இன்று - CPM சபை

CPM CHURCH - TODAY

 CPM - திருமறை:
 • பழைய ஏற்பாட்டில், 'அலெக்ஸான்ட்ரீய பாரம்பரிய" பைபிளான, நாற்பத்து ஆறு புத்தகங்களைக் கொண்ட பைபிளை, நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
 • அவ்வண்ணமே, புதிய ஏற்பாட்டின், இருபத்து ஏழு புத்தகங்களைக் கொண்ட, பைபிளை ஏற்றுக்கொள்கிறோம்.
 • ஆக, எழுபத்து மூன்று புத்தகங்களைக் கொண்ட, கத்தோலிக்க பாரம்பரிய பைபிளை, ஏற்றுக்கொள்கிறோம்.
 • மொழிபெயர்ப்புகளில், கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளை வழிபாட்டிற்கும், அதோடு மற்ற மொழிபெயர்ப்புகளையும், சிலவேளை வேதபாட ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறோம்.
 CPM - விசுவாச அறிக்கை:
 • அப்போஸ்தல விசுவாச அறிக்கை - கி.பி. 215 - க்கு முன்.
 • நைசீய விசுவாச அறிக்கை - கி.பி 325.

இந்த இரண்டு விசுவாச அறிக்கைகளையும், கத்தோலிக்க பாரம்பரியத்தில் உள்ள படியே, CPM சபை ஏற்றுக்கொள்கிறது.

இதில் அப்போஸ்தல விசுவாச அறிக்கையின் மொத்த பன்னிரண்டு வாக்கியங்களிலும், முதல் ஏழு வாக்கியங்களை, அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். கடைசி ஐந்துக்கும், ஆவிக்குரிய விளக்கம் தருகிறோம்.

 • தூய ஆவியை விசுவசிக்கிறேன்.
 • தூய கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
 • பாவ பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
 • சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
 • நிலை வாழ்வை விசுவசிக்கிறேன்.

இந்த ஐந்துக்கும் உள்ள ஆவிக்குரிய விளக்கம்:

 • பெந்தக்கோஸ்து நாளின், தூய ஆவியாருடைய, ஆட்கொள்ளுதலை, அதாவது, 'அருட்பொழிவை" யும், விசுவசிக்கிறேன் - தி.ப 2:1-4.
 • ஆவிக்குரிய கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன் - தி.ப 2:1-4,41?47.
 • மனம் மாறுதல், பாவமன்னிப்பால் வரும், 'மீட்பை" யும் விசுவசிக்கிறேன் - லூக் 1:77.
 • பழைய பாவ இயல்பை, சிலுவையில் அறைந்தவர்கள், உயிர்த்த உடலோடு, உயிர்ப்பின் மக்களாய், இம்மையிலும், மறுமையிலும் வாழ்கிறார்கள் என்பதையும் விசுவசிக்கிறேன் - உரோ 6:5-12, கொலோ 3:1-3.
 • மீட்படைந்து, அருட்பொழிவு பெற்றவர்கள், இறையாட்சியில் இருப்பவர்கள். இவர்கள், இம்மையிலேயே, நிலை வாழ்வைத் தொடங்குகிறார்கள் என்றும் விசுவசிக்கிறேன் - யோவா 3:15, 10:28, 4:14.
 CPM - பாரம்பரியம்

"ஆவிக்குரிய பாரம்பரியம்":


இன்று நாம் காணும், மேற்கத்திய, கிழக்கத்திய, சீர்திருத்த சபைகளின் பாரம்பரிய வாழ்விலும், வரலாற்றிலும், முதல் மூன்று நூற்றாண்டுகளில், செயல்பட்ட ஆவிக்குரிய திருச்சபையை, மறைவான நிலையில் இன்றும் காண முடிகிறது. மேலும், இந்த மூன்று சபைகளிலும், 'இரண்டாம் பொழிதல்" (Second Pouring) நடந்தேறிய வரலாறும், இன்று உண்டு.

முதல் மூன்று நூற்றாண்டுகளில், பிரகாசித்து வளர்ந்த ஆவிக்குரிய சபை, அதன் பாரம்பரிய வாழ்விலும், பணியிலும், எந்த தோய்வும் அடையாது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, பிரிந்து, உடைந்து, சிதறுண்டு வளர்ந்த, ஸ்தாபன சபைகளின் பாரம்பரியத்துக்குள் மறைந்திருந்து, 'இரண்டாம் பொழிதலின்" அனுபவத்துக்குப் பின், மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து, புத்துயிர் பெற்றுள்ளது. ஆதி ஆவிக்குரிய சபையின், இந்த இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியமே, CPM சபையின் பாரம்பரியம்.

 சபை போதனைகள் - Magisterium (Teaching of the Church) :

கத்தோலிக்க சபையின் பாரம்பரிய படிப்பினைகளிலும், கிழக்கத்திய, சீர்திருத்த சபைகளின் ஆவிக்குரிய படிப்பினைகளிலும், இன்றைய, நவீன, அறிவியல், தொழில்நுட்ப, வளர்ச்சியின் வெளிச்சத்தில், நாம் காணும், 'வேத - இறையியல் விளக்கங்களை", மிகுந்த ஜெபத்தோடும், ஆவியின் ஏவுதலின் படியும், நாம் ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு கற்பிக்கிறோம் - யோவா 16:13, எபே 5:17, கலா 5:16,18, 1யோவா 2:20,27.

 CPM - வழிபாடு:

அருட்சாதன வழிபாடுகளும் சரி, ஜெபவழிபாடுகளும் சரி, எல்லாவற்றிலும், மேற்கத்திய, கிழக்கத்திய, சீர்திருத்த சபைகளின், வழிபாட்டு பாரம்பரியத்தில், பொருத்தமானதை எடுத்துக்கொண்டு, அவற்றில், ஆவிக்குரிய ஜெப அனுபவங்களையும், வழிநடத்தல்களையும் இணைத்து, CPM வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 CPM - சபையின் தலைவர்:
 • CPM சபையை வழிநடத்த, 'திரு ஆட்சி பீடம்" ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 • ஆவியானவரே, திருச்சபையின் தலைவர்.
 • ஆதியில், பேதுருவையும் - தி.ப 4:8; 10:10,13-16,20,28-29; தொடர்ந்து பவுலையும் - தி.ப 9:4,5; 13:9 16:6,7É 22:17-18 ; வழிநடத்திய ஆவியானவர், CPM சபையையும் வழிநடத்துகிறார்.
 • திரு ஆட்சி பீடத்தின் பொறுப்புக்களான, "நிர்வாகம்", "ஊழியம்", "போதனை", ஆகிய எல்லாவற்றிலும், ஆட்சி பீட உறுப்பினர்கள், மனமொத்து, ஆவியின் துணை வேண்டி, வழிநடத்தல் பெற்று, சபையை நடத்துகிறார்கள்.
 • "பேதுரு" என்ற, "விசுவாசப்பாறையில்" திருச்சபை கட்டி எழுப்பப்படுகிறது.
 • துன்புறும் மெசியாவை ஏற்றுக்கொள்ளும், "விசுவாச அறிக்கையில்" திருச்சபை வழிநடத்தப்படுகிறது.
 • திருச்சபையின் சொல்லிலும், செயலிலும், வாழ்விலும், இயேசுவை மெசியா என்று ஏற்று வெளிப்படுத்துவதிலேயே, திரு ஆட்சி அமைந்திருக்கிறது.
 • முழுக்க முழுக்க, 'பாதம் கழுவும் பணிவில்", திரு ஆட்சி பீடம் வளர்கிறது.
 • தாழ்ச்சி, தியாகம், கனிவு, அன்பு, இறை பராமரிப்பில் பற்றுறுதி, ஆகியவற்றில், திரு ஆட்சி பீடம் கட்டி எழுப்பப்படுகிறது.
 • திருச்சபையின் மூப்பர்களிடமிருந்து, திருஆட்சி பீட உறுப்பினர்கள், தேர்வு செய்யப்படுகின்றனர்.
 • அவர்களில் ஒருவர், ஒருங்கிணைப்பாளராயிருப்பார்.
 • "கடவுளின் திருச்சபை" - கலா 1:13; என்றும், "கிறிஸ்துவின் திருச்சபை" - உரோ 16:16; என்றும் அழைக்கப்படும், ஆவிக்குரிய சபையின் 'திரு ஆட்சியை" ஆவியானவரே, தலைமை ஏற்று நடத்துவார்.
 திருவருட்சாதனங்கள் :

திருவருட்சாதனங்கள் என்பது, ஒருவருடைய உடல் - உலக - ஆத்மீக வாழ்வின், எல்லாக் கட்டங்களிலும், அவருக்கு மீட்பளித்து, அவரை ஆவியில் பிறக்க வைத்து, அவர் இறை ஆட்சியில் வாழ, வளர, தேவ கிருபையைத் தொடர்ந்து பெற்றுத் தரும், 'இறை ஊழியம்" (Divine Ministry).

CPM சபையில், முதன்மை திருவருட்சாதனங்கள் (Major Sacraments) இரண்டு, சிறிய திருவருட்சாதனங்கள் (Minor Sacraments) ஏழு என, மொத்தம் ஒன்பது திருவருட்சாதனங்கள் உள்ளன. இதில், முதன்மை திருவருட்சாதனங்கள், 'மீட்பும்" - தி.ப 16:31; உரோ 10:10; 'அருட்பொழிவும்" - லூக் 24:49,53; தி.ப 1:14; 2:1-4, ஆகும்.

அதுபோலவே, சிறிய திருவருட்சாதனங்கள், 1. திருமுழுக்கு - தி.ப 10:47,48; 2:41,47; 2. உறுதிபூசுதல் - உரோ 1:11; 2கொரி 1:21,22; 14:12; 1திமொ 4:14; 2திமொ 1:6 ; 3. நற்கருணை - 1கொரி 11:23-25; லூக் 22:19; 4. பாவ மன்னிப்பு - யோவா 20:22,23; 5. நோயில்பூசுதல் - யாக் 5:14,15; 6. குருத்துவம் - லூக் 9:1-3; தி.ப 13:1-3; 7. திருமணம் - மத் 19:6; யோவா 2:1-10; என்பவைகளாகும்.

இவ்வாறு CPM சபையில், 'முதன்மை" திருவருட்சாதனங்கள், 'சிறிய" திருவருட்சாதனங்கள் என, மொத்தம் ஒன்பது திருவருட்சாதனங்கள் உள்ளன.


குறிப்பு:- மேலும் விளக்கத்திற்கு, 'CPM பாடப்பகுதியில்" பார்க்கவும்.

 சபை வளர்ச்சியில்:

ஆவியாரின் ஆச்சரியமான வழிநடத்தலால், திருச்சபையானது, அதன் இளமை என்றும் குன்றாது, வளர்ந்தோங்குகிறது. இந்த வளர்ச்சியில், 'ஏற்பு - தவிர்ப்பு முறை" யை, CPM சபை பின்பற்றுகிறது - 1கொரி 13:11,12. திருச்சபையில், அவ்வப்போது உண்டாகும், வளர்ச்சிக்குரிய மாற்றங்களை, இந்தப் பகுதியில் தொடர்ந்து காணலாம்.

 

My status சபை வரலாறு


 திருவருட்சாதனங்கள்


அனைவருடைய மீட்புக்கும் ஈடாக, இயேசு தம் உயிரைக் கொடுத்தார் - மத் 20:28..... பைபிள் விளக்கம்


 சத்தியக் கதம்பம்


..... 
 
copyrights © 2012 catholicpentecostmission.com