"வார ஊழியங்கள்"

"Weekly Ministries"

 1. உபவாச ஜெபக் கூட்டங்கள் :

சில வகைப் பேய்கள், நோன்பாலும், ஜெபத்தாலும் அன்றி ஓடாது, என்று இயேசு கூறினார் - மாற் 9:29. பர்னபாவும், பவுலும், திருப்பணிக்கு அமர்த்தப்பட்ட போது, திருச்சபை நோன்பிருந்து ஜெபித்தது - தி.ப 13:3. பவுல் திருப்பணியாளர்களை நியமித்த போது, நோன்பிருந்து ஜெபித்தார் - தி.ப 14:23. ஆதி ஆவிக்குரிய திருச்சபைகளில், விசுவாசிகள் நோன்பிருந்து ஜெபிக்குமாறு, ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தது - தி.ப 27:9. விசுவாசிகள், நோன்பிருந்து ஜெபிக்கும் போது, என்னென்ன கடைபிடிக்க வேண்டுமென்று, பவுல், கொரிந்து திருச்சபைக்கு கூறினார் - 1கொரி 7:15.

உலகம், பிசாசு, சரீரத்தோடு போராடிக்கொண்டிருக்கிற, விசுவாசிகளுடைய வாழ்வில், நோன்பிருந்து ஜெபிப்பது, அதிக இறை ஆற்றலை பெற்றுத் தருகின்றது. எனவே, CPM சபையிலும், வாரம் ஒருமுறை, ஆலயத்தில் கூடி, உபவாசத்தோடு ஜெபிக்கிறோம். இதனால், விசுவாசப் போராட்டத்தில் உறுதியையும், திடத்தையும், வெற்றியையும், விசுவாசிகள் பெற்றுக் கொள்கிறார்கள்.

உபவாச ஜெப நாள் :பிரதி வெள்ளி

ஜெப நேரம் காலை: 9 - பிற்பகல் 1.30 மணி.

 2.ஆவிக்குரிய ஐக்கிய கூட்டங்கள் :

புதிதாக மீட்படைந்து, அபிஷேகம் பெற்ற விசுவாசிகள், புதிதாய் பிறந்த குழந்தைகள் என்றும், அவர்கள் நாளுக்கு நாள், வளர்ச்சியடைய, இறை வார்த்தை எனும், பாலை அருந்த தவறக் கூடாது என்றும், புனித பேதுரு கூறுவார் - 1பேது 2:2. இந்த இறை வார்த்தையாகிய பாலை அருந்துவதற்காக, ஆதிசபை, விசுவாசிகளை, ஒன்றாய் கூடி வரவும், கூடி வாழவும், பயிற்சி அளித்தது - தி.ப 2:42-47; 4:32-35. அவ்வாறே, CPM சபையிலும், மீட்படைந்து, அபிஷேகம் பெற்ற விசுவாசிகளை, வாரமொரு முறை, கூடி வரச் செய்கிறோம்.

அங்கே அவர்களுக்கு, ஜெபப் பயிற்சிகளும், வேத சத்தியங்களும், அளிக்கப்படுகின்றன. கூடி ஜெபித்தல், கூடி இருத்தல், கூடி பகிர்தல், கூடி கற்றல், கூடி உண்ணுதல் என, பல்வேறு ஆவிக்குரிய பயிற்சிகளை, அவர்கள் இந்த ஐக்கியங்களில் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், அவர்கள் வாழும் குடும்பங்களில், அன்றாடம் வரும், பாவ, துன்ப, சோதனைகளை வெற்றி கொள்ளும், ஆவியின் பெலனை அடைகிறார்கள்.

ஐக்கிய கூட்ட நாள் :பிரதி செவ்வாய், வியாழன், ஞாயிறு.

ஐக்கிய கூட்ட நேரம் :காலை 9 - பிற்பகல் 1.30 மணி.

 3. விடுதலை ஆராதனைகள் :

எல்லா நோய்களையும், உன்னிடமிருந்து அகலும்படி செய்வேன் என்று, கடவுள் வாக்களித்தார் - இ.ச 7:15. மனுக்குலத்தை மீட்க வந்த இயேசு, தம் மீட்பின் ஊழியத்தை, விடுதலை அளிக்கும் ஊழியத்தோடு ஆரம்பித்தார் - மத் 4:24. ஆதி ஆவிக்குரிய சபையிலும், விடுதலை அளிக்கும் ஊழியத்தை, திருத்தூதர்கள், தொடர்ந்து செய்து வந்தார்கள். பேதுரு நடந்து செல்லும் போது, அவர் நிழல், சிலர் மேலாவது படுமாறு, மக்கள், உடல் நலமற்றோரை, கட்டில்களிலும், படுக்கைகளிலும், கடத்தி, சுமந்து கொண்டு வந்து, வீதிகளில் வைத்தார்கள். எருசலேமை சுற்றியிருந்த, நகரங்களிலிருந்து, மக்கள் உடல் நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும், சுமந்து கொண்டு திரளாக வந்தார்கள். அவர்கள் அனைவரும், நலம் பெற்றனர் - தி.ப 5:15,16.

எனவே, மீட்பின் ஊழியத்தை செய்யும், CPM சபையும், தம் ஊழியத்தில், விடுதலை அளிக்கும் ஊழியத்துக்கு, ஒரு முக்கிய இடம் தருகிறது. சபையில், வாரத்துக்கு ஒருமுறை நடைபெறும், குணமளிக்கும் விடுதலை ஆராதனையில், மக்கள், உடல் நலத்தோடு, மன நலமும் பெற்று, விடுதலை அடைகிறார்கள்.

விடுதலை ஆராதனை நாள்:பிரதி புதன்

விடுதலை ஆராதனை நேரம்:மாலை 6 - இரவு 8.30.

 4. ஞாயிறு ஆராதனையும் - ஆவிக்குரிய பலிவிருந்தும் :

ஓய்வுநாளை, கனம் செய்யும், யுதர்களின் வழிபாட்டு ஒழுங்கைப் போலவே, ஆதித்திருச்சபையும், வாரத்தின் முதல் நாளில், இயேசுவின் உயிர்த்த நாளை நினைவுகூர, ஞாயிற்றுக்கிழமைகளை, கனம் செய்யத் தொடங்கியது - யோவா 20:1,19. தொடக்க நாட்களில், ஆவிக்குரிய யூத கிறிஸ்தவர்கள், ஞாயிற்றுக்கிழமையை, இயேசுவின் உயிர்த்த நாளாகவும், ஓய்வு நாளாகவும், கொண்டாடினர். அந்த நாளில், சபையார், கூடி வர வேண்டும் என்று, கட்டாயப்படுத்தினர். ஞாயிறு அப்பம் பிட்கும் நிகழ்ச்சியில், உயிர்த்த இயேசு பிரசன்னமாவதை, அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தார்கள் - லூக் 24:30,31.

சிலர் வழக்கமாகவே, நம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக; இறுதி நாள், நெருங்கி வருவதைக் காண்கிறோம்; எனவே, இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம் - எபி 10:25, என்று ஆதிசபை போதித்தது.

இந்தப் பின்னணியில், கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபையில், ஞாயிறு ஆராதனை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில், ஒன்பது மணியிலிருந்து, பிற்பகல் ஒன்றரை மணி வரையிலும், வழிபாடுகளும், பலிவிருந்தும் நடைபெறுகின்றன.

"நிகழ்ச்சி விபரம்"

1. இறை வார்த்தை :

 • முதல் அரை மணி நேரம், தொடர்ச்சியான இறை வார்த்தை, சீராக்கின் புத்தகத்திலிருந்து வாசிக்கப்படும்.

2. பாடல் ஆராதனை:

 • அடுத்த அரை மணி நேரம், பாடல் ஆராதனை நடைபெறும்.

3. ஆவிக்குரிய ஐக்கியம்:

 • அதன் தொடர்ச்சியாக, ஒருமணி நேரம், ஆவிக்குரிய ஐக்கியம், வாலிபர் ஐக்கியம், சிறுவருக்கான ஆத்மீக வகுப்புகள், போன்றவை நடைபெறும்.
 • இந்த வேளை, அந்த நாளுக்குரிய வழிபாட்டுக் கருத்துக்களும், வாசகங்களும், மக்களுக்கு அளிக்கப்படும்.
 • மக்கள், தனித்தனி குழுக்களாக அமர்ந்திருப்பர்.
 • குழுக்களில், தொடர் பயிற்சியாக, சில வேத சத்தியங்கள், வாசித்து விளக்கப்படும்.
 • ஓவ்வொருவரும், தங்களின் கடந்த வார, குடும்ப, தொழில் அனுபவங்களை, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள்.
 • இந்த அடிப்படையில், குழு ஜெபங்கள் நடைபெறும்.
 • இடையிடையே, சபை நிர்வாகிகளும், மேய்ப்பர்களும். விசுவாசிகளை சந்தித்து, நலம் விசாரிப்பர்.
 • ஆவிக்குரிய உறவுகளை வளர்ப்பதும், வலுப்படுத்துவதும், இங்கே சிறப்பாக நடைபெறும்.

4. பலிவிருந்து:

 • பகல், பதினொரு மணிக்கு, பலிவிருந்து ஆரம்பமாகும்.
 • பவனி, மனஸ்தாப வழிபாடு, வாசகப்பகுதி, மறை உரை, இடையிடையே பாடல்கள், ஜெபங்கள், விடுதலை ஆராதனை, பிறந்த நாள் - நினைவு நாட்கள் கொண்டாட்டம், காணிக்கை வழிபாடு, நற்கருணை வழிபாடு, நற்கருணை விருந்து, அறிவிப்புகள், போன்றவை, பலிவிருந்தில் இடம் பெறுகின்றன.

5. உணவு விருந்து:

 • பலிவிருந்து முடிந்ததும், மதிய உணவு பரிமாறப்படும்.
 • மக்கள், தாழ்மையோடும், எளிமையோடும், உணவுகளைப் பெற்றுக் கொண்டு, ஆங்காங்கே கூடியிருந்து உண்பர்.
 • இளையோர், சிறுவர், நண்பர், குடும்பங்கள் என, பல்வேறு அன்புக் குழுக்களாக அமர்ந்திருந்து, அளவளாவி, பேசி மகிழ்ந்து, உணவு உண்பது, ஒரு தெய்வீக அனுபவமே.
 • இந்த அனுபவம், சிலவேளை, மாலை நான்கு மணி வரை தொடரும்.
 • இடையிடையே, இயேசுவின் நண்பர் சபைக் கூட்டங்கள், பீடச்சிறுவர் ஐக்கியங்கள், போன்றவையும் நடைபெறும். விசுவாசிகளே, உணவை சமைத்தல், பரிமாறுதல், பாத்திரங்களை சுத்தம் செய்தல், போன்ற அன்புப் பணிகளில், உற்சாகத்தோடு ஈடுபடுவர்.
 • மொத்தத்தில், அந்த நாள், பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என, எல்லாரும் ஒன்றுகூடி, சந்தித்து, பேசி மகிழ்ந்து, நிறைவோடு இல்லங்களுக்கு செல்வர்.
 • இது ஓர், ஆதி ஆவிக்குரிய சபையின், உண்மையான அனுபவமாகவே இருக்கும்.

 5. வார இறுதி பைபிள் வகுப்புகள் :

இறை வார்த்தையை, பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் - இ.ச 6:7. குழந்தைப் பருவத்திலிருந்தே, விசுவாசிகள் வேதத்தை, கற்று அறிந்திருக்க வேண்டும் - 2திமொ 3:15. மக்களை, நேரிய வழியில் பயிற்றுவிப்பதற்காகவே, மறைநூல் உருவானது - 2திமொ 3:16. எஸ்றா, திருச்சட்டத்தை கற்பதிலும், கடைபிடிப்பதிலும், கற்பிப்பதிலும், கருத்தாயிருந்தார் - எஸ் 7:10. ஆதி ஆவிக்குரிய சபையில், விசுவாசிகள் கூடி, திருத்தூதர்கள் போதித்தவை, மறைநூலுக்கு ஒத்திருக்கிறதா என்று, தினமும் ஆராய்ந்தனர் - தி.ப 17:11.

மனம் திரும்பி, பாவமன்னிப்புப் பெற்று, அபிஷேகம் பெற்றவருடைய, இதயங்களை, கடவுள் புதுப்பிக்கிறார். அதில், தன் சட்டங்களையும், நியமங்களையும், எழுதி வைக்கிறார் - எபி 8:10, 10:16, எரே 31:33. இந்தக் காரியம், சிறுவயதிலிருந்து தொடங்கி, முதிர் வயது வரையிலும், நடைபெற வேண்டும். சிறுவயதில், பிள்ளைகள் இதயத்தில், வேத கட்டளைகள் எழுதி வைக்கப்பட்டால், அவர்களுடைய வளர்ச்சியில், அவர்களைத் தாக்கும், உலக, மாமிச, பிசாசின் கட்டளைகள், சிறுவர்களை மேற்கொள்ளாது. இது முதியோருக்கும் பொருந்தும்.

இந்தப் பின்னணியில், விசுவாசிகளை பல்வேறு பிரிவினராகப் பிரித்து, அவரவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு தொடர் வேத பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

வேதபாட நாள் : பிரதி சனி

வேதபாட நேரம்: காலை 9.30 - பிற்பகல் 1.30 வரை.

 6. சிறுவருக்கான ஆத்மீக வகுப்புகள் :

“சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்.அவர்களைத் தடுக்காதீர்கள்” என்று கூறிய, நம் ஆண்டவரின் அறிவுரைக்கு இணங்க - லூக் 18:16, CPM சபை, சிறுவரைப் பற்றி, மிகவும் அக்கரையோடு, ஊழியம் செய்கிறது. இதன் நோக்கம், சிறுவருக்கு வேத அறிவைத் தருவது - 2திமொ 3:15; இறை ஆசியை அவர்களுக்குப் பெற்றுத் தருவது - மத் 19:15; இறையாட்சியில், அவர்களை வளர்ப்பதும் ஆகும் - லூக் 18:17.

இதற்காகவே, சிறுவருக்கான வேதபாட வகுப்புகள், எல்லா சனிக்கிழமையும் நடத்துகிறோம். எல்லா ஞாயிற்றுக்கிழமையும், சிறுவர்களை, குழுக்களாகப் பிரித்து, அவர்களின் வயதுக்கேற்ப, சிறந்த ஆத்மீகப் பாடங்களையும், ஜெபப் பயிற்சிகளையும், அளிக்கிறோம். மேலும், “பீடச்சிறுவர் – பேரணி” ஒன்றையும் உருவாக்கி உள்ளோம். பீடச்சிறுவர்கள், பலிவிருந்தின்போது, பீடத்தை சுற்றி நின்று, பணிபுரிவர். அதோடு, அவர்களுக்கென்று, ஐக்கியம் ஒன்றையும் உருவாக்கி, அடிக்கடி, கூட்டங்கள் வைத்து, நட்புறவையும், இறைப்பற்றையும் வளர்க்கிறோம்.

 

My status


...... சபை வரலாறு


 நல்லவரோடு கடவுள்


பலிவிருந்தின் ஆராதனைகள்

உபவாச ஜெபக் கூட்டங்கள்விடுதலை ஆராதனைகள்
......பாவமன்னிப்பின் வழிநடத்தல்


அருட்பொழிவு


..... 
 
copyrights © 2012 catholicpentecostmission.com