம்:

 • அச்சிலுவை யூதருக்கு “தடைக்கல்லாகவும”;, பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. 1 கொரி 1 : 23.
 • கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர் - பிலி 3:18.
 • நீ இறைமகன் என்றால், சிலுவையிலிருந்து இறங்கி வா என்று இயேசுவை அவர்கள் பழித்துரைத்தார்கள் - மத் 27:40.
 • இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம் -மத் 27 : 42. என்றனர்.
 • சிலுவை பற்றிய செய்தி “அழிந்து போகிறவர்களுக்கு” மடமையே. ஆனால், மீட்பு பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. 1 கொரி 1 : 18.


சிலுவையும் துன்பமும் ஒன்றே:

 • இயேசு தாமே "துன்புற்று" பகைமையை அழித்தார். "சிலுவையின்" வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கி கடவுளோடு ஒப்புரவாக்க இவ்வாறு செய்தார். எபே 2 :16
 • கிறிஸ்துவின் "சிலுவையை" முன்னிட்டு, தாங்கள் "துன்புறுத்தபடாமல்" இருக்கவே அவர்கள் விருத்தசேதனம் செய்கிறார்கள் - கலா 6 : 12.
 • சிலுவையில் இயேசு "சிந்திய இரத்தத்தால்" (பட்ட பாடுகளால்) அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மணணிலுள்ளவை அனைத்தையும், அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோ 1 : 20.


 
"கிறிஸ்தவனும் துன்பமும்"


ஆவிக்குரியவர்களுக்கு துன்பம், “நன்மை” நிறைந்ததும், விரும்பி ஏற்கத்தக்கதுமாகும்:

 • உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கிறது. ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கிறது – தி.பா 119:50.
 • எனக்கு துன்பம் விளைந்து என் நன்மைக்காகவே. அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன் - தி.பா 119 : 71.
 • உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால், என் துன்பத்தின் நான் மடிந்து போயிருப்பேன் - தி.பா 119 : 92.
 • நான்பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது. உங்கள் நன்மனத்தை காட்டுகிறது – பிலி 4 : 14.

துன்பத்தை ஆவிக்குரியவர்கள் “மகிழ்ச்சியோடு” ஏற்றுக் கொள்ள வேண்டும்:

 • அவர்களுக்கு ஏற்பட்ட “இன்னல்களால்” கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும், அவர்கள் எப்போதும் “மகிழ்ச்சி” நிறைந்தவர்களாய் இருந்தார்கள் - 2கொரி 8 : 2.
 • மிகுந்த “வேதனை” நடுவிலும், நீங்கள் தூயஆவி அருளும் “மகிழ்வோடு” இறைவார்த்தையை ஏற்றுக் கொண்டீர்கள் - 1 தெச 1 : 6.
 • அவர் தாம் “அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு” இழிவையும் பொருட்படுத்தாமல் “சிலுவையை” ஏற்றுக் கொண்டார் - எபி 12 : 2. “சிலுவை = மகிழ்ச்சி”.

துன்பத்தில் மனம் தளராதிருக்க “விசுவாசம்” வேண்டும்:

 • நீங்கள் படும் துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு, உங்கள் “நம்பிக்கையை” உறுதிபடுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை (திமொத்தேயு) அனுப்பினோம் -1 தெச 3:3; எபே 3 : 13.

துன்புற்ற மோசே ஒரு எடுத்துக்காட்டு:

 • பாவத்தில் சிறிது காலம் இன்புறுவதை விட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து “துன்புறுவதையே”, மோசே தேர்ந்து கொண்டார் - எபி 11 : 25.
 • மோசே, எகிப்தின் செல்வங்களை விட, மெசியாவின் பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார் - எபி 11 : 26.

கிறிஸ்துவோடு நெருக்கமாக உள்ளவர்களுக்கு துன்பம் உண்டு:

 • கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து, இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர் - 2 திமொ 3 : 12.

துன்பத்தை ஏற்றுகொள்பவர்களே ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்:

 • நீங்கள் ஒளி பெற்ற பின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு “ஏற்றுக் கொண்டீர்கள்”; - எபி 10 : 32.
 • நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, “வேடிக்கை பொருளானீர்கள்”. சில வேளைகளில் இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் “பங்கு பெற்றீர்கள்” - எபி 10 : 33
 • யாராவது உங்களை அடிமைப்படுத்தினாலும், சுரண்டினாலும், உங்களுக்கு கண்ணி வைத்தாலும், உங்களிடம் இறுமாப்போடு நடந்து கொண்டாலும், உங்களை கன்னத்தில் அறைந்தாலும் நீங்கள் “பொறுத்து கொள்கிறீர்கள்” - 2கொரி 11 : 20.
 • யூதர்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டது போலவே, நீங்களும் உங்கள் சொந்த இனத்தாரால் “துன்புறுத்தப் பட்டீர்கள”;. – 1 தெச 2 : 14.
 • உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய "சகிப்பு தன்மையையும்", இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த “மனவுறுதியையும் நம்பிக்கையையும்” முன்னிட்டு பெருமைப்படுகிறோம். 2 தெச 1 : 4.


1. துன்பத்தை ஏற்ற பின்பே விடுதலை:

 • சிறிது கால துன்பங்களுக்கு பின், கடவுள் உங்களை சீர்படுத்தி, உறுதிபடுத்தி, வலுபடுத்தி நிலைநிறுத்துவார் 1 பேதுரு 5 : 10.

2. ஒருவர் ஏற்கும் துன்பம், மற்றவர்க்கு ஆறுதலையும், மீட்பையும் அளிக்கும்:

 • நாங்கள் துன்புறுகிறோம் என்றால், அது உங்கள் ஆறுதலுக்காகவும், மீட்புக்காகவும் தான் - 2கொரி 1 : 6.

3. ஆவிக்குரியவர்கள் துன்பத்தை ஏற்றுவாழ, தேவகிருபை வழங்கப்படுகிறது:

 • கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல, அவருக்காக “துன்பங்களை ஏற்பதற்காகவும்” நீங்கள் அருள் பெற்றுள்ளீர்கள் - பிலி 1 : 29.

4. துன்பத்தை ஏற்றுவாழ்பவர்களுக்கு “மகிமையான வாழ்வு” நிச்சயம் உண்டு:

 • இக்காலத்தில் நாம்படும் துன்பங்கள், எதிர்காலத்தில் நமக்காக வெளிப்பட போகிற மாட்சியோடு ஒப்பிட தகுதியற்றவை என எண்ணுகிறேன் - உரோ 8 : 18.

5. ஆவிக்குரிய வாழ்வு என்னும் நாணயத்தின் ஒருபக்கம் துன்பம், மறுபக்கம் ஆறுதல்:

 • நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்தது போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள் - 2 கொரி 1 : 7, 2 கொரி 1 : 4.

6. கிறிஸ்துவிடம் நாம் வைத்துள்ள அன்பு, எந்த துன்பத்தையும் ஏற்கும் பெலனை தரும்:

 • கிறிஸ்துவின் அன்பிலிருந்து, நம்மை பிரிக்க கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மை பிரிக்க முடியும்? – உரோ 8 : 35.

 
"ஆதிசபையும் துன்பமும்"


துன்புறும் ஆவிக்குரியவர்களைப் பற்றி, வெளிப்பாடு நூல்:

 • இயேசுவோடு இணைந்த நிலையில், “உங்கள் வேதனையிலும்”, ஆட்சியுரியுமையிலும், மனவுறுதியிலும் பங்கு கொள்பவனுமான யோவான் என்னும் நான் - வெளி 1 : 9.
 • உன் “துன்பத்தையும்”, ஏழ்மையையும் நான் அறிவேன் - வெளி 2 : 9.
 • கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுகுட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கி கொண்டவர்கள் - வெளி 7 :14


ஆவிக்குரிய மக்கள் துன்பத்தை ஏற்பதால் மீட்கபடுகிறார்கள்:

 • தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள் - ஓசே 5 : 15.
 • துன்புற்றோரை துன்பத்தால் கடவுள் காப்பார். வேதனையால் அவர்கள் காதை திறப்பார் - யோபு 36 : 15.


திராணிக்கு மேல், துன்ப சோதனை இருக்காது:

 • நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறது காலம் தான் நீடிக்கும். ஆனால், அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. 2 கொரி 4 : 17.
 • உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது, அதை தாங்கி கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார். அதிலிருந்து விடுபட வழி செய்வார் - 1 கொரி 10 : 13.
 • சிறிது கால துன்பங்களுக்கு பின், அவர் உங்களை சீர்படுத்தி, உறுதிபடுத்தி, வலுபடுத்தி நிலை நிறுத்துவார். 1 பேதுரு 5 : 10.

துன்பத்தை ஏற்கும் சபையாகிய உடல்:

 • ஓர் உறுப்பு துன்புற்றால், அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும் - 1கொரி 12 : 26.
 • துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால் துன்புறுத்தபடுபவர்களை மறவாதீர்கள் - எபி 13 : 3.

துன்பத்தில் கடவுளின் நீதி:

 • உங்களை துன்புறுத்துகிறவர்களுக்கு துன்பத்தையும், துன்புறுத்தப்படும் உங்களுக்கு, துயர் நீங்கி அமைதியையும் கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றோ! – 2தெச 1 : 6

ஆவிக்குரிய மக்களுக்கு துன்பம் வந்தே தீரும்:

 • துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்கு தெரியும் - 1தெச 3 : 3
 • நீங்கள் துன்பப்படத்தான் வேண்டும் - 1தெச 3 : 4.
 • “துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்” – யோபு 5:7.

 
"இயேசுவும் துன்பமும்"


1. “துன்பப்பட்டதால் துன்புறுவோருக்கு உதவி”

 • இயேசு தாமே சோதனைக்கு உள்ளாகி துன்பப்பட்டதனால், “சோதிக்கப்படுவோருக்கு உதவி” செய்ய அவர் வல்லவர் - எபி 2 : 18, 4 : 15, 5 : 2.

2. இறை சித்தத்துக்கு கீழ்படிந்து துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று "இயேசு முன்மாதிரி" காட்டினார்.

 • அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்படிதலை கற்றுக்கொண்டார் - எபி 5 : 8

3. துன்புற்று பாவபரிகாரம் செய்வது “இயேசு காட்டிய வழி”:

 • இயேசு தம்மையே பலியாக கொடுத்து, பாவங்களை போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார் - எபி 9 : 26, 1 பேதுரு 3 : 18.

4. இயேசு “துன்பத்தில் பொறுமை” காத்தார்:

 • பழிக்கப்பட்ட போது, பதிலுக்கு பழிக்கவில்லை. துன்புறுத்தப்பட்ட போது அச்சுறுத்தவில்லை – 1 பேதுரு 2 : 23

6. பிறர் மீட்புக்காக நாம் துன்பபட “இயேசு வழிகாட்டினார்”:

 • கடவுளின் அருளால், அனைவருடைய நலனுக்காகவும் இயேசு சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது. எபி 2 : 9.

7. இயேசுவின் துன்பத்தில் “எனக்கும் பங்கு”:

 • கிறிஸ்துவையும், அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். – பிலி 3 : 10.

8. மீட்பு பணியில் “துன்பம் உண்டு”:

 • மீட்பை தொடங்கி வழிநடத்துபவரை (இயேசுவை) துன்பங்கள் மூலம் கடவுள் நிறைவுள்ளவராக்கினார். – எபி 2 : 10.

9. கிறிஸ்து “துன்பப்பட வேண்டும்”:

 • தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து பட வேண்டிய துன்பங்களையும், அவற்றுக்கு பின் அடைய வேண்டிய மாட்சியை முன்னறிவித்த போது, அந்த காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர் - 1 பேதுரு 1 : 11.

10. நாம் கிறிஸ்துவின் “துன்பங்களுக்கு சாட்சியாக” இருக்க வேண்டியவர்கள்:

 • கிறிஸ்துவின் துன்பங்களுக்கு சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சிமையில் பங்குகொள்ள போகிறவருமாகிய நான் - 1 பேதுரு 5 : 1.

11. துன்பத்தில் “இயேசு தரும் ஆறுதல்”:

 • கிறிஸ்து நமக்காக மிகுதியாக துன்புற்றார். அது போல, அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். – 2 கொரி 1 : 5.
 • கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்கள் ஆறுதல் பெற்றுள்ளதால், பல்வேறு இன்னல்களின் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. – 2 கொரி 1 : 4.
 • எல்லா இன்னல்களுக்கு இடையேயும், என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது. – 2 கொரி 7 :4
 • நீங்கள் என் துன்பத்தில் பங்கெடுத்தது போல், எங்களுடைய ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள் - 2 கொரி 1 : 7.

 
"துன்பமும் பவுலின் ஊழியமும்"


 • வேதனை, இடர் நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு நாங்கள் தாங்கி வருகிறோம் - 2 கொரி 6 : 4.
 • நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம், கண்விழித்தோம், பட்டினி கிடந்தோம் - 2 கொரி 6 : 5.
 • இந்நேரம் வரை பட்டினியோடும், தாகத்தோடும், ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம். நாடோடிகளாய் இருக்கிறோம் - 1 கொரி 4 : 11.
 • எங்களுக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. 2 கொரி 1 : 9.
 • எனக்கு வறுமையிலும் வாழ தெரியும்; வளமையிலும் வாழ தெரியும், வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ எந்த சூழலிலும் வாழ பயற்சி பெற்றிருக்கிறேன் - பிலி 4 : 12.
 • பன்முறை சிறையில் அடைபட்டேன். கொடுமையாய் அடிபட்டேன் ………… குளிரில் வாடினேன், ஆடையின்றி இருந்தேன் - 2 கொரி 11 : 23 – 27.
 • கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்க எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன்- பிலி 3 : 8.
 • பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோம் - 1 தெச 2 : 2.

துன்பத்தில் மகிழும் ஊழியர்:

 • உங்கள் பொருட்டு துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். கொலோ 1 : 24.
 • துன்பங்களை தாங்கி கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் - உரோ 5 : 3.
 • எல்லா இன்னல்களுக்கு இடையேயும், என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்கி வழிகிறது – 2 கொரி 7 : 4.
 • அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கபட்ட போதும், அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள் - 2 கொரி 8 : 2.

துன்பத்தில் பொறுமையுள்ள ஊழியர்:

 • எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம். துன்புறுத்தபடும் போது பொறுத்து கொள்கிறோம் - 1 கொரி 4 : 12.
 • நாங்கள் துன்பங்களை பொறுத்து கொள்வதைப் போல, நீங்களும் உங்கள் துன்பங்களை தளரா மனதுடன் பொறுத்து கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. – 2 கொரி 1 : 6.
 • எனக்கு நேரிட்ட இன்னல்களையும், துன்பங்களையும் பொறுத்துக் கொண்டேன் - 2 திமொ 3 : 11.

துன்பத்தில் கனிவு:

 • அவமதிக்கப்படும் போது "கனிவாக பேசுகிறோம்". நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். அனைத்திலும் கழிவுப்பொருட்கள் என கருதப்பட்டோம். – 1 கொரி 4 : 13.

துன்பத்தின் மத்தியில் நற்செய்தி ஊழியம்:

 • நற்செய்தி அறிவிப்பதன் பொருட்டே நான் துன்புற்று வருகிறேன் - 2 திமொ 1 :12
 • இந்நற்செய்திக்காகவே, நான் குற்றம் செய்தவனைப் போல சிறையிலிடப்பட்டு துன்புறுகிறேன். – 2 திமொ 2 : 9.

 
"துன்பத்தைப் பற்றிய பவுலின் உபதேசம்"


ஆவிக்குரியவர் துன்பங்களை ஏற்று வாழ வேண்டியவர்:

 • கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டு துன்பத்தில் என்னுடன் பங்குகொள் - 2 திமொ 1 : 8.
 • நீயோ அனைத்திலும் அறிவு தெளிவோடிரு. துன்பத்தை ஏற்றுக்கொள் - 2 திமொ 4 : 5.
 • துன்பத்தில் தளரா மனதுடன் இருங்கள் - உரோ 12 : 12.
 • உனக்கு வரவிருக்கும் துன்பத்தை பற்றி அஞ்சாதே – வெளி 2 : 10.
 • உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக்கொள்ள கூடாதா? -1 கொரி 6 : 7.

நற்செய்தியின் பொருட்டும், இறையரசின் பொருட்டும் துன்பம் உண்டு:

 • கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டு துன்பத்தில் என்னுடன் பங்கு கொள் - 2 திமொ 1 : 8.
 • இறையாட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள் - 2 தெச 1 : 5.
 • நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும் - தி.தூ 14 : 22.

பாடுகளில் மகிமையும் உண்டு:

 • அவருடைய துன்பங்களில் நாம் பங்குபெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம் - உரோ 8 : 17.
 • உங்கள் பொருட்டு நான் படும் துன்பங்களை கண்டு நீங்கள் மனந்தளர்ந்து போகாதபடி உங்களை வேண்டுகிறேன். அத்துன்பங்களே உங்களுக்கு பெருமையாக அமையும் - எபே 3 : 13.

துன்பத்தை ஏற்பதில் பரிசுத்தவான்களே முன்மாதிரி:

 • நீங்கள் தளர்ச்சிக்கு இடம் கொடாமல் நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாக பெற்றவர்களைப் போல் வாழுங்கள் - எபி 6 : 12.
 • நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் இறைவாக்கினர்களை மாதிரிகளாக கொள்ளுங்கள் - யாக் 5 : 10.
 • கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்து கொள்வதும் ஆகும். – யாக் 1 : 27.

 
"துன்பத்தை ஏற்க பேதுருவின் உபதேசம்"


 • நன்மை செய்தும் அதற்காக பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும் - 1 பேதுரு 2 : 20.
 • நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்கு தீமை செய்ய போகிறவர் யார் - 1 பேதுரு 3 : 13.
 • நீதியின் பொருட்டு துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறுபெற்றவர்களே – 1 பேதுரு 3 : 14.
 • அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அலகையை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 1 பேதுரு 5 : 9.
 • தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்கு திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல் - 1 பேதுரு 3 : 17.
 • உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்க கூடாது – 1 பேதுரு 4 : 15.
 • நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கபடலாகாது. அந்த பெயரின் பொருட்டு கடவுளை போற்றி புகழுங்கள் - 1 பேதுரு 4 : 16.
 • கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக – 1 பேதுரு 4 : 19.
 • கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று, ஒரு முனமாதிரியை வைத்து சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள் - 1பேதுரு 2 : 21.
 • கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாக பூண்டு கொள்ளுங்கள் - 1 பேதுரு 4 : 1.
 • ஒருவர் அநியாயமாக துயருறும் போது, கடவுளை மனதில் கொண்டு, அதை பொறுமையோடு ஏற்று கொள்வாராயின், அதுவே கடவுளுக்கு உகந்தது ஆகும் - 1 பேதுரு 2 : 19.
 • துன்ப தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்று எண்ணி மகிழுங்கள். – 1 பேதுரு 4 : 12.

"முடிவுரை"


மெசியா ஏற்ற துன்பமும் மெசியாவின் மக்களும்:

 • ஆவிக்குரிய இயேசு மகிழ்வோடு ஏற்ற துன்பம், இந்த உலகை மீட்டது.
 • அவ்வாறே, ஆவிக்குரியவர்களும், “துன்பத்தை” ஒரு “வெற்றுத்துன்பமாக” அல்ல, மாறாக, “மீட்பின் துன்பமாகவே” ஏற்றார்கள்.
 • “சிலுவை”, அழிவுறுவோருக்கு “மடமை”, வாழ்வடைவோருக்கு “ஆசீர்” என்று நம்பினார்கள்.

இரத்தசாட்சிகளும் ஆதி ஆவிக்குரிய சபையும்:

 • மேலே சொன்ன சத்தியங்களே, “இரத்தசாட்சிகளை” உருவாக்கின.
 • விசுவாசிகளை, “விசுவாசத்துக்கு வித்தான இரத்தம்” சிந்த வைத்தது, மேலே கண்ட போதனைகளே.
 • மேலும், ஆவிக்குரிய ஆதிசபையின், “துன்பம்” பற்றிய படிப்பினையால், வலுவடைந்த திருச்சபையில், “அனேக புனிதர்களும்” அவ்வண்ணமே உருவானார்கள்.

ஐந்துகாய பிரான்சிஸ், புனித பியோ:

 • துன்பத்தை இயேசுவிடமிருந்து “கேட்டு வாங்கியவர்களின்” சரிதை ஆவிக்குரிய சபையில் உண்டு.
 • அவர்களில் சிலரே, ஐந்துகாய பிரான்சிஸ், பாதர் பியோ போன்றவர்கள்.
 • அவ்வண்ணமே, துன்பங்கள், சிறை, சித்திரவதை, நெருக்கடிகளை சந்திக்க, ஆயத்தமான ஆயிரமாயிரம் மிஷனறிகளை உருவாக்கி, திருச்சபையை உலகமெங்கும் வளர்த்த இரண்டாயிரம் ஆண்டு சரித்திரம், “மீட்பின் துன்பத்துக்கு” உண்டு.
 • இன்றைய “உலக கிறிஸ்தவமும்” உலக போதனைகளும், “;துன்பத்தை” ஏற்க மறுத்தாலும், ஆவிக்குரிய பிள்ளைகள், துன்பத்தை “ஆசீராகவே” எப்போதும் ஏற்றுக்கொள்கிறார்கள்

 

 

My status 

I


அநியாய தீர்ப்பு

இயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


இயேசுவே என் ஜெபத்தைக் கேளும்


 

II


சிலுவை சுமக்கின்றார்

ஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


முடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்


 

III


முதன்முறை விழுகின்றார்

இயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


 

IV


தன் தாயை சந்திக்கின்றார்

காண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.

 

V


சீமோன் உதவி செய்கின்றார்

இயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.


என்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.


 

VI


வெறோணிக்காள் சந்திப்பு

பார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


 

VII


இரண்டாம் முறை விழுகின்றார்

இயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.


உனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்


 

VIII


பெண்களுக்கு ஆறுதல்

இயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்? – எசா 53:8.


தாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்


 

IX


மூன்றாம் முறை விழுகின்றார்

நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.


இயேசுவே! மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்


 

X


ஆடைகளை உரிதல்

இயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.


அஞ்சாதே! நான் உன்னோடிருக்கிறேன்


 

XI


சிலுவையில் அறைதல்

நம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.


உன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்


 

XII


சிலுவையில் உயிர்விடுதல்

இயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.


உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்


<

 

XIII


தாயின் மடியில்

இயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.


உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.


 

XIV


கல்லறையில் இயேசு

தீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.


உபவத்திரவம் உண்டு. அஞ்சாதே! நான் உலகை வென்றேன்.


 

XV


உயிர்த்த இயேசு

இயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.


 


My status

 
 
copyrights © 2012 catholicpentecostmission.com